Advertisment

ஃபைனான்ஸ் நிறுவனங்களில் அரசியல் ரவுடிகள்! கடனாளியாகும் அப்பாவிகள்!

ff

வசர, அத்தியா வசியத் தேவைகளுக்காக கடன்பெற்று, அதைக் கட்டி முடிப்பதற்குள் சின்னா பின்னமாகிறார்கள் பொது மக்கள். அவர்களைக் கடனாளிகளாகவே வைத்திருப்பதில் சாமர்த்தியமாக செயல்படுகின்றன ஃபைனான்ஸ் நிறுவனங்கள். இதற்கு காவல்துறையும், அரசியல்வாதிகளும் உடந்தை யாக இருப்பது பற்றிய செய்திதான் இது.

Advertisment

ff

திருச்சி செவல்பட்டி அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் சக்திவேல். கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், திருச்சி ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான் சில், TOYOTA ETIOS கார் வாங்குவதற்காக, ரூ.8 லட்சம் கடனாக வாங்கியிருக்கிறார். 2021, ஜூலை வரை 60 மாதங்களுக்கு, மாதம் ரூ.21,167 என இ.எம்.ஐ. நிர்ணயம் செய்து, லோன் அப்ரூவல் செய்திருக்கிறார் மேலாளர் மோகன்ராஜ்.

11 மாதங்கள் தவணை மாறாமல் கட்டிய நிலையில், வெளியூருக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்

வசர, அத்தியா வசியத் தேவைகளுக்காக கடன்பெற்று, அதைக் கட்டி முடிப்பதற்குள் சின்னா பின்னமாகிறார்கள் பொது மக்கள். அவர்களைக் கடனாளிகளாகவே வைத்திருப்பதில் சாமர்த்தியமாக செயல்படுகின்றன ஃபைனான்ஸ் நிறுவனங்கள். இதற்கு காவல்துறையும், அரசியல்வாதிகளும் உடந்தை யாக இருப்பது பற்றிய செய்திதான் இது.

Advertisment

ff

திருச்சி செவல்பட்டி அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் சக்திவேல். கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், திருச்சி ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான் சில், TOYOTA ETIOS கார் வாங்குவதற்காக, ரூ.8 லட்சம் கடனாக வாங்கியிருக்கிறார். 2021, ஜூலை வரை 60 மாதங்களுக்கு, மாதம் ரூ.21,167 என இ.எம்.ஐ. நிர்ணயம் செய்து, லோன் அப்ரூவல் செய்திருக்கிறார் மேலாளர் மோகன்ராஜ்.

11 மாதங்கள் தவணை மாறாமல் கட்டிய நிலையில், வெளியூருக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யப்படலாம் என்பதால், 2017, ஜூலை 07ல் கூடுதலாக ரூ.4 லட்சம் நேரடியாக மேலாளர் மோகன்ராஜிடம் கொடுத்துவிட்டு, மீதத் தொகை எவ்வளவு என்று சொன்னால் அதையும் கட்டி முடித்துவிடுகிறேன் என்று சக்திவேல் சொல்லியிருக்கிறார். பணத்தை வாங்கிக்கொண்டு வரவு வைத்து அப்ரூவல் செய்து அனுப்புவதாகக் கூறியிருக்கிறார் மோகன்ராஜ்.

Advertisment

இதன்பிறகு நடந்தவற்றை விவரிக்கும் சக்திவேல், ""மாதாமாதம் இ.எம்.ஐ. கட்டவில்லை என செக்ரிட்டனுக்கு அபராதம் விதித்துக்கொண்டே வந்தார்கள். மேலாளரிடம் கேட்டபோது, கம்ப்யூட்டரில் பதிவாகி இருப்பதால், அப்படித்தான் வரும். கவலைப்படத் தேவையில்லை என்றார். கணக்கு வரவுவைத்த பில்லையும் கொடுக் காமல் மழுப்பிக்கொண்டே இருந்தார். மூன்று மேலாளர்கள் மாறிவிட்டார்கள். காலம் கடத்தியதுதான் மிச்சம்.

சமீபத்தில் குடும்ப செலவுக்காக நண்பர் ஒருவரிடம் கடனாக வாங்கிய ரூ.2 லட்சம், பள்ளியின் முக்கிய வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றை காரில் வைத்துவிட்டு, இரவு குளிக்கச் சென்றிருந்தேன். திரும்பி வந்து பார்த்தால் காரைக் காணவில்லை. பதறிப்போய் கோட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன். அவர்கள் விசாரணையில், ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலரும், அ.தி.மு.க. பிரமுகர் கவிதாவின் கணவருமான ஜெகதீசன், ஸ்ரீராம் சிட்டி ஃபைனான்ஸ் சீசிங் மேலாளர் என்று சொல்லிக்கொண்டு, தற்போதைய மேலாளர் முனீஸ்வரன் மற்றும் சில ரவுடிகள் துணையோடு காரைத் திருடியிருப்பது தெரியவந்தது.

ff

நான் கொடுத்த ரூ.4 லட்சத்தை, அப்போதைய மேலாளர் மோகன்ராஜ் முழுமையாக கணக்கில் கொண்டுவராமல், ஒவ்வொரு நாளாக ரூ.1,99,000, ரூ.49,000, ரூ.49,600, ரூ.49,000, ரூ.48,000, ரூ.4,400 என பிரித்துப் பிரித்து வரவு வைத்துவிட்டு, செக் ரிட்டன்ஸ் என்று ரூ.86 ஆயிரம் அபராதம் விதித்திருக் கிறார். அரசு ஊழியரான என்னுடைய சம்பளத்திலேயே இ.எம்.ஐ. எடுத்திருக்கலாம். ஆனால், என்னை முழுமையாக லோன் கட்டவிடாமல், கடைசிவரை கடனாளியாக வட்டிகட்ட வைக்கவேண்டும் என்பது அவர்களது நோக்கமாக இருந்திருக்கிறது. கடைசியில் எந்த அறிவிப்பையும் கொடுக்காமல், அரசியல் ரவுடிகளை வைத்து அடாவடியாக என் காரைத் திருடிவிட்டு, இப்போது வட்டிக்குமேல் வட்டி கட்டச் சொல்கிறார்கள்'' என்கிறார் பயந்த குரலில். போலீஸ் விசாரணையில் காருக்குள்ளிருந்த 2 லட்ச ரூபாயும் திருடப்பட்டது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ஸ்ரீராம் சிட்டி ஃபைனான்ஸ் மேலாளர் முனீஸ்வரனிடம் பேசினோம். ""அவர் வண்டியை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு, திருடுபோனதாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்'' என்றவரிடம், ""வண்டியை ஒப்படைக்கும் போது வீடியோ எடுப்பது பின்பற்ற வேண்டிய நடைமுறை யாச்சே, அதைச் செய்தீர்களா?'' என்று கேட்டதற்கு, ""இல்ல சார். அவர் சொன்னதை நம்பி எடுத்துச் சென்றோம்'' என்று சிறுபிள்ளை போல் பேசினார். அ.தி.மு.க. பிரமுகரின் கணவரான ஜெகதீசனோ, ""சின்ன வேலையில் இருக்கிறேன். திரும்ப அழைக்கிறேன்'' என்றவர் லைனில் வரவேயில்லை.

இந்த கார் ஃபைனான்ஸ் சீசிங்கைப் பொறுத்தவரையில், “திருச்சியில் ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர்களான வீரமணி, ராமச்சந்திரன் உள்ளிட்ட சிலர் ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸில் இருப்பதால் காவல்துறை தரப்பிலும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள். இதுவரை இதேபோன்ற 90க்கும் மேலான புகார்கள் சென்றிருந்தாலும், தலைமை ஆசிரியரின் புகாரில் மட்டுமே திருட்டு வழக்காவது பதிவு செய்திருக்கிறார்கள் என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

-ஜெ.டி.ஆர்.

nkn190920
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe