லைநகரம் சென்னையின் அண்ணாசாலையில் (மவுண்ட் ரோடு) நடந்த வெடிகுண்டு சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி எடுத்தது. தேனாம்பேட்டை காவல்நிலையம் அருகிலேயே நடந்த குண்டுவெடிப்பினால் மிகுந்த பதற்றம் உண்டானது. எதற்காக இந்த சம்பவம் நடந்தது என்று மக்கள் அச்சமுற்று இருந்த நிலையில், ரவுடிகளுக்கு இடையேயான மோதலால் குண்டுவீச்சு நடந்துள்ளது என்பது உதவி ஆணையர் கோவிந்தராஜ் தலைமையிலான விசாரணையில் தெரியவந்துள்ளது.

cc

ரவுடிகள் காக்காதோப்பு பாலாஜிக்கும், புளியந்தோப்பு பாம் சரவணனுக்கும் "வடசென்னையில் யார் பெரிய ரவுடி?' என்ற "நீயா நானா' போட்டி நீண்ட நாட்களாகவே நடந்து வருகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே அவ்வப்போது மோதல்களும் இருந்து வந்துள்ளன. மோதலின் ஒரு கட்டமாக, பாம் சரவணனை ஒரு சம்பவத்தில் சிக்கவைத்து சிறைக்கு அனுப்பிவிட்டார் பாலாஜி. இதனால் ஆவேசம் அடைந்த பாம்சரவணன், சிறையில் இருந்தபடியே காக்காதோப்பு பாலாஜியை போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்திருக்கிறார்.

அதன்படி, பாம்சரவணன் ஆதரவாளர்களான கன்னிகாபுரம் தம்பா, செந்தில் ஆகியோர் பாலாஜியை கொல்ல பலமுறை முயன்றுள்ளனர். எதிலும் சிக்காமல் உயிர்தப்பிக்கொண்டே வந்தார் பாலாஜி. சரவணன் கூட் டாளிகளிடம் இருந்து பாலாஜி யை காப்பாற்றிக்கொண்டே இருக்கிறார் சி.டி.மணி.

Advertisment

தேனாம்பேட்டை சத்யமூர்த்திநகரைச் சேர்ந்தவர் சி.டி.மணி. தென் சென்னையின் பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என 40 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்யா தரப்பு செய்யும் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்துக்கு எல்லாம் சி.டி.மணிதான் ஆல் இன் ஆலாக இருக்கிறார். இந்த அளவுக்கு செல்வாக்குடன் இருக்கும் சி.டி.மணியின் ஆதரவில் இருப்பதால் தான் பாலாஜியை போட்டுத்தள்ள முடியவில்லை என்று நொந்துபோன சரவணன் குரூப், முதலில் சி.டி.மணியை போட்டுத் தள்ளினால்தான் சரிப்படும் என்ற முடிவுக்கு வந்தது.

போட்டுவைத்த திட்டத்தின்படி சி.டி. மணியை பின் தொடர்ந்தனர் சரவணன் கூட்டாளிகள். கடந்த மார்ச் 3ஆம் தேதி அன்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பும்போது போட்டுத்தள்ளிவிடலாம் என்று நினைத்திருந்தனர். விசாரணை முடிந்து வெளியே வந்த சி.டி.மணி, நேராக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு சென்றார். அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த பாலாஜியை தனது காரில் ஏற்றிக் கொண்டு தேனாம்பேட்டை நோக்கி சென்றார்.

ca

Advertisment

பாம்சரவணன் கூட்டாளிகள் தம்பா, செந்தில் இருவரும் மகேஷ், ஆகாஷ் உள்ளிட்ட 6 கூட்டாளி களையும் தங்களுடன் சேர்த்துக் கொண்டனர். இந்த 8 பேரும் டூவீலரில் சி.டி.மணியின் காரை பின் தொடர்ந்து சென்றனர். அண்ணா மேம்பாலம் வந்தவுடன் மணியின் கார் மீது பெட்ரோல் குண்டை வீசுவது என திட்டம். அதில், தப்பிவிட்டால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்வது என்று பக்காவாக பிளான் செய்திருந்தார்கள். ஆனால், அண்ணா மேம்பாலத்தில் சென்ற கார் திடீரென மேம்பாலத்தின் வலதுபுறமாக எதிர்திசையில் வேகமாக சென்று காமராஜர் அரங்கம் எதிரே உள்ள மேயர் சுந்தர்ராவ் சாலை வழியாக கடந்துவிட்டது. அப்போது கார் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு குறி தப்பியது. கீழே தரையில் விழுந்து பலத்த சப்தத்துடன் வெடித்ததில் சி.டி.மணியும், காக்காதோப்பு பாலாஜியும் உஷாராகிவிட்டனர்.

அந்த போக்குவரத்து நெருக்கடியிலும் கார் வேகமாக சீறிப்பாய்ந்தது. பாம்சரவணன் கூட்டாளிகளும் விடாமல் டூவீலரில் துரத்தினர். வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் காரை மடக்கி, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அந்த தாக்குதலிலும் மணியும், பாலாஜியும் தப்பிக்கவே, அதற்குமேலும் அவர்களைக் கொல்ல முயற்சிக்காமல் டூவீலரில் வந்த 8 பேரும் பறந்துவிட்டனர்.

cc

சி.சி.டி.வி. பதிவுகளை வைத்து போலீசார் தேடியதில், தி.நகர் ராஜாபிள்ளை தோட்டத்தை சேர்ந்த தேவதாஸ் என்பவரின் டூவீலர் என்பதை கண்டறிந்தனர். பின்னர் விசாரணையில், ஐந்து மாதங்களுக்கு முன்பாக வண்ணாரப்பேட்டை மெக்கானிக்கிடம் அந்த பைக்கை கல்லூரி மாணவர் மகேஷ் வாங்கியது தெரியவந்தது. மகேஷின் செல்போன் சிக்னல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை காட்டியதால், தனிப்படை போலீசார் அங்கே விரைந்தனர். உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த மகேஷ், ஆகாஷ் இருவரையும் கைது செய்து விசாரித்த போது, "தம்பாவும் செந்திலும் சொல்லித்தான் இதை செய்தோம். மற்றபடி எங்களுக்கு எதுவும் தெரியாது' என சொல்லிவிட்டனர்.

தலைமறைவாக இருக்கும் தம்பாவையும், செந்திலையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவரும் அதே வேளையில், சி.டி.மணியை யும், காக்காதோப்பு பாலாஜியையும் விசாரிப் பதற்காக தேடினால் அவர்களும் தலைமறை வாகிவிட்டார்கள். பாம்சரவணன் கூட்டாளி களுக்கு பயந்து அவர்கள் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக வந்துள்ள தகவலின்படி, தனிப்படை போலீசார் அங்கே விரைந்துள்ளனர்.

திரிபாதி சென்னை கமிஷனராக இருந்த போது, முஸ்லிம்கள் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் போது ஏற்பட்ட குண்டுவெடிப்பு விவகாரத்தில் பதவியில் இருந்து மாற்றப்பட்டார்.

அதே போலவே தற்போதும் அமெரிக்க தூதரகம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளதால் தற்போதைய சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்திருக் கிறார்.

வடசென்னை யாருக்கு என்ற போட்டியால் நடக்கும் சம்பவங்களால் ஒட்டுமொத்த சென்னையும் படபடப்புடன் இருக்கிறது.

-தாமோதரன் பிரகாஷ்

-அ.அருண்பாண்டியன்