டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு அந்த மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்டி ருக்கும் பட்டாசுகளுக்கு எதிரான வழக்கு 26-ந்தேதி வரவிருப்பதால் பட்டாசுகளுக்கு தடை கொடுக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் பட்டாசு உற்பத்தியாளர்களிடம் பரவியபடி இருக்கிறது.

ff

இதுகுறித்து தமிழகத் தொழில்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ”பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது என்பதைச் சொல்லி பட்டாசு தொழிலுக்கு இந்திய முழுவதும் தடைவிதிக்க வேண்டும் என, கடந்த 2018-ல் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கில் மத்திய அரசையும் ஒரு பார்ட்டியாக சேர்த்திருந்தனர்.

இதனையடுத்து, வழக்கின் விசாரணையின்போது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சமர்பித்த,’தீபாவளி கண்காணிப்பு அறிக்கை-2018’-ல், பட்டாசு வெடிப்பதிலிருந்து சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு, பேரியம், குளோரின், கந்தகம், பொட்டாசியம், கால்சியம், அலுமினியம், தாமிரம், துத்தநாகம், ஸ்டோன்டியம் போன்ற விஷவாயுக்கள் அதிகமாக வெளியாகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதாகத் தெரிவித்திருந்தது.

Advertisment

இதனை வைத்தே பட்டாசுத் தொழிலுக்கு தடை விதிக்க வேண்டுமென வாதிட்ட னர். ஆனால், பட்டாசு வெடிப் பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது என்றும், ஆபத்தை விளைவிக்காத வெடிகள் மட்டுமே தயாரிக்கப்படுவ தாகவும், இந்த தொழிலை நம்பி 5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்றும், பட்டாசு உற்பத்தி யாளர்கள் தரப்பிலிருந்து வாதிடப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக்பூஷன் தலைமையிலான அமர்வு, சில நிபந்தனை களுடன் பட்டாசு விற்பனைக்கும் வெடிப்பதற் கும் அனுமதித்தது. பொதுநல வழக்குத் தொடர்ந்த அர்ஜுன்கோபால் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சங்கரநாராயணன், இந்தியாவின் பட்டாசு தேவையில் 70 சதவீதத்தை பூர்த்தி செய்வது தமிழகத்திலுள்ள சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள்தான். ஆனால், கோர்ட் உத்தரவின்படி பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கப்படவில்லை; தடைசெய்யப்பட்ட பேரியம் நைட்ரேட் கலந்த பட்டாசுகளே விற்கப்படுகின்றன. அதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து பட்டாசுகளை முழுமையாக தடை செய்ய வேண்டும் என வாதிட்டார். மேலும், பட்டாசு உற்பத்தியாளர்களுடன் கூட்டு சேர்ந்து பேரியத்தை மத்திய அரசு அனுமதிக்கிறது எனவும் குற்றம்சாட்டினர்.

ff

Advertisment

இது குறித்து கோர்ட் உத்தரவுப்படி, சி.பி.ஐ. விசாரித்து அறிக்கையும் சமர்ப்பித்தது. இந்நிலையில், கடந்த 6-ந்தேதி சுப்ரீம் கோர்டில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் போபண்ணா தலைமையிலான அமர்வு வழக்கு விசாரணையை மேற்கொண்டது.

அப்போது, உச்சநீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட வேதிப்பொருட்கள் பட்டாசுகளில் பயன்படுத்தப்படுவதாக சி.பி.ஐ.யும் தனது விசாரணை அறிக்கை யில் தெரிவித்திருக் கிறது. பசுமை பட் டாசுகளை தயாரிப் பதே இல்லை. கோர்ட் உத்தரவை மீறியுள்ள நிறுவனங் களுக்கு சீல் வைக்க வேண்டும். பட்டாசு களுக்கு முழுமையாக தடை விதிக்க வேண் டும் என்றெல்லாம் பட்டாசு எதிர்ப் பாளர்கள் வாதம் செய்தனர். பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்வந்த் தவே, "பட்டாசுத் தொழிலை நம்பி சிவகாசியில் 5 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. தீபாவளி பண்டிகை கலாச்சார விழாவாக கொண்டாடப் பட்டு வருகிறது. சி.பி.ஐ.யின் விசாரணை அறிக்கை யை முழுமையாக ஏற்க முடியாது'' என வாதிட்டார்.

ff

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "பட்டாசு தொழிலை நம்பியுள்ள மக்களின் பிரச்சினைகளை நாங்கள் அறிவோம். ஆனால், பேரியம் நைட்ரேட் ரசாயனங்களை பட்டாசுகளில் பயன்படுத்தக்கூடாது. பேரியத்தை குடோன்களில் வைத்திருக்கவும் அனுமதிக்க முடியாது. இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்யாதவர்கள் அனைவரும் கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை இந்த மாதம் 26-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்'' என்றனர் தொழில்துறை அதி காரிகள். பட்டாசுத் தயாரிப்பாளர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘’பட்டாசுக்கு எதிராக 2018-ல் வழக்கு போடப்பட்ட சமயத்தில், ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான புதுமை பாலு, பல தரப்பிலும் எடுத்த முயற்சியில்தான் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி கிடைத்தது. இந்த நிலையில், கோர்ட் உத்தரவுப்படி சி.பி.ஐ. அதிகாரிகள் சிவகாசியில் மேற்கொண்ட ஆய்வில், பட்டாசுத் தொழிலில் கோலோச்சும் 6 முன்னணி நிறுவனங் கள் தயாரிக்கும் பட்டாசுகளில் பேரியம் நைட்ரேட் ரசாயனங்கள் கலக்கப்படு வதையும், ffகுடோன்களில் அந்த ரசா யனங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டது. ஆக்ரோசமான பெண் கடவுளின் பெயரிலுள்ள ஒரு நிறுவனம் மட்டும் குறைந் தளவு பேரியத்தை பயன்படுத்துவதோடு, பசுமைப் பட்டாசுகள் தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது என்பதையும் சி.பி.ஐ. கண்டு பிடித்தது. 6 நிறுவனங் களை தடை செய்வது குறித்து, சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அறிக்கையை நீதிபதிகள் சீரியஸாக எடுத்துக் கொள்ளும்போது பட்டாசு தயாரிப்புகளுக்கு சிக்கல் உருவாகும்'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதுகுறித்து புதுமை பாலுவிடம் பேசியபோது,‘"பேரியம் கலந்த பட்டாசுகள் ஆபத்தானவைதான். அதேசமயம், நமது பாரம் பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை விதிக்க சட்டரீதியாகவும் மறைமுக தூண்டு தலிலும் எடுக்கப்பட்ட முயற்சிகள் போல, பட்டாசுகளை முழுமையாக தடை செய்யவும் சிலர் முயற்சிக்கின்றனர். அப்படி 2018-ல் தடை கோரிய வழக்கின்போதுதான், நான் எடுத்த சில முயற்சியால் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி கிடைத்தது. தற்போது, சி.பி.ஐ. ஆய்வு, அதன் அறிக்கை என்பதன் அடிப்படையில் மத்திய பா.ஜ.க. அரசின் உதவியுடன் பட்டாசு களுக்கு முழுமையாக தடை விதிக்க அழுத்தம் தரப்படுகிறது. பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் பலகட்ட முயற்சிகளை எடுத்து வருகிறேன்'' ‘’ என்கிறார் மிக அழுத்தமாக.

"சீன பட்டாசுகளின் இறக்குமதிக்காக சிவகாசி பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ள 5 லட்சம் குடும்பங்களின் வாழ்க்கை நசுக்கப்படு கிறது' என்கிறார்கள் பாதிக்கப்படுபவர்கள்.