ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரில் வசித்தவர் வழக்கறிஞர் சக்கரவர்த்தி. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பா.ம.க. இளைஞரணிச் செயலாளராக இருந்தார். கடந்த ஜூன் 11-ஆம் தேதி நண்பர்களுடன் மது அருந்தி விட்டு இரவு 11 மணிக்கு அரக்கோணம் சாலையி லுள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தவர் திடீரென கீழே விழுந்தார், எழுந்திருக்கவில்லை. அதைப் பார்த்த சிலர் அவரது வீட்டுக்கு தகவல் தந்து அவரை சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். மருத்துவர்கள் அவர் இறந்து விட்டார் எனக் கூறினர். அவர், குடிபோதையில் தடுமாறி கீழே விழுந்து இறந்துவிட்டார் என நினைத்தனர்.

dd

ஜூன் 12-ஆம் தேதி காலை உறவினர்கள் இது விபத்தல்ல, சந்தேக மரணம் எனச்சொல்லி சாலைமறியல் செய்தனர். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வரட்டும், கண்டிப்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம் எனச்சொல்லி கூட்டத்தைக் கலைத்தது போலீஸ். அவர் விழுந்த இடத்திலிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவை ஆய்வுசெய்தபோது, ஸ்பீட் பிரேக் மீது சக்கர வர்த்தியின் பைக் பொறுமையாக ஏறி இறங்குகிறது, அவரை க்ராஸ் செய்து ஒரு பைக்கில் இரண்டுபேர் போகிறார்கள், அவர்கள் தாண்டவும் அவர் கீழே விழவும் சரியாக இருக்கிறது. இவர் கீழே விழறார், இவுங்க ஏன் அப்படியே போறாங்க, அவர்கள் யார்? என விசாரணையை துவங்கினர்.

அதேநேரத்தில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உடற்கூராய்வில், சக்கரவர்த்தியின் பின்னந்தலையில் ஒரு புல்லட் பாய்ந்திருக்கிறது, அதனால்தான் மரணம் என்றதும் அதிர்ச்சியான எஸ்.பி. விவேகானந்தா, மூன்று தனிப்படைகள் அமைத்து கொலைகாரர்கள் யார் எனத் தேடத்துவங்கினார். வண்டி ஓட்டியது பிரபு, மாதவன் எனத்தெரிந்து அவர்களை கைதுசெய்யச் சென்றபோது, தப்பி ஓடியதாக சொல்லி பிரபுவின் காலில் சுட்டு பிடித்திருக்கிறது போலிஸ். விசாரணையில், மாதவன் பைக் ஓட்ட, பின்னால் அமர்ந்திருந்த பிரபு ஏர்கன்னால் சக்கரவர்த்தியின் பின்மண்டை யில் சுட்டதாகத் தெரிவித்துள்ளான்.

Advertisment

இதன் பின்னணி குறித்து போலீஸ் மற்றும் பா.ம.க. தரப்பில் விசாரித்தபோது, “பா.ம.க.வில் நிர்வாகியாக இருந்தவர் ரெண்டாடி சீனுவாசன். கறிக்கடை வைத்திருந்தார், கட்டப்பஞ்சாயத்து, மணல் கடத்தல், கஞ்சா விற்பனை என காவல் துறையின் சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக இருந்தார். பா.ம.க.விலிருந்து விலகி பாதுகாப்புக் காக பா.ஜ.க.வில் சேர்ந்து பா.ஜ.க. ஊராட்சி மேம்பாட்டுப் பிரிவின் நிர்வாகியாக இருந்து வந்தார். சோளிங்கர் பா.ம.க. ஒ.செ.வாக இருந்தவர் வேலம்.பிரகாஷ். இவரும் மணல் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து செய்துவந்தார். பா.ம.க. இளைஞர் சங்க செயலாளராக இருந்த வழக்கறிஞர் சக்கரவர்த்தி பைனான்ஸ் தொழிலும் செய்துவந்தார். மூவரும் ஒரே சமூகம், ஒரே கட்சியில் இருந்தனர்.

சீனுவாசன் பிரபு என்கிற இளைஞன் தனது குடும்பத்தைவிட்டு பிரிந்து சீனுவாசனுடனே இருந்தான். பிரபுவின் அண்ணன், பிரகாஷிடம் வந்து முறையிட்டார். பிரபுவை அவன் வீட்டுக்கு அனுப்பிவச்சிடு என சீனுவாசனிடம் சொல்ல, "நீ யார்ரா அதைச் சொல்ல' எனக் கேட்க அது சண்டையானது. அதனைத் தொடர்ந்து பிரகாஷ்- சீனுவாசன் இடையே பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்சனை வந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் அடித்துக்கொள்ள, அந்த சண்டையில் பிரகாஷின் சுண்டுவிரலை சீனுவாசன் வெட்டிவிட் டார். இதற்குப் பழிவாங்கவேண்டும் என சபத மெடுத்த பிரகாஷ் 2025, மார்ச் 8-ஆம் தேதி சீனு வாசனை அவரது நிலத்தில் வைத்து படுகொலை செய்தார். அந்த வழக்கில் பிரகாஷ் உட்பட 8 பேரை போலீஸ் கைதுசெய்து 7 பேர் மீது குண்டாஸ் போட்டது.

ss

Advertisment

சீனுவாசன் கொலையில் சக்கரவர்த்திக்கும் தொடர்புள்ளது என சீனுவாசனின் ரவுடி தொழிலின் வாரிசான பிரபு புகார் சொன்னான். அது பொய் எனக்கூறி போலீஸ் எடுத்துக்கொள்ள வில்லை. சிறையிலிருந்த பிரகாஷ், இந்த வழக்கை வழக்கறிஞர் சக்கரவர்த்தி நடத்தட்டும் எனச் சொன்னதால் சக்கரவர்த்தி நடத்தினார். "அவன் களுக்கு ஆஜராகாத' என சக்கரவர்த்தியை மிரட்டி யுள்ளான் பிரபு. அதை அவர் போலீஸாரிடம் சொல்லியபோது, "அவனெல்லாம் ஒரு ஆளா?' எனச்சொல்லி கண்டுகொள்ளவில்லை. 7 பேர் மீதான குண்டாஸை உடைத்து ஜாமீன் வாங்கிய வர், ஜூன் 12-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஜாமீன்தாரர்களை ஆஜர்படுத்தி 7 பேரையும் வெளியே எடுப்பதற்கான வேலைகளைச் செய்த நிலையில்தான் 11-ஆம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார்.

கொலைசெய்வதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக சக்கரவர்த்தி வீடுள்ள தெருவில் 5 தெருநாய்களுக்கு விஷம்வைத்துக் கொன்றுள் ளார்கள். ஓடும் பைக்கிலிருந்து ஒருவரை குறிபார்த்து சுடுவதற்கு கண்டிப்பாக பயிற்சி தேவை. ரிவெஞ்ச் மர்டர் நடக்கிறது, கொலையானவனின் கேங் என்ன செய்கிறதென உளவுப்பிரிவு, ஓ.சி.ஐ.யூ. டீம் நோட்டம் விடவில்லையா? என்கிற கேள்வியெழுப்பி காவல்துறை அதிகாரிகளை சந்தித்து குற்றம்சாட்டியுள்ளார்கள் ராணிப் பேட்டை பா.ம.க. நிர்வாகிகள்.

தமிழக ரவுடிகளிடம் புழங்கும் துப்பாக்கிகள்!

அரக்கோணம் நகராட்சி கவுன்சிலர் பாபு. ஹோட்டல் நடத்துகிறார், பைனான்ஸ் தொழிலும் செய்கிறார். கடந்த மே மாதம் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பாபுவின் அலுவலகத்தில் பாபுவுக்கும் பணம் வாங்கிய தரப்புக்கும் இடையே தகராறு. பாபு, அவரது தந்தை உட்பட 4 பேரை சரமாரியாக வெட்டிவிட்டு எஸ்கேப்பாகிறது ஒரு கும்பல். இந்த வழக்கில் 8 பேர் கைதாகின்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாபு துப்பாக்கி காட்டி மிரட்டினார், அவர் எங்களைப் போடறதுக்கு முன்னாடி நாங்க போடணும்னுதான் இப்படிச் செய்தோம் எனச்சொல்ல, போலீஸ் அதிர்ச்சியாகிறது. சிகிச்சை முடிந்துவந்த பாபுவைத் தூக்கிய போலீஸ், இரண்டு பிஸ் டல், தோட்டாக்களை பறிமுதல் செய்தது. ராஜஸ்தானிலிருந்து வாங்கித்தந்ததாக தினேஷ்குமார் என்பவ னும் கைதுசெய்யப் பட்டான். இப்போது துப்பாக்கியால் சுட்டு அரசியல் பிரமுகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரவுடிகளிடம் துப்பாக்கி புழங்குவது பொதுமக்களை மட்டுமல்ல, அரசியல்கட்சியினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ரவுடிகளைக் கண்காணிக்கும் பிரிவு, க்யூ ப்ராஞ்ச், எஸ்.பி.சி.ஐ.டி, ஐ.எஸ். அனைத்தும் கோமாவில் உள்ளது என்பதையே இச்சம்பவங்கள் காட்டுகின்றன எனக் குற்றம்சாட்டுகிறார்கள்.

ss

சாதாரண ரவுடிகளிடம் துப்பாக்கி புழங்கு வது குறித்து ஓ.சி.ஐ.யூ. பிரிவினரிடம் கேட்டபோது, “"பீகார், ராஜஸ்தான், மத்தியபிரதேசத்திலிருந்து வரும் தொழிலாளர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாக குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு போலீஸால் தேடப்படுபவர்கள், மாவோயிஸ்ட்கள் தமிழ் நாட்டுக்குள் தொழிலாளி போர்வையில் வந்து பதுங்குகின்றனர். அப்படிப்பட்டவர்கள் மூலமாக 20 ஆயிரம், 30 ஆயிரத்துக்கு எல்லாம் பிஸ்டல்கள் விற்கிறார்கள். அதைத்தான் இங்குள்ள ரவுடிகள் பந்தாவுக்காக வாங்கிவைத்துள்ளார்கள். தெலுங் கானா, ஒரிசா பகுதியிலிருந்து கஞ்சா கடத்திவரு கிறார்கள், அது பெரிய மூட்டை. அதனால் அதனை ஈஸியாக ஸ்மெல் செய்து பிடிக்கமுடிகிறது. துப்பாக்கியை துணிப்பையில் போட்டு கொண்டுவந்துவிடுகிறார்கள். அதனால் பிடிப்பது சிரமமாக இருக்கிறது. அரக்கோணத்தில் சிக்கியதுபோல் சிக்கினால்தான் உண்டு''’என கவலை தெரிவிக்கிறார்கள்.

வழக்கறிஞரைப் பலிவாங்கிய தண்ணீர் பிரச்சனை!

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக் கத்தை அடுத்த சொரகுளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அக்ரி.காமராஜ். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளம்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாவட்ட அமைப்பாளராக இருந்தார். இவர் காவல்துறையின் சரித்திரப்பதிவேடு குற்றவாளி பட்டியலிலும் உள்ளார். கடந்த ஓராண்டாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நீதிமன்றத்தில் வி.சி.க. வெற்றிச்செல்வனிடம் ஜூனியராக சேர்ந்து பயிற்சி பெற்றுவருகிறார். காமராஜின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் சுமன். அப்பகுதி வி.சி.க. முகாம் பொறுப்பாளர், ஒ.செ. பதவிக்கும் விண்ணப்பித்துள் ளார். இவர்கள் வீட்டுக்கு முன்பாக பொதுக்குழாய் சின்டெக் டேங்க் உள்ளது. இரண்டு மாதத்துக்கு முன்பு, தண்ணீரை வீணாக்குகிறார்கள் என சுமன் குடும்பத்தாருடன் காமராஜ் சண்டைபோட்டுள் ளார். இது அடிதடியாகி கலசப்பாக்கம் காவல் நிலையத்தில் இரு தரப்பு மீதும் எப்.ஐ.ஆர். பதிவாகியுள்ளது.

இந்நிலையில்தான் ஜூன் 17-ஆம் தேதி காலை 7 மணிக்கு நாயுடு மங்கலத்தில் காமராஜ், அவருடன் ஒரு பெரி யவர் என இருவரும் டீ குடித்துவிட்டு, வீட்டுக்கு பைக்கில் செல்லும்போது, நாயுடுமங்கலம் ரயில்வே கேட்டருகே காமராஜை 9 பேர் கொண்ட கும்பல் சுற்றிவளைத்து இரும்பு ராடால் அவரது மண்டை யில் அடித்துச்சாய்த்துள்ளனர். நிலத்தில் வேலை பார்த்த சிலர் இதைப்பார்த்தும் காமராஜ் மீதான கடுப்பில் யாரும் அருகே வரவில்லை. அந்தக் கும்பல் அடித்துப்போட்டுவிட்டு எஸ்கேப்பாக, மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார். தாக்கிய கும்பலில் சுமன் உறவினர் கள் கோபி, பார்த்திபன் இருந்ததால் அவர்கள் உட்பட பலரை கைதுசெய்துள்ளது போலீஸ். எஸ்.பி. தனிப்பிரிவு, உளவுத்துறை போலீஸார் இந்த விவகாரத்தில் சரியாக விசாரித்து நோட் போடாததாலே இப்படியொரு மர்டர் நடந்துள் ளது என குற்றம்சாட்டுகிறார்கள் சிறுத்தைகள்.

-து.ராஜா

படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்