Advertisment

ராஜ்பவனின் அரசியல் சதி! முறியடிக்கும் முதல்வர்!

ss

மிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் கவர்னர் ரவிக்கு மிடையே நிர்வாக ரீதியாக நீடித்து வந்த மோதல்கள் இறுதிக் கட்டத்தை எட்டி யிருக்கிறது. "உச்ச நீதிமன்றத்தில் கவர்னருக்கு எதிராக தி.மு.க. அரசால் போடப்பட்டிரும் வழக்கின் மூலம் இதற்கு விடை கிடைக்கும்' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Advertisment

முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்வாக ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் குடைச்சல்களை கொடுத்து வந்தார் கவர்னர் ரவி. ஒரு கட்டத்தில் இது மோதல்களாக வெடித்தது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் ரவி கிடப்பில் போட்டு வந்த விவகாரம் பலத்த சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில், தி.மு.க. அரசின் நிர்வாகத்தை முடக்கு வதாக இருந்தது கவர்னர் ரவியின் செயல்பாடுகள்.

ss

இந்த சூழலில், அரசு நிர்வாகத்தை முடக்கும் சதிச்செயலை புரிந்து, இனியும் பொறுப்பதற்கில்லை எனத் திட்ட மிட்ட மு.க.ஸ்டாலின், கவர்னரின் செயல்களை எதிர்த்தும், சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதலளிக்க கவர்னருக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்த

மிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் கவர்னர் ரவிக்கு மிடையே நிர்வாக ரீதியாக நீடித்து வந்த மோதல்கள் இறுதிக் கட்டத்தை எட்டி யிருக்கிறது. "உச்ச நீதிமன்றத்தில் கவர்னருக்கு எதிராக தி.மு.க. அரசால் போடப்பட்டிரும் வழக்கின் மூலம் இதற்கு விடை கிடைக்கும்' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Advertisment

முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்வாக ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் குடைச்சல்களை கொடுத்து வந்தார் கவர்னர் ரவி. ஒரு கட்டத்தில் இது மோதல்களாக வெடித்தது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் ரவி கிடப்பில் போட்டு வந்த விவகாரம் பலத்த சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில், தி.மு.க. அரசின் நிர்வாகத்தை முடக்கு வதாக இருந்தது கவர்னர் ரவியின் செயல்பாடுகள்.

ss

இந்த சூழலில், அரசு நிர்வாகத்தை முடக்கும் சதிச்செயலை புரிந்து, இனியும் பொறுப்பதற்கில்லை எனத் திட்ட மிட்ட மு.க.ஸ்டாலின், கவர்னரின் செயல்களை எதிர்த்தும், சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதலளிக்க கவர்னருக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Advertisment

வழக்கின் முதல்நாள் விசாரணையின் போது கவர்னரின் போக்குகளை கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம், மத்திய உள்துறை செயலாளரும், கவர்னரின் செயலாளரும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன் விசாரணையை இம்மாதம் 20-ந்தேதிக்கு தள்ளி வைத்தது.

நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, தம்மிடம் நிலுவையில் இருந்த தமிழக பல்கலைக்கழக சட்ட மசோதாக்களை அரசுக்கு அவசரம் அவசரமாக திருப்பி அனுப்பினார் கவர்னர் ரவி. இதுகுறித்து மூத்த அமைச்சர் துரைமுருகன் மற்றும் உயரதிகாரி களுடன் முதல்வர் ஆலோசிக்க, ”"பல மாதங்களாக நிலுவையில் வைத்திருந்த மசோதாக்களை திடீரென திருப்பி அனுப்புகிறார் கவர்னர். பலமுறை கடிதம் மூலமாகவும், நேரிலும் நாம் வலியுறுத்தியபோதும் மசோதாக்களை திருப்பி அனுப்பாதவர், இப்போது அனுப்புகிறார் என்றால் காரணம் உச்சநீதிமன்றத்தில் நாம் போட்டுள்ள வழக்குதான். அதாவது, வழக்கின் விசாரணை 20-ந்தேதி வரும்போது ஏதேதோ சில காரணங்களை சொல்லி வழக்கை திசை திருப்ப அல்லது ஒத்திப்போட வைக்க மத்திய அரசும் கவர்னரும் முயற்சிப்பார்கள். அவர்கள் என்ன காரணங்களைச் சொன்னாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு நிறைவேற்றும் சட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? என்று ஒரே ஒரு கேள்வியை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பினால் என்ன பதில் சொல்வது? என்பதுதான் கவர்னரின் பிரச்சனையாக இருந்துள்ளது.

அதனால்தான் மத்திய அரசுடன் அவர் கலந்தாலோசித்திருக்கிறார். அவர்களோ, மசோதாக்களை திருப்பி அனுப்பிவிடுங்கள்; கோர்ட்டில் இது குறித்து கேள்வி வந்தால், எங்களிடம் மசோதாக்கள் நிலுவையில் இல்லை; அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டோம் என பதில் சொல்லிக்கொள்ளலாம் எனக் கொடுக்கப்பட்ட ஐடியாவின்படிதான் மசோதாவை திருப்பி அனுப்பியிருக்கிறார் கவர்னர்.

நமக்கு அவர்கள் செக் வைக்க நினைக்கிறபோது, நாமும் அவர்களுக்கு செக் வைக்கலாம். அதனால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு திங்கட்கிழமைதான் வருகிறது. அதற்கு முன்னதாக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பி வைப்போம். அதற்கு ஒப்புதல் தருவதைத் தவிர வேறு வழி கிடையாது. அதனால் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவோம். கவர்னர் என்ன செய்கிறார் என கவனிக்கலாம்''‘என துரைமுருகனும் அதிகாரிகளும் சொல்லியிருக்கிறார்கள்

ss

இதனை முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டதையடுத்து, பேரவையின் சிறப்புக்கூட்டத்தை 18-ந் தேதி கூட்டி, பல்கலைக்கழக வேந்தர் பதவியில் கவர்னருக்கு பதிலாக முதல்வர் இருக்க வழிவகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களை நிறைவேற்றியதுடன் அன் றைய தினமே கவர்னருக்கு அனுப்பியும் வைத்தது தி.மு.க. அரசு.

பேரவையில் மசோ தாக்களை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், பல்வேறு விசயங் களை சுட்டிக்காட்டிவிட்டு, ”"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவைக்குத்தான் முழு அதிகாரமும் முதன்மையும் வழங்கப் பட்டுள்ளது.

ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு முன்னோடித் திட்டங்களை நாம் நிறைவேற்றி வருவதை அரசியல் ரீதியாக சகித்துக் கொள்ளமுடியாமல் அரசின் செயல்பாடுகளை முடக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ஆளுநர் பதவி மூலமாக அரசியல் செய்கின்றனர்.

பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக குடைச்சல் கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கு எதிராக நாம் தொடர்ந்த வழக்கில், அவர்கள் தலையில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்ததால் அவசரம் அவசரமாக கோப்புகளை திருப்பி அனுப்பி நாடகம் ஆடுகிறார் ஆளுநர். அவருக்கு தெரிந்ததை அவர் செய்கிறார். செய்யட்டும். நாம் சட்டத்தின் வழி நடப்பவர்கள்; மக்களுக்கும் மனசாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டவர்கள்''’என்றார்.

முதல்வர் முன்மொழிந்த தனித் தீர்மானத் தின் மீது பேசிய அ.தி.மு.க., பா.ஜ.க.வை தவிர மற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், மசோதாக் கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், கவர்னர் ரவியின் செயல்பாடுகளை கடுமையாக குற்றம்சாட்டினர். எதிர்க்கட்சித் தலைவர் அ.தி.மு.க. எடப்பாடி பழனிச்சாமியும், பேரவையின் பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந் திரனும் தனித் தீர்மானத்துக்கு எதிராக சில கருதுக்களைக் கூறிவிட்டு வெளிநடப்பு செய்தனர்.

இப்படிப்பட்ட பின்னணிகளுக்கு மத்தியில்தான், மீண்டும் நிறைவேற்றி தமக்கு தி.மு.க. அரசு அனுப்பி வைத்துள்ள சட்ட மசோதாக்கள் மீது என்ன முடிவெடுக்கட்டும் என்பதை அறிவதற்காக ஞாயிற்றுக்கிழமை அவசரமாக கிளம்பி டெல்லிக்கு பறந்தார் கவர்னர் ரவி.

nkn221123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe