Advertisment

அரசியல் ஆடுகளம்!

politics

அருப்புக்கோட்டையில் அடிதடி அ.தி.மு.க.!

politics1

அருப்புக்கோட்டையில் தி.மு.க. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை எதிர்க்கவேண்டிய அ.தி.மு.க., தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டிருக்கிறது. வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு தேர்தல் வெற்றிக்காகப் போட்டிபோட வேண்டிய இடத்தில், கோஷ்டி அக்கப்போர் தான் களைகட்டுகிறது. விருதுநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனுக் கும், அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் யோகவாசுதேவனுக்கும் இடையே ஆகாது. ‘நானே அருப்புக்கோட்டை அ.தி.மு.க. வேட்பாளர்’ என யோகவாசுதேவன் காய் நகர்த்த, அருப்புக்கோட் டையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்ட மேடையிலேயே அவருக்கு இடம் மறுக்கப்பட்டது. நிர்வாகிகள் பட்டியல் வாசிப்பிலும் அவரது பெயர் திட்டமிட்டு தவிர்க் கப்பட்டது. ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர் என்பதே யோகவாசுதேவனுக்கு எதிரான முக்கிய காரணம் என்கிறார்கள். ஒரே விருதுநகர் மாவட் டத்தில் கிழக்

அருப்புக்கோட்டையில் அடிதடி அ.தி.மு.க.!

politics1

அருப்புக்கோட்டையில் தி.மு.க. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை எதிர்க்கவேண்டிய அ.தி.மு.க., தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டிருக்கிறது. வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு தேர்தல் வெற்றிக்காகப் போட்டிபோட வேண்டிய இடத்தில், கோஷ்டி அக்கப்போர் தான் களைகட்டுகிறது. விருதுநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனுக் கும், அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் யோகவாசுதேவனுக்கும் இடையே ஆகாது. ‘நானே அருப்புக்கோட்டை அ.தி.மு.க. வேட்பாளர்’ என யோகவாசுதேவன் காய் நகர்த்த, அருப்புக்கோட் டையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்ட மேடையிலேயே அவருக்கு இடம் மறுக்கப்பட்டது. நிர்வாகிகள் பட்டியல் வாசிப்பிலும் அவரது பெயர் திட்டமிட்டு தவிர்க் கப்பட்டது. ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர் என்பதே யோகவாசுதேவனுக்கு எதிரான முக்கிய காரணம் என்கிறார்கள். ஒரே விருதுநகர் மாவட் டத்தில் கிழக்கு - மேற்கு அதிகாரப் போட்டியும் இந்த மோதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதற் கிடையே, அருப்புக்கோட்டையில் யோகவாசு தேவன் கோஷ்டி, நகரச் செயலாளர் சேதுபதி கோஷ்டி, சீட் கேட் போர் கோஷ்டி என அ.தி.மு.க. ஆளுக் கொரு பக்கம் பிரிந்து மோதுவதால், கே.கே. எஸ்.எஸ்.ஆரை மீண்டும் எம்.எல்.ஏ. ஆக்காமல் ஓய மாட்டார்களென ர.ர.க்களே பேசிக் கொள்கிறார்கள்!

Advertisment

-ராம்கி 

ஓ.பி.எஸ். நம்பிக்கை பலிக்குமா?

politics2

அரசியலில் தனிமரமாக நிற்கும் ஓ.பி.எஸ்., திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்தார். ஏற்கெனவே தனது சொத்துக்களை இரண்டு மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டாராம் பன்னீர். ஓ.பி.எஸ்-ஸுடன் இரண்டு சகோதரிகள், சகோதரர் மகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கோவிலில் மூலவர் அபிஷேகத்தில் பங்கேற்று வழிபட்டனர். வழிபாடு முடித்துவிட்டு வெளியே வந்த ஓ.பி.எஸ்., காத்திருந்த பத்திரிகையாளர்களிடம், "குருபகவானுக்கு இன்று உகந்த தினம். உலக மக்கள் அனைவரும் நல்லா இருக்க வேண்டும். உலக நன்மைக்காக வேண்டி னேன். தை முடிவதற்குள் கூட்டணி குறித்து அறிவிப்பதாக இருக்கிறேன்'' எனக்கூறி புன்னகைத்துச் சென்றார். அப்போது ஓ.பி.எஸ்.ஸுக்கு வேண்டப்பட்ட ஒருவரோ, "இந்தக் கோவிலுக்கு வந்தவங்க சுவாமி தரிசனம் முடிச்சு தங்கிட்டு மறுநாள் கிளம்பினால் பறிபோன அந்தஸ்து திரும்ப கிடைக்கும்யா'' என்று சொல்ல, அன்றிரவு ஓ.பி.எஸ். கடற்கரையிலுள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கினார். இப்படித்தான் இங்குவந்த செங்கோட் டையனுக்கும் சொல்லப் பட்டு, அவரது பதவிதான் பறிக்கப்பட்டது என்று சொல்லிச் சிரிக்கிறார்கள் அரசியல் புள்ளிகள்!

Advertisment

-ப.இராம்குமார்

சீட்டுக்காக போராட்டம் நடத்திய மாஜி எம்.பி!

politics3

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், சென்னை உள்பட அதை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், மதுராந்தகம் (தனி) தொகுதியை தவிர்த்து மற்ற 39 தொகுதிகளிலும் தி.மு.க. அபார வெற்றி பெற்றது. இந்த மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட தி.மு.க.வில் பசையுள்ள வேட்பாளர் இல்லாத காரணத்தால், இத்தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கும் தி.மு.கவின் எண்ணத்தை அறிந்த காஞ்சிபுரம் மாஜி நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன், அத்தொகுதிக்கு குறிவைத்தார். இதற்கு முன்னோட்டமாக, 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் திடீரென ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினார். மதுராந் தகத்தில் கூட்டணிக்கட்சிகளின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தந்ததை கண்டித்து விஸ்வநாதன் தனது தி.நகர் வீட்டில் கருப்புத்துணியை வாயில் கட்டியபடி தீப்பந்தம் ஏற்றி போராட்டம் நடத்தினார். இதில் காவல்துறையுடன் காரசாரமாக வாக்குவாதம் நடத்த, வீட்டுக்காவில் அடைக்கப்பட்ட தகவலை, அவரே விளம்பரப் படுத்திக் கொண்டார்!

-அரவிந்த் 

உட்கட்சி பூசல்! திருச்சி தி.மு.க.வில் திருப்பம்!

திருச்சி மாவட்டத்திலுள்ள ஒன்பது தொகுதிகளில் கடந்த தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளையும் கைப்பற்றியது. ஆனால் இந்த முறை தி.மு.க.விற்குள் இருக்கும் உட்கட்சிப் பூசலால் இரண்டு தொகுதிகளை இழக்க நேரிடுமென்று கூறப்படுகிறது. அதில், ரங்கநாதர் குடியிருக்கும் ஸ்தலம், திருத்தவத்துறை ஆகிய இரண்டு தொகுதிகளை சுட்டிக்காட்டுகிறார்கள். ஒரு தொகுதியில் புதிய வேட்பாளரை நியமிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது. மற்றொரு தொகுதியில், எரிந்துகொண்டிருக்கும் பிரச்சனையை பூதாகரமாக்கத் திட்டமிட்டு வருகிறது. அதேபோல் அ.தி.மு.க. சார்பில் நகரப் பகுதியில் இருக்கக்கூடிய தொகுதிகளை கைப்பற்ற நினைக்கும் நிலையில், கடந்த முறை ஓரளவிற்கு கணிசமான வாக்குகளைப் பெற்ற அ.தி.மு.க., திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரின் நட வடிக்கையால் இந்த முறை டெபாசிட் வாங்குவது கூட சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது

-துரை.மகேஷ்

nkn110226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe