அரசியல் கட்சிகளின் பேனர் கலாச்சாரத்தால் அப்பாவிகள் சாவது தொடர்கதை ஆகிக்கொண்டிருக்கிறது தமிழகத்தில். உயர்நீதிமன்றத்தின் தடையுத்தரவு, டிராபிக் ராமசாமி -அறப்போர் இயக்கத்தினர் உள்ளிட்டோரின் எதிர்ப்பு இவைபற்றியெல்லாம் ஆளுங்கட்சியினர் கண்டுகொள்வதே இல்லை.
கடந்த வியாழக்கிழமை, செப்டம்பர் 12. "அப்பா நான் போயிட்டு வரேன்'னு புன்னகையுடன் டூவீலரில் சென்றார், குரோம்பேட்டை பவானிநகரை சேர்ந்த ரவியின் மகள் சுபஸ்ரீ. வீடு திரும்பும்போது, கோவிலம் பாக்கம் அருகே பேனர் சரிந்ததால் நிலைதடுமாற, பின்னால் வந்த லாரி ஏறி மரணமடைந்தார். அப்பாவின் சுமையைக் குறைக்க வேலைக்கு சென்றவர், வீடு திரும்பாமலேயே போய்விட்டார். “"என் மகளின் உயிர்ப்பலியே பேனர் கலாச்சாரத்தின் கடைசி பலியாக இருக்கட்டும்'’என கதறுகிறார் ரவி.
காஞ்சிபுரம் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் சி.ஜெயகோபா லின் மகன் திருமணம் கோவிலம்பாக்கம் ஜெ.டி. திருமண மண்டபத்தில் நடந்தது. அதற்கு துணைமுதல்வர் ஓ
அரசியல் கட்சிகளின் பேனர் கலாச்சாரத்தால் அப்பாவிகள் சாவது தொடர்கதை ஆகிக்கொண்டிருக்கிறது தமிழகத்தில். உயர்நீதிமன்றத்தின் தடையுத்தரவு, டிராபிக் ராமசாமி -அறப்போர் இயக்கத்தினர் உள்ளிட்டோரின் எதிர்ப்பு இவைபற்றியெல்லாம் ஆளுங்கட்சியினர் கண்டுகொள்வதே இல்லை.
கடந்த வியாழக்கிழமை, செப்டம்பர் 12. "அப்பா நான் போயிட்டு வரேன்'னு புன்னகையுடன் டூவீலரில் சென்றார், குரோம்பேட்டை பவானிநகரை சேர்ந்த ரவியின் மகள் சுபஸ்ரீ. வீடு திரும்பும்போது, கோவிலம் பாக்கம் அருகே பேனர் சரிந்ததால் நிலைதடுமாற, பின்னால் வந்த லாரி ஏறி மரணமடைந்தார். அப்பாவின் சுமையைக் குறைக்க வேலைக்கு சென்றவர், வீடு திரும்பாமலேயே போய்விட்டார். “"என் மகளின் உயிர்ப்பலியே பேனர் கலாச்சாரத்தின் கடைசி பலியாக இருக்கட்டும்'’என கதறுகிறார் ரவி.
காஞ்சிபுரம் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் சி.ஜெயகோபா லின் மகன் திருமணம் கோவிலம்பாக்கம் ஜெ.டி. திருமண மண்டபத்தில் நடந்தது. அதற்கு துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வருகை தந்ததையொட்டி பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் அத்துமீறி சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர்தான் சுபஸ்ரீயின் உயிரைக் குடித்தது. ஆளுங்கட்சி திருமணத் திற்காக வைக்கப்பட்ட பேனர் என்பதால், பள்ளிக் கரணை டிராபிக் போலீசாரும் சட்டம்-ஒழுங்கு போலீசாரும் ஒருமணி நேரமாக யார் மீது வழக்குப் பதிவு செய்வதென புரியாமல் யோசித்தனர். பொதுமக்களின் கோபம் குறையாத நேரத்தில், துணைமுதல்வர் நேரில் வந்து மணமக்களுக்கு பொக்கே கொடுத்து வாழ்த்திச் சென்றார்.
அப்பகுதியை சேர்ந்த சமூகஆர்வலர் வசந்த குமார், ""இதை ரேடியல் சாலை என்பதைவிட கொலைகார சாலை என்றே கூறலாம். பல்லாவரம் டூ துரைப்பாக்கம் 11 கிலோமீட்டர் தொலை வுள்ள இந்த ரேடியல் சாலையில் சுங்கம் வேற வசூல் செய்யுறாங்க. ஆனா எந்த பராமரிப்பும் பாது கப்பும் இல்லை. 10-க்கும் அதிகமான திருமண மண்டபங்கள் இருப்பதால், பேனர் வைக்கவும் நடுவுல கொடி நடவும்தான் இந்த சாலை டிவைடர் உதவுது. அதே டிவைடரில் வாழை மரங்களும் அத்துமீறி கட்டப்படுவதால் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் பசிக்கு சாப்பிட ரேடியல் சாலை குறுக்கே வரும். அதனாலும் நிறைய விபத்துகள். இந்த ஏரியாவில் 8 டாஸ்மாக் பார் உள்ளது. இதில் சிலவற்றுக்கு லைசென்சும் கிடையாது. எல்லாமே பிரச்சினை.
சாலை விரிவாக்கம்ங்கிற பேருல முப்பதுஅடி நீள நீர்வழிக் கால்வாய மூடிட்டு அதுமேல ரோடு போடுறாங்க. தோண்டுன பள்ளத்தை மூடாம விட்டிருக்காங்க. எந்த எச்சரிக்கை அறிவிப்பும் இல்லாததால் கடந்த வாரம் கூட என் நண்பர் வண்டில வரும் போது மண்ணு சறுக்கி 10 அடி பள்ளத்துல விழுந்துட்டாரு. ஏரிப்பகுதியில் விதிகளை மீறி அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கு. ஏரியிலிருந்து மண் எடுத்து வரும் லாரிகளாலும் பிரச்சினைதான். இரவு நேரத்தில், பாலியல் தொழில், வழிப்பறின்னு ஏராளமான சமூக விரோத செயல்கள் நடக்குது. போலீஸ்ல புகார் சொல்லப்போனா, அதிலே ஒருத்தர், திருநங்கையோடு பாலியல் தொடர்பில் இருந்த வீடியோ வைரலா பரவுது''’என்கிறார் வேதனையோடு.
இது குறித்து பள்ளிக்கரணை ஆய்வாளர் அழகுவிடம் கேட்டோம் ""இந்த சாலையில பள்ளிக்கரணை மட்டுமல்ல மற்ற நாலு காவல்நிலையமும் வருது''’என்றார் சாதாரணமாக. ஆனால், "பேனரால் ஏற்பட்ட உயிரிழப்பு முதல், சந்தியா என்ற பெண்ணின் துண்டிக்கப்பட்ட உடல்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதுவரை எல்லாமே உங்க லிமிட்டில்தானே' என்றதற்கு அவரிடம் பதில் இல்லை. சென்னை மாநகர தெற்கு இணைஆணையர் மகேஷ்வரியை தொடர்புகொண் டோம் அழைப்பை எடுக்கவில்லை.
சமூக ஆர்வலர் அறப்போர் அக்தர் நம்மிடம், ""மூன்று ஆண்டுகளுக்கு முன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டின் அருகே சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றிய காரணத் தால் பொய்வழக்கு போட்டு எங்களை சிறையில் அடைத்தது காவல்துறை. இந்த உயிர்ப்பலி விவகாரத்தில்கூட அத்துமீறி வைக்கப்படும் பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருந்தால் திருமண வயதில் தன் மகளை இழந்திருப்பாரா ரவி?''’என்கிறார் வேதனையுடன்.
"மனித உயிர்களுக்கு எப்போது மதிப்பு கொடுப்பீர்கள்? இன்னும் எத்தனை லிட்டர் மனித ரத்தம் தேவை?'’என உயர்நீதிமன்றம் கோபமாகக் கேட்ட கேள்வியால், பேனர்களைத் தவிர்க்க உத்தரவிட்டுள்ளது ஆளுந்தரப்பு. அதற்கு முன்பாக, எதிர்க்கட்சித் தலைவரும் தனது தொண்டர் களிடம் "பேனர் வேண்டாம்' என உத்தரவிட்டி ருக்கிறார்.
தங்களின் விளம்பர வெறிக்காக அப்பாவி களின் உயிரைக் கொல்லும் பேனர் அரசியல் கலாச்சாரம் நீதியையும் சட்டத்தையும் ஏமாற்றாமல் முடிவுக்கு வருமா?
-அரவிந்த்
படங்கள்: குமரேசன்
அன்று ரகு… இன்று சுபஸ்ரீ!
2017-ஆம் ஆண்டு கோவையில் தமிழக அரசு நடத்திய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக வ.உ.சி. பூங்கா முதல் விமானநிலையம் வரை பேனர் களும், அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தன. அந்தவழியே டூவீலரில் சென்ற ரகு என்கிற இளைஞர் அலங்கார வளைவுகளால் தடுமாறி விழுந்தபோது, லாரி மோதி விபத்துக்குள்ளானதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அதே சாலையில், 'Who Killed Ragu' என்று எழுதியும், ட்விட்டரில் 'Who Killed Ragu' என்று ட்ரெண்டிங் செய்தும் அரசை நோக்கி கேள்வியெழுப்பியது குறிப்பிடத்தக்கது.
-மதி