மூகப் போராளி முகிலன் 100 நாட்கள் கடந்து வெளிவந்தும் கூட, அதிகாரத்தின் கரங்கள் அவரை இறுக்கிப் பிடித்திருக்கின்றன.

mmஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த முகிலன் பிப்ரவரி 15-ல் சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் மாயமானார். கிட்டத்தட்ட 4 மாதங்கள் கடந்தநிலையில் ஜூலை 6-ஆம் தேதி திருப்பதியில் ஆந்திர போலீசார் பார்வைக்கு படும்படி அவர் ரயில் முன் முழக்கமிட்டு காவல் துறையின் பிடிக்குள் வந்தார். இதனிடையே நெடு வாசல் போராட்டத்தில் அவருக்கு அறிமுகமான ஒரு பெண் அளித்த பாலியல் புகாரில் முகிலனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைதுசெய்து எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெண் கொடுத்த பாலியல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதால் முகிலனை 24 மணி நேரத்திற்குள் கரூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, மாலை 4 மணியளவில், இன்ஸ்பெக்டர் திலகா உள்ளிட்ட காவலர்கள் கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த முகிலனை போலீஸ் வேன்மூலம் அழைத்துவந்தனர். போலீஸ் தரப்பில் காலையில் முகிலனை ஆஜர்படுத்த இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், பகலில் ஆஜர்படுத்தி னால், முகிலன் தரப்பு முக்கிய தலைவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து விவகாரத்தை பெரிதாக்குவார்கள் என்ற பயத்தால், இரவோடு இரவாக ஆஜர்படுத்தியதாகச் சொல்லப்பட்டது. இரவு 12.30 மணிக்கு மேல் கரூர் நீதிபதி வீட்டருகே உள்ள பகுதிகளை போலீஸ் கண்ட்ரோலில் கொண்டுவந்து, நள்ளிரவில் கரூர் மாவட்டக் குற்றவியல் நீதிமன்ற எண் 2ஐச் சேர்ந்த நீதிபதி விஜயகார்த்திக் முன்னிலையில் ஆஜர்படுத் தப்பட்டார் முகிலன்.

வழக்கை விசாரித்த நீதிபதியிடம், ""மூணு நாளா சாப்பாடு இல்லை. ரொம்பவும் மனஉளைச் சலா இருக்கு. என் உயிருக்கு ஆபத்து. சரியாக என்னைத் தூங்கவிட வில்லை. இதனால் என் மனநிலையும் சரியில்லை. அதனால், நல்ல மருத் துவம் எடுத்த பிறகு நான் எனது வாக்குமூலத்தை சென்னை நீதிமன்றத்தில் சொல்கிறேன்'' என்று முகிலன் சொல்ல, உடனே நீதிபதி, ""திருச்சி மத்திய சிறையிலுள்ள உள் மருத் துவமனையிலேயே உங்க ளுக்கு சிகிச்சை தர உத்தர விடுகிறேன்'' என்றார்.

15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் முகிலன் அடைக்கப் பட்டார். திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக சைலேஷ் குமார் யாதவ் இருந்த போதுதான் ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டார். இப்போது இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றி தற்போது வரை விடை தெரியாமல் இருக்கிறது. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலின் போது சுயேச்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர காவல்துறை ஆணைய ராக இட மாற்றம் செய்யப்பட்டார் சைலேஷ்குமார். அதன் பிறகு அங்கிருந்து தென்மண்டல ஐ.ஜி.யாக பொறுப்பேற் றார். அப்போது தான் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அவருடைய பெயர் முழுமையாக அடிபட்டதால் அங்கிருந்து, சென்னை ஆயுதப்படை ஐ.ஜி.யாகவும், அதன் பிறகு தமிழ்நாடு போக்குவரத்துக்கழக ஏ.டி.ஜி.பி.யாகவும் இருந்த அவர், பின்னர், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநராகி, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் ஏ.டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்பட்டார்.

Advertisment

police

இந்த நிலையில் 140 நாட்களுக்குப் பிறகு வெளியே வந்த முகிலன் கடத்த லுக்கு சைலேஷ்குமார் யாதவ், கபில் சிரோத்கர் என்கிற இரு உயரதிகாரிகள் தான் காரணம் என்றும் துப்பாக்கிச் சூடு தொடர்பான ஆதாரம் எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்கவே கடத்தினார்கள் அவர்கள்தான் முழுப்பொறுப்பு. அவர்களை விசாரிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார் முகிலன்.

முகிலன் ஆதரவாளர்களோ, ""அவர் காவல்துறையால் பந்தாடப்படுகிறார். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரத் தில் முகிலன் வெளியிடுவதாகச் சொன்ன இன்னொரு சி.டி.யைப் பற்றி பேசவேண் டிய நிலையில், அதனை திசை திருப்பி மக்களை பாலியல் புகார் பற்றி பேச வைத்திருப்பதில் வெற்றிபெற்றிருக்கிறது அதிகாரத் தரப்பு'' என்கிறார்கள்.

Advertisment

-ஜெ.டி.ஆர்.

படம்: ஸ்டாலின்

________________

திருமுருகன் காந்தியை யார் இயக்குகிறார்கள்?

ddஈழப்பிரச்சனை, காவிரி விவகாரம் என ஏராளமான பிரச்சனைகளில் தமிழக அரசுக்கு எதிராக குரலெழுப்பி வரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி. திருவல்லிக்கேணி, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அவர்மீது ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ரத்துசெய்யக் கோரி, திருமுருகன் காந்தி சார்பில் தனித்தனியாக எட்டு மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, எல்லா மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அவர் பின்னாலிருந்து இயக்குவது யார் என்பது பற்றி விரிவாக விசாரணை நடத்தவேண்டும்' என்று காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், ""என் பின்னணியில் என் மகளைத் தவிர வேறு யார் இருப்பார்கள். அவளின் உலகம் களவாடப்படுவதை என்னைத் தவிர வேறு யார் தடுப்பார்கள். அவளின் நீர், நிலம், ஆறு, கடல், காற்று கார்ப்ப ரேட்டுக்கு விற்கப்பட்டு மாசுபடுவதை அப்பாவாக நான்தானே எதிர்க்கவேண்டும். அவள், அவளுடைய தலைமுறையின் உரிமைக்கான முகமே நான்'' என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் திருமுருகன் காந்தி.