Advertisment

காவல்துறை Vs அரசு அலுவலர்கள்! -திருவண்ணாமலை திகுதிகு!

ss

தீபத்தன்று மட்டும் இருபது லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை நகரத்தில் குவிந்தனர். வெளியூர் பக்தர்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் பக்காவான பாதுகாப்பு நடவடிக்கையை செய்திருந்தது காவல்துறை. ஆனாலும் போலீசாரின் சர்வாதிகாரத்தால் அரசுத்துறை அதிகாரிகள் காவல்துறைக்கு எதிராக நிற்கின்றனர்.

Advertisment

t

டிச. 18-20, இதழில் நாம் "காக்கிகள் தீபம்!' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதழ் வெளிவந்த தினம் திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்தனர். வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. "தீபத் திருவிழாவை நடத்துவது மாவட்ட நிர்வாகமா? காவல்துறையா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தீர்வு காணவேண்டும். மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் களை மரியாதைக்குறைவாக நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்

தீபத்தன்று மட்டும் இருபது லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை நகரத்தில் குவிந்தனர். வெளியூர் பக்தர்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் பக்காவான பாதுகாப்பு நடவடிக்கையை செய்திருந்தது காவல்துறை. ஆனாலும் போலீசாரின் சர்வாதிகாரத்தால் அரசுத்துறை அதிகாரிகள் காவல்துறைக்கு எதிராக நிற்கின்றனர்.

Advertisment

t

டிச. 18-20, இதழில் நாம் "காக்கிகள் தீபம்!' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதழ் வெளிவந்த தினம் திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்தனர். வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. "தீபத் திருவிழாவை நடத்துவது மாவட்ட நிர்வாகமா? காவல்துறையா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தீர்வு காணவேண்டும். மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் களை மரியாதைக்குறைவாக நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்கிற கோரிக்கைகளை வைத்து கோஷங்களை எழுப்பினர்.

Advertisment

இதுகுறித்து முக்கிய அலுவலர்களிடம் நாம் பேசியபோது, "தீபத்திருவிழாவிற்காக ஒரு மாதத்துக்கும் மேலாகக் கோவில் நிர்வாகத்துடன் இணைந்து திட்டமிட்டு வேலைகள் செய்வது வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி அதிகாரிகள். தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்க இடம் பார்த்துத் தருவது, கழிவறைகள், குடிநீர், மின்வசதி ஏற்படுத்தி தருவது, காவல்துறையினர் தங்குவதற்கான இடங்கள், வசதிகள் செய்து தருவதும் நாங்கள்தான். கடந்த காலத்தில் தீபத்தன்று காவல்துறை எங்கள் அலுவலர்களை டார்ச்சர் செய்தபோது, நாங்கள் பெரிது படுத்தவில்லை. இந்தாண்டு பணி நிமித்தமாக வந்த வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உட்பட அரசு அலுவலர்களை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. மாவட்ட ஆட்சியர், நீதிபதிகளிடமும் தகராறு செய்தனர். உள்நோக்கத்துடனே போலீஸ் நடந்து கொண்டது.

தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்த வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடமும், துப்புரவுப் பணியாளர் களிடமும் மரியாதைக்குறைவாக போலீஸ் அதிகாரிகள் பேசியுள்ளார்கள். தாங்கள் செய்த தவறை மறைக்க போலீஸ் ஐ.டி.விங், வருவாய்த்துறை அலுவலர்களைக் குற்றவாளி யாக்கி சமூக ஊடகங்களில் பரப்புகிறார்கள் அதனால்தான் போராட்டம் நடத்துகிறோம்'' என்றார்கள்.

இதுகுறித்து பலதரப்பினர் கூறியதிலிருந்து, பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்தன்று உள்ளூர் மக்கள், வெளியூர் போவதோ, வருவதோ கிடையாது. லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்தாலும் கிரிவலம் முடிந்ததும் ஊருக்கு சென்றுகொண்டே இருக்கிறார்கள், இதுவரை சிறிய அளவில்கூட சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்ததில்லை. அப்படியிருந்தும் உள்ளூர் மக்களுக்கும், பக்தர்களுக்கும் காவல்துறை தான் அதிக தொந்தரவு தருகிறது. ஒவ்வொரு தீபத்திருவிழாவின்போதும் பாதுகாப்புக்கான காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்திக்கொண்டே செல் கிறார்கள்.

tt

பரணி தீபம், மகாதீபத்தன்று மாடவீதியை மொத்தமாக போலீஸ் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதை முதலில் தடுக்கவேண்டும். திருவிழாவுக்கு கோவில் நிர்வாகம் பாஸ் அச்சடித்து அனைவருக்கும் தருகிறது. கலெக்டர் கையெழுத்திட்டுத் தரும் டூட்டி ஆர்டர், பாஸ்களைக்கூட மதிப்பதில்லை. நகரத்துக்குள் போலீஸ் அதிகாரிகளின் குடும்பத்தினர், நண்பர்களின் கார்களை அனுமதிக்கும் போலீஸார், உள்ளூர் வாகனங்களைத் தடுக்கின்றனர். அதுகுறித்துக் கேள்வி எழுப்புகிறவர்களை ஒருமையில் பேசி மிரட்டுகிறார்கள். அதற்கு காரணம், காவல்துறை மட்டும் தனியே டூட்டி பாஸ், வாகன பாஸ் அச்சடிக்கிறது. அது இருந்தால் மட்டுமே கோவிலருகே அனுமதி என்கிற உத்தரவை பாதுகாப்புக்கு இருக்கும் போலீஸார் கடைபிடிக்கின்றனர். எனவே, காவல்துறை தனி பாஸ் பயன்படுத்துவதைத் தடுக்கவேண்டும்.

கோவிலுக்குள் நுழைய ஐந்து வழிகள் உள்ளன. ஒவ்வொரு கோபுரத்தின் முன்பும் ஒரு எஸ்.பி. தலைமையில் 100 போலீஸார் நின்று "பாஸ் இருக்கிறதா?' என பக்தர்களை சோதனை செய்தபின்பே கோவிலுக்குள் அனுமதிக்கின்றனர். ஆனாலும் கோவிலுக் குள்ளும் இரண்டாயிரம் போலீஸார்வரை நிறுத்துகின்றனர். கோவிலுக்குள் எதற்கு இவ்வளவு போலீஸ்? தீபத்தன்று காவல் துறை அதிகாரிகளின் கெடுபிடியால் சுவாமி தூக்கும் பணியாளர்களுக்கும், போலீஸா ருக்கும் இடையே உரசல் உருவாகிறது.

திருவிழா நடத்த கோவில் அதிகாரிகள், சிவாச்சாரியர்கள், அறங்காவலர் குழு இருக்கிறது. எந்த விழா எப்படி நடத்த வேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியும். அதில் காவல்துறை தலையிட்டு நாட்டாமை செய்வதைத் தடுக்க வேண்டும். கோவிலுக்குள் அனுமதிக்கப்படும் எண் ணிக்கையைவிட இருமடங்கு பாஸ் அச்சடிப்பதைக் குறைக்கவேண்டும். கோவில் நுழைவாயிலில் டிஜிட்டல் பாதுகாப்பு என்ட்ரி வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

தற்போது காவல்துறைக்கு எதி ராக அரசின் பிற துறை ஊழியர்கள் போராடுகிறார்கள், நாளை பக்தர்களும், உள்ளூர் மக்களும் போராடும் நிலை வரு முன் அரசு இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தவேண்டும்.

nkn251224
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe