துரை மாவட்டம் திருமங்கலம் அருகே வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தை பிராபகரன் தலைமையிலான ரவுடிகள், தெலுங்குப் பட பாணியில் சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

இந்நிலையில், போலீ சார் விசாரணை என்ற பெயரில் கிராம மக்களைத் துன்புறுத்துவதாக திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதய குமாரிடம் அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் புகாரளித்திருந்தனர். இதையடுத்து காவல் நிலையத்தைப் பார்வை யிடச் சென்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை டி.எஸ்.பி. சந்திரசேகரன் தடுத்துநிறுத்தினார். அதற்கு உதயகுமார், "போலீஸ் ஸ்டேசனையே தெலுங்குப் பட பாணியில் அடித்து நொறுக்கியிருக் கிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை. நீங்கள் ரவுடிக்கு ஆதர வாகச் செயல்படுகிறீர்கள். அவன் ஏற்கனவே ஆண வக் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவன். பல கொலைவழக்கு இருக்கு என்கிறீர்கள். காவல் நிலையத்திலிருந்த ஏட்டு பால்பாண்டியை அறையில் வைத்துப் பூட்டியிருக்கான். இந்த தொகுதி எம்.எல்.ஏ., முன் னாள் அமைச்சர், தற் போது சட்டமன்ற எதிர்க் கட்சி துணைத்தலைவர் என்னை காவல் நிலையத்தைப் பார்வையிட விடமாட்டீர் கள் என்றால் என்ன அர்த்தம்? இந்த விசயத்தை மூடிமறைக்க காவல்துறையே ரவுடிக்கு உடந்தையாக இருப்பது என்ன நியாயம்?''’என்று கேள்வியெழுப்பினார்.

sss

உள்ளே செல்ல முயன்ற உதயகுமாரை கைது செய்த அடுத்த சிலமணி நேரத்தில், அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி, "மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. மக்க ளைக் காக்கவேண்டிய காவல்துறைக்கும் பாதுகாப்பில்லை. தற்போது காவல் நிலை யத்திற்கே பாதுகாப்பில்லை. நான்காண்டு ஆட்சிக் காலத்தில் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்கவேண்டிய சாதனை இதுதான்'' ’என்று அறிக்கைவிட, தென்மண்டல ஐ.ஜி. பிரேம்ஆனந்த் சின்கா, மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆகியோர் சம்பவம் நடந்த காவல் நிலையத்திற்கு வந்தனர்.

நாம் எஸ்.பி. அரவிந்தனிடம், “"ஏற்கனவே சம்பந்தப்பட்ட ரவுடிமீது பல்வேறு வழக்குகள் இருக்கிறதா சொல்கிறீர்கள். ஏன் இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை''’என்றதும் “"இச்சம்பவம் தொடர்பாக டி.எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையில் தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கைதுசெய்யப்படுவார்கள். மற்றபடி இதை பத்திரிகைகள் பெரிதாக்க வேண்டாம்'' என்றார்.

Advertisment

இந்த தாக்குதல் குறித்து சத்திரபட்டியைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் பேசியபோது,

ss

"சம்பவம் நடந்த கடந்த 13-ஆம் தேதி இரவு பால்பாண்டி என்ற ஒரு காவலர் மட்டுமே போலீஸ் ஸ்டேஷனில் இருந்தார். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிறது ஸ்டேஷன். பல்வேறு கொலை அடிதடி வழக்குகளில் உள்ள பிரபாகரனின் வீட்டிற்கு, காலையில் போலீஸார் வந்து சோதனை நடத்திய பிறகு, விசாரிக்கவேண்டும் என்று அவனின் அப்பாவைக் கூட்டிச்சென்றனர். இதை கேள்விப்பட்டு இரவு வீட்டிற்கு வந்த பிரபாகரன், நேராக காவல் நிலையத்திற்கு தன் கூட்டாளிகளுடன் வந்து, தான் வீட்டில் இல்லாதபோது காவல்துறையினர் அத்துமீறி உள்ளேநுழைந்து, தனது தந்தையை மிரட்டியிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

Advertisment

மதுபோதையிலிருந்த அவர், தமது கூட்டாளியுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் பணியிலிருந்த காவலர் பால்பாண்டியை மிரட்டியுள்ளார். அங்கிருந்த பொருட் களையும் அடித்து உடைத்துள்ளார். பின்பு காவல் நிலையத்திலிருந்த காவலர் பால்பாண்டியை அறைக்குள் தள்ளி பூட்டியுள்ளார்.

இது நடந்தது இரவு 12.30 மணி. அதிகாலை 4.30 வரை அறைக்குள்ளேயே இருந்துள்ளார் பால்பாண்டி. சத்தம் போட்டும் யாருக்கும் ssகேட்கவில்லை. இந்நிலையில் அந்தவழியாக சென்ற பால்காரர் அவரைக் காப்பாற்றியுள்ளார். அதன்பின்தான் ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து தொகுதி எம்.எல்.ஏ.விடம் ரவுடி பிரபாகரன் குறித்து புகாரளித்தனர். ஏற்கெனவே சாதி மாறி காதலித்தார்கள் என்று காதலித்த இளைஞரை கழுத்தை அறுத்து ஆணவக்கொலை செய்த வழக்கில் அவரை கைதுசெய்தனர். அதில் ஜாமீனில் வெளியேவந்தார். அடுத்தடுத்து பல்வேறு அடிதடி கொலைவழக்குகளில் பெயர் அடிபட்டும் போலீஸார் கண்டு கொள்ளாமல் இருந்தனர். இப்போது காவல் நிலையத்தையே அடித்துநொறுக்கி போலீஸாரையே உள்ளே வைத்துப் பூட்டுமளவுக்கு தைரியம் வந்துள்ளது''’என்று சொன்னார்.

ஆதித்தமிழர் கட்சித் தலைவர் ஜக்கையன், "சாதி மாறி காதலித்ததால் இளைஞர் அழகேந் திரனை ஆணவக்கொலை செய்தவன் இந்த பிரபாகரன். பல்வேறு கட்டப்பஞ்சாயத்து அடிதடியில் தொடர்புடையவன். ஆணவக்கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட இந்த பிரபாகரன் மீது குற்றப் பத்திரிகையே போலீஸார் இன்னும் தாக்கல்செய்யவில்லை. இது குறித்து பலமுறை மாவட்ட எஸ்.பி. அரவிந்தனிடம் முறையிட்டும் அவர் கண்டுகொள்வதே இல்லை. அவனை போலீஸாரே கண்டும் காணாமல் விட்டதால்தான் இப்ப போலீஸ் நிலையத்தையே அடித்து நொறுக்குமளவுக்கு தைரியம் வந்திருக்கிறது. காவல்துறை அதிகாரிகளே தி.மு.க. ஆட்சியை தவறான வழியில் கொண்டு செல்கிறார்கள்''’என்றார்.

இந்நிலையில் 15-ஆம் தேதி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தி லிருந்து பிரபாகரன், அவனது கூட்டாளி அய்யனார் இருவரும் கைசெய்யப்பட்டுள்ளதாக அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசுரிக்க, குற்றவாளி பிரபாகரனின் புகைப்படம் நாம் கேட்டபோதோ கொடுக்க மறுத்துவிட்டனர்.