"கொடநாடு கொலை வழக்கில் இரண்டாம்கட்ட விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதில் பல புதிய விவரங்கள் சிக்கி, விசாரணை செய்த அதிகாரிகளையே ஆச்சரியமும் உற்சாகமும் அடைய வைத்துள்ளது' என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

அனுபவ் ரவி. இவர் அ.தி.மு.க.வின் மாவட்ட நிர்வாகி. கொடநாடு வழக்கில் ஒரு சாதாரண சாட்சி. இவர் கொடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெ.வின் டிரைவர் கனகராஜுடன் டெலிபோனில் பேசியதாக சாட்சியம் அளித்தவர். இவருக்கும் மறுவிசாரணைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவருக்கு, மறுவிசாரணைக்கு ஆஜராகும்படி போலீசாரால் சம்மன் அனுப்பப்படுகிறது.

kodanadu

அதை வைத்துக்கொண்டு அவர் மறு விசாரணைக்கு தடை வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். உயர்நீதிமன்றத்தில் அனுபவ் ரவிக்காக இந்தியாவின் மிகப்பெரிய வக்கீல்கள் வாதாடுகிறார்கள்.

Advertisment

கொடநாடு குற்றவாளிகளுக்கு தி.மு.க வக்கீல்கள் ஆஜரானதாகவும், அவர்கள்தான் ஷ்யூரிட்டி போட்டதாகவும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி தொடங்கிப் பலரும் குற்றம்சாட்டிவந்த நிலையில், சாதாரண நபரான அனுபவ் ரவியின் வழக்கில் மிகப்பெரிய வக்கீல்களா என்கிற அதிர்ச்சியில் தமிழக போலீசாரும் தி.மு.க. தலைமையும் விசாரணையில் இறங்கியது. அனுபவ் ரவி ஒரு பகடைக்காய். அவரை இயக்குவது சாட்சாத் எடப்பாடிதான் என கண்டுபிடிக் கிறார்கள். சம்பந்தமேயில்லாத அனுபவ் ரவிக்கு சம்மன் அனுப்பியது யார்? என நீலகிரி போலீசாரை கேட்டபோது, நீலகிரி சரக டி.ஐ.ஜி.யாக இருக்கும் முத்துசாமி அனுப்பச் சொன்னார் என பதில் வருகிறது.

dd

இந்த முத்துசாமியை யார் என விசாரிக்கிறார்கள். அவர் அ.தி.மு.க. ஆதரவு காவல்துறை அதிகாரி. ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர். எடப்பாடியின் அன்பை பெற்று அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர். அவரை, டி.ஜி.பி.யாக இருந்த திரிபாதி, கொடநாடு வழக்கு வரும் நீலகிரி ரேஞ்சுக்கு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உளவுத்துறை அதிகாரியாக இருந்த சத்தியமூர்த்தியின் சிபாரிசில் நியமித்தார்கள் என நீலகிரி மாவட்ட போலீசார் பதிலளித்தார்கள்.

Advertisment

உயர்நீதிமன்றத்தில் அனுபவ் ரவி போட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவர் உச்சநீதிமன்றத்திற்கு அப்பீல் செய்கிறார்.

dd

நீலகிரி மாவட்டத்தில் உள்ள போலீசார் இன்னமும் அ.தி.மு.க. போலீசாக உள்ளனர். அதற்குக் காரணம் கடந்த ஆட்சியில் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை கொடநாடு வழக்கை காரணம் காட்டி எடப்பாடி எக்கச்சக்கமான பணத்தை வாரியிறைத்தார். அதற்கு அனுபவ் ரவிக்கு சம்மன் அனுப்பப்பட்ட சம்பவமே உதாரணம் என்கிறார்கள் தி.மு.க. வழக்கறிஞர்கள்.

இவ்வளவு முக்கியமான வழக்கில் ஆட்சியை இழந்த பிறகும் எடப்பாடி எப்படி போலீசாரை தனக்கு சாதகமாக வளைக்க முடிகிறது என தி.மு.க. அரசின் தலைமையே அதிர்ந்துபோனது. அதனால் ஒட்டுமொத்தமாக மறுவிசாரணை பொறுப்பை கோவை மண்டல ஐ.ஜி. சுதாகரிடம் ஒப்படைத்தது. அவரும் நீலகிரி எஸ்.பி. ஆசிஷ்ராவத்தும் நேரடியாக களமிறங்கினர். அந்த விசாரணையில் நீலகிரி டி.ஐ.ஜி. முத்துசாமியை பங்கெடுக்கக் கூடாது என தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டது என்கிறார்கள் நீலகிரி போலீசார்.

dd

சுதாகர் முதலில் சம்மன் அனுப்பி விசாரித்தது கொடநாடு பங்களாவின் மேலாளர் நடராஜன். அந்த விசாரணை யில் சம்பவம் நடந்தபோது கோவை ரேஞ்ச் ஐ.ஜி.யாக இருந்த பாரி மற் றும் எஸ்.பி.யாக இருந்த முரளி ரம்பாவின் இன்னொரு முகம் வெளியே வந்தது என்கிறது காவல்துறை.

போலீஸ் விசாரணையில் எஸ்டேட் மேனேஜரான நடராஜன் சொன்ன தகவல்கள் அதிர்ச்சி ரகம். கொடநாடு கொள்ளை சம்பவத்தை விசாரிக்க போலீஸ் அதிகாரிகள் கொடநாடு பங்களாவிற்குள் நுழைந்தனர். அங்கு ஏராளமான விலைமதிக்க முடியாத பொருட்கள் இருந்தது. அதையெல்லாம் தங்களது வண்டிகளில் ஏற்றிக்கொண்டு கொடநாட்டில் இரண்டாவது கொள் ளைச் சம்பவத்தை இருவரும் அரங்கேற்றினார்கள்.

அதில் முக்கியமானது ஜெயலலிதா வழிபட்ட குருவாயூரப்பன் சிலை. ஒன்றரைக் கிலோ தங்கத்தால் ஆன இரண்டு சிலைகளை கனகராஜ் கொள்ளையடித்த பிறகு நான் சென்று பார்த்தேன். அவை ஜெ.வின் பூஜை அறையில் இருந்தது. போலீஸ் அதிகாரிகள் வந்து சென்ற பிறகு அவை காணவில்லை.

பல பொருட்கள் காணவில்லை. கனகராஜ் டீம் வெறும் ஆவணங் களை மட்டுமே எடுத்துச் சென் றார்கள். கனகராஜ் டீம் அந்த சிலைகள் மீது கை வைக்கவில்லை. இது எப்படி நடந்தது. ஜெ.வின் பூஜையறையில் தங்கத்தாலான குருவாயூரப்பன் சிலைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும் என நான் சென்னையில் இருக்கும் சசிகலா உறவினர் களிடம் சொன்னேன். அவர்கள் சென்னையில் உள்ள போலீஸ் உயரதிகாரிகளிடம் பேசினர். அடுத்த சில தினங்களில் எஸ்.பி. முரளிரம்பாவும் ஐ.ஜி. பாரியும் கொடுத்ததாகச் சொல்லி 3 கிலோ தங்கத்திலான குருவாயூரப்பன் சிலைகளை போலீசார் திருப்பிக் கொடுத்தார்கள் என நடராஜன் கொடுத்த வாக்குமூலம் ஐ.ஜி. சுதாகர் டீமையே அலற வைத்தது என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

கொடநாட்டில் நடந்த இரண்டாவது கொள்ளை. இந்த நடராஜனும் லேசுப்பட்ட ஆளில்லை. அவர் இதுவரை உண்மைகளை போலீசாரிடம் சொல்லவில்லை. கொடநாட்டில் கனகராஜ் டீம் வந்தபோது மின்சாரம் தடைப்பட்டது. சி.சி.டிவி செயலிழந்தது போன்றவை நடராஜன் மற்றும் சஜீவன் ஆகிய, அந்த எஸ்டேட்டின் அதிகாரத்தில் உள்ள வர்கள் துணையின்றி நடந்திருக்காது.

kk

சசிகலாவின் ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொண்ட கனகராஜ் கொள்ளையடிக்கிறார். அதற்கு சசிகலாவின் வேலைக்காரரான நடராஜன் துணைபோயிருக்கிறார் என சசிகலாவுக்கு ஆதரவாக கனகராஜ் அடித்த போஸ்டர்களை நமக்குத் தந்தார்கள், சசிகலாவின் ஆதரவாளர்கள்.

இவர்கள் இன்னொரு பக்கம் எடப் பாடியின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து கொள்ளை யடிக்க டபுள் கேம் விளையாடியிருக்கிறார்கள் என சந்தேகப்பட்ட போலீசார், நடராஜனை தங்கள் விசாரணை முறைப்படி நன்றாக கவனித்திருக்கிறார்கள். கொடநாட்டில் வேலை பார்த்த லட்சுமி, கொடநாட்டில் ஜெ.வின் அறை உடைக்கப்பட்டதைப் பற்றி சொன்னதை வைத்து நீ எடப்பாடி ஆளா? என நடராஜனைப் பார்த்து கேள்வி கேட்க.... அவர் நடந்த சம்பவத்தில் சஜீவன் மற்றும் எடப்பாடியின் பங்கு பற்றி சொல்லி யிருக்கிறார்.

kk

சஜீவனும் கனகராஜூம் சேர்ந்து போட்ட திட்டத்தின் பின்னணியில் எடப்பாடி இருப்பதை உறுதி செய்தார். எடப்பாடியும் கனகராஜும் வேலுமணியின் அண்ணன் அன்பரசனும் ஒரு முக்கோண நட்பை கொண்டிருந்தார்கள் என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருக் கிறார். கொடநாடு பங்களாவிற்கு அதிரடியாக ஐ.ஜி.யும் எஸ்.பி.யும் நேரடியாகச் சென்று அங்கிருந்த சாட்சிகளுக்கு தைரியம் அளித் திருக்கிறார்கள்.

அதேபோல் சயான் மனோஜ் தவிர மற்ற குற்றவாளிகளுக்கு என்ன தெரியும் என அடுத்தகட்டமாக தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

கொடநாடு விவகாரத்தில் சசிகலா ஏதாவது உண்மைகளைச் சொன்னால், நாம் சிக்கிவிடுவோம் என எடப்பாடி பயப்படுகிறார். கொடநாட்டில் சில லட்சங்கள்தான் பணம் இருந்தது. மற்ற பணத்தை ஜெ. இறந்தவுடன் சசி தரப்பு எடுத்துச் சென்றுவிட்டது. அங்கு இருந்தது ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., நத்தம், வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் சசி, போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றப்பட்டபோது ஜெ.வுக்குத் தெரியாமல் சம்பாதித்த சொத்து தொடர்பான ஆவணங்கள். இதை சசி தரப்பு ஒத்துக்கொண்டால் எடப்பாடி வசமாக சிக்குவார்.

ff

விரைவில் கொடநாடு விவகாரத்தில் சசி வாய் திறப்பார் என்பதால் அவரிடம் சமாதானம் பேசுகிறார் எடப்பாடி. சசி வாய் திறந்தால் கொடநாடு மர்மம் விலகும் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

-தாமோதரன் பிரகாஷ், அருள்குமார்

______________________________________

இறுதிச் சுற்று!

சமூகப் போராளிகளுக்கு மரியாதை!

திராவிடன், தமிழன் என்ற வார்த்தைகளை அரசியல்படுத்திய பெருமைக்குரிய பன்மொழிப் புலவரான அயோத்திதாச பண்டிதரின் 175-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புகழைப் பரப்பும்வகையில் வடசென்னையில் அவருக்கு மணிமண்டபம் அமைக் கப்படும் என்று சட்டமன்றத்தில் 110-விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 1891-ம் ஆண்டு வெள்ளைக் காரர்கள் ஆட்சியில் முதன்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தபோது, "பூர்வ தமிழர்' என்று பதியச் சொன்னவர் இவர். சமூக நீதிக்காகப் பாடுபட்ட இவரை, "என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி' என்று பெரியாரே புகழ்ந்திருக் கிறார்.

ff

வன்னியர்களுக்கு வேலை வாய்ப்புகளில் 20% இட ஒதுக்கீடு கேட்டு, 1987-ம் ஆண்டில் நடத்திய போராட்டத்தின்போது அன்றைய அ.தி.மு.க அரசின் காவல் துறையின் துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் மரணமடைந்தனர். பின்னர் அமைந்த கலைஞர் அரசு, 1989-ல் மிக பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற சமுதாயத்தை வகைப்படுத்தி, 20% இடஒதுக்கீடு வழங்கியது. "துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களை "சமூக நீதிப் போராளிகள்'” என அறிவித்து அவர்களுக்கு விழுப்புரத்தில் நினைவு மணி மண்டபம் அமைக் கப்படும்' என்று 110 விதியின் கீழ் அறிவித்தார் முதல்வர்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை யில் வ.உ.சி.க்கு திருவுருவச் சிலை, கப்பல் கட்டுமானத் துறையில் பங்காற்றிவரும் சிறந்த தமிழருக்கு வ.உ.சி.யின் பெயரில் ரொக்கப் பரிசுடன் கூடிய விருது, வ.உ.சி. மறைந்த நாள் தியாகத் திருநாளாக அறிவிப்பு, வ.உ.சி.யின் அனைத்து நூல்களும் குறைந்த விலையில் மறுசீரமைப்பு உள்ளிட்ட 14 அறிவிப்புகளை முதல்வர் வெளி யிட்டார்.

தந்தை பெரியாரின் கொள்கையைப் போற்றும் அரசு என்பதற்கு அடை யாளமாக, பெரியா ரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி, ஆண்டு தோறும் சமூக நீதி நாளாகக் கொண் டாடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அந்த நாளில் அனைத்து அரசு ஊழியர்களும் சமூக நீதி உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள்.

சமூகப் போராளிகளாகத் திகழ்ந்த தலைவர்களைப் போற்றும் வகையிலான முதல்வரின் தொடர் அறிவிப்பு அனைத்துக் கட்சியினரின் வரவேற்பைப் பெற் றுள்ளது.

-தெ.சு.கவுதமன்