Advertisment

முதல்வர் அலுவலகத்தை உலுக்கிய காவல்துறை பஞ்சாயத்து!

ss

மிழகம் முழுவதும் கலக்கிய சில நிறுவனங்களின் நிதி முறைகேடு விவகாரங்கள் முதல்வர் அலுவலகத்தையும் தொட்டுவிட்டது என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

Advertisment

நியோமேக்ஸ் என்கிற நிறுவனம் மதுரையை மையமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் பதினேழு இடங்களில் அலுவலகங்கள் வைத்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு செய்தது. நிலத்தில் முதலீடு செய்து அதிக வட்டி தருகிறோம் என மக்களை ஏமாற்றிய இந்த நிறுவனத்துக்கு எதிராக மதுரையில் பல புகார்கள் எழுந்தன. இதன் இயக்குனர்களான பாலசுப்ரமணியம், கமலக்கண்ணன் உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள்.

Advertisment

dd

ஆருத்ரா, ஐ.எப்.எஸ். பாணியில் நடந்த இந்த நிதி மோசடிகளுக்கு பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக புகார்கள் எழுந்தது. இன்னமும் முழுமை பெறாத இந்த விசாரணையை பொருளா தார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். சமீபத்தில் நடந்த காவல்துறை மாற்றங்களில், பொருளாதார குற்றப்பிரி வைச் சேர்ந்த ஆசியம்மாள் மற்றும் அதன் தலைவராக இருந்த அபின் தினேஷ் மோடக் ஆகியோர் மாற்றப்பட்டார்கள். நேர்மையான அதிகாரிகள் எனப் பெயரெடுத்த இவ

மிழகம் முழுவதும் கலக்கிய சில நிறுவனங்களின் நிதி முறைகேடு விவகாரங்கள் முதல்வர் அலுவலகத்தையும் தொட்டுவிட்டது என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

Advertisment

நியோமேக்ஸ் என்கிற நிறுவனம் மதுரையை மையமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் பதினேழு இடங்களில் அலுவலகங்கள் வைத்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு செய்தது. நிலத்தில் முதலீடு செய்து அதிக வட்டி தருகிறோம் என மக்களை ஏமாற்றிய இந்த நிறுவனத்துக்கு எதிராக மதுரையில் பல புகார்கள் எழுந்தன. இதன் இயக்குனர்களான பாலசுப்ரமணியம், கமலக்கண்ணன் உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள்.

Advertisment

dd

ஆருத்ரா, ஐ.எப்.எஸ். பாணியில் நடந்த இந்த நிதி மோசடிகளுக்கு பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக புகார்கள் எழுந்தது. இன்னமும் முழுமை பெறாத இந்த விசாரணையை பொருளா தார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். சமீபத்தில் நடந்த காவல்துறை மாற்றங்களில், பொருளாதார குற்றப்பிரி வைச் சேர்ந்த ஆசியம்மாள் மற்றும் அதன் தலைவராக இருந்த அபின் தினேஷ் மோடக் ஆகியோர் மாற்றப்பட்டார்கள். நேர்மையான அதிகாரிகள் எனப் பெயரெடுத்த இவர்களில் அபின்தினேஷ் மோடக் மாற்றப்பட்டது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.

ஆசியம்மாளும், அபின்தினேஷ் மோடக்கும் அண்ணாமலைக்கு எதிரான ஆருத்ரா வழக்கை சரியாகக் கையாளவில்லை. அதில் அண்ணாமலை, அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் கைது செய்யப்படவில்லை என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் இந்த நேர்மையான அதிகாரிகள் மாற்றப்பட்டார்கள்.

அதன்பின் பொருளாதாரக் குற்றப்பிரிவில் வேகமாக கோப்புகள் நகர்ந்தன. பல கோடி ரூபாய் மோசடிகளை விசாரிக்கும் இந்தப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்ட இன்னொரு நேர்மை யான அதிகாரியான பாலநாகதேவி பொறுப் பேற்பதற்கு முன்பாகவே விரைவாக செயல்பட்ட ஆசியம்மாள், நியோ மேக்ஸ் மோசடி தொடர்பான பைல்களை வேகமாகப் பரிசீலித்து அதில் மதுரையைச் சேர்ந்த செந்தூரான் என்பவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தார். இந்த செந்தூரான், முதல்வரின் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் திருநாவுக்கரசு என்பவரின் உறவினர்.

முதல்வரின் பாதுகாப்புப் பிரிவு என்பது மிகவும் முக்கியமானது. அதன் தலைவராக இருந்த ஜாபர் சேட்தான் பின்னாளில் உளவுத்துறை தலைவர் ஆனார். திருநாவுக்கரசின் இன்னொரு உறவினரான செந்தூரானை கைது செய்யும் முயற்சிகளை எதிர்த்து அவர் அபின்தினேஷ் மோடக்கை சந் தித்து முறையிட்டார். "நீங்கள் மாற்றப்பட்ட நிலையில் அவசர அவசரமாக இந்த வழக்கில் எந்தக் குற்றமும் செய்யாத எனது உறவினரை ஏன் கைது செய்ய முயல்கிறீர்கள்?''” என மோடக் கிடம் திருநாவுக்கரசு எழுப்பிய கேள்விக்கு அவர் ஆசியம்மா ளைக் கூப்பிட்டு கண்டித்தார்.

ஆசியம்மாள், செந்தூரான் குற்றம் செய்திருக்கிறார் என வாதிட்டார். கடைசியில் அந்த நடவடிக்கைகள் வேகம் பெற வில்லை. இது பற்றிய புகார் முதல்வரின் கவனத்துக்கும் கொண்டுசெல்லப்பட்டது. திருநாவுக்கரசின் உறவினரை ஏன் குறி வைக்கிறார்கள் என்கிற கேள்விக்கு இது முதல்வர் அலுவலகத்தில் நடக்கும் ஒரு பாலிடிக்ஸ் என்கிறார்கள்.

உளவுத்துறை அதிகாரி யாக இருந்த டேவிட்சனுக்கு நெருக்கமான முத்துக்குமரன் என்பவர் முதல்வரின் பாதுகாப் புப் பிரிவில் அதிகாரியாக உள்ளார். முத்துக்குமரனைப் போலவே காஞ்சிபுரத்தில் சௌந்திரபாண்டியன் என ஏகப்பட்ட டேவிட்சன் ஆதரவாளர்கள் காவல்துறையில் இருக்கிறார்கள். டேவிட்சனின் உறவினர்கள் காஞ்சிபுரம் பகுதியில் ‘ஜோன்ஸ் பவுண்டேசன்’ என்கிற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். டேவிட்சன் மாற்றப்பட்ட பிறகு, அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட நிறு வனங்கள் சார்ந்த பிரச்னைகளை முத்துக்குமரன் கண்டு கொள்ளவில்லை. அதற்குக் காரணம் திருநாவுக்கரசுதான் என நினைத்த டேவிட்சன் அவரை மிரட்ட, அவரது உறவினரை கைது செய்ய ஆசியம்மாள் மூலம் நடவடிக்கை எடுத்தார். இதனால்தான் மாற்றங்கள் நடந்த பிறகும் பொருளாதாரக் குற்றப்பிரிவு வேகமாக வேலை பார்த்தது என்கிறார்கள் காவல்துறை யைச் சேர்ந்தவர்கள். தமிழக காவல்துறையில் மாற்றங்கள் நடந்தாலும் பொருளாதாரக் குற்றப்பிரிவு மிகவும் பலவீனமாகவே இருக்கிறது. திருச்சியில் புகாருக்குள்ளான சத்தியப்பிரியா தாம்பரத்தில் புகாருக்குள்ளான ஜோஸ் தங்கையா ஆகியோர் மாற்றத்திற்குப் பிறகு பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு வந்துள்ளார்கள். ஆசியம்மாளை விட ஜோஸ் தங்கையா டேவிட்சனுக்கு மிகவும் நெருக்கம். ஜோஸ் தங்கையா, சௌந்தர பாண்டியன் மூலம் டேவிட்சனின் உறவினர்கள் கம்பெனியான ஜோன்ஸ் பவுண்டேசன் மறுபடியும் வேகம் பெறுகிறது என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

சௌந்தரபாண்டியனுக்கு எதிராக பல புகார்கள் தொகுக்கப்பட்டு புதிய டி.ஜி.பி.வசம் கொடுக்கப்பட்டுள்ளது. டேவிட்சனின் ஆதிக்கம் முதல்வர் அலுவலகத்தையே அலற வைத்துள்ளது என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

___________________

இறுதிச் சுற்று

dd

மண்டல வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (இகஆ2) ஒரு நாள் பயிற்சி பாசறைக் கூட்டம் என தலைமை கழகத்திலிருந்து அறிவித்த நிலை யில், திருச்சிக்கு அடுத்து ராமநாதபுரத்தில் 17-08-2023 வியாழனன்று நடை பெற்றது. இகஆ2விற்காக மதுரையிலிருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், திருப்புவனம் -சிலைமான் ஊராட்சியில் முரசொலி மாறன் அவர்களின் 90லிஆவது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி, மரியாதை செலுத்திவிட்டு இராமநாதபுரம் நோக்கி பயணமானார்.

-நாகேந்திரன்

ss

சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும் அ.தி.மு.க. அம்மா பேரவை மாவட்டச் இணைச் செய லாளருமான பார்த்திபன், வியாழனன்று அதிகாலை நடைபயிற்சி சென்றபோது, 6 மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார். கொலையாளிகளை தனிப்படை அமைத்து போலீஸ் தேடிவருகிறது. தமிழக சட்டஒழுங்கில் முதல்வர் தீவிர கவனம்செலுத்த வேண்டுமென, மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

nkn190823
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe