அஜித்குமார் மரணித்தது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் என முதல் தகவலறிக்கையில் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந் தார் எனக் குறிப்பிடப்பட் டுள்ளதால், நீண்ட அலைக் கழிப்பிற்கு பிறகு திருப்புவனம் போலீஸாரால் கொடுக்கப் பட்ட அஜித்குமாரின் இறப்பு அறிக்கை சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பணிபுரிந்த தற்காலிக பணியாளர் அஜித்குமார், நகைத் திருட்டு வழக்கில் கடந்த மாதம் 27ஆம் தேதி மானாமதுரை டி.எஸ்.பி.யின் தனிப்படை போலீ ஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு, 28ஆம் தேதி கொலை செய்யப் பட்டார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பதிவாகியது. முன்னதாக தமிழக அரசு வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்றியது. இந்த நிலையில், "தனிப்படை போலீஸாரால் அஜித்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கான அலுவலர்களை ஒரு வாரத்தில் சி.பி.ஐ. இயக்குநர் நியமிக்க வேண்டும். அந்த அலுவலர்கள், மாவட்ட கூடுதல் நீதிபதி யின் விசாரணை அறிக்கை மற்றும் அவ ரது கட்ட
அஜித்குமார் மரணித்தது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் என முதல் தகவலறிக்கையில் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந் தார் எனக் குறிப்பிடப்பட் டுள்ளதால், நீண்ட அலைக் கழிப்பிற்கு பிறகு திருப்புவனம் போலீஸாரால் கொடுக்கப் பட்ட அஜித்குமாரின் இறப்பு அறிக்கை சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பணிபுரிந்த தற்காலிக பணியாளர் அஜித்குமார், நகைத் திருட்டு வழக்கில் கடந்த மாதம் 27ஆம் தேதி மானாமதுரை டி.எஸ்.பி.யின் தனிப்படை போலீ ஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு, 28ஆம் தேதி கொலை செய்யப் பட்டார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பதிவாகியது. முன்னதாக தமிழக அரசு வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்றியது. இந்த நிலையில், "தனிப்படை போலீஸாரால் அஜித்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கான அலுவலர்களை ஒரு வாரத்தில் சி.பி.ஐ. இயக்குநர் நியமிக்க வேண்டும். அந்த அலுவலர்கள், மாவட்ட கூடுதல் நீதிபதி யின் விசாரணை அறிக்கை மற்றும் அவ ரது கட்டுப்பாட்டிலிருக்கும் சாட்சிகள், ஆவணங்களை பெற்றுக்கொள்ள வேண் டும். விசாரணை முறையாக நடைபெற வேண்டும், அனைத்துத் தரப்பிலும் விரிவாக விசாரணையை மேற்கொண்டு, இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும், தடய அறிவியல்துறை அறிக்கையை 1 வாரத் தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மதுரை, சிவகங்கை மாவட்ட நிர்வாகம், மற்றும் காவல்துறை தரப்பில் சி.பி.ஐ. விசாரணை அலுவலர் களுக்கான வாகன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டும். சாட்சிகளுக்கு போதிய பாது காப்பு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்' என உயர்நீதி மன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
இது தொடர்பாக கடந்த வாரம் ஜூலை 12ஆம் தேதி டி.எஸ்.பி. மோஹித்குமார் தலைமையிலான டெல்லி சி.பி.ஐ. அதிகாரி கள் விசாரணையை தொடங்கினர். அஜித்குமார் கொலை வழக்கு தொடர் பாக முதல் தகவல் அறிக் கையை பதிவுசெய்த சி.பி.ஐ. அதிகாரிகள், முதற்கட்டமாக அஜித்குமார் கொலை வழக்கு விசாரணை தொடர் பான மதுரை உயர்நீதிமன்ற மதுரை அமர்விற்கு சென்று, பதிவாளரிடம், விசாரணை நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷின் அறிக்கையை கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டனர். பின்னர் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரை சந்தித்தவர் கள், விசாரணைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தரக்கோரினர். அதன்பிறகு மடப்புரம் வந்த சி.பி.ஐ. டி.எஸ்.பி. மோஹித்குமார் தலைமையிலான ஐவர் குழு, அஜித்குமார் கடைசியாக தாக்கப்பட்ட அறநிலையத்துறை செயல் அலுவலகம் பின்புறமுள்ள கோசாலை, நிகிதாவின் கார் நிறுத்தப்பட்ட பார்க்கிங் பகுதி, அரசினர் விடுதி அருகேயுள்ள புளியமரம் பகுதி மற்றும் திருப்புவனம் -மதுரை சாலையிலுள்ள புளியந்தோப்பு உள் ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தது. இரண்டாவது நாளாக திருப்புவனம் காவல்நிலையத்திற்கு வந்த சி.பி.ஐ. டீம், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் உள்ளிட்ட காவலர்களிடம் சில கேள்விகளை எழுப்பிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த விசாரணை சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது.
இது இப்படியிருக்க, அஜித்குமார் இறப்பு சான்றிதழ் பெற, அவரது தம்பி நவீன்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் விண்ணப்பித் திருந்தார். அங்கு போலீஸாரின் இறப்பு அறிக்கையை சமர்ப்பித்தால் மட்டுமே இறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது. இங்கே அங்கே என சிவகங்கை, மதுரை மாவட்ட நிர்வாகங்களில் சான்றிதழுக்காகப் போராடிய நிலையில், புதனன்று பிற்பகல் 3 மணியளவில் இறப்பு அறிக்கையை வழங்கியது திருப்புவனம் காவல் நிலையம். இந்த வழக்கில் பதிந்த முதல் தகவல் அறிக்கையும், திருப்புவனம் காவலர்கள் வழங்கிய இறப்பு அறிக்கையும் இருவேறு முரண்பாடான தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"திருப்புவனம் காவல் நிலைய குற்ற எண். 303/2025, U/s: 196 (2) (a) BNSS-ன்படி, 28-06-25ஆம் தேதி மாலை சுமார் 06:45 மணியளவில் தலைமைக்காவலர் பிரபு என்பவர் என்னுடைய தொலைபேசியில் அழைத்து அஜித்குமார் என்பவர் மீண்டும் தப்பியோடி கீழே விழுந்து விட்டதாகவும், அவருக்கு வலிப்பு வந்துவிட்டது என்றும், திருப்புவனம் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் கூறியதால், மேற்கண்ட நபர்களை உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு உயரதிகாரிகளுக்கு தகவலைக் கூறிவிட்டு, மீண்டும் பிரபு அவர்களிடம் தொலை பேசி மூலம் பேசி, மருத்துவமனையில் வந்து பார்க்க, மேற்கண்ட அஜித்குமாரை சிவகங்கை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லக் கூறியதால், ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றதாகவும், இரவு சுமார் 11.15 மணிக்கு மருத்துவர் பரிசோதித்து விட்டு, அஜித்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறியதாகவும் எனக்கு தெரியப்படுத்தினார்கள்.'' என்கிறது முதல் தகவல் அறிக்கை.
ஆனால் அதே காவல் நிலையத்தினரால் வழங்கப்பட்ட இறப்பு அறிக்கையிலோ, "அஜித்குமார் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்' என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. "இந்த முரண்பாடான தகவல்கள் கவனக்குறைவு என்றாலும், காவல்துறையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது'' என்கிறார் மாவட்ட உளவு அதிகாரி ஒருவர்.
உண்மையிலேயே நிகிதாவின் நகை காணாமல் போனதா? திருடு போனதாகக் கூறப்படும் நகை எங்கு உள்ளது? உயர் அதிகாரிகளின் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? அஜித்குமார் கொலை செய்யப்பட்டது எவ்வாறு? எனப் பல்வேறு கேள்விகளுக்கு, சி.பி.ஐ.யால் ஆகஸ்ட் 20ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்படவுள்ள விசாரணை அறிக்கை பதில் சொல்லக்கூடும்!