அண்ணா பல்கலைக் கழக மாணவி, ஞானசேகர னால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்குல எஃப்.ஐ.ஆர். தரவிறக்கம் செய்யப்பட்ட விவகாரம் ஒரு பெரிய சர்ச்சையாக மாறியிருக் கிறது. தெரிஞ்ச தகவல்களின் அடிப்படையில பாத்தீங் கன்னா, எந்தப் பத்திரிகை யாளரும் இதுல தவறு செய்ய லைன்னு தெரியுது. அதற்கு ஆதாரம் கிடையாது. பத்திரிகையாளர்கள், அவங்க கடமையைச் செஞ்சிருக்காங்க. சி.சி.என்.எஸ். வெப்சைட் போர்ட்டலை தங்களோட பணிநிமித்தமா, சகஜமா பார்ப்பாங்க க்ரைம் ரிப் போர்ட்டர்ஸ். அது அவங்க வேலையில ஒரு முக்கியமான பகுதி. எஃப்.ஐ.ஆரை எடுத் தாத்தான், அந்த சார்ஜ்ஷீட்ல போலீஸ் என்ன சொல்லியிருக்காங்க (ஃபஸ்ட் இன்பர் மேஷன் ரிப்போர்ட்) கம்ப் ளைண்ட்ல என்னென்ன சொல்லியிருக்காங்கன்னு புரியும். யாராவது சொன்னா போதாது, செக் பண்ணணும் அதுல. அது ஒரு ஸ்டேண் டர்டு. அவங்களோட புரொ பஸன் அது.
தவறு எங்க நடந்திருக்கு? அந்த எஃப்.ஐ.ஆரை, காவல் துறை குறிப்பிட்ட வலைத் தளத்துல அப்லோடு பண்ணு னது. அப்லோடு பண்ணும் போது அந்த பேரையாவது எடுத்திருக்கணும். அடையா ளத்தை மறைச்சிருக்கணும். யாருன்னு கண்டுபிடிக்க முடி யாதபடி பேர், முகவரி, போன் நம்பர் எல்லாத்தையும் எடுத் திருக்கணும். வயசக்கூட எடுத்திருக்கலாம். அத எடுக்க அவங்க தவறிட்டாங்க. எதனால செஞ்சாங்க, கவனக் குறைவா செஞ்சாங்களா? இல்ல வேற எதாவது மோட் டிவ் இருந்ததாங்கிறதுதான்... விசாரணைக்கான காரணமா
அண்ணா பல்கலைக் கழக மாணவி, ஞானசேகர னால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்குல எஃப்.ஐ.ஆர். தரவிறக்கம் செய்யப்பட்ட விவகாரம் ஒரு பெரிய சர்ச்சையாக மாறியிருக் கிறது. தெரிஞ்ச தகவல்களின் அடிப்படையில பாத்தீங் கன்னா, எந்தப் பத்திரிகை யாளரும் இதுல தவறு செய்ய லைன்னு தெரியுது. அதற்கு ஆதாரம் கிடையாது. பத்திரிகையாளர்கள், அவங்க கடமையைச் செஞ்சிருக்காங்க. சி.சி.என்.எஸ். வெப்சைட் போர்ட்டலை தங்களோட பணிநிமித்தமா, சகஜமா பார்ப்பாங்க க்ரைம் ரிப் போர்ட்டர்ஸ். அது அவங்க வேலையில ஒரு முக்கியமான பகுதி. எஃப்.ஐ.ஆரை எடுத் தாத்தான், அந்த சார்ஜ்ஷீட்ல போலீஸ் என்ன சொல்லியிருக்காங்க (ஃபஸ்ட் இன்பர் மேஷன் ரிப்போர்ட்) கம்ப் ளைண்ட்ல என்னென்ன சொல்லியிருக்காங்கன்னு புரியும். யாராவது சொன்னா போதாது, செக் பண்ணணும் அதுல. அது ஒரு ஸ்டேண் டர்டு. அவங்களோட புரொ பஸன் அது.
தவறு எங்க நடந்திருக்கு? அந்த எஃப்.ஐ.ஆரை, காவல் துறை குறிப்பிட்ட வலைத் தளத்துல அப்லோடு பண்ணு னது. அப்லோடு பண்ணும் போது அந்த பேரையாவது எடுத்திருக்கணும். அடையா ளத்தை மறைச்சிருக்கணும். யாருன்னு கண்டுபிடிக்க முடி யாதபடி பேர், முகவரி, போன் நம்பர் எல்லாத்தையும் எடுத் திருக்கணும். வயசக்கூட எடுத்திருக்கலாம். அத எடுக்க அவங்க தவறிட்டாங்க. எதனால செஞ்சாங்க, கவனக் குறைவா செஞ்சாங்களா? இல்ல வேற எதாவது மோட் டிவ் இருந்ததாங்கிறதுதான்... விசாரணைக்கான காரணமா இருக்கணும். பத்திரிகை யாளர்கள் அதுல அவங்க ளோட பேர போட்டு ஓ.டி.பி. பெற்று, அத அவங்க டவுன்லோடு பண்ணுனாங் கன்னா... அது அவங்க பணி யோட ஒரு பகுதி. அவங் களுக்கு ஷாக்கா இருக்கும்... அதுல பேரு போட்டுருக்கான்! வழக்கமா இந்தமாதிரி வழக்குகள்ல போடுறதில்ல. சிலர் அவங்களோட வேலை செய்றவங்களோட ஷேர் பண்ணியிருக்கலாம். அது தவறில்லை... அது பப்ளிக்ல வரல. பப்ளிஷ் பண்ணல அதை. அந்த எப்ஃ.ஐ.ஆர்.ல வெறும் பேரு மட்டும் இல்ல, பல விவரங்கள் இருந்திருக்கும். அத ஷேர் பண்ணுறதுல ஒண்ணும் தப்பில்ல. இதுல அதுதான் முக்கியமான பாயின்ட். எந்த பத்திரிகையாளரும், எந்த ஆர் கனைஷேசனும் இதுல தவறு செய்யவில்லை. இருந்தாலும் வெளியில சில ஐடெண்ட் டிட்டி வெளிவந்திருக்கு.
சென்னை உயர்நீதிமன் றம் ஒரு ஆர்டர் கொடுத்திருக் காங்க. எஸ்.ஐ.டி. நிர்ணயிக்கும் போது யாருக்கு அவங்க ஆன் ஸர் பண்ணுவாங்க? யாருக்கு ரிப்போர்ட் பண்ணுவாங்கங் கிறத அந்த ஆர்டர்ல சொல்ல வே இல்ல. ஆனா ஒரு போலீஸ் இத எப்படி பங்ஷன் பண்ண முடியும்? பல கேஸ்கள பாத் திருக்கோம். சுப்ரீம் கோர்ட் கூட சிறப்பு விசாரணைக் குழுவை குஜராத் விஷயத்துல நியமிச்சாங்க. அதுல க்ளீயரா ஆர்டர்ல இருக்கும்... "ரிப் போர்ட் டு அஸ்'னு.
அதுக்காக எஸ்.ஐ.டி. என்ன வேணும்னாலும் செய்ய லாமா? பத்திரிகையாளர் களுக்கு சம்மன் பண்றது? அவங்களோட மொபைல் போன பறிமுதல் பண்றது? ரசீது குடுக்கிறது இல்ல. சட்டத்துக்கு உட்பட்டு நடந்ததா தெரியவே இல்ல. இது ஒரு துன் புறுத்தல்! இதை வேணும்னே செய்றாங் களான்னு தெரியல. இது தவறானது. திசை திருப்பும் போக்காகத் தான் எனக்கு இது புரிகிறது.
ஏன்னா போலீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றத் தோட மெயின் ஆர்டர் என்ன? போலீஸ் இதுல இன்வெஸ் டிகேட் பண்ணுங்க. யாரு இதை செஞ்சாங்க, அவங்க மேல டிஸிப்ளின் நடவடிக்கை எடுங்க. அது கொஞ்சம் கடு மையா சொல்லியிருக்கலாம்.
சென்சிடிவ்வான தக வல்களை பத்திரிகையாளர் கள்தான் வெளிப்படுத்தினதா ஒரு ஆதாரமும் இல்ல, இப்ப எஃப்.ஐ.ஆர டவுன்லோடு செய்றது குற்றம் இல்ல. எஃப்.ஐ.ஆர்.ல இருக்கக்கூடிய தகவல்கள, செய்தியாக்குவது குற்றம் இல்ல. பெயர் வெளி யிடக்கூடாது. பெயர், முகவரி, போன் நம்பர், அந்த விவ ரங்கள், பாதிக்கப்பட்டவ ருடைய விவரங்கள வெளி யிடக்கூடாது... அப்படி செஞ் சாதான் குற்றம். புரொபஸனா ஒரு ரிப்போர்ட்டர் அந்த எஃ.ப்.ஐ.ஆர. அவங்க ஆபீசுக்கு ஷேர் பண்ணியிருக்காங்க. கூட ஒர்க்பண்ற கொலீக், அவங்க ஷேர் பண்ணியிருக்காங்கன்றது குற்றமாகாது.
எஸ்.ஐ.டி. விசாரணை யின்போது சம்பந்தமில்லாத கேள்விகள்லாம் கேட்டுருக் காங்களாம். நியூஸ் க்ளிக்ல முன்னால பிரவிஸ் புர்காஸுக்கு இப்படி நடந்தது. அவருக்கு மட்டுமில்ல, 80 டெல்லி விவசாயிகளை விசாரணை பண்ணுனாங்க டெல்லி போலீஸ். அவங்ககிட்ட என் னென்னமோ கேள்விகள் கேட்டிருக்காங்க. ஆர்ப்பாட் டத்த எவ்வளவு நாளு கவர் பண்ணுனீங்க? ஏன் பண்ணு னீங்கன்னு பொருத்தமில்லாத கேள்விகள் கேட்டிருக் காங்க.. போலீஸினுடைய போக்கு வரன்முறைப் படுத்தணும். ஊடக சுதந் திரத்தைப் பறிக்க போலீ சுக்கு அதிகாரமில்லை. அரசியல் தலைவர்களுடைய பொறுப்பு அது. இந்தியாவுல போலீஸ் இந்த மாதிரி பொருட்களை கைப்பற்ற நமக்கு அதிகாரம் இருக்குனு நினைக்கிறதுக்கு நாம சவால் விடணும்.
பத்திரிகையாளர்கள் போன்ல பல பிரைவேட் விஷ யங்கள் இருக்கும். அதர் கான் பிடன்ஷியல் இன்வெஸ்டி கேஷன் விஷயங்கள் இருக்கும். ஒரு சீரியஸ் க்ரைம் ரிப் போர்ட்டர் புலனாய்வு செய் வாரு. அவர் தனக்குத் தகவல் தர்றவங்களைப் பாதுகாக்க ணும். அதுக்கான உரிமை அவருக்கு இருக்கு. இந்தியாவுல பல நீதிமன்றங்கள் அதைச் சொல்லியிருக்கு.
பத்திரிகையாளர்கள், சோர்ஸ சொல்லமுடியாதுன்னு சொல்லணும். அத ஒரு டெஸ்ட் கேஸாகூட எடுத்துட் டுப்போகலாம். ஒரு எஃப்.ஐ. ஆர பாத்து, தரவுகளப் பாத்து வெரிஃபை பண்ணி, மக்களுக்கு செய்தியைச் சொல்லும் ஒரு நடைமுறையை குற்றமா கொண்டுவந்துட்டாங்க. பத்திரிகையாளர் பண்ணுனதுல ஒரு குற்றமும் இல்லியே. குற் றம்னா மோட்டிவ் இருக்க ணும். மோட்டிவ் இருந்தாத் தான அஃபென்ஸ் இருக்கும். தெரியாம ஒரு தவறு செஞ் சுட்டா அதுவேற. ஒரு மைல்ட் அண்ட் டிஸிப்பிளின் ஆக்சன் எடுப்பாங்க. வேணும்னே செய்தா அது ரியல் குற்ற மாகும். அப்ப கிரிமினல் கேஸாகூட மாறலாம்.
கோர்ட் வந்து கடுமையாகச் சொன்னதுனால உயரதிகாரிகள் தலையிட விரும்பல. அப்படியே ஒதுங் கிட்டாங்க. இப்ப கமிஷனர் ஆஃப் போலீஸும் சரி, டி.ஜி.பி. யும் சரி, நாங்க இதுல தலை யிடமுடியாதுன்னு சொல் றாங்க. அது ஒரு வீக்னஸ்தான். சென்னை உயர்நீதிமன்றம் அந்த ஆர்டர்ல, தெளிவா சொல்லியிருந்தா, இந்தப் பிரச் சினை வந்திருக்காது. அப்ப நீதிமன்றம்தான் பொறுப்பு. அவங்ககிட்ட போகலாம்.
அரசாங்கம் இதை உயர் நீதிமன்றத்தை தெளிவுபடுத்தச் சொல்லலாம். வட இந்தியா மாதிரி மோசமான சூழல் இங்கில்ல, இருந்தாலும் தொடக்கத்துலயே அத தடுத்துரணும். இந்த மாதிரி வேற கேஸ் வந்தாலும் போலீஸ் அவங்க அதிகாரத்துக்கு அதிகமா செயல்படறதைத் தடுத்துரணும்.
விசாரணைக்குப் போன எல்லா ரிப்போர்ட்டர்ஸ் கிட்டயும், நீங்க முதல்ல போனை கொடுத்துருங்கன்னு சொல்லி பறிமுதல் பண் ணிட்டு, நாங்க அதுக்கப்புறம் தான் உங்ககிட்ட பேசுவோம் அப்படீங்கிற மாதிரி ஒரு நெருக்கடிய உருவாக்குறாங் கன்னு சொல்றாங்க. அவங்க விசாரணைக்குப் போகாம, கோர்ட்டுக்குப் போய் சொல்ல லாம். ஒண்ணு, ரெண்டு பேரு சொன்னாகூட அதுல ஒரு தெளிவு வரும். போலீஸ் ஒரு சட்ட எல்லையைத் தாண்டி என்ன வேணும்னாலும் செய்யலாம்ங்கிற போக்கைத் தடுக்கணும்.
இந்த விவகாரத்தில் பத்திரிகையாளர்கள் இந்தக் கட்சி, அந்தக் கட்சின்னு பாக் காம, மாறுபட்ட பார்வை யுடைய பல அமைப்புகள் ஒண்ணா வந்து இந்த விஷ யங்கள கேள்வியெழுப்பி மக்களுக்கு தெளிவாக இதச் சொல்லி போராட்டம் பண்றது நல்ல விஷயம், ஒரு ஆரோக் கியமான செயல்.
நன்றி: "தி நியூஸ் மினிட்'