மைச்சர், எம்.எல்.ஏ., எம்.பி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் பெரும் பணக்காரர்களின் பொழுதுபோக்கு இடமாக இருப்பவை சென்னை ஜிம்கானா கிளப்பும் -மெட்ராஸ் போட் கிளப்பும். இங்கு பார், பில்லியர்ட்ஸ், மசாஜ் சென்டர், டென்னிஸ், கிரிக்கெட், பியூட்டி பார்லர், உணவகம் என சகல வசதிகளும் உண்டு.

ggg

gym

இந்த கிளப்பில் நிரந்தரத் தொழிலாளர்கள் 225 பேர் பணிபுரிகின்றனர். கொரோனா காலத்தில் 50% ஊதியம்தான் தர முடியுமென ஜிம்கானா கிளப் நிர்வாகம் சார்பாகவும், 70% ஊதியம்தான் தர முடியுமென மெட்ராஸ் போட் கிளப் நிர்வாகம் சார்பாகவும் தெரிவிக்கப்பட்டது. தொழிலாளர்கள் அதனை ஏற்றுக்கொண்ட நிலையில்... தற்போது திடீரென "மேலும் இரண்டு வருடங்களுக்கு இதே அளவு ஊதியம்தான் வழங்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

""கொரோனா கால ஊதியக் குறைப்பை ஏற்றுக்கொண்டோம். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இதேதான் என்றால் எப்படி? "எங்களுக்கு முழுஊதியம் வேண்டும்' எனக் கேட்ட ஒரே காரணத்திற்காக ஜிம்கானா கிளப்பில் இருந்து 60 தொழிலாளர்களும் மெட்ராஸ் கிளப்பில் இருந்து 40 தொழிலாளர்களும் வெளியேற்றப் பட்டனர். இதனைத் தொடர்ந்து தொழிலாளர் உரிமை பேரணியை நடத்தி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் அவர்களை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். "நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி தந்திருக்கிறார். அதுபோல, மயிலாப்பூர் டி.சி. ஷசாங்சாய் மூலமாக ஜிம்கானா கிளப் தலைவர் வேணுகோபால், மெட்ராஸ் போட்கிளப் தலைவர் பாலச்சந்திரன் மற்றும் தொழிலாளர் சங்க தலைவர் பாரதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்புக் கொண்ட பிறகும் பணி வழங்கப் படவில்லை. முழு ஊதியத்திற்கும் ஒத்துவரவும் இல்லை, இதனால் அனைத்துக் கட்சி தொழிலாளர் கள் சங்கங்களும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது ஏ.சி.சரவணன், இன்ஸ் பெக்டர் சூரியலிங்கம் தலைமையிலான டீம் நடத்திய தடியடியால் தொழிலாளர்கள் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். .

gg

நிர்வாகத்தின் ஒத்துவராத போக்கினைக் கண்டித்து, ஜனவரி 21-ல் இருந்து தொழிலாளர் சங்க தலைவர் கு.பாரதி, ஜிம்கானா கிளப்பில் உள்ள தொழிலாளர் அறையிலே உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். போராட்டத் தில் ஈடுபட்ட நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

Advertisment

இது தொடர்பாக ஜிம்கானா கிளப் தலைவர் வேணுகோபாலிடம் கேட்டபோது, ""கமிட்டி என்ன முடிவு எடுக்குதோ அதைத்தான் நான் செய்கிறேன். வருமானம் மிகமோசமாக இருந்து வரும் நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளோம். இதைத்தான் நாங்கள் தொழிலாளர் கமிஷனர் வள்ளலார் இடமும் சொல்லியுள்ளோம். போராடுவதால் ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை'' என்றார்.

அன்பழகன் எனும் தொழிலாளி, “""கொரோனா தொற்று பரவலைக் காரணம் காட்டி இந்த இரண்டு கிளப் நிர்வாகங்களும் எங்களுக்கு ஊதிய குறைப்பு செய்துள்ளது. நான் 16 வருடமாக இங்கு வேலை செய்கிறேன்; இன்னும் ரூ.16 ஆயிரம் சம்ப ளத்தை தாண்டவில்லை. இதில் பாதி சம்பளம் மட்டுமே இன்னும் இரண்டாண்டுக்கு என்றால் என் குடும்பத்தை எப்படி நடத்துவது .கேட்டால் "அதுவும் இல்லாம போகும் பரவாயில்லையா' என்று மிரட்டு கிறார்கள். நானும் என் குழந்தைகளும் பட்டினியில் இருக்கிறோம். எங்களுக்கு முழு ஊதியத்துடன் வேலை வேண்டும். என்று மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டேன்; தடுத்துவிட்டார் கள். நாளை என் குழந்தை குட்டியுடன் தற்கொலை செய்து கொண்டால் தடுக்கமுடியுமா?''’என்று வேதனையை வெளியிட்டார்.

கிளப்பின் எல்.டி.யு.சி. தொழிலாளர் சங்கத் தலைவர் கு.பாரதி, “""இங்கு இருக்கும் ஜிம்கானா கிளப்பிற்கும் மெட்ராஸ் கிளப்பிற்கும், 100 கோடிக்குமேல் அசையும் சொத்து அசையா சொத்துள்ளது. அதை வைத்தே தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் கொடுக்கலாம் . சமூகத்தின் அடித்தட்டு மக்கள்தான் இங்கு பணிபுரிகிறார்கள். அவர்கள் முழு ஊதியம் கேட்ட ஒரே காரணத் திற்காக ஆதிக்க தொனியில் வெளியேற்றியுள்ளனர்.

10-பி விதியின் கீழ் தொழிலாளர்களுக்கு அரசாணை போடமுடியும். ஆகையால் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு இதற்குத் தீர்வுகாண வேண்டும். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறேன். முதல்வரை சந்திக்க வேண்டும் என நியாயம் கேட்ட தொழிலாளர்களை காவல்துறையினர் கண்மூடித் தனமாகத் தாக்கி கைது செய்திருக்கிறார்கள். ஏ.சி. சரவணன், அவதூறான வார்த்தைகளைப் பேசி, அடித்து ஏழை தொழிலாளர்களைக் கைது செய்துள்ளார். தொழிலாளர் நலத்துறை கமிஷனர் வள்ளலார் அவர்களுக்கு துணை நிற்கிறார். தமிழக அரசு தலையிட்டு அரசாணை போடும்வரை போராட்டம் தொடரும்'' என்றார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் நம்மிடம், ""விசாரணை சென்று கொண்டு இருக்கிறது. நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

தொழிலாளர்கள் வாழ விரைந்து வழி செய்யுமா அரசு?