ந்தக் கட்டுரையில் நாம் எழுப்பியிருந்த கேள்வி, காவல்துறையை நோக்கித்தான்.

"திருநங்கையுடன் காதல்' என்ற தலைப்பில் ஜூன் 17-19 நக்கீரன் இதழில் வெளியான கட்டுரையில்,“கொலையான ரமேஷ்... கவின் என்கிறவனுடன் ஓரினச் சேர்க்கைகொள்ள இரவு 2.53க்கு கன்னியாத்தா கோவிலுக்கு வந்தான். கவின் அந்த உறவுக்கு அன்று ஒத்துக் கொள்ளாததால் இருவரும் சண்டையிட்டு கத்தியால் ரமேஷை குத்தி கொன்று விட்டான் கவின். பக்கத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை வைத்துதான் நாங்கள் கண்டு பிடித்தோம்... என செல்வபுரம் போலீஸ் வழக்கை முடித்து விட்டிருக்கிறது. சி.சி.டி.வி கேமராவில் கவின்தான் கொலை செஞ்சு இருக்கான்னு உறுதியாகி இருந்தால், அதன்பிறகு எதற்காக 20 வயசுல இருந்து 70 வயசு வரைக்கும் உள்ளவங்களை மொத்தமாக தூக்கிட்டு போய் அடிச்சாங்க? எனக் கேட்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்... என நாம் எழுதியிருந்தோம்.

dd

Advertisment

ஏன் என்றால் சி.சி.டி.வி கேமரா அந்த கோவில் வளாகத்திலேயே இல்லை என்பதை நாம் அறிந்துதான் சமூக ஆர்வலர்கள் சொல்லுவதை கூர்ந்து நாமும் கவனித்தே கேள்வி எழுப்பியிருந்தோம்.

ஊரடங்கு இடர்பாடுகளுக்கு இடையிலும் கடந்த 16-ந் தேதி மதியமே கோவையின் அனைத்து பகுதிகளிலும் நக்கீரன் இதழின் செய்தி மக்களைச் சென்றடைந்தது. அவர்கள் மனதிலும் அதே கேள்விதான் எழுந்தது.

நக்கீரன் இதழைப் பார்த்து படித்துவிட்ட செல்வபுரம் போலீஸ், தங்களது எல்லைக்குட்பட்ட கோவில்களின் நிர்வாகிகளுக்கு இரவோடு இரவாக அறிவுறுத்தல் கடிதமொன்றை அவசர அவசரமாக நேரடியாக சென்று கொடுத்துக் கொண்டிருந்த தகவல் நமக்கு கிடைத்தது. அது பற்றி செய்தி சேகரிக்கத் தொடங்கிய நிலையில், காவல்துறையின் அந்தக் கடிதமும் நம் கைகளுக்குக் கிடைத்தது. நக்கீரன் புலனாய்வுச் செய்திக்கு சான்றாக அமைந்தது அந்தக் கடிதம்.

Advertisment

G.o no. 113 .(Ma 1)... அதாவது முனிசிபாலிட்டி அட்மினிஸ்ட்ரேஸன் அண்டு வாட்டர் சப்ளை டிபார்ட்மெண்ட் நாள். 14/12/2012 அரசாணையின்படி... கோவை மாநகரம் டி-2 செல்வபுரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட, முக்கிய இடங்களாக கோயில்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் ஆகியவை கருதப் படுகிறது.

எனவே குற்றங்களை தடுக்கும்படியாகவும், சமூக விரோதிகளை கண்காணிக்கும் பொருட்டும், தமிழக அரசின் ஆணைப்படி தங்கள் கட்டுப் பாட்டில் உள்ள இடத்தில் உடனடியாக closed circuit television (CCTV) பொறுத்தும்படியும், குறிப்பாக... வளாகத்தின் நுழை வாயிலில் இரவு நேரங்களில்... தெளிவாக (night version camera) பதிவாகக் கூடிய முறையில் கேமராக்கள் நிறுவி, அதன் பதிவுகளை குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு குறையாமல் இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும்.

இதை பெற்றுக் கொண்ட இரண்டு நாட்களுக்குள் மேற்கண்ட அரசாணையின்படி CCTV நிறுவி அதை காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்திட வேண்டும்... என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இதை பெற்றுக் கொண்டு ஒப்பம் அளிக்கவும்.

காவல் ஆய்வாளர், டி.2 செல்வபுரம், கோவை மாநகர்.

- என செல்வபுரம் இன்ஸ்பெக்டர், நாள் 16/06/2020 எனக் கையொப்பமிட்டு கோவில்களின் நிர்வாகி களுக்கு அனுப்பியுள்ளார். இதில், ரமேஷை கவின் கொன்றதாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரித்து வரும் சம்பவ இடமான பனைமரத்தூர் கன்னி யாத்தா கோவிலும் அடக்கம் என்கிறது காவல்துறை வட்டாரம். 2012-ல் கோவில்களில் கேமராக்கள் வைக்கப்பட வேண்டும்... என்ற அரசு உத்தரவை படிக்கும்படியும், அதன்படி செயல்படும்படியும் 2020-ல் தான் அனைத்து மத கோவில்களின் நிர்வாகிகளுக்கும் காவல் துறை சொல்லியிருக்கிறது.

நக்கீரனின் புலனாய்வு செய்தி அடித்த எச்சரிக்கை மணியால்தான், கோவில் மணி ஒலிக்கின்ற இடங்களி லும் இனி சி.சி.டி.வி. கேமராக்கள் நிறுவப்படவிருக் கின்றன. இதன்பிறகாவது கோவையில் குற்றங்கள் குறையட்டும். விசாரணைகள் முறையாக நடக்கட்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

-அ.அருள்குமார்