காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடைப்பட்ட உறவை மேம்படுத்தவும், காவலர்களுக்குத் தேவையான நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியில், 'மனிதாபிமானத்துடன் கூடிய நட்புறவோடு பொதுமக்களை காவல்துறையினர் அணுகுவது' என்ற ஒரு வரி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காவல்துறையின் மனிதாபிமானம் (?!)
எளிய மனிதர் களை மனிதாபிமான மின்றி பதம்பார்க்கும் போலீசாரின் லத்தி கள், பண வசதியிலும், சமூக அந்தஸ்திலும், ஜாதிக்கட்டமைப்பிலும் உயர் நிலையில் இருப் பவர்களிடம், அவர் கள் ரவுடிகளாகவே இருந்தாலும் சலாம் அடிப்பதைக் காண முடிகிறது. "ஜெய்பீம் 'திரைப்படத்தில் காட்டப்பட்ட 1990-களின் உண்மைச் சம்பவத்திலிருந்து, எடப்பாடி ஆட்சியின் சாத்தான்குளம் சம்பவம் வரை காவல்துறையின் கொடூரமான சித்ரவதையால் பாதிக் கப்படுபவர்கள் பெரும்பாலும் எளிய மனிதர்களாகவே இருக்கிறார்கள்.
சேலத்தை அடுத்துள்ள கருப்பூர் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன். இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. இவருக்கு கம்சலா என்ற மனைவியும். ஜோயல், ஜோன்ஸ் என்ற மகன்களும் உள்ளனர். மாற்றுத் திறனாளியாக இருந்தபோதிலும், வீட்டிலேயே மனைவியோடு இணைந்து தையல் தொழில் செய்துவந்தார்.
இந்நிலையில், ஜனவரி 8-ம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில், பிரபாகரனின் வீட்டுக்கு மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் என நான்கு பேர் திடுதிப்பென்று வீட்டுக் குள் புகுந்தனர். அதன்பின்னர் நடந்தவற்றை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மாநில துணைச் செயலாளர் பாவேந்தன் கூறுகை யில், "நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20 பவுன் நகைகள் திருட்டுப் போயிருக்கு. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் விசாரிக்க, சேந்தமங்கலம் போலீசார்தான் வீட்டினுள் நுழைந்திருக்கிறார்கள். மாற்றுத் திறனாளி பிரபாகரனையும் அவரது மனைவியையும் போலீசார் கடுமையாகத் தாக்கி, மேல் விசாரணைக்காக சேந்தமங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்வதாகக்கூறி அழைத்துச் சென்றனர். ஆனால் காவல் நிலையத்துக்குச் செல்லாமல் ஏதோ ஒரு ரகசிய இடத்தில் மூன்று நாள்களாக அடைத்து வைத்து, நகையைத் திருடியதாக ஒப்புக் கொள்ளச் சொல்லி சித்ரவதை செய்துள்ளனர்.
சித்திரவதையில் கணவன்-மனைவி!
பிரபாகரனின் கால் பாதங்களிலும், முதுகிலும் ஃபைபர் லத்தி, மூங்கில் பிரம்பால் மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர். பிரபாகரனின் மகன் ஜோயல், 11-ம் தேதி, தன் பெற்றோரை சேந்தமங்கலம் போலீசார் கடத்திச் சென்றதாக ஆன்லைன் மூலம் புகார் கொடுத்ததால், அன்றிரவே எப்.ஐ.ஆர். பதிவு செய்து பிரபா கரனை நாமக்கல் கிளைச் சிறையிலும், கம்சலா வை சேலம் பெண்கள் கிளைச் சிறையிலும் கொண்டுபோய் அடைத்தனர். பிரபாகரனை சீரியஸ் கண்டிஷனில் சேலம் அரசு மருத்துவ மனையில் போலீசார் சேர்க்க, உற வினர்கள் வருமுன்பே அவர் உயி ரிழந்ததால், மார்ச்சுவரியில்தான் சடலமாகப் பார்த்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட குடும்பத் துக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், வன்கொடுமைச் சட்டத் தில் வழக்குப்பதிவு செய்யக் கோரியும், மாவட்ட கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. பிரபாகரன் சாவுக்குக் காரணமான போலீசார் மீது சஸ்பெண்ட் நடவடிக்கையாவது எடுக்கும் படி கோரினோம். அதற்கு ஒப்புக்கொண்ட பிறகே சடலத்தைப் பெற்றுக்கொண்டு இறுதிக் காரியங்களைச் செய்து முடித்தோம்" என்றார் வேதனையுடன்.
இதுகுறித்து விசாரித்த நாமக்கல் மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாக்குர், சேந்தமங்கலம் போலீஸ் எஸ்.ஐ. சந்திரன், புதுச்சத்திரம் பெண் போலீஸ் எஸ்.ஐ. பூங்கொடி, திருச்செங்கோடு ரூரல் முதல்நிலை காவலர் குழந்தைவேல் ஆகிய மூவரையும் சஸ்பெண்ட் செய்ய சேலம் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) நஜ்மல் ஹோடாவுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மூவரும் ஜனவரி 15-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். பிரபாகர னின் சடலம் உடற்கூராய்வு செய்யப்பட்ட காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபாகரனின் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்த நிலையில் இருந்துள்ளது. மார்பு, கன்னங்கள் வீக்கமாக காணப்பட்டுள்ளன. கால் பாதங்கள் கன்றிப்போயுள்ளன.
சஸ்பெண்டுக்கு ஆளான காவலர்களோ, "சேந்தமங்கலம் போலீஸ் லிமிட்டில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் கைதான குமார் என்பவரின் வாக்குமூலத்தில், சேலம் கருப்பூரைச் சேர்ந்த பிரபா கரன், அவருடைய மனைவி கம்சலா, அரூரைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மதிவாணன், கம்சலாவின் அக்கா லலிதா, அவருடைய கணவர் நடராஜன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதனால்தான் பிரபாகரனையும், கம்சலாவை யும் விசாரணைக்கு அழைத்துச் சென்றோம். அவரை நாங்கள் எதுவும் செய்யவில்லை. உடல் நலக் கோளாறால் அவர் இறந்திருக்கலாம்''’என்றனர் கூலாக. இந்தச் சம்பவத்தில், மாற்றுத்திறனாளி மனிதரை, விசாரணைக் கைதியாக அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்தது குறித்து சிறிதும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் பதிலளித்திருப்பதை என்னவென்பது?
சட்ட மாணவர் மீது கொடும் தாக்குதல்!
"எங்களிடமிருக்கும் லத்தியால் எளியவர்கள் மீது மட்டும்தான் தாக்குவோமென்று யார் சொன்னது? சட்டம் படித்த மாணவர்களைக்கூட எங்களால் பதம்பார்க்க முடியும்" என்பதுபோல் இதோ இன்னொரு சம்பவம்... வியாசர்பாடி புதுநகரைச் சேர்ந்த அப்துல் ரஹீம் என்ற சட்டக் கல்லூரி மாணவரே கூறுகிறார்... "சட்டக் கல்லூரி யில் படித்துக் கொண்டே பகுதி நேர வேலையாக மெடிக்கல் ஸில் பணியாற்றி வரு கிறேன். வழக்கம்போல் வேலை முடிந்து, கடந்த 14-ம் தேதி நள் ளிரவில் வீடு திரும்புகையில், கொடுங்கை யூர் எம்.ஆர்.நகர் சந்திப்பில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள், மாஸ்க் போடவில்லையென்று எனது சைக்கிளைத் தடுத்து நிறுத்தி, பைன் கட்டச் சொன்னார்கள். "சார் நான் சரியாத் தானே மாஸ்க் போட்டு இருக்கேன். எதுக்கு நான் பைன் கட்டணும்?"னு நான் கேள்வி கேட்க, வாக்குவாதம் முற்றியதில் என்னைத் தாக்கி ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்றனர்.
ஸ்டேஷனுக்குச் சென்றதும், அங்கி ருந்த அனைவரும், குறிப்பாக உத்திரகுமார், பூமிநாதன் உள்ளிட்ட போலீசார், கையில் கிடைத்த பைப் போன்ற கழிகளைக் கொண்டு சரமாரியாக என்னை அடித்தனர். கன்னத்திலும், கண்ணுக்குப் பக்கத்திலும் ரத்தம் கசிந்த நிலையில், "முகத்தைக் கழுவிட்டு வாங்க... நீதிபதியிடம் ஆஜர்படுத்த வேண்டும்" என அங்கிருந்த இன்ஸ்பெக்டர் கூறவும், கழிவு தண்ணீரை என்னிடம் கொடுத்தனர். அந்தத் தண்ணீரைப் பார்த்து நான் மறுத்த நிலையில், எனது முகத்துக்கு நேராக நின்றுகொண்டு பேண்ட் ஜிப்பை அவிழ்த்து சிறுநீர் கழிக்க முயற்சித்தார். அதோடு, என மதரீதியாகவும் என்னை இழிவுபடுத்திப் பேசிய வேளையில், ஜே.சி. தலையீட்டின் பேரில் என்னை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். தற்போது, அடிபட்ட காயத்துக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறேன்" என்றார் ரஹீம்.
வழக்கறிஞர் ஜிம் ராஜ் மில்டன், "சட்டக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதைக் கண்டித்து, சட்டக் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் உதவி யுடன் தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். ஸ்டேஷனில் பணியாற்றிய, அனைவரின் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்" என்றார். இதற்கிடையே அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சட்டக்கல்லூரி மாணவர் ரஹீமைச் சந்தித்து என்ன நடந்ததென விசாரித்தவர், "நீங்களும் அந்த காலேஜ் தானா தம்பி? என் மகனும் அந்த காலேஜில் தான் படிக்கின்றார். சரி தம்பி, பிரச்சனையை நான் பாத்துக்குறேன்" என்று அரவணைத்து ஆறுதல்கூற நெகிழ்ந்தனர் ரஹீமும் அவரது தாயாரும்.
இந்த விவகாரத்தில் மாணவர்தான் போலீசை தாக்கினார் என்று கூறி, முதலில் புகாரை ஏற்க மறுத்த கொடுங்கையூர் காவல் நிலையத்தார், தொடர் அழுத்தத்தில் புகாரை ஏற்றுக்கொள்ள, காவலர்கள் பூமிநாதன் மற்றும் உத்திரகுமார் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, காவல் ஆய்வாளர் நசீமா உள்ளிட்ட 9 பேர் மீது 294(க்ஷ), 323, 324 ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது தமிழக காவல் துறை. விசாரணை என்ற பெயரில் பொதுமக்க ளைக் கொடூரமாகத் தாக்கும் இதே காவல் துறைதான் இன்னொரு பக்கம், ரவுடிகளுக்குத் துணைபோகும் வேலையையும் செய்கிறது.
கூட்டாளிகளாகும் ரவுடிகள்!
தமிழகத்தின் தலைநகரமான சென்னை யின் டாப் லிஸ்ட்டில் உள்ள ரவுடிகளில், சென்னை வடக்கு எண்ணூர் தனசேகரன், காக்கா தோப்பு பாலாஜி, பினு, சம்பவ செந்தில், சென்னை மேற்கு நாகேந்திரன், அரும்பாக்கம் ராதா, குன்றத்தூர் வைரம், சென்னை தெற்கு சி.டி.மணி, திருவேங்கடம், நெடுக்குன்றம் சூர்யா என ஒவ்வொருவரும் ஏரியாக்களைப் பிரித்து செயல்பட்டு வருகிறார்கள். இதுவரையிலும் இவர்களில் சிலரை மட்டுமே கைது செய்த காவல்துறையினர், சம்பவ செந்தில், பாம் சரவணன், மதுர பாலா, வெள்ளை பிரகாஷ், சீசிங்ராஜா போன்ற ரவுடிகளை காவல்துறை யின் பின்புலத்தாலும், அரசியல் பலத்தாலும் தப்பிக்கவைத்து வருகிறார்கள்.
சென்னையின் நம்பர் ஒன் ரவுடியாகவும், இதுவரையிலும் ஒரு முறைகூட கைது செய்யமுடியாத ரவுடியாகவும் 'சம்பவ செந்தில்' உள்ளார். இவர் நெஸ்லே நிறுவனத் தின் தமிழக டீலராக இருப்பதால் நெஸ்லே செந்தில் என்ற பெயரும் உண்டு. வண்ணாரப்பேட்டை போலீஸ் ஸ்டேசனில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியாகவுள்ள இவர், ஆடி, ஜாகுவார், பி.எம். டபுள்யூ கார்களில்தான் வலம் வருவாராம். ஹயாத், பார்க் ஓட்டல்களில்தான் தங்குவாராம். சிட்டிக்குள்ளே வலம்வரும் இவரை இதுவரை கைதுசெய்ய முடியவில்லை என்பதை ஏற்கமுடியவில்லை என்று காவல்துறையில் உள்ளவர்களே கூறுகிறார்கள்.
இந்த சம்பவ செந்தில், தற்போது பாஸ் போர்ட் புதுப்பித்தலுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். அப்படியெனில், தேடப் பட்டுவரும் சரித்திரப்பதிவேடு ரவுடியான இவருக்கு பாஸ்போர்ட் ஏற்கனவே வழங்கப்பட் டுள்ளது. அதன் காரணமாக காவல்துறையில் சிக்காமல் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். அதேபோல தற்போதும் பாஸ்போர்ட் புதுப் பித்தலுக்காக விண்ணப்பித்துள்ளார். பொது வாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது அவர்மீது குற்ற வழக்குகள் இருக்கிறதா என் பதை உளவுத்துறை விசாரித்து முடித்தபிறகு, அதில் பாஸ்போர்ட் அலுவலகத் துக்கு சந்தேகம் இருக்கும்பட்சத்தில் மத்திய சி.சி.பி. துறையினர் விசா ரிப்பார்கள். அதைக்கடந்துதான் பாஸ்போர்ட் கொடுக்க முடி வெடுப்பார்கள். சம்பவ செந்திலுக்கு ஏற்கனவே பாஸ்போர்ட் இருக் கிறதென்றால் அது எப்படி கிடைத்திருக்கும் என்பதும், ரவுடிகள் ஆபரேஷன்மூலம் 3,000 ரவுடிகளைப் பிடித்த காவல்துறை, ஒரு முக்கிய ரவுடியை எப்படி கண்டுகொள்ளாமல் விட்டது என்பதும் கேள்விக்குறியாக உள்ளது என்கிறார்கள்.
போலீஸ் அரசியல்!
குற்றவாளிகளுக்கு சப்போர்ட் டாக இருப்பது ஒருவகை என்றால், இன்னொரு பக்கம், காவல் துறையினரே பொதுவெளியில், சமூக வலைத்தளங்களில் தங்க ளுடைய அரசியல் சார்புத்தன்மை யை வெளிப்படுத்தும் அரசியலி லும் ஈடுபடுகிறார்கள். சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் சேகர், தனது பேஸ்புக் பக்கத்தில் தனது நண்பரின் பதிவுக்கு சர்ச் சைக்குரிய வகையில் பதிலளித்திருந் தார். அவரது பதிலில், ' 'தமிழ் என்ற காட்டு மிராண்டி மொழில ஒருத்தன் 5,000 ரூபாய் கொடுக் கச் சொன்னான். வந்தா அதைக் காணோம். அதை கேளுங்கடா என்றால் பதில் ஏதும் இல்லை. மாறாக வேறு பதில் அளிக்கின்றனர்' என்று தமிழக தி.மு.க. அரசை மறைமுகமாகக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதுகுறித்து மேலிடத்துக்கு புகார் போக, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விசாரணை நடத்தியதில், அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இப்படியாக, அரசியல் சார்பாகச் செயல் படுவது, எலைட் ரவுடிகளுக்கு சப்போர்ட் செய்வது, சந்தேகக்கேஸில் பிடிக்கப்படும் எளியவர்களை லாக்கப்பில் கொடுமைப்படுத்தி உயிரைப் பறிப்பதுமாக தமிழகக் காவல்துறை யின்மீது குற்றச்சாட்டுகள் குவிந் துள்ளன. தற்போது தமிழக முதல்வர் அமைத்துள்ள காவலர் ஆணையம், இத்தகைய குற்றங்கள் குறித்தெல்லாம் தீர ஆய்வுசெய்து, அனைத்தையும் சரிசெய்யும் முயற்சியில் இறங்கினால்தான் காவலர்களுக்கு இருக்கும் மனக் குறைகள் நீங்குவதோடு, பொதுமக் கள் மீதான விசாரணையில் மனிதாபிமானப் பார்வையோடு அணுகும் மனப்பக்குவம் பிறக்கும். முக்கியமாக, கொடூரமான லாக்கப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மனதளவில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே காவல் துறையில் இது சாத்தியம்!
-இளையராஜா