Advertisment

பகலில் போலீஸ்... இரவில் திருடன்! சில்வர் நைட்ரேட் கொள்ளையில் சிக்கிய 7 போலீஸார்!

ooty-HPF


மீபத்தில் ஊட்டி டவுன் 3 காவல் நிலையத்தில் பணியாற்றிய ஒரு போலீஸை ராஜபாளையம் பட்டாலியனுக்கும், ஊட்டி டவுன் டி.எஸ்.பி. டிரைவராக பணியாற்றிய ஒரு போலீஸை கீழ் கோத்தகிரி போலீஸ் ஸ்டேஷனுக்கும் காதோடு காது வைத்ததுபோல் சப்தமே இல்லாமல் இடமாற்றம் செய்தது நீலகிரி மாவட்ட காவல்துறை. "இதற்கு முன்பும் ஒரு போலீஸை எருமாடி ஸ்டேஷனுக்கும், இன்னொரு போலீஸை தூத்துக்குடிக்கும் இடமாற்றம் செய்தது மாவட்ட காவல்துறை. இதற்கெல்லாம் காரணம், "பகலில் போலீஸாக இருக்கும் இவர்கள், இரவில் திருடனாக மாறி மூடப்பட்ட ஆலைக்குள் நுழைந்து தரையை உடைத்து "சில்வர் நைட்ரேட்' கலந்த  மண்ணை திருடுகின்றனர். இந்த திருட்டில் சுமார் 7 போலீஸார்இருக்கின்றார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டிய உயரதிகாரிகள் "கமுக்கமாக' இருப்பதால் இடமாற்றம் மட்டுமே கிடைக்கின்றது போலீஸிற்கு' என்கின்றனர் நீலகிரிவாசிகள்.

Advertisment

வீடியோ பிலிம் சுருள்கள், புகைப்பட சுருள்கள் மற்றும் மருத்துவ துறைக்கு முக்கிய தேவையான எக்ஸ்ரே பிலிம்கள் ஆகியன வற்றை தயாரிக்கும் தொழிற்சாலையை 1960-களில் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் துவங்கியது மத்திய


மீபத்தில் ஊட்டி டவுன் 3 காவல் நிலையத்தில் பணியாற்றிய ஒரு போலீஸை ராஜபாளையம் பட்டாலியனுக்கும், ஊட்டி டவுன் டி.எஸ்.பி. டிரைவராக பணியாற்றிய ஒரு போலீஸை கீழ் கோத்தகிரி போலீஸ் ஸ்டேஷனுக்கும் காதோடு காது வைத்ததுபோல் சப்தமே இல்லாமல் இடமாற்றம் செய்தது நீலகிரி மாவட்ட காவல்துறை. "இதற்கு முன்பும் ஒரு போலீஸை எருமாடி ஸ்டேஷனுக்கும், இன்னொரு போலீஸை தூத்துக்குடிக்கும் இடமாற்றம் செய்தது மாவட்ட காவல்துறை. இதற்கெல்லாம் காரணம், "பகலில் போலீஸாக இருக்கும் இவர்கள், இரவில் திருடனாக மாறி மூடப்பட்ட ஆலைக்குள் நுழைந்து தரையை உடைத்து "சில்வர் நைட்ரேட்' கலந்த  மண்ணை திருடுகின்றனர். இந்த திருட்டில் சுமார் 7 போலீஸார்இருக்கின்றார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டிய உயரதிகாரிகள் "கமுக்கமாக' இருப்பதால் இடமாற்றம் மட்டுமே கிடைக்கின்றது போலீஸிற்கு' என்கின்றனர் நீலகிரிவாசிகள்.

Advertisment

வீடியோ பிலிம் சுருள்கள், புகைப்பட சுருள்கள் மற்றும் மருத்துவ துறைக்கு முக்கிய தேவையான எக்ஸ்ரே பிலிம்கள் ஆகியன வற்றை தயாரிக்கும் தொழிற்சாலையை 1960-களில் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் துவங்கியது மத்திய அரசு.  இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் என பெயரிடப்பட்ட இத்தொழிற்சாலை ஏறக்குறைய 350 ஏக்கரில் நிறுவப்பட்டது. பின்னாளில் 2018ம் ஆண்டு நிரந்தரமாக மூடப்பட்டது. இந்த நிலையில், தொழிற்சாலையின் இரு பக்கங்களிலும், குறிப்பாக கெத்தை ரோடு வழியாக போலீஸ் ஜீப்கள் காவல் காக்க, மனிதர்கள் நடமாட்டம் அதிகளவில் தென் பட்டது பலருக்கு சந்தேகத்தை வெளிப்படுத்தியது. 

Advertisment

ooty-HPF1

வனத்துறையிலுள்ள அதிகாரி ஒருவரோ, "மூடப்பட்ட தொழிற்சாலைக்கு உள்ளே செல்பவர்கள் அங்குள்ள தரைத்தளங்களை உடைத்தும், சுவரை உடைத்தும் கிடைக்கும் மண்களை சாக்குகளில் சேகரிக்கின்றனர். பின்பு அதனை சலித்து எடுத்து அங்கிருந்து கோவையி லுள்ள உக்கடம், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். சலித்துக் கொடுக்கப்படும் ஒரு மூட்டை மண்ணிற்கு ரூ.15 ஆயிரம் கிடைக்கின்றதாம். இதுவே டார்க், பச்சை மற்றும் சாம்பல்நிற மண் என்றால் அதனுடைய விலையே வேறு.! துவக்கத்தில் எதற்காக மண் திருடுகின்றார்கள் எனத் தெரியாது. பின்பு தான் தெரிந்தது அந்த மண்ணில் சில்வர் நைட்ரேட்  கலந்திருக்கின்றதாம். இதனை சில கெமிக் கல்கள் சேர்ந்து மதிப்புக் கூட்ட வெள்ளி மற்றும் தங்கமும் கிடைக்கின்றதாம்'' என்கிறார் அவர்.

சமீபத்தில்,  முத்தினாடு காவல் பகுதிக்கு உட்பட்ட வென்லாக்டவுன் காப்புக்காடு பழைய ஐடஎ நிறுவன பகுதியில் வனத்திற்குள் இரவு அத்து மீறி நுழைந்து திருட்டுத்தனமாக மண் மற்றும் கற்களை உடைத்த குற்றத்திற்காக 7 நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது உதகை வடக்கு வனச்சரகம்.  "இந்த நிலையில் மண் கொள்ளையில் 107 நபர்கள் இருக்கின்றனர். அதில் எஸ்.ஐ. ஒருவர், எஸ்.எஸ்.ஐ. ஒருவர், ஏட்டையா இருவர், போலீஸார் மூவர் உட்பட 7 போலீஸார் இருக்கின்றார்கள்.  இந்த போலீஸா ருக்கு டி.எஸ்.பி. அந்தஸ்திலுள்ள சிலர் சப்போர்ட் செய்கின்றனர் என மாவட்ட உளவுப் போலீஸா ருக்கு தகவலை கசியவிட்டுள்ளனர் வனத்துறையி லுள்ள சிலர். இதனையே விசாரணைக்கான லீடாக கொண்ட மாவட்ட உளவுப் பிரிவு சேரம்பாடி, தூத்துக்குடி, எருமாடி, கீழ்கோத்தகிரி, ராஜபாளை யம் என ஒவ்வொருவரையும் இடமாற்றி அனுப்பிவைத்தது குறிப்பிடத்தக்கது.

"கைமாத்துக்காக ரூ.20 ஆயிரத்தை கிங்ஸ்லி ஏட்டையாவிடம் கேட்டேன். அவர்தான் இந்த வழியை எனக்கு காண்பித்தார். ஆட்களைக் கொண்டு கற்களை உடைத்து மண்ணை தோண்டி எடுக்கையில் யாரும் வராதவாறு வெளியில் பாரா இருந்தாலே போதும், தினசரி குறைந்த பட்சம் ரூ.10 ஆயிரம் கிடைக்கும் என வழியை காண்பித்தார். பகலெல்லாம் போலீஸாக இருப்பது... நைட்டானால் அதே போலீஸாக இருந்து கொண்டு கொள்ளையடிப்பதை பாதுகாப்பது. இதுதான் வேலை. பணம் வந்ததால் முதலில் நானே மண்ணைத் தோண்டினேன். பின்பு மதுரையிலிருந்து ஆட்களை கூட்டி வந்து மண்ணை தோண்டி கீழே விற்றேன். அது போல் கிங்ஸ்லீ ஏட்டையாவும் தூத்துக்குடியி லிருந்து ஆட்களை கூட்டி வந்து கொள்ளை யடிக்க ஆரம்பித்தார். பின்னாளில் சரவணன், பிரசாத் எஸ்.ஐ, முரளிதரன் எஸ்.எஸ்.ஐ, ஜெகதீஷ், காசிராஜன் ஆகியோர் தனித்தனியாகவே கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். இதில் காசிராஜன் ஊட்டி டவுன் டி.எஸ்.பி. நவீன்குமாரோட ஆள். யாருக்கும் தெரிந்தாலும் கண்டு கொள்வதில்லை'' என ஆடியோ மூலம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்கள் சேரமாடி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸார். இந்த ஆடியோ உளவுப் பிரிவுக்கு கிடைத்த நிலையில் இடமாற்ற உத்தரவு வெளியானது.

ooty-HPF2

சலித்து எடுக்கப்படுகின்ற மண் துகள்கள் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு கீழே தலை குந்தா பகுதியிலுள்ள தோட்டம் ஒன்றில் சேகரித்து வைக்கப்படுகின்றது. குறைந்தது தலைக்கு 300 மூடைகள் என்ற நிலையில் புறப்படும் வாகனங்கள் மேட்டுப்பாளையத் திற்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் அங்கேயே மண்ணிற்கு ஸ்பாட்டிலேயே பேமெண்ட் செட்டில் செய்யப்படுகின்றது. இந்த மண் கொள்ளை பற்றி தெரிந்த ரோந்து எஸ்.எஸ்.ஐ நாகராஜன்,  "அடிக்கின்ற கொள் ளையில் என்னை கவனிங்க, இல்லையெனில் போட்டுக் கொடுத்துவிடுவேன்'' என காசிராஜனை மிரட்ட, தாளவாடியிலிருந்து ஆட்களை கூட்டிவந்து நாகராஜனை அடித்து துவைத்தது தனிக்கதை.

இதுகுறித்து கருத்தறிய ஊட்டி டவுன் டி.எஸ்.பி. நவீன்குமாரிடம் கேட்டோம். அமைதியாக உள்வாங்கியவர், "நேரில் வாருங்கள், சொல்கிறேன்'' என தொடர்பை துண்டித்துவிட்டார். அதன்பின், "சார்... நேராக வாங்க பேசுவோம், எவ்வளவோ நியூஸ் இருக்கு. இந்த நியூஸை விட்டுடுங்களேன்'' என நம்மை சமாதானப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர் நீலகிரி மாவட்ட காவல்துறையிலுள்ள சிலர்.

கொள்ளையில் போலீஸி லுள்ள உயரதிகாரிகளுக்கும் பங்கு இருக்குமோ? தெளிவு படுத்த வேண்டியது நீலகிரி மாவட்ட காவல்துறை!

nkn240126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe