தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் வட்டம் வடக்குப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மீனா. தம்பதியருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன்.
முருகன் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பவர். மஹா சிவராத்திரி தினமான மார்ச் 8 அன்று அவருக்கு பஞ்சஸ்தலங்கள் சென்றுவருவதற்கான ஆஃபர் கிடைத்திருக்கிறது. மஹாசிவராத்திரியான அன்றைய தினம் இரவு சுமார் 7 மணிக்கு சங்கரன்கோவிலின் பக்கமுள்ள அச்சம்பட்டி கிராமத்தில் வாடிக்கையாளர் கள், உறவினர்களை வேனில் ஏற்றிக்கொண்டு பஞ்சஸ்தலங்கள் செல்வதற்காக சங்கரன்கோவில் டவுண் வழியே வந்திருக்கிறார். மேலும் சங்கரன் கோவிலும் பஞ்சஸ்தலங்களில் ஒன்று என்பதுடன், பிற ஸ்தலங்கள் செல்வதற்கும் சங்கரன்கோவில்தான் வழிப்பாதை என்பதால் அன்றைய தினம் பஞ்சஸ்தலங் களுக்கு நடந்தே செல்லும் பொதுமக்களின் கூட்டம், வாகனங்களில் செல்வோர் என்று வாகன நெருக்கடியால் சங்கரன்கோவில் நகரம் திணறியபடி இருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/driver-death.jpg)
இந்தச் சூழலில்தான் முருகனின் வேன் சங்கரன்கோவில் டவுண் வழியாகச் செல்லவேண்டி யிருந்தது. இரவு நேரம் நகர்ப் பகுதிக்குள் வரும்போது கூட்டநெரிசலில் வேன் முன்னே சென்ற ஆட்டோ ஒன்றின் மீது மோத, வேனின் முன்புறமுள்ள பம்பர், பேனட் பகுதிகள் சேதமாகியிருக்கிறது. இதையறிந்த முருகன், ஆட்டோ டிரைவரிடம் பேச... அவர் களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அது சற்றுநேரம் நீடிக்க, இதனால் பின்னால் வந்த வாகனங்கள் முன்னே செல்லமுடியாமல் முடங்கியதால் பின்புறமும் முன்புறமும் மெயின் சாலையின் இருபுறமும் நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் ப்ளாக் ஆகி நின்றுவிட்டன.
இதனால் போலீசார் எரிச்சலோடு சம்பவ இடம் வந்தபோது, முருகன் -ஆட்டோ டிரைவர் இருவருக்குமிடையே வாக்குவாதம் நடந்ததைக் கண்ட வேகத்தில் வேன் டிரைவர் முருகனைத் தாக்கியிருக்கிறார்களாம். இதனால் நிலைகுலைந்து போன முருகன் மயங்கிச் சரிந்திருக்கிறார்.
அவரால் வேனை இயக்கமுடியாமல் போகவே, போலீசார் வேனிலிருந்தவர்களை இறக்கிவிட்டு மயங்கியிருந்த முருகனையும் அவரது உறவினர் களையும் வேனில் ஏற்றிக்கொண்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக் கிறார்கள். வழியில் போலீசார் இறங்கிவிட்டனராம். முருகனை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க, அங்கு முருகனை சோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக் கிறார். இதனால் பீதியில் உறைந்துபோனவர்கள் முருகனின் சடலத்தை வேனில் ஏற்றிக் கொண்டு காவல்நிலையத்திற்குச் சென்று நிறுத்திவிட்டு, முருகனின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித் திருக்கிறார்கள். அந்த இரவில் வடக்குப்புதூர் உள்ளிட்ட கிராம மக்கள் சங்கரன்கோவில் டவுண் காவல் நிலையத்தில் திரண்டிருக்கிறார்கள். காவல் நிலையம் முற்றுகைக்குள்ளானது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/driver-death1.jpg)
போலீசார் தாக்கியதால்தான் முருகன் இறந்திருக்கிறார். நியாயம் கிடைக்காமல் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்ல விடமாட்டோம் என்ற மக்களின் கொதிப்பு சாலைமறியலாக மாறியது. டி.எஸ்.பி. சுதிர், மக்க ளை சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. கொந்தளிப்பான சூழலில் தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சுரேஷ்குமார் சங்கரன்கோவில் டவுண் காவல் நிலையம் வந்து மறியலிலிருந்த மக்களை ஆறுதல்படுத்தினார். சூழல் காரணமாக நெல்லை மாவட்ட எஸ்.பி.யான சிலம்பரசனும் அனுப்பி வைக்கப்பட்டார்.
அதிகாலை நான்கு மணிவரை நீடித்த பேச்சுவார்த்தையில் முருகனின் மைத்துனர் சங்கரகுமார் கொடுத்த புகாரின்படி அடையாளம் தெரியாத மூன்று போலீசார் மீது சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதன்பிறகே முருகனின் உடல் பிரேதப் பரிசோத னைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/driver-death2.jpg)
பின்பும் உறவினர்கள், ஊர்க்காரர்களின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. அனுபவமிக்க மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை நடத்தப்படவேண்டும். அதுசமயம் எங்கள் தரப்பு நபர் உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும். உயி ரிழந்த முருகனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படவேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படுவதுடன் அவர்களின் பிள்ளைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கவேண்டும். கோரிக்கை கள் நிறைவேற்றப்படும் வரை முருகனின் உடலை பெற்றுக் கொள்ளமாட்டோம் எனக் கூறிய முருகனின் உறவினர்கள் போராட் டத்தைத் தொடர்ந்துவருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/driver-death3.jpg)
முருகனின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்தபோது பாதிக்கப்பட்டவர்களின் தரப்பாக சங்கரன்கோவில் வட்டார சி.பி.எம். செயலாளரான அசோக்ராஜும் உடனிருந்திருக்கிறார். நாம் அவரிடம் கேட்டதில், “"முருகனின் இடது தோள்பட்டையிலிருந்து முழங்கைவரை ரத்தக் காயமிருக்கிறது. அவரது இடது கண்ணிலிருந்து ரத்தம் வழிந்தது. கண் மேல் பட்டையிலும் காயம் உள்ளது''’என்றார்.
இதுகுறித்து நாம் மாவட்ட எஸ்.பி.யான சுரேஷ்குமாரிடம் பேசியபோது, “"மருத்துவமனைக் குப் போனபோது அவரின் உறவினர்களும் இருந் திருக்கிறார்கள். அடையாளம்தெரியாத மூன்று காவலர்கள் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டிருக்கு. போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வந்த பிறகே மற்றவை தெரியவரும்''’என்கிறார்.
-செய்தி & படங்கள்: ப.இராம்குமார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-03/driver-death-t.jpg)