Advertisment

நான்கு உயிர்களைப் பறித்த விஷ சிக்கன்! -சிவகாசியில் பீதி கிளப்பிய டாஸ்மாக்!

murder

வுதமுக்கு 15 வயதுதான் ஆகிறது. சிவகாசியில் மது குடித்து இறந்த நான்கு பேரில் அவனும் ஒருவன். வீட்டுவேலை செய்து தன்னை வளர்த்த தாயை உதறிவிட்டு, பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, இரண்டு வருடங்களாக குடிகாரர்களின் பின்னால் சுற்றித் திரிந்திருக்கிறான். அந்த சகவாசம்தான் அவன் உயிரைக் குடித்துவிட்டது.

Advertisment

murder

"குற்றாலம் செல்கிறேன்' என்று வீட்டில் கூறிவிட்டு... சிவகாசியிலேயே தங்கி, டாஸ்மாக்கில் வாங்கி வந்த மதுவை, சிறுகுளம் கண்மாய்ப் பகுதியில் அமர்ந்து குடித்த கணேசன், மு

வுதமுக்கு 15 வயதுதான் ஆகிறது. சிவகாசியில் மது குடித்து இறந்த நான்கு பேரில் அவனும் ஒருவன். வீட்டுவேலை செய்து தன்னை வளர்த்த தாயை உதறிவிட்டு, பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, இரண்டு வருடங்களாக குடிகாரர்களின் பின்னால் சுற்றித் திரிந்திருக்கிறான். அந்த சகவாசம்தான் அவன் உயிரைக் குடித்துவிட்டது.

Advertisment

murder

"குற்றாலம் செல்கிறேன்' என்று வீட்டில் கூறிவிட்டு... சிவகாசியிலேயே தங்கி, டாஸ்மாக்கில் வாங்கி வந்த மதுவை, சிறுகுளம் கண்மாய்ப் பகுதியில் அமர்ந்து குடித்த கணேசன், முகமது இப்ராகிம், முருகன், அய்யப்பன், அந்தோணிராஜ், சரவணன், ஜனார்த்தனன் ஆகியோருடன் சிறுவன் கவுதமும் சேர்ந்துகொண்டான். மறுநாள் ஞாயிறு விடுமுறை என்பதால், விடிந்த பிறகும் குடித்திருக்கின்றனர். இவர்களில் மூவர் உணர்வற்றுக் கிடந்ததால், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்த மருத்துவர்... கணேசன், முகமது இப்ராகிம், கவுதம் ஆகிய மூவரும் இறந்துவிட்டதாகச் சொல்லிவிட... சொந்தபந்தங்கள் தலையில் அடித்துக்கொண்டு அழுதன.

வீட்டில் முருகன் இறந்துவிட, சடலத்தை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவந்தனர். அந்த நேரத்தில், மது அருந்தி பாதிக்கப்பட்டதாகக் கூறி சிவகுமார், கருப்பசாமி ஆகியோரையும் அரசு மருத்துவமனைக்குத் தூக்கிவர, ‘டாஸ்மாக் மது’ குறித்த வதந்தியால், சிவகாசியில் பீதி பரவியது.

உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அய்யப்பன், அந்தோணிராஜ், சரவணன், ஜனார்த்தனன் ஆகியோர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்... அடுத்தடுத்து நடந்த விசாரணையில் திடீர் திருப்பமாக வள்ளி என்பவருக்கும், இந்த மரணங்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இறந்துபோன முருகனின் அக்காதான் வள்ளி. கணவரைப் பிரிந்து விவாகரத்து பெற்று வாழும் வள்ளி, அச்சக அதிபர் செல்வத்துடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்திருக்கிறார். இதைக் கண்டித்திருக்கிறார் தம்பி முருகன். அதனால், தம்பியைத் தீர்த்துக்கட்டிவிட முடிவு செய்திருக்கிறார் வள்ளி. இதற்குத் தூண்டுகோலாக செல்வமும் இருந்திருக்கிறார். இந்த நிலையில்தான், தம்பியின் குடிப்பழக்கத்தை அறிந்திருந்த வள்ளி, சைடுடிஷ்ஷாக வீட்டில் நிறைய சிக்கன் சமைத்து, அதில் குருணை மருந்தைக் கலந்து வைத்துவிட்டு, சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குச் சென்றுவிட்டார். இதை அறியாத முருகன், தன் உயிரைப் பறிப்பதற்காக சமைத்த சிக்கனை, டப்பா ஒன்றில் எடுத்துக்கொண்டு, நண்பர்கள் மது அருந்தும் இடத்துக்கு கொண்டு போயிருக்கிறார். மதுவுக்கு சைடுடிஷ்ஷாக சாப்பிட்ட விஷ சிக்கன், தன் வேலையைக் காட்ட, ஒன்றன்பின் ஒன்றாக நான்குபேர் உயிரை விட்டனர். வள்ளியையும், கள்ளக் காதலன் செல்வத்தையும் கைது செய்த காவல்துறை... தம்பி முருகன், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அக்கா வள்ளியிடம் வாக்குமூலம் பெற்றிருக்கிறது!

-சி.என்.இராமகிருஷ்ணன்

murder nkn29.06.18
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe