"ஹலோ தலைவரே, நாகாலாந்து கவர்னரும் தமிழகத்தைச் சேர்ந்த சீனியர் தலைவருமான இல.கணேச னின் மரணம், கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கு.''”

Advertisment

"ஆமாம்பா, தலைசுற்றல் ஏற்பட்டு கீழே விழுந்ததில் இல.கணேச னுக்கு தலையில் உள்காயம் ஏற்பட்டி ருக்கிறது. தீவிர சிகிச்சையளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை யாம்.''””

"உண்மைதாங்க தலைவரே, இந்த எதிர்பாராத சம்பவத்தால் இல.கணே சன் கடந்த 15 ஆம் தேதி காலமானார். அரசியல் வேறுபாடு கருதாமல், முக்கிய அரசியல்கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி னர். பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தபோதும், அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி, இல.கணேசனுக்கு மரியாதை செலுத்த வரவில்லை. ஜெயக்குமாரை மட்டும் அனுப்பிவைத்தார். அவர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருக்க வேண்டும் என்று அ.தி.மு.க.விலேயே  முணுமுணுப்புகள் கிளம் பின.  15ஆம் தேதியே முதல்வர் ஸ்டாலின், இல.கணேசனுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். இந்த நிலையில் அன்று மாலை பிரதமர் அலுவல கத்தில் இருந்து, தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை அழைத்திருக்கிறார்கள்''”

"எதற்கு?''”

"இல.கணேசனுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடியால் நேரில் வரமுடியவில்லை.  அவர் சார்பில் தமிழக முதல்வர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தவேண்டும், இயலுமா? என்று கேட்டிருக்கிறார்கள்.  முதல்வர் ஸ்டாலி னிடம் கலந்து பேசிவிட்டு, டெல்லிக்கு ஓ.கே. சொல்லியிருக் கிறார் முருகானந்தம். இதனையடுத்து, 16ஆம் தேதி, பிரதமர் மோடி சார்பில்  மறுபடியும் சென்று முதல்வர் ஸ்டாலின், இல.கணேசனுக்கு மலர்வளையம் வைக்க, தமிழக அரசு சார் பில் முதல்வர் சார்பில் துணைமுதல்வர் உதயநிதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதைப் பார்த்த பா.ஜ.க. தரப்பே, இதுதான்  நயத்தகு நாகரிகம் என நெகிழ்ந்தது.''”

Advertisment

"சரிப்பா, அமலாக்கத்துறையினர் மீது சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறதே?''”

"அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட பிறகு, அவர்களைக் கைகுலுக்கி, வழியனுப்பி வைத்தார் அமைச்சர். இதற்கிடையே அவர் மகனான எம்.எல்.ஏ. செந்தில்குமாரின் எம்.எல்.ஏ. விடுதியில் உள்ள அலுவலகத்தின் கதவை உடைத்து, அமலாக்கத்துறை யினர் சோதனையிட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மீது சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்கைப் பதிவு செய்திருக்கின்றனர். அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தபோது, கோட்டையிலேயே அவர் அலு வலகத்தில் சோதனையிட்ட அமலாக்கத்துறையினர் மீது அப்போது, இதுபோன்ற நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை என்று அவரது ஆதரவாளர் கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். சென்னை போலீஸ் அமலாக்கத்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  வருகிறது.''”

"இந்த நேரத்தில் கொலைத் திட்டத்தோடு ஒரு கூலிப்படை தைலாபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பரபரப்புத் தகவல் வருகிறதே?''”

Advertisment

"அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது அவரிடம் பி.ஏ.வாக இருந்தவர் சாமிநாதன். அவரை இப்போது தனது பி.ஏ.வாக மாற்றிக்கொண்டிருக்கிறார் ராமதாஸ். தைலாபுரத்தில் இருக்கும் இவரை கொலை செய்ய, சென்னையிலிருந்து ஒரு டீம் புறப்பட்டு வந்திருக் கிறது. அவர்களை மடக்கிப் பிடித்த போலீஸார், அன்புமணியிடம் ’"சாமிநாதனைக் கொல்ல உங்க ளால் அனுப்பப்பட்ட அடியாள் படை எங்களிடம் சிக்கியிருக்கிறது'’ என்று தெரிவித்திருக்கிறார்கள். இதன்பிறகே, சாமிநாதனைக் கொலை செய்ய கூலிப்படையை அனுப்பியது அன்புமணியிடம் இப்போது பி.ஏ.வாக இருக்கும், சாமிநாத னின் தம்பி மணிகண்டன்தான் என்று போலீஸாருக்குத் தெரியவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்தக் கூலிப்படை டீமை, வேறு சில வழக்குகளில் சரணடைய வைத்திருக்கிறாராம் அன்புமணி. அவர்களை பாலவாக்கம் போலீஸ் கைது செய்திருக்கிறது என்கிறார்கள். இது பா.ம.க. தரப்பில் பகீரை ஏற்படுத்தியிருக்கிறது.''”

"அன்புமணியை விசாரிக்க ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை அமைத்திருக் கிறாரே ராமதாஸ்?''”

rang1

"பா.ம.க. பொதுக்குழுவில் அன்புமணி யைக் கட்சியை விட்டு ராமதாஸ் நீக்குவார் என்று பரவிவந்த செய்தி பொய்யாகி யிருக்கிறது. அன்புமணி மீது வைக்கப்பட்ட 19 குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க, பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க, சீனியர்களிடம் கொஞ்சம் கால அவகாசம் கேட்டிருக்கும் ராமதாஸ், "போகப் போகத் தெரியும்'’என்றும் சஸ்பென்ஸ் வைத்திருக் கிறாராம்''”

"சென்னையில் சபையர் தியேட்டர் இருந்த இடத்தைப் பார்த்து, அ.தி.மு.க.வினர் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்களே?''”

"இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் மல்டிபிளக்ஸ் தியேட்டர் என்ற பெருமையைப் பெற்றிருந்தது, சென்னை அண்ணா மேம்பாலம் அருகேயிருந்த சபையர் தியேட்டர். இந்த இடம் 94 வாக்கில் போயஸ்கார்டன் வசம் வர, அந்த இடத்தில் அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத் தைக் கட்ட ஜெ.’இருந்தபோது முடிவெடுக்கப் பட்டது. இதற்காக 2000-ல் பெருமளவில் டொனேஷன் வாங்கப்பட்டது. தி.மு.க.வின் அண்ணா அறிவாலயம்போல், அண்ணா சாலையி லேயே அ.தி.மு.க.வுக்கும் அலுவலகம் அமைகிறதே என்று அ.தி.மு.க.வினரும், அதன் மீது அபிமானம் கொண்ட தொழிலதிபர்களும் 5 லட்சம், 10 லட்சம் என தாராளமாக நிதி கொடுத்தனர். ஏறத்தாழ 70 கோடி அளவுக்கு அப்போதே நிதி திரண்டது. எனினும் அ.தி.மு.க. கூட்டணியில் அப்போது பா.ம.க. இணைவதற்கு அன்பளிப்பாக, சபையர்  நிலம் கொடுக்கப்பட்டது. அது அன்புமணிக்கு நெருக்கமான ஒருவர் பெயரில் கொடுக்கப்பட்ட தாம். அந்த இடத்தில் இப்போது வணிக வளாகம் முளைத்திருக்கிறது. இதைப் பார்க்கும் போதெல் லாம் அ.தி.மு.க. அலுவலகக் கட்டடத்துக்கு நிதி கொடுத்தவர்கள், ஏக்கப் பெருமூச்சு விடுகிறார் களாம்..''”

"சரிப்பா, காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்திருக்கிறதே?''”

"தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கர் தலைமையில் கட்சியின் செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் 17ஆம் தேதி  சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு உள்ளிட்ட சீனியர் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். காங்கிரசுக்கு தமிழகத்தில் 8 எம்.பி.க்களும், 17 எம்.எல்.ஏ.க்களும் இருக்கின்றனர். இருந்தும், எம்.பி.க்களில் 3 பேரும், எம்.எல்.ஏ.க்களில் 9 பேரும் மட்டும்தான் கலந்துகொண்டனர். சட்ட மன்றத் தேர்தல் மற்றும் பா.ஜ.க.வின் வாக்காளர் மோசடி ஆகியவை குறித்து இதில் விவாதித்தனர். இதில்,  வாக்கு திருட்டினைத் தடுப்பது குறித்து பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் மூலம் காங்கிரஸின் வியூக வகுப்பாளர் என அறிமுகப்படுத்தப்பட்ட ப்ரவீன் சக்ரவர்த்தி என்பவர் விவரித்துப் பேசினார். மாவட்ட தலைவர்களில் நாகை மற்றும் திண்டுக்கல் மாவட்ட தலைவர்கள் பேசியது கூட்டத்தில் சர்ச்சையானது. அதாவது, இந்த ஆட்சியில் எங்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டிருக்கிறது. அதை யாருமே கண்டுகொள்வதில்லை என்று  ஆவேசமாகப் பேசினர்.''”

"ஓகோ...''”

rang2

"இதையெல்லாம் இப்போது பேசாதீர்கள்’ என்று அவர்களை உடனடியாக உட்காரச் சொல்லிவிட்டார் செல்வப்பெருந்தகை. தி.மு.க. கூட்டணியில் இந்தமுறை அதிக சீட்டுகள் பெற வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த கிரிஸ் ஜோடங்கர், "நிச்சயம் இந்த முறை கூடுதல் சீட்டுகளைக் கேட்போம். எனவே, காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்புள்ள 100 தொகுதிகளைக் கண்டறிந்து நீங்கள் எல்லோரும் லிஸ்ட் கொடுங்கள். அந்த தொகுதிகளில் தேர்தல் பணிகளையும் தொடங்குங்கள். எத்தனை இடங்கள் வாங்குவது என்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்'’என்று சொல்லி கூட்டத்தை முடித்தார். மேலும் இந்தக் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக் கான ட்ரஸ்டிகளை நியமிக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜுன கார்கேவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது. இதனையடுத்து, காங்கிரஸின் மகளிரணி நிர்வாகிகளுடனும் தனியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். இதிலும் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப் பட்டிருக்கிறது.''” 

"இந்த நிலையில், காங்கிரஸ் எம்.எல். ஏ.க்களின் களியாட்டப் படங்கள் விரைவில் ரிலீஸ் என்று ஒரு ஏடாகூடத் தகவல் பரவி வருகிறதே?''”

"அது ஒண்ணும் இல்லைங்க தலைவரே, அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் மாநிலத்தில், இந்தியாவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளின் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தமிழக காங்கிரசைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் அமெரிக்காவுக்கு பறந்தனர். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர்கள், தினமும் இரவு நேரங்களில் சூதாட்ட கிளப்புகள் மற்றும் களியாட்ட அரங்குகளில் குதூகலமாக இருந்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளதாம் இந்திய உளவுத்துறை. இந்த தகவல்கள் தற்போது தமிழக உளவுத்துறையினருக்கும் தெரிவிக்கப்பட் டிருக்கிறது.  விரைவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் அந்த களியாட்ட படங்கள், சிலரால் ரிலீஸாகலாம் என்கிறது உளவுத்துறை தரப்பு. இதனால் சத்தியமூர்த்தி பவனில் பதட்டப் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.''” 

"பா.ஜ.க.வோடு அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருக்கும் நிலையில், அ.தி.மு.க. மாஜி மந்திரி ஒருவர் பா.ஜ.க.வுக்கு எதிராக வரிந்து கட்டியிருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, தூத்துக்குடி துறைமுகத்திற்கான விரிவாக்கத்திற்காக அருகிலுள்ள முள்ளக்காடு பகுதியிலுள்ள சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கையகப் படுத்தும் முனைப்பிலிருக்கிறதாம். அந்தப் பகுதியில் உள்ள நில உரிமையாளர்களோ ‘எங்களின் பாரம்பரிய நிலத்தை விட்டுக் கொடுக்கமாட்டோம்’ என்று மத்திய அரசுக்கு எதிராகக் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதைத் தொடர்ந்து, அவர்கள் அண்மையில் முத்தையாபுரத்தில் கண்டனப் போராட்டத்தையும் ஆவேசமாக  நடத்தினர். அதில் கலந்துகொண்ட அ.தி.மு.க. மா.செ.வும் மாஜி மந்திரியுமான சண்முகநாதன், ’"எந்தச் சூழ்நிலையிலும் நிலத்தை நாங்கள் விட்டுக்கொடுக்க முடியாது'’ என்று சீறி, மத்திய பா.ஜ.க. அரசைக் கடுமையாக எச்சரித்திருக்கிறார். இதைக்கண்ட பா.ஜ.க.வினர், "எங்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டே எங்களை எதிர்க்கிறீர்களா?' என்று மாஜிக்கு எதிராக கொந்தளித்துவருகிறார்கள். குறிப்பிட்ட    ஏரியாவில் 300 ஏக்கர்வரை வைத்திருக்கும் சண்முகநாதன், அதில் பாதி கிரயம் குடுத்து வாங்கியதாம். மீதி வளைத்ததாம். இவை எல்லாம் பறிபோய்விடக் கூடாது என்ற பதட்டத்தில்தான் அவர் பொங்கினார் என்கிறார்கள் அவரையறிந்தவர்கள். இதை     யறிந்து கமலாலயத் தரப்பே எரிச்சல் அடைந் திருக்கிறது.''”

"ஓ.பி.எஸ். புதிய வியூகத்திலிருக்கிறார் என்கிறார்களே?''”

"நயினாரைவிட அவர் சமூகம் சார்ந்த வாக்கு வங்கியை அதிகம் வைத்திருப்பவர் ஓ.பி.எஸ். என்பதை பா.ஜ.க. தலைமை தாமதமாக உணர்ந்ததால், கை நழுவிப்போன ஓ.பி. எஸ்.ஸை   வளைக்கத் தூண்டில் போட்டு வரு கிறதாம். இத்தனை காலமும் இவர்களைப் பெரிய அளவில் நம்பி ஏமாந்துபோன ஓ.பி.எஸ். ஸோ, இனி இவர்களின் வாடையே கூடாது என்று, தன் சகாக்களிடம் பொங்கிக்கொண்டிருக் கிறாராம். இதனால் அரசியல் அரங்கிலும் அவர் சமூகத்தினர் மத்தியிலும் ஓ.பி.எஸ்.ஸுக்கான மதிப்பும் மரியாதையும் கூடியிருக்கிறதாம். இதை உணர்ந்த அவர், இதை அப்படியே டெவலப் செய்து, மாநிலம் முழுவதிலும் உள்ள தனது ஆதரவாளர்களையும் தன் சமூகத்தினரையும் டிசம்பருக்குள் ஒருங்கிணைத்து, அழுத்தமான கட்டமைப்பை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார். அதேபோல் வரும் ஜனவரியில், யாரோடு கூட்டணி என்பதையும் அவர் அறிவிக்கவிருக்கிறாராம். அநேகமாக ஜெயிக்கிற குதிரையில்தான் பணம் கட்டுவார் ஓ.பி.எஸ். என்கிறார்கள், அவருடன் இருப்பவர்களே.'' 

"என் காதுக்கு வந்த தகவலை நானும் பகிர்ந்துக்கறேன். தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் இல.கணேசனின் மறைவையொட்டி, அவர் வகித்துவந்த நாகாலாந்து கவர்னர் பதவி காலியாக இருக்கிறது. அதேபோல் மகாராஷ்டிர கவர்னராக இருக்கும், தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. சீனியர் சி.பி.ராதாகிருஷ்ணன், தற்போது இந்திய துணை ஜனாதிபதிக்கான வேட்பாளராக என்.டி.ஏ கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர்தான் துணை ஜனாதிபதி ஆவார் என்று முன்னதாகவே நமது நக்கீரன் தெரி வித்தது.  அதுபோலவே இப்போது நடந் திருக்கிறது. இதனால் சி.பி.ஆரின் கவர்னர் பதவியும் காலியாகிறது. எனவே, இந்த இரண்டு கவர்னர் பதவிகளிலும் அமர்வதற்கு, தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் சிலர், டெல்லியில் உள்ள தங்களின் சோர்ஸ்கள் மூலம் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள்.''”