Advertisment

ஆவி பீதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை!

ff

செப்-21 அன்று காலை தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள சில்லாங்குளம் மேனிலைப்பள்ளி விடுதியின் கழிவறையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டு சடலமாய்த் தொங்க, கிராம மக்கள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள்.

Advertisment

பசுவந்தனை போலீசார் மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் விடுதியில் மாணவி தங்கியிருந்த அறையைச் சோதனையிட்டதில் தற்கொலைக்கு முன்பாக மாணவி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருக்கிறது.

Advertisment

g

பள்ளி மாணவியின் தற்கொலை விவகாரம் வேறு ரூட்டில் பயணித்து விடக்கூடாது என்பதற்காக அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டரான செந்தில்ராஜ், எஸ்.பி. பாலாஜி சரவணன் ஆகியோர் சம்பவ இடத் துக்கு வந்து முழுமையான ஆய்வினை மேற்கொண்ட தால் பதற்றச் சூழல் ஒருவாறு தணிந் தது. கோவில் பட்டி அரசு மருத்துவ மனைக்கு வந்தி ருந்த மாணவியின் பெற்றோர் தங்கள் பிள்ளையின் சாவில் மர்மம் இ

செப்-21 அன்று காலை தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள சில்லாங்குளம் மேனிலைப்பள்ளி விடுதியின் கழிவறையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டு சடலமாய்த் தொங்க, கிராம மக்கள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள்.

Advertisment

பசுவந்தனை போலீசார் மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் விடுதியில் மாணவி தங்கியிருந்த அறையைச் சோதனையிட்டதில் தற்கொலைக்கு முன்பாக மாணவி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருக்கிறது.

Advertisment

g

பள்ளி மாணவியின் தற்கொலை விவகாரம் வேறு ரூட்டில் பயணித்து விடக்கூடாது என்பதற்காக அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டரான செந்தில்ராஜ், எஸ்.பி. பாலாஜி சரவணன் ஆகியோர் சம்பவ இடத் துக்கு வந்து முழுமையான ஆய்வினை மேற்கொண்ட தால் பதற்றச் சூழல் ஒருவாறு தணிந் தது. கோவில் பட்டி அரசு மருத்துவ மனைக்கு வந்தி ருந்த மாணவியின் பெற்றோர் தங்கள் பிள்ளையின் சாவில் மர்மம் இருப்பதாகச் சொல்ல, அவர்களிடம் ஆறுதல் கூறிய அமைச்சர் கீதாஜீவன், "பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பெற்று மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப் படும். மாணவியின் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தவும் பரிந்துரைக்கப்படும்'' என்றார்.

பதற்றச் சூழல் தணியாத நிலையில் மாணவி யின் தற்கொலை குறித்து விசாரணை மேற் கொண்டோம்.

சில்லாங்குளத்திலுள்ள முத்துக்கருப்பன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 2,500 மாணவ- மாணவியர் பயின்று வருகின்றனர். மாணவர்களின் உடை உணவு, தங்குவதற்கான ஹாஸ்டல் வசதிகள் அனைத்தும் ஆதிதிராவிடர் நலத்துறையே ஏற்றுக்கொள்வதால் அவையனைத்தும் மாணவர்களுக்கு இலவசம். அக்கம்பக்க கிராமம் மட்டுமல்ல, வெளி மாவட்டத்திலிருந்தெல்லாம் மாணவ-மாணவியர் இங்குவந்து பயின்றுவருகின்றனர்.

பரமக்குடி பக்கமுள்ள எஸ்.அண்டகுடிக் கிராமத்தைச் சேர்ந்த ராமநாதனின் மகளான மாணவி வைத்தீஸ்வரி, இந்தப் பள்ளியில் 8-ஆம் வகுப்பில் சேர்ந்தவர், பிளஸ் 2 படித்துவந்தார். படிப்பு உண்டு தான் உண்டு என்றிருப்பவர். பெற்றோர்கள் மீது உயிராய் இருக்கும் மாணவி வைத்தீஸ்வரி, தன் தாயின் உடன்பிறந்த தங்கையான சித்தியின் மீதும் பாசமாய் இருந்திருக்கிறார்.

gg

வைத்தீஸ்வரியின் சித்தி கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு திடீரென மரணமடைந்திருக்கிறார். அதற்காக ஊர் சென்ற வைத்தீஸ்வரியின் மனதை சித்தியின் மரணம் நொறுக்கி யிருக்கிறது. சித்தியின் நினைவாக கடுமையான மன உளைச்சலில் இருந்த மாணவி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் பள்ளி திரும்பியிருக்கிறார். அதோடு அவளுக்கு கடுமையான வயிற்று வலி. அதற்காக அருகிலுள்ள ஒட்டப் பிடாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் எடுத்திருக்கிறார்.

பள்ளி வந்தபின்பும் சித்தியின் மரணம் அவளைக் கடுமையாக வாட்டியிருப்பதோடு அடிக்கடி அவள் ஆவியாய் கனவில் வந்து கூப்பிடுவ தாகவும் சக மாணவிகளிடம் தெரிவித்திருக்கிறாள். தனக்குப் பிரியமான மாணவியிடம், "இதுதான் நாம் பார்ப்பது கடைசி' என்ற தொனியில் பேசிய வைத்தீஸ்வரி, செப்.20 அன்று இரவு கடிதம் எழுதி வைத்துவிட்டு விடுதியை அடுத் திருக்கிற பாத்ரூம் போனவர், தண்ணீர் வருகிற பைப்பின் இரும்புக் குழாயில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

இந்த சம்பவத்திற்கு முன்பே பள்ளியில் இதேபோன்ற மன உளைச்சல் சம்பவம் வேறொரு மாணவிக்கு நடந்திருக்கிறதாம். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இங்கு தங்கிப் பயின்றுவந்த ராமநாதபுர மாணவி திடீரென்று ஹேர் டை குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதையறிந்த பள்ளி நிர்வாகம், மாணவியை உடனே மருத்துவமனை சிகிச்சைக்கு கொண்டு சென்று காப்பாற்றியிருக்கிறது.

இதுகுறித்து நாம் பள்ளியின் பொறுப்பாளரான பாலமுருகனிடம் கேட்டதில், "அவங்க ஊர்ல பிரச்சினை. இறந்துபோன அந்த மாணவியோட சித்தி தினமும் கனவுல வந்து, எங்கழுத்த நெரிக்கா, ஆவியா வந்து என்னைய பயமுறுத்துறா... என்னோட வந்துருன்னு என்னைய கூப்புடுறான்னு சொல்லிட்டிருந்தா. தைரியமா இருன்னு சொல்லியிருந்தோம். மன உளைச்சல்ல அப்படிப் பண்ணிட்டா''’என்று முடித்துக்கொண்டார்.

gg

மாவட்ட எஸ்.பி.யான பாலாஜி சரவணனிடம் இதுகுறித்துப் பேசியபோது, "மாணவி டிப்ரஸன்ல இருந்திருக்கா. அவளோட சித்தி நெனைப்பு, அவ கனவுல வந்து கழுத்த நெரிச்சு தொந்திரவு பண்ணுதுன்ருக்கா. வயிற்று வலி காரணமாக ஆஸ்பத்திரிக்கும் கூட்டிட்டுப் போயிருக்காங்க. தன் சக மாணவி ஒருத்தியிடம், "என்னய நீ நல்லா பாத்துக்கோ. இனிமே நீ என்னைய பாக்க மாட்டேன்'னு சொல்லியிருக்கா. அவ ஸ்டடி ரூமுக்கு வரலேன்னு தெரிஞ்சதும், அந்த மாணவி என்னமோ வித்தியாசமா சொன்னாளேன்னு சந்தேகப்பட்டு அவளத் தேடிப் போய் பாத்தப்ப... அவ தற்கொலை பண்ணது தெரிஞ்சிருக்கு''’என்றார்.

எஸ்.பி.யான பாலாஜி சரவணன் ஐ.பி.எஸ். ஆபீஸர் மட்டுமல்ல. மனரீதியான விஷயங்களில் தேர்ந்தவரும்கூட. "மன அழுத்தத்தில உள்ளவங்க, ஒரு டைப்பா இருப்பாங்க. யார்ட்டயும் பேசமாட்டாங்க. வாழ்ந்து என்ன பிரயோஜனம்னு யோசிப்பாங்க. அதவிட்டு வெளிய வரமாட்டாங்க. அந்த சமயம் உடனே அவங்களுக்கு கவுன்சிலிங் குடுக்கணும். அவங்க மனச திருப்பி அவங்கள விளையாட வைக்கணும். அப்ப அவங்க மாறுவதற்கான வாய்ப்பு அதிகம்''” என்கிறார்.

nkn280922
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe