"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலினிடம் முன்னிலும் அதிக வேகத்தைப் பார்க்க முடிகிறது''”
"ஆமாம்பா, அப்பல்லோ சிகிச்சைக்குப் பிறகு, அவரிடம் அதிக புத்துணர்ச்சி தெரிகிறது.''
"உண்மைதாங்க தலைவரே, அப்பல்லோ வாசத்திற்குப் பிறகு, முதல்வர் ஸ்டாலினின் அரசியல் நடவடிக் கைகளில் சற்று சோர்வு ஏற்படும் என்று அ.தி.மு.க., பா.ஜ.க. தலை மைகள் எதிர்பார்த்திருந்தன. ஆனால், அதற்குப் பிறகு அவர் மேலும் கூடுதல் பலம் பெற்றவ ராக எழத் தொடங்கியிருக் கிறார். ஆட்சிப் பணிகளிலும், கட்சிப் பணிகளிலும் முன்பைவிட அவரிடம் வேகம் அதிகரித்திருக்கிறது. இதனைக்கண்டு எதிர்க்கட்சியினர் அப்செட் ஆகியிருக்கிறார்கள். இதையே ஸ்டாலினும் விரும்புகிறார். அதாவது எதிராளிகள் அப்செட் ஆகவேண்டும் என்பதற்காகவே அவர் தன் இமேஜைப் மேலும் பவர்ஃபுல்லாகக் காட்ட ஆரம்பித்திருக் கிறார். அண்மையில் அவரிடம் நலம் விசாரிக்க வந்த ஓ.பி.எஸ்.ஸிடம், "நான் வீழ்வேன் என நினைத்தார்கள்... அவர்களுக்குத்தான் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது'’என்று வெகு உற்சாகமாகவே சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.''”
"ஓ.பி.எஸ். நலம் விசாரிப்பதாகக் கூறி 3 முறை ஸ்டாலினைச் சந்தித்திருக்கிறாரே? கூட்டணிக்கு அடிபோடுகிறாரா?''”
"சரியாவே யூகிக்கிறீங்க தலைவரே.. ஸ்டாலினுடனான சந்திப்பின்போது, ’"பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். இப்போதுதான் சுதந்திர மாக இருப்பதை உணர்கிறேன்'’என ஓ.பி.எஸ். உற் சாகமாகச் சொல்ல, "பா.ஜ.க. எப்போதுமே சுமை தான். இந்த முடிவை நீங்கள் ஆரம்பத்திலேயே எடுத்திருக்க வேண்டும்'’ என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். அப்போது, ’"தேர்தல் அரசியல் பற்றி உங்களிடம் பேச வேண்டும் என்று நான், அப்பாவிடம் வலியுறுத்தினேன் அண்ணா'’ என்று ஓ.பி.எஸ்.ஸின் மகன் ரவீந்திரநாத் சொல்ல, ’"என்னிடம் பேச என்ன தயக்கம்? எப்போது வேண்டுமானாலும் பேசலாமே?'’ என்று நட்புடன் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். இதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்வது பற்றிய தனது விருப்பத்தை வெளிப்படுத்திய ஓ.பி.எஸ்., ’ "எடப்பாடி பழனிச்சாமிக்கு நாங்கள் யார் என்று காட்ட வேண்டும். அவரின் வீழ்ச்சியை நான் பார்க்க வேண்டும்'’என்று கூறியிருக்கிறார். ஸ்டாலினோ, அதற்குத் தனது இசைவைத் தெரிவித்தாராம். இப்படி ஓ.பி.எஸ்., தி.மு.க. கூட்டணிக்கு ரூட் போட்டிருப்பது அவர் ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.''”
"கூட்டணிக்காக மட்டும் ஸ்டாலினை ஓ.பி.எஸ். சந்திக்கவில்லை என்று சொல்கிறார்களே?''”
"அதுவும் உங்க காதுக்கு வந்துடுச்சுங்களா தலைவரே.. முதல்வரிடம் வைக்கப்பட்ட அந்த ரகசியக் கோரிக்கை பற்றியும் சொல்கிறேன். முதல்வருடனான ஓ.பி.எஸ்.ஸின் சந்திப்பில், அரசியல் இருந்தாலும், அதைத் தாண்டி இந்த சந்திப்பில் மிக மிக பர்சனல் விவகாரம் ஒன்றும் இருக்கிறது என்ற தகவல், உளவுத்துறை வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. அதாவது, ஓ.பி.எஸ். துணை முதல்வராக இருந்தபோது சம்பாதித்த பல ஆயிரம் கோடி ரூபாய்களில் ஒரு பகுதியை, சில நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தாராம். அவற்றை அந்த நிறுவனங்கள் நியாயமான முறையில் திருப்பித் தர முன்வரவில்லையாம். இதனால் பகீரான அவர், "ப்ளீஸ் ஹெல்ப் மீ... அவர்களிடம் முடங்கிக் கிடக்கும் அந்தப் பணத்தை எல்லாம் மீட்பதற்கு உதவுங்கள்'’என்று முதல்வரிடம், உருக்கமாகக் கேட்டுக்கொண்டாராம். அதற்கு முதல்வர் என்ன சொன்னார் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. ஆனால் ஓ.பி.எஸ்.ஸின் ரகசியக் கோரிக்கை மட்டும் உறுதி என்கிறது அந்தப் பரபரப்புத் தகவல்.''”
"தி.மு.க. எம்.பி.யும், எம்.எல்.ஏ.வும் அரசு நிகழ்ச்சி யில், கலெக்டர் முன்னிலையிலேயே ஒருமையில் திட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, அண்மையில் ஆண்டிப் பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சக்கம்பட்டியில், தமிழக அரசின் நலம் காக்கும் மருத்துவ முகாம் நடந்தது. அப்போது கட்டுமான நல வாரியத்தின் சார்பில் விபத்து நிவாரண தொகைக்கான ஆணையை, முதல் பயனாளிக்கு ஆண்டிப்பட்டி தி.மு.க. எம்.எல்.ஏ. மகாராஜன் வழங்கினார். அடுத்த பயனாளிக்கும் அவரே கொடுக்க முயன்றபோது, "அதை நான் கொடுக்கறேன்' என அவர் கையில் இருந்ததைப் பறித்து, தேனி தி.மு.க. எம்.பி. தங்க.தமிழ்செல்வன் கொடுக்க எத்தனித்தார். அதை வெடுக்கெனப் பறித்து, தானே பயனாளிக்குக் கொடுக்க முயன்றார் மகாராஜன். இதனால் கடுப்பான எம்.பி., "ஒரு புரோட்டாகால் கூட தெரியலையா? முட்டா பயலே' என கலெக்டர் ரஞ்சித்சிங் முன்னிலையிலேயே சீறினார். இதில் ஷாக் கான மகாராஜன், "யாரைப் பார்த்துடா, முட்டாப் பயலேன்னு சொல்ற? ராஸ்கல்... தொலைச்சிருவேன்டா' என்றார். இருவரும் குழாயடி பாணியில் வரிந்துகட்டியதைப் பார்த்து, அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். இவர்களின் மோதலுக்குக் காரணம், வரும் சட்டமன்றத் தேர்தலில், தன் மகனை ஆண்டிப்பட்டியில் நிற்க வைக்க தங்கதமிழ்செல்வன் திட்ட மிடுகிறாராம். சிட்டிங் எம்.எல்.ஏ.வான தனக்குப் பிறகு, அங்கே தன்னுடைய மகன்தான் களமிறங்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறாராம் மகா ராஜன். இதுதான் அவர்களுக்கிடையில் புகைகிறதாம்.''”.
"இந்த நேரத்தில் தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று காங்கிரஸுக்குள்ளேயே ஒரு தரப்பு குரல் எழுப்பிவருகிறதே?''”
"தி.மு.க. கூட்டணியை விட்டுவிடக் கூடாது என்று செல்வப்பெருந்தகை போராடிவருகிறார். அதேசமயம், சட்ட மன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார். அண்மையில் டெல்லி சென்ற அவர், தங்கள் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணு கோபாலைச் சந்தித்து, ’"சட்டமன்றத் தேர் தலில் தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் ஜெயித்தாலும், கூட்டணி ஆட்சிக்கு ஸ்டாலின் ஒப்புக்கொள்ளமாட்டார். இந்தமுறை ஆட்சி அதிகாரத்தில் நாம் இடம்பெறாவிட்டால், அதுபோன்ற வாய்ப்பு எப்போதுமே வராது. அதனால் சீட் ஷேரிங் பேசும்போதே கூட்டணி ஆட்சிக்கும் உத்தர வாதம் வாங்குங்கள். இல்லையேல், நாம் தி.மு.க. கூட்டணி யில் இருந்து வெளியேறலாம். கூட்டணி ஆட்சியை ஒப்புக் கொள்ளும் நடிகர் விஜய்யுடன் கூட்டணி வைத்தால், உங்கள் மாநிலமான கேரளாவிலும் அவர் கட்சியின் ஆதரவைப் பெற்று அங்கேயும் ஆட்சியைப் பிடிக்க முடியும்' என்றெல் லாம் தனது கலகக் குரலை பலவாறாக எழுப்பியிருக்கிறார். வேணுகோபாலோ, "இப்போ நீங்கள் சொன்னதை எல்லாம் ஒரு கோரிக்கையாக எழுதிக் கொடுங்கள்'’ என்று அவரிடம் எழுதி வாங்கியுள்ளார். விரைவில் இதுகுறித்து அவர் ராகுலிடம் விவாதிக்கப்போகிறாராம்.''”
"எடப்பாடி தலைமையில் தேர்தலைச் சந்திக்கும் அ.தி.மு.க. வெற்றிபெறக்கூடாது என்று, இருவர் அணி ஒன்று தொடர்ந்து காய் நகர்த்துகிறதாமே?''”
"உண்மைதாங்க தலைவரே, குறிப்பாக எடப்பாடிக்கும், பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினாருக்கும் இடையில் ஒற்றுமை நிலவக்கூடாது என்று அ.தி.மு.க. வேலுமணியும் மாஜி பா.ஜ.க. மாநில நிர்வாகியும் திட்டமிட்டு வேலை செய்து வருகிறார்களாம். அண்மையில் நடந்த ஆர்.எஸ்.எஸ். விழாவில் அதன்.தலைவர் மோகன் பகவத்துக்கு ஒருகிலோ எடையுள்ள தங்கத்தால் ஆன வேலினை, வேலுமணி பரிசாகக் கொடுத்தாராம். அப்போதே இந்த சதியை அறிந்த பகத், வேலுமணியிடமே ’"நீங்கள் எடப்பாடியுடனான பா.ஜ.க.வின் உறவைக் குலைக்க முயல்வது எனக்குத் தெரியும். அதற்கு ஆர்.எஸ்.எஸ். எந்த வகையிலும் உதவாது'’ என்று கறாராகவே சொன்னாராம். ஆனாலும் அந்த இருவர் அணி, தங்கள் முயற்சியைக் கைவிட வில்லை என்கிறார்கள். வேலு மணி டீமைப் பொறுத்தவரை, எடப்பாடி தலைமையில் தேர்தல் களத்தில் இறங்கும் அ.தி.மு.க., எந்த வகையிலும் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்று கருதுகிறதாம். அதற்காகத்தான் இந்த சீக்ரெட் மூவ்களாம். இந்த நிலையிலும் பா.ஜ.க. நயினார், நெல்லை சென்ற எடப் பாடிக்கு 108 வகை உண வுடன் ஸ்பெஷல் விருந் தை வைத்திருக்கிறார். "இதுவெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு?' என்று கிண்டலடிக் கிறதாம் அந்த இருவர் அணி.''
"அதேபோல் இருவர் அணி, சசிகலாவும் தினகரனும் எடப்பாடிக்கு எதிராக, மூர்க்கமாக மோதவேண்டும் என்றும் திட்டமிடுகிறதாம். இவர்கள் தீட்டிய திட்டத்தால்தான் ஓ.பி.எஸ்.ஸே, மனம் வெறுத்துப்போய், பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியே வந்திருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.''”
"ராமஜெயம் வழக்கு, கிளைமாக்ஸ் கட்டத்தை எட்டியிருக்கிறதே?''”
"2012, மார்ச் 29 அன்று கொல்லப் பட்ட அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் விவகாரம் கிளைமாக்ஸ் கட்டத்தை எட்டியிருக்கிறது. இதை விசாரித்துவரும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர், சம்பவத்துக்கு முதல் நாள் 5 ரவுடிகளின் செல்போன் எண்கள் திருச்சி தில்லை நகர் பகுதியில், பயன்பாட்டில் இருந்ததையும், காரைக்கால் பகுதியில் கொலைக்கு 3 நாட்கள் முன்னதாக அவர்கள் சந்தித்துள்ளதையும் கண்டு பிடித்தது. இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அவர்கள் இது அரசியல் கொலையாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். இந்தநிலையில் கடந்த மார்ச்சில் திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார், இந்த புலனாய்வு குழுவிற்கு தலைமை ஏற்றிருக்கிறார். இவர் இரண்டு நாட்களாக பாளையங் கோட்டை மத்திய சிறையில் இருக்கும் சுடலைமுத்து என்ற கைதியிடம் தீவிர விசாரணை நடத்தியிருக்கிறார். ராம ஜெயம் கொலை நடந்த போது, அது குறித்து இவருக்கு செல்போனில் தகவல் வந்ததாம். அப்போது இதையறிந்த, அன்றைய சிறை ஜெயிலரான செந் தாமரைக்கண்ணன், அந்த செல் போனைப் பறிமுதல் செய்து, உடைத்தது தெரியவந்திருக் கிறது. இந்த சுடலைக்கு ராமஜெயம் விவகாரம் தெரியும் என்ற சந்தேகம் வலுத்திருக்கிறது. டி.ஐ.ஜி. வருண்குமார் டீமால், அந்தப் படுகொலையின் மர்ம முடிச்சுகள் விரைவில் அவி ழும் என்கிற எதிர்பார்ப்பு, பலருக்கும் ஏற்பட்டிருக் கிறது.''”
"தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி. பற்றிய தகவல்கள் விறுவிறுப்பாகக் கசிகிறதே?''”
"டி.ஜி.பி. சங்கர் ஜிவால் இந்த மாதமே ஓய்வுபெறு கிறார். லஞ்ச ஒழிப்புத்துறை யில் இருக்கும், முதல்வரின் நம்பிக்கைக்குரிய அபய்குமார் சிங், அவரது விருப்பப்படி அடுத்த டி.ஜி.பி.யாக வரு கிறார். எனினும் ஒன்றிய அரசின் பரிந்துரைப் பட் டியலை சீனியாரிட்டிபடி, ஒரு மாதத்திற்கு முன்பே தயாரிக்கப்பட்டிருந்தால், அபய்குமாரின் பெயர் பரிந் துரைப் பட்டியலில் வந்திருக்குமாம். ஏனெனில் குறைந்தபட்சம் 6 மாத கால பணிக்காலம், அதற்கு இருக்கவேண்டுமாம். ஆனால், அந்த பட்டியலை அப்போது டி.ஜி.பி. தயாரித்து அனுப்பா மல் ஒரு மாத காலம் தாமத மாக தயாரித்திருக்கிறார், காரணம், அபய்குமாரின் பணிக்காலம் 6 மாத காலத் துக்கும் கீழே குறைவதோடு, தனது விருப்பப்படி சந்தீப் ராய் ரத்தோர்தான் அந்தப் பதவிக்கு வரவேண்டும் என்று டி.ஜி.பி. விரும்பினா ராம். எனினும், அபய்குமார் சிங்கையே டி.ஜி.பி.யாக்கி, அவருக்கு பணி நீட்டிப்பைக் கொடுத்து, தேர்தல்வரை அவரை அந்தப் பதவியில் இருக்கவைக்கலாம் என்று, முதல்வர் திட்டமிட்டிருக் கிறாராம். இந்த நிலையில், சீனியாரிட்டிபடி அடுத்த டி.ஜி.பி.யை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சந்தீப்ராய் ரத்தோர் சென்னை உயர்நீதி மன்றத் தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.''
"நெல்லை ஆணவக் கொலை விவகா ரத்தில் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தவரை காவல்துறை கண்டறிந்திருக் கிறதே?''”
"சாதிச் செருக்கால் கொலை செய்யப் பட்ட ஐ.டி. ஊழியர் கவினின் தந்தையான சந்திரசேகருக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது தமிழக காவல் துறை. அதே வேளையில், கவினை கொலை செய்த பின்னர் சுர்ஜித் அடைக்கலம் தேடி ஓடியது சுர்ஜித்தின் பெரியப்பா மகனான கயத்தாறு பிரமுகரிடமாம். குவாரி தொழில் செய்துவரும் அவர் சுர்ஜித் தந்தையான சரவணனிடம் நீண்ட கலந்துரையாடல் செய்த பின்னரே, பாளையங்கோட்டைக்கு அனுப்பி வைத்துள்ளாராம். அதன் பின்னரே சுர்ஜித் சரணடைந்திருக்கின்றார். கொலை யாளிக்கு அடைக்கலம் கொடுத்ததால் சி.பி.சி.ஐ.டி. வளையத்தில் சிக்கியுள்ளார் கயத்தாறு பிரமுகரான ஜெயமான "மில்க்' பெயரைக் கொண்டவர்.''”
"நானும் ஒரு தகவலை பகிர்ந்துக்கிறேன்... அஜித்குமார் காவல் மரண விவகாரத்தில், மானா மதுரை சரக தனிப்படை காவலர்களான பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகியோரைப் பணி நீக்கம் செய்தது சிவகங்கை மாவட்ட காவல்துறை. அதேபோல் அவர்கள் கைதும் செய்யப்பட்டனர். டி.எஸ்.பி. சண்முகசுந்தரமும் பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளானார். எஸ்.பி. மட்டும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், இவர்களில் தனிப்படைக் காவலரும், டெம்போ ஓட்டுநருமான ராமச்சந்திரன், மட்டும் கைது நடவடிக்கைக்கு ஆளாகவில்லை. இந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணையில் இரு நாட்களாக சின்சியராக ஆஜராகிய ராமச்சந்திரன், தற்போது அப்ரூவராக மாற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. "இந்த வழக்கில் மேற்கொண்டு துப்பு எதுவும் கிடைத்திடக்கூடாது என்பதற்காக "நிகிதா'விற்காக செயல்பட்ட நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜெயமான பெண்மணி ஒருவரின் அழுத்தமே இதற்குக் காரணம்' என்கின்றனர் விபரமறிந்தோர். விசாரணையில் அந்த ஜெயமான பெண்ணும் சிக்குவாரா? என சிலர், பூவா தலையா? போட்டுக்கொண்டி ருக்கிறார்களாம்.''”