Advertisment

கலைஞர் கொடுத்த இடம்! அபகரிக்கத் துடிக்கும் கும்பல்! போராடும் இருளர் இன குடும்பம்!

ff

ரசு கொடுத்த வீட்டுமனையில் குடியேற, பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்திவருகிறார்கள் ஒரு பட்டியலின குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

Advertisment

இதுகுறித்து நம்மிடம் பேசிய செந்தாமரை, "நாங்க பட்டியலினத்தவர்கள். என்னோட அம்மா சின்னபொண்ணு, அப்பா கிருஷ்ணன். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட, பொத்தேரி கிராமத்தில் உள்ள, பழங்குடியின தெருவில் கடந்த 30 வருஷமா வசிக்கிறோம். பாம்பு, எலி பிடிப்பதையே தொழிலாக செய்து வந்தோம். இப்போ இங்க அனைத்து சமூகத்தவர்களும் வசிக்கிறாங்க. கடந்த 2006ஆம் ஆண்டு, தி.மு.க. ஆட்சியின்போது, வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குமாறு, அப்போதைய மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த தா.மோ.அன்பரசனிடம் கோரிக்கை வைச்சோம். அவரது முயற்சியால், கலைஞரின் உத்தரவுப்படி, அதே பகுதியில், சர்வே எண் 221-ல் அரசுக்கு சொந்தமான 14 ஏக்கர் நிலத்தில், எங்களுக்கும் சேர்த்து சுமார் 518 பயனாளிகள் குடும்பத்தினருக்கு வீட்ட

ரசு கொடுத்த வீட்டுமனையில் குடியேற, பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்திவருகிறார்கள் ஒரு பட்டியலின குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

Advertisment

இதுகுறித்து நம்மிடம் பேசிய செந்தாமரை, "நாங்க பட்டியலினத்தவர்கள். என்னோட அம்மா சின்னபொண்ணு, அப்பா கிருஷ்ணன். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட, பொத்தேரி கிராமத்தில் உள்ள, பழங்குடியின தெருவில் கடந்த 30 வருஷமா வசிக்கிறோம். பாம்பு, எலி பிடிப்பதையே தொழிலாக செய்து வந்தோம். இப்போ இங்க அனைத்து சமூகத்தவர்களும் வசிக்கிறாங்க. கடந்த 2006ஆம் ஆண்டு, தி.மு.க. ஆட்சியின்போது, வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குமாறு, அப்போதைய மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த தா.மோ.அன்பரசனிடம் கோரிக்கை வைச்சோம். அவரது முயற்சியால், கலைஞரின் உத்தரவுப்படி, அதே பகுதியில், சர்வே எண் 221-ல் அரசுக்கு சொந்தமான 14 ஏக்கர் நிலத்தில், எங்களுக்கும் சேர்த்து சுமார் 518 பயனாளிகள் குடும்பத்தினருக்கு வீட்டு மனைப் பட்டா, 31.3.2008 அன்று வழங்கப்பட்டது.

ff

எங்கம்மா, சின்னபொண்ணுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ரோடு கார்னர் பகுதியென்பதால் மதிப்பு அதிகமாக இருந்தது பலரது கண்ணை உறுத்தி யது. அப்போ தலையிட்ட 20வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் அசோகன், "சின்ன பொண்ணுக்கு ஒதுக்கப்பட்ட இடத்த ஊர் சார்பா ஏலம் விட்டு, அந்த தொகையை பிள்ளையார் கோயில் வளர்ச்சிக்கு வைச்சுக்கலாம், பதிலுக்கு சின்னபொண்ணுக்கு வேற இடம் குடுக்கலாம்"னு பேசினார். எதிர்க்க முடியாமல் ஒத்துக்கிட்டோம். ஏழுமலை என்பவர் 17 லட்சத்துக்கு அந்த இடத்தை ஏலத்துக்கு எடுத்தார். அவர் பேருக்கு பட்டா மாத்தினால் 17 லட்சத்த கட்டுறேன்னு பஞ்சாயத்துல சொன்னாரு.

Advertisment

அப்போ சரளாங்கறவங்க, சின்னபொண்ணு கிட்ட 20 லட்சத்துக்கு இந்த இடத்தை வாங்கிட் டேன்னு சொன்னாங்க. 2015ல செங்கல்பட்டுல பத்திரப்பதிவு செஞ்சிட்டதாகவும், தனக்குத்தான் இடம் சொந்தம்னும் சொன்னதால பஞ்சாயத்தே நின்னுபோச்சு. எங்களுக்கு அதிர்ச்சி. நாங்க படிக்காதவங்க. எங்களுக்கே தெரியாம கோர்ட்டுல கேஸ் போட்டு, நாங்க கோர்ட்டுக்கே போகாததால எக்ஸ் பார்ட்டி ஆர்டர் ஆகி, சரளாவுக்கு சாதகமாக தீர்ப்பு வாங்கிட்டாங்க. உடனே எங்கள இடத்தை காலி பண்ணச் சொல்லி அடியாட்களோட மிரட்டி, எல்லாத்தையும் இடிச்சுப்போட்டு அள்ளிட்டுப் போக நாங்க நடுத்தெருவுல நின்னோம். எங்க ளுக்கு ஆதரவா வி.சி.க. மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் தலைமையில சாலை மறியல் போராட்டம் நடத்தினாங்க. ஸ்பாட்டுக்கு வந்த தாசில் தார் வரலட்சுமி, அந்த இடத்தை மீட்டுக் கொடுத் தாங்க. நாங்க ஓலைக்குடிசை போட்டு தங்கியிருந் தோம். எங்களுக்கு வழக்கறிஞர் யுவராஜ், குடிசை கட்ட 30 ஆயிரம் கொடுத்து உதவினார்'' என்றார்.

வழக்கறிஞரும் அந்த வார்டு கவுன்சிலருமான யுவராஜ், "கொஞ்சநாளில், செந்தாமரை குடும்பத் தார் ஆக்கிரமிப்பு பண்ணி வச்சிருக்கிறதாவும், அதை காலி செய்ய நானும் அவங்களோடு சேர்ந்துக்கிட்டு ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டுற தாவும் சரளா மறைமலைநகர் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தாங்க. காவல்துறை உதவி ஆய் வாளர் வெங்கடேசனும், அடுத்து கூடுவாஞ்சேரி போலீஸ் ஏ.சி. சிங்காரவேலனும் விசாரணை நடத்தினாங்க. செந்தாமரை மேல நில அபகரிப்பு புகார் வந்திருக்குன்னு சொல்லி கூப்பிட்டதால நாங்களும் தாம்பரம் கமிஷனர் ஆபீஸ்க்கு மூணு முறை விசாரணைக்காக போனோம், ஆனால் சரளா தரப்புல யாருமே ஆஜராகாததால எழுதிக் கொடுத்திட்டு வந்துட்டோம்.

ff

செந்தாமரையோட அம்மா சின்னபொண்ணு 2012-ல் செத்துப்போன பின்னாடி, அவங்க அப்பாவோட இரண்டாவது மனைவி லட்சுமிங்கற வங்க, சரளா வீட்ல வேலை செஞ்சுட்டு இருந்தப்ப, அவங்களோட ஆதார் கார்டுல சின்ன பொண்ணு போட் டோவை வைத்து, ஆள் மாறாட்டம் செஞ்சு பத்திரப்பதிவு செஞ்சது தெரிய வந்துச்சு. இது தொடர்பா செங்கல் பட்டு ஆட்சியர்கிட்ட புகார் கொடுத்தும் நடவடிக்கையில்ல. 2008-ல அரசு கொடுத்த இலவச பட்டா இடத்தை 2015-க்குள்ள சரளா பத்திரப்பதிவு செஞ்சதே செல்லாது. ஆக, போலியா பத்திரப்பதிவு செஞ்சிருக்காங்க. ஆதாரமும் இருக்கு. செந்தாமரை குடும்பம் 30 வருசமா அங்கதான் இருக்காங்க. செந்தாமரை அம்மா சின்னபொண்ணு 2012லயும், சித்தி லட்சுமி 2015லயும் இறந்ததால இடம் செந்தாமரைக்கு சொந்தமாகுது. இப்போ அந்த குடும்பத்துல 18 பேர் ஓலைக்குடிசைல தான் வாழ்ந்திட்டிருக்காங்க. ஆறுபேர் பள்ளிக்கூடம் போறாங்க. கரண்ட் கூட இல்ல. பட்டியலின மக்களுக்கு நியாயம் கிடைக்கணும்'' என்றார்.

இது தொடர்பாக வி.ஏ.ஓ. சரவணனை தொடர்புகொண்டோம். அவர் தொடர்பை எடுக்க வில்லை. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாட்டிடம் பேசியபோது, "இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்குப் பின் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

இந்நிலையில், போராடிப் போராடி வெறுத்துப்போன தங்களை கருணைக் கொலை செய்யும்படி செந்தாமரை குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு அளித் துள்ளனர்.

பட்டியலின மக்க ளுக்கு கலைஞர் கொடுத்த இலவச வீட்டுமனைப் பட்டா இடத்தை மீட்டுக் கொடுப்பாரா தற்போ தைய முதல்வர் மு.க. ஸ்டாலின்?

nkn130523
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe