தேர்தல் பணிகளில் வேகம் காட்டிவரும் அ.தி.மு.க.விடம் பா.ஜ.க.விற்கான தொகுதிப் பங்கீடுகளை இறுதி செய்வதற்காக எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆலோசனை நடத்தினார். தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் பொறுப்பாளரும் மூத்த மத்திய அமைச்சருமான பியூஷ்கோயல். அந்த ஆலோசனையில் இரு தரப்புக்கும் உடன்பாடு எட்டவில்லை என்கிறார்கள் அ.தி.மு.க.- பா.ஜ.க.வினர். இதனால், அதிர்ச்சியடைந்திருக் கிறார் அமித்சா.
தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் பொறுப்பாள ராக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல், இணைப் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் ஆகியோரை அண்மையில் நியமித்தது பா.ஜ.க.வின் தேசிய தலைமை. ஏற்கனவே, 2021 தேர்தல் காலகட்டத்தில் தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் பொறுப்பாளராக பணி செய்தவர் பியூஷ்கோயல். பா.ஜ.க.வை மட்டுமல்லாமல் தமிழக அரசியல் நிலவரங்களை கவனிக்கும் பொறுப்பும் இவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அன்றைக்கு பா.ஜ.க. தலைமைக்கு பியூஷ்கோயல் கொடுத்த ரிப்போர்ட்டுகள் ஒவ்வொன்றும் கனமானவை.
இந்த நிலையில், அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடுகளை இறுதி செய்வதற்காக 23-ந் தேதி பியூஷ்கோயலும் அர்ஜுன்மேக்வாலும் சென் னைக்கு வந்தனர். எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்துவதற்கு முன்னதாக தமிழக பா.ஜ.க.வின் மையக்குழுவினருடன் விவாதித் தார் பியூஸ்கோயல்.
கமலாலயத்தில் நடந்த அந்த ஆலோசனை யில் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சௌந்திரராஜன், அரவிந்த்மேனன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட னர். மாஜி தலைவர் அ.மலையை இந்த கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை. இந்த மையக்குழுக் கூட்டம் ஃபார்மாலிட்டிக்காக நடத்தப்பட்டது என்றாலும் எடப்பாடி பழனிச்சாமியிடம் விவாதிக்கவேண்டிய விசயங்கள், என்.டி.ஏ. கூட்டணியை வலிமைப்படுத்துவது, விஜய்யின் அரசியல் உள்ளிட்டவைகள் அலசப்பட்டுள்ளன.
இது குறித்து பா.ஜ.க. தரப்பில் விசாரித்த போது, ‘இந்தமுறை தமிழக பா.ஜ.க. 50 இடங்களில் போட்டியிட வேண்டும். இதற்காக, வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகள் என 60 இடங்களை அடையாளம் காணப்பட்டு, அந்த பட்டியலை அமித்சாவிடம் கொடுத்திருக்கிறோம். அந்த 60 இடங்களிலிருந்து 50 தொகுதிகளை அ.தி.மு.க. விடம் பேசி வாங்கவேண்டும். ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகியோரை அ.தி.மு.க.வில் இணைக்க எடப்பாடி மறுத்துவருகிறார். அதனால், அவர் களை என்.டி.ஏ. அலையன்சில் சேர்க்க அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/26/fushgoyal2-2025-12-26-10-52-29.jpg)
நம்மை கொள்கை எதிரி என விமர்சிக்கும் விஜய்யின் அரசியலால் பா.ஜ.க.வுக்கு சேதாரம் ஏற்படுமா? என்பதையும் ஆராயவேண்டும். எஸ்.ஐ.ஆர். பணிகள் முடிவுற்றுள்ள நிலையில், பா.ஜ.க. வாக்காளர்கள் விடுபட்டிருந்தால் அவர் களது பெயர்களை இணைக்க புதிய வாக்காளர்கள் சேர்க்கையில் கவ னம் செலுத்த வேண்டும் என பல்வேறு தேர்தல் அரசியல் குறித்து மையக் குழுவில் பேச்சு எழுந்தது.
அதனை உள்வாங்கிக் கொண்ட பியூஷ் கோயல், ஏற்கனவே அ.தி.மு.க. தலைமையுடன் அமித்சா பேசி முடித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் அவர்களிடம் நான் பேசப் போகிறேன். நீங்கள் சொன்ன கருத்துக்களையும் கவனத்தில் வைத்துக் கொள்கிறேன். என்.டி.ஏ. கூட்டணிக்கு நடிகர் விஜய் வருவாரா? என்பதில் உறுதியில்லை. ஆனால், சேதாரத்தை ஏற்படுத்தக்கூடியவர் விஜய். அதனால், அவரை பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்க வேண்டாம். அதாவது, தி.மு.க. கூட்டணிக்கு வலிமையாக இருக்கும் சிறுபான்மையினர் (கிறிஸ்துவர், இஸ்லாமியர்) வாக்குகள், விஜய்க்கு ட்ரான்ஸ்ஃபர் ஆவதாக டெல்லிக்கு கிடைத்த ரிப்போர்ட்.
தி.மு.க.வுக்கு ஆதரவான ஓட்டுகள் விஜய்க்கு சாதகமாக மாறுவது பா.ஜ.க.வுக்கு நல்லது. விஜய்யை கடுமையாக விமர்சிக்க வேண்டாம். ஏனெனில், சிறுபான்மையினர் வாக்குகளை தவிர்த்துவிட்டு ஆராய்ந்தால், தி.மு.க.வுக்கு எதிராக அதிருப்தி வாக்குகளும் தேர்தல் களத்தில் கடுமையாக உருவாகியிருக்கிறது. அந்த வாக்குகள் என்.டி.ஏ. கூட்டணிக்குத்தான் (அ.தி.மு.க.-பா.ஜ.க.) கிடைக்கும். விஜய்யை விமர்சிப்பதால் அந்த வாக்குகள் அவருக்குப் போய்விடக்கூடிய ஆபத்து இருக்கிறது. அதனால், விஜய்யை விமர்சிக்காதீர்கள். அதேசமயம், விஜய்க்கு செல்லும் வாக்குகள் என்.டி.ஏ. கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும், என்.டி.ஏ. கூட்டணிக்கான வாக்குகள் விஜய்க்கு போய்விடாமலும் தேர்தல் வியூகங்களை நீங்கள் முன்னெடுக்க வேண்டும். அதற்கேற்ப தொடர்ச்சியான அட்வைஸ்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும். 2026 தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் உருவாவதற்கு வழிவகுக்கும் என பியூஷ்கோயல் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார்''’என்று விவரிக்கிறது கமலாலய வட்டாரம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/26/fushgoyal1-2025-12-26-10-52-42.jpg)
பியூஷ்கோயல் தலைமையில் பா.ஜ.க.வின் மையக்குழு கூட்டம் நடந்துகொண்டிருந்த அதே வேளையில், தனது வீட்டில் அ.தி.மு.க. சீனியர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டவர்களுடன் ஜாலியாக டிஸ்கஷன் செய்துகொண்டிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. பியூஷ்கோயல், தனது கூட்டத்தை முடித்துவிட்டார் என தகவல் எடப்பாடிக்கு சொல்லப்பட்டதும் சீனியர்களுடன் கிளம்பி எம்.ஆர்.சி. நகரிலுள்ள லீலா பேலஸ் ஹோட்டலுக்கு விரைந்தார் எடப்பாடி. பியூஸ்கோயலுக்காக காத்திருந்தார்.
நயினார் நாகேந்திரன், எல்.முருகன், அர்ஜூன்ராம் மேக்வால், அரவிந்த்மேனன் ஆகியோருடன் ஹோட்டலுக்கு வந்த பியூஷ் கோயலை வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோர் வரவேற்று அழைத்துச்சென்றனர். அதிமுக தலைவர்களுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசித்தார் பியூஷ்கோயல். அந்த ஆலோசனை யில், பா.ஜ.க.வின் விருப்பத்தையும் எதிர்பார்ப்பை யும் ஏற்க மறுத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இதுகுறித்து அ.தி.மு.க. -பா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, "பரஸ்பரம் நலம் விசாரிப்புகளுக்கு பிறகு, தொகுதி உடன்பாடுகள் குறித்து விவாதிக்கப் பட்டது. அப்போது, பா.ஜ.க. தரப்பிலிருந்து அமித்சாவிடம் கொடுக்கப்பட்ட 60 தொகுதிகளின் பட்டியலை விவரித்து, இதிலிருந்து 50 தொகுதி களை பா.ஜ.க.வுக்கு ஒதுக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். அதேபோல, என்.டி.ஏ. அலையன்ஸ் ஆட்சியை பிடிக்க வேண்டுமானால், நம் கூட்டணியை வலிமைப்படுத்த வேண்டும். இதில் முரண்டுபிடிக்காதீர்கள், ஒப்புக்கொள்ளுங் கள்'' என பேச்சைத் தொடர்ந் தார் பியூஷ்கோயல்.
அதனைப் பொறுமையாக கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, "நீங்கள் விரும் பும் நபர்களை (ஓ.பி.எஸ்., தினகரன்) அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ள முடியாது. நீங்கள் வலியுறுத்துவதாலும், விரும்புவதாலும் என்.டி.ஏ. கூட்டணியில் இணைத்துக் கொள்ள சம்மதிக்கிறேன். பா.ஜ.க.வுக்கு மட்டும் எங்களால் 25 தொகுதிகள் ஒதுக்க முடியும். அதேசமயம், என்.டி.ஏ. கூட்டணிக்கு வேறு சில பல கட்சிகளை கொண்டுவர நீங்கள் நினைப்பதால், கூடுதலாக 15 தொகுதிகள் என மொத்தமாக 40 தொகுதிகளை கொடுக் கிறோம். யாரையெல்லாம் சேர்க்க நினைக்கிறீர்களோ அந்த கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுத்துவிடுங்கள். பா.ம.க.வை மட்டும் நாங்கள் டீல் செய்து கொள்கிறோம்'' என அ.தி.மு.க. வின் நிலைப்பாட்டைக் கூறி யிருக்கிறார்.
இந்த எண்ணிக்கை, பா.ஜ.க. தலைவர்களுக்கு ஷாக் தந்திருக்கிறது. அப்போது, "அமித்சாவை டெல்லியில் நீங்கள் சந்தித்த சமயத்தில், அ.தி. மு.க.வுக்கு 134 சீட்; பாஜகவுக்கு 100 சீட்! இந்த 100 சீட்டில் கூட்டணிக் கட்சிகளுக்கு பா.ஜ.க. பகிர்ந்துகொடுக்கும் என அமித்சா சொன்ன கணக்கை மறுக்கவில்லை. இப்போது அதற்கு மாறாக ஒரு கணக்குச் சொல்கிறீர்கள். நாங்கள் இன்றைக்கு உங்களைச் சந்தித்து தொகுதிகளை அடையாளம் காண்பதற்காகத்தான். சீட் எண்ணிக்கையைப் பற்றி பேசுவதற்கு இல்லை'' என பியூஷ்கோயல் சொல்லியிருக்கிறார்.
அதற்கு அமித்ஷா, "அன்றைக்குச் சொன்ன கணக்கிற்கு நான் சம்மதிக்கவில்லை; அ.தி.மு.க. தலைவர்களுடன் விவாதிக்கிறேன்னு மட்டும்தான் சொல்லிவிட்டு வந்தேன். தி.மு.க. எத்தனை இடங்களில் போட்டியிடுகிறதோ, அதற்கு இணையாக அல்லது அதற்கு நெருக்கமாக அ.தி.மு.க. போட்டியிட வேண்டும் என அ.தி.மு.க. விரும்புவதை டெல்லிக்கு ஏற்கனவே பாஸ் செய்திருக்கிறோம். அப்படியிருக்கையில் இப்போது, மீண்டும் அதே கணக்கை சொல்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை என எடப்பாடி பழனிச்சாமியும் கே.பி.முனுசாமியும் விவரித்துள்ளனர். இதில் கன்ஃபியூஸான பா.ஜ.க. தலைவர்கள், பா.ஜ.க.விற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை நாங்கள் அடையாளம் கண்டிருக்கிறோம். அந்த தொகுதிகளில் எந்த மாற்றத்தையும் நீங்கள் செய்யக்கூடாது. நாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளை ஒதுக்குவதில் நீங்கள் பிரச்சினை செய்ய மாட்டீர்கள் என நம்புகிறோம். சீட் எண்ணிக்கை குறித்து அமித்ஷாவிடம் விவாதித்து விட்டு இறுதி முடிவை எடுக்கலாம் எனச் சொல்லிவிட்டு பியூஷ்கோயல் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனையை முடித்துக்கொண்டனர்''’என்கிறார்கள் அ.தி.மு.க. -பா.ஜ.க.வின் தலைவர்களுக்கு நெருக்கமானவர்கள்.
தொகுதி உடன்பாடு குறித்து விவாதிப்பதற்காக நடந்த ஆலோசனையில் இறுதி முடிவுகள் எட்டப்படாவிட்டாலும், எங்களின் சந்திப்பு நன்றாக அமைந்தது; ஒரே குடும்பமாக இருந்து தேர்தலை சந்திப்போம்; அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெறும்; தி.மு.க. ஆட்சியை வீழ்த்த எப்படி செயல்பட வேண்டும்; தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதுதான் ஒரே குறிக்கோள் என்றெல் லாம் பியூஷ்கோயலும் எடப்பாடியும் இணைந்து பேட்டியளித்தனர்.
இதனையடுத்து டெல்லிக்குச் சென்ற பியூஷ் கோயல், அமித்சாவை சந்தித்து எடப்பாடியுடனான சந்திப்பில் நடந்ததை விவரித்திருக்கிறார். அதனைக் கேட்டு ஷாக்கான அமித்சா, "மீண்டும் ஏன் அவர் (எடப் பாடி) பிடிவாதம் பிடிக்கிறார்?' என்று எடப்பாடி மீது வருத் தப்பட்டாதாக கூறுகின்றனர் பா.ஜ.க.வினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/26/fushgoyal-2025-12-26-10-52-02.jpg)