பாவ -புண்ணியம், மறுபிறவி என அரசு பள்ளியில் பேசி கைதாகியிருக்கிறார் மகாவிஷ்ணு. அவர் மீது தவறு இல்லை. அழைத்தவர்களைத் தான் தண்டிக்க வேண்டும் என விவாதமே நடந்தது. யார் மீது தவறு?
அன்னபூரணி என்ற பெண் நான்தான் அம்மன் என்று சொன்னதை யூடியூப் சேனல்கள் பெரியதாக போட்டு இப்போது ஆன்மிகப் பயிற்சி வழங்குவ தாக சொல்லி சம்பாதித்துக்கொண்டிருக்கிறார். அதேபோலத்தான் ஒரு குறுகிய இடத்தில் ஆட்டையை போட்டுக்கொண்டிருந்த மகாவிஷ்ணு வை இப்போது பிரபலப்படுத்திவிட்டார்கள்.
ஒரு இடத்தில் தவறு நடக்கிறபோது அதுகுறித்து விசாரிப்பது, அதுதொடர்பான நடவடிக்கை எடுப்பது தவறா?
மகாவிஷ்ணு யார். அவரோட அடையாளம் என்ன? ஆன்மிகம் பத்தி பேசுவார் என தெரிந்து தான் அழைத்திருக்கிறார்கள். ஏன் அந்தப் பள்ளிக்கு அழைத்தார்கள்? அந்தப் பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியும் வழங்கியிருக்கிறார் மகாவிஷ்ணு. ஒரு லட்சம் ரூபாய் நிதி கொடுத்து பேசும்போது அவரது கருத்தை விதைக்கத்தான் பார்ப்பார். பள்ளியில் அவர் பேசி பிரச்சனை ஆனபோது, நானா வந்தேனா, கூப்பிட்டுத்தானே வந்தேன். வந்து பேசுங்கன்னு சொன்னதால்தானே பேசுறேன் என அசிங்கமாகக் கேட்கிறார். ஆன்மிக பின்புலம் உள்ளவரை அழைத்து பாவ புண்ணியம் குறித்து பேசலாமா என்றால் அவர் வேறு என்ன பேசுவார். சாத்தான் வேதம் ஓதுமா?
பெயர் சொல்ல விரும்பவில்லை, உ

பெயர் சொல்ல விரும்பவில்லை, உச்சகட்ட அரசு அதிகாரிகள்வரை அவரது தொடர்பு இருக்கிறது. அந்த பள்ளி யில் முக்கியப் பொறுப்பில் இருப் பவர்களுடன் நெருக்கமாக இருக்கிறார். மகாவிஷ்ணுவை அழைத்தது தொடர் பான அதிகாரிகளுக்கு என்ன தண்டனை கொடுத்தீர்கள்? தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ததோட இந்த பிரச் சனையை முடித்துவிட்டார்கள். மகா விஷ்ணுவை அழைத்தது தலைமை ஆசிரியர் மட்டும்தானா? வேறு யாருக்கும் தொடர்பு இல்லையா? இதுதொடர்பான அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுங் கள். நடவடிக்கை எடுப்பார்களா என்று தெரியவில்லை. மகாவிஷ்ணு தரப்பு "அதிக நெருக்கடி கொடுக்காதீங்க விட்டுடுங்க'ன்னு உயர் அதிகாரிகள்வரை பேசியிருக்காங்க. அதனால்தான் குண்டாஸ் வரை போகாமல் இருப்பதாக சொல்கிறார்கள்.
இந்த விசயத்தில் தி.மு.க.வை ஆதரிப் பவர்கள், தி.மு.க. கொள்கையை ஆதரித்து பயணிப்பவர்கள்தான் பள்ளிக்கு மகா விஷ்ணுவை அழைத்த உயர்அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பினார் கள். நிர்வாகத்தையும் கண்டித்தார்கள்.
மோடி பிரதமர் ஆன பிறகு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, உயிரிழப்பு ஏற்படுவது இல்லை என்று பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள். சமீபத்தில் இலங்கையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மொட்டை அடித்து அனுப்பியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீது அக்கறை செலுத்துகிறதா மோடி அரசு?
மீன்வளத்துறையிலும் இருந்தவர்தான் எல்.முருகன். இருந்தும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறைந்தபாடில்லை. கைது நடவடிக்கையும் குறையவில்லை. இலங்கை மீனவர்கள், இலங்கை ராணுவம் தாக்கி தமிழக மீனவர்கள் இறப்பு ஏற்படவில்லை என்கிறார்கள். தமிழக மீனவர்கள் இறப்பு நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை மறைக்கிறார்கள். இதனை ஏற்கனவே நக்கீரனில் சொல்லியிருக்கிறேன். அதனை பார்த்து, உயி ரிழந்த மீனவரின் மகன் என்னிடம் தொடர்பு கொண்டு, நீங்கள் சொன்னது சரிதான் என்றார்.
மீனவர்களுக்கு இன்னொரு வேதனை என்னவென்றால், படகுகளை அவர்கள் சேதப் படுத்துவது, வலைகளை சேதப்படுத்துவதுதான். அதனை சரி செய்யவே சம்பாதித்த பணம் போய் விடும். கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு அபராதம் போட்டதுடன், மொட்டையும் அடித் துள்ள இலங்கை அரசுக்கு என்ன கண்டனம் தெரி வித்தது மோடி அரசு. ஒன்றுமே இல்லையே.
கடலோர மீனவ மக்களின் வலி உள் மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு தெரிய வில்லை. அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தெரியவில்லை. கண்டுகொள்ளவும் இல்லை. பொருட்படுத்தவும் இல்லை. மாநில அரசுகளே தீர்வை நோக்கி நகர்வது இல்லை. அந்த பிரச்சனையை பெரியதாக்குவது இல்லை. மற்ற கட்சிகளுடன் கைகோர்த்து, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து மீனவர்களுக்காக பேசுவது இல்லை. பா.ஜ.க.வை எதிர்க்கக்கூடிய கட்சிகள் கூட மீனவர்களுக்கு ஆதரவாக நின்று போராடுவது இல்லை. மீன் வறுத்துச் சாப்பிட வருகிறார்கள், எங்க பிரச்சனைகளை கேட்க வருவதில்லை என்று திரைப்படம் ஒன்றில் வசனம் வரும். அதுபோலத்தான் தேர்தல் நேர வாக்காளர்களாக மட்டுமே மத்திய, மாநில அரசுகள் மீனவர்களைப் பார்க்கிறது. அவர் களின் வாழ்வாதாரத்திற்காக உண்மையிலுமே குரல் கொடுப்பது இல்லை.
இந்த விசயத்தில் மாநில அரசு ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறது. ஒன்றிய அரசுதான் நடவடிக்கை எடுக்கணும். மாநில அரசை குறை சொல்றீங்க?
இலங்கை உச்சகட்டப் போரின்போது தமிழக மீனவர்களும் பாதிக்கப்பட்டனர். அப்போது ஒன்றிய அரசின் உதவியே தேவையில்லை. மாநில போலீசாரை வைத்தே இலங்கையுடன் மோதுவேன் என்று ஜெயலலிதா பேசியபோது அனைவரின் கவனமும் அவர் மேல் திரும்பியது. நிதி வரவில்லை, ஜி.எஸ்.டி. பாக்கி வரவில்லை என்று எப்படி எதிர்ப்பு களைக் காட்டுகிறீர்களோ அதேபோல் மீனவர் கள் விவகாரத்திலும் அக்கறை காட்ட வேண்டும். மாநில அரசாக இருந்தால் என்ன? மீனவர் களை அழைத்துக்கொண்டு தமிழக அமைச்சர் கள் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தியுங்கள். பிரச்சனை முடியவில்லை என்றால் டெல்லியில் போராடுங்கள். மாநில அரசு போராட்டம் நடத்தக்கூடாது என்று இருக்கிறதா? எத்தனையோ விசயத்தில் ஒன்றிய அரசை எதிர்த்து மாநில அரசு ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தவில்லையா?
ஒன்றியத்தில் இருக்கும் பா.ஜ.க அரசின் பார்வையில், தமிழ்நாட்டில் எங்கள் கட்சியை அங்கீகரிக்கவில்லை. ஆதரவு கொடுக்கவில்லை. எங்களை ஏற்க மறுக்கும் உங்களுக்கு நாங்கள் ஏன் செய்ய வேண்டும் என்ற பார்வையில் உள் ளார்கள். இங்கே உள்ள மாநில பா.ஜ.க.வும் இதனை வைத்து பணம் பார்க்கத்தான் நினைக் கிறது. சமீபத்தில் எனக்கு கிடைத்த தகவல், லண்டன் பயணத்தை முடித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழகம் திரும்பிய பின்னர், "என் மண் என் மக்கள்' யாத்திரையைப் போல, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு யாத்திரை செல்ல இருக்கிறார். அந்த யாத்திரை கடலோர கிராமங்களுக்கு மட்டும் நடத்தத் திட்ட மிட்டுள்ளார். அப்போது மீனவர்களை சந் தித்து, ஒன்றிய அரசு மீனவர்களுக்கு என் னென்ன மானியம் கொடுக்கிறது என்பதை சொல்லப்போகிறார். இலங்கைக்கு கடல்வழி போக்குவரத்தை உருவாக்கிக் கொடுத்திருக் கிறோம். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்துவருகிறோம் என்பதையெல்லாம் சொல்லி, அந்த மக்களை பா.ஜ.க பக்கம் திருப்பு வதற்கான வேலைகளை செய்யப்போகிறார். பா.ஜ.க.வும் அரசியல் ஸ்டண்ட்தான் அடிக் கப்போகிறது. பா.ஜ.க அந்த யாத்திரையை மேற்கொண்டு, அதற்கு ஏற்றால்போல் மீனவர் பகுதிகளில் வெற்றிபெற்றால் ஏதாவது செய்வோம் என்று சொல்லுவார்கள், வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கை கழுவிவிடுவார்கள்.
(தொடரும்...) -சந்திப்பு:வே.ராஜவேல்
படம்: நவீன்