பந்தாடும் பன்றிகள்! -நெல்லை, தென்காசி விவசாயிகள் குமுறல்!

ss

நெல்லை மாவட்டத்தில் விவசாயத்துக்கு பிரதானமாக உள்ள சுமார் 40-க்கு மேற்பட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை, நெல் பயிர்களை காட்டுப்பன்றிகள் தொடர்ந்து அழித்துவருவதால் விவசாயிகள் அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறார்கள்.

ராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தையொட்டியுள்ள பணகுடி, பரிசூரன் பீட், தளவாய்புரம், திருக்குறன்குடி, மலையடிபுதூர், மாவடி, களக்காடு, சேரன்மகாதேவி, வடகரை, பத்மநேரி, கங்கனாகுளம், சேரமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகள் வாழை, நெல் விவசாயத்துக்குப் பெயர் பெற்றவை. காட்டுப்பன்றிகளின் அட்டூழியத் தால் வாழை விவசாயமும் அழிந்துவிட்டது என்கின்றனர் விவசாயிகள் கண்ணீரோடு.

dd

இதுகுறித்து களக்காட்டை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார், “களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆன பிறகுதான் விவசாயிகளுக்கு இந்த மாத

நெல்லை மாவட்டத்தில் விவசாயத்துக்கு பிரதானமாக உள்ள சுமார் 40-க்கு மேற்பட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை, நெல் பயிர்களை காட்டுப்பன்றிகள் தொடர்ந்து அழித்துவருவதால் விவசாயிகள் அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறார்கள்.

ராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தையொட்டியுள்ள பணகுடி, பரிசூரன் பீட், தளவாய்புரம், திருக்குறன்குடி, மலையடிபுதூர், மாவடி, களக்காடு, சேரன்மகாதேவி, வடகரை, பத்மநேரி, கங்கனாகுளம், சேரமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகள் வாழை, நெல் விவசாயத்துக்குப் பெயர் பெற்றவை. காட்டுப்பன்றிகளின் அட்டூழியத் தால் வாழை விவசாயமும் அழிந்துவிட்டது என்கின்றனர் விவசாயிகள் கண்ணீரோடு.

dd

இதுகுறித்து களக்காட்டை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார், “களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆன பிறகுதான் விவசாயிகளுக்கு இந்த மாதிரி பிரச்சினை ஏற் பட்டுள்ளது. புலிகள் காப்பகத்தால் வனத்திலிருந்த காட்டுப்பன்றிகள் மலையடி கிராமங்களிலுள்ள விவசாய நிலங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தன. இந்தப் பன்றிகள் வாழைக்கன்று நடும்போது மூக்கைக்கொண்டு நோண்டியும், கைகால்களால் பிராண்டியும் கிழங்கைத் தின்கிறது. அதேபோல் வாழை குலைவைக்கிற பருவத்தில் அதை முட்டி முறித்து கீழேபோட்டு தின்னு அழிச்சிட்டுப் போயிடுது.

நெற்பயிர்கள் கதிர் வரும்போது அதில் உருண்டுபுரண்டு கதிர்களை முளையிலே அழிக்கிறது. இதில் தப்பி விளைச்சலுக்கு வருகிற நெற்கொத்தை கடித்துப் பிடுங்கியும் உருவி யடித்தும் நாசம் பண்ணிவிடுகிறது. 6 மாதத்திற்கு ஒரு முறை குட்டிபோடுகிற இனமாக இருப்பதால் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் விவசாயிகளால் பயிர்களைப் பாதுகாக்கமுடியாத நிலை உள்ளது.

பன்றிகளிடமிருந்து வாழையையும், நெற்பயிரையும் பாதுகாக்க எங்களின் பலகட்டப் போராட்டத்தையடுத்து, வனத்துறையினர் பன்றிகள் வராமல் இருக்க அகழி வெட்டினார்கள். அதில் ஒரு பன்றிகூட சிக்கவில்லை. பின்னர் சோலார் ஷாக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார்கள் இன்றுவரை அதுவும் செய்யவில்லை.

பன்றிகள் பகல் நேரங்களில் புதருக்குள் மறைந்து இருந்துகொண்டு இரவு நேரத்தில் வந்து பயிர்களை அழிக்கின்றன. பன்றிகளைத் துரத்த நினைக்கும் விவசாயிகளை பன்றிகள் கும்பலாக வந்து துரத்தி தாக்குகின்றன. இதனால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளை தாக்கி, பயிர்களை அழிக்கும் காட்டுப்பன்றிகளைச் சுடலாம் என்று சட்ட மன்றத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார். அது எப்படி யென்றால்... பயிர்களை அழிக்கும் பன்றியை விவசாயி அடையாளத்துடன் வனத்துறையின ரிடம் கூறவேண்டும். அந்த பன்றி மீண்டும் வருகிறதான்னு பார்க்க வனத்துறையினர் வருவார்களாம். அந்த பன்றி ஆணா? பெண்ணா? என்று பார்ப்பார்களாம். பெண் என்றால் அது குட்டி போடுகிற நிலையில் இருக்கிற பன்றியா என்பதை உறுதிப்படுத்திய பிறகு சுடுவார்களாம். விவசாயிகளை எந்தளவு முட்டாளாக்குறாங்க.

பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்துக்கு உரிய நஷ்டஈடு தாருங்கள், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பன்றிகளைக் கட்டுப்படுத்துங்கள் என்றுதான் மாவட்ட ஆட்சியரையும் வனத்துறையினரையும் கேட்கிறோம். ஆனால் அவர்கள் எங்கள் சூழ்நிலைகளைத் தெரிந்தும் மெத் தனமாக இருக்கிறார் கள். 2020-லிருந்தே இந்த காட்டுப் பன்றிகளால் பயிர் சேதங்கள் அதிகரித் துக் கொண்டேதான் இருக்கிறது. இந்த பன்றிகளைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததை நாங்கள் குற்றம் சாட்டிவருவதால், "கரடியைக் கொன்னுட்டோம், காட்டுப் பன்றியைக் கொன்னுட்டோம்'னு விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். என்மீதும் வழக்கு இருக்கிறது''’என்றார் விரக்தியுடன்.

ss

திருக்குறன்குடி வாழை விவசாயி முருகன் கூறும்போது, “"பன்றிகளால் சேதமடைந்த பயிருக்கு நஷ்டஈடு கேட்டுப் போனால்... அதிகாரிகள் முப்பாட்டன், தாத்தா, அப்பா காலத்து சொத்துக்கான பட்டா சிட்டாவோடு அதைக் கொண்டுவா, இதை கொண்டுவா என விவசாயிகளை அலைக்கழித்து வெறுப் பேத்துறாங்க. காட்டுப்பன்றிகளால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சுமார் 35 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வாழை, நெல் விவசாயங்கள் பாதிக்கப்பட்டுள்ளன''’என்கிறார்.

"காட்டுப்பன்றிகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால் காட்டுப் பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலிலிருந்து ஒன்றிய அரசு நீக்கவேண்டும். வாழை, நெற்பயிர்களோடு நிலக்கடலை மற்றும் மரவள்ளிக்கிழங்கையும் தோண்டியெடுத்து இந்த பன்றிகள் அழிக்கின்றன. இதனால் எந்த விவசாயமும் செய்யமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு இரண்டு போகம் விவசாயம் செய்துவந்த விவசாயிகள் தற்போது ஒரு போகம் விவசாயம்தான் செய்கிறார்கள்.

"வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகளின் மெத்தனத்தால் பலர் விவசாயத்தை கை விடும்நிலையில் உள்ளனர்' என்கிறார்கள் விவசாயிகள் வருத்தத்துடன்.

nkn211224
இதையும் படியுங்கள்
Subscribe