Advertisment

அரசு வேளையில் வஞ்சிக்கப்படும் மருந்தாளுநர்கள்! -மினி கிளினிக் பணி நியமன குழப்பம்!

miniclinic

கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்த டிசம்பர் மாதம் 15 தேதி முதல் தமிழக முழுவதும் 2000 மினி கிளி னிக்குகள் தொடங்கப்படும். அவற்றில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், மற்றும் ஒரு உதவியாளர் நியமிக்கப்படுவார்கள்'' என்று முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரோ ""மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர் என ஒவ்வொரு சிறு சிகிச்சையகத்திற்கும் பணி நியமனம் செய்யப்படுவார்கள்'' என்று அறிவித்தார். ஆனால் தற்போது மருந்தாளுநர்களை மட்டுமே நியமன பட்டியலில் சேர்க்காமல் தமிழக அரசு மேற்கொள்ளும் பணி நிய மனம் சர்ச்சையாகியுள்ளது.

Advertisment

mini-clinic

தமிழகம் முழுவதும் 2,266 மருத்துமனைகளில் 913 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் பொது சுகாதரத்துறையின் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஊரக நலத்துறை மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ. மருத்துவ மனைகள் அனைத்திலும் காலி பணியிடங்கள் உள்ளன.

மருத்துவ சட்ட விதி என்ன சொல்லுகிறது. வெளி நோயாளி, 100

கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்த டிசம்பர் மாதம் 15 தேதி முதல் தமிழக முழுவதும் 2000 மினி கிளி னிக்குகள் தொடங்கப்படும். அவற்றில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், மற்றும் ஒரு உதவியாளர் நியமிக்கப்படுவார்கள்'' என்று முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரோ ""மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர் என ஒவ்வொரு சிறு சிகிச்சையகத்திற்கும் பணி நியமனம் செய்யப்படுவார்கள்'' என்று அறிவித்தார். ஆனால் தற்போது மருந்தாளுநர்களை மட்டுமே நியமன பட்டியலில் சேர்க்காமல் தமிழக அரசு மேற்கொள்ளும் பணி நிய மனம் சர்ச்சையாகியுள்ளது.

Advertisment

mini-clinic

தமிழகம் முழுவதும் 2,266 மருத்துமனைகளில் 913 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் பொது சுகாதரத்துறையின் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஊரக நலத்துறை மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ. மருத்துவ மனைகள் அனைத்திலும் காலி பணியிடங்கள் உள்ளன.

மருத்துவ சட்ட விதி என்ன சொல்லுகிறது. வெளி நோயாளி, 100 நோயாளிகளுக்கு 1 மருந் தாளுநர், உள்நோயாளிகளுக்கு, 70 நோயாளி களுக்கு 1 மருந்தாளுநர் நியமிக்க வேண்டும். ஆனால் இங்கு அதன் அடிப்படையில் எங்குமே இருப்பதில்லை, தமிழகத்தின் முக்கிய பகுதியான சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 20 காலி பணியிடங்கள் உள்ளது. அதேபோல ராஜீவ்காந்தி மருத்துவ மனையிலும் 18 காலி பணியிடங்கள் உள்ளது.

Advertisment

மருத்துவர்கள் குறைந்தபட்சமாக 125 பேர் பணிபுரியும் இடத்தில் ஒரு டாக்டருக்கு 10 பேஷண்ட் என்று வைத்துக்கொண்டால் கூட 1,250 பேஷண்ட்கள் வருவார்கள். இவர்கள் அனைவருக்கும் சேர்த்து மூன்று பேர்தான் மருந்து கொடுக்கும் நிலையில், இதனாலே மருத்துமனையில் மருந்து வாங்கும் இடத்தில் மட்டுமே மற்ற இடத்தைக் காட்டிலும் அதிகமான கூட்டம் நிற்பதை நம்மால் பார்க்கமுடியும். மருத்துவர்கள் உள்ளே செல்லும் பாதையை அடைத்துக்கொண்டு நிற்கும் காட்சி மருத்துவமனைக்கு சென்றவர்களுக்கு தெரியவரும்.

miniclinic

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்னை, திருநெல்வேலி, புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, என ஒரே மருந்தாளர் மூன்று மருத்துவ நிலையங்களுக்கு நாள் கணக்கில் மாறி மாறிச்செல்லும் அவலம் இன்னும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இந்த காரணத்தால் மருந்தாளு நர்கள் இல்லாதுபோகும் சூழ்நிலையில்தான் மருத்துமனையில் அடிமட்ட பணியாளர்களை வைத்து மாத்திரை வழங்கும் அவலமும் நடக்க காரணமாக உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வருகின்ற பொதுமக்கள் நிலை கேட்கவே வேண்டாம்.

மருந்தாளுநர் சங்கத்தின் மூலமாக பல கோரிக்கைகளை முன்வைத்து மாவட்டம் முழுவதும் மனுக்கள் வழங்கி வருகின்றனர். அதில் ஏற்கனவே காலியாகவுள்ள 913 காலி பணியிடங்கள் நிரப்பவேண்டும். மேலும் புதிதாக கொண்டுவந் துள்ள 2000 மினி கிளினிக்களுக்கும் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். அரசாணை 82ஐ ரத்து செய்ததை கைவிடுமாறும். மீண்டும் 9-4 மணி நேர வரையிலான பணியை நடை முறைப்படுத்துமாறும் வலியுறுத்துகின்றனர். மேலும், 110 தாலுகா மற்றும் தாலுகா அல்லாத மருத்துமனைகளில் தலைமை மருந்தாளுநர் பணி இடம் உருவாக்கிட வேண்டும் எனப் பல கோரிக்கைகளை முன்வைத்து மனுக்களை வழங்கி வருகின்றனர்.

இது தொடர்பாக பேசிய சங்க தலைவர் சுப்பிரமணி, ""ஆறு வருடங்களாக இத்துறையில் பணி நியமனம் என்பதே கிடையாது. தற்போது உள்ள காலி பணியிடத்தையும், மேலும் புதிதாக தொடங்கவுள்ள மினி கிளினிக்கிலும் மருந்தாளுநர் களை நியமனம் செய்ய வேண்டும். ddஇது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர், இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், மருத்துவ கல்வி இயக்குநர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரிடமும் மனுக்களை கொடுத்துள்ளோம். இதனை பரிந்துரை செய்து முதல்வர் வெளியிட்ட அறிக்கையை மாற்றி அதில் மருந்தாளுநர்களை இணைத்து மீண்டும் அறிக்கை வெளியிடுவார் என்ற நம்பிக்கையோடு நாங்கள் காத்துக் கிடக்கிறோம்'' என்றார். மருத்துவ பணியாளர் தேர்வு ddவாரியத்தின் தலைவர் ராஜசேகரை கேட்டபோது... ""பார்மஸிக்குள்ளே, டி.பார்ம் (மருந்தியல் பட்டயப் படிப்புக்கு கொடுப்பதுபோலவே, பி.பார்ம் (இளங்கலை மருந்தியல்) படித்தவர்களுக்கும் பணி வழங்கக் கோரி தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளதால். இவர்களுக்கான காலி இடத்தை அறிவிக்க முடியாது'' என்றார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டபோது, ""நான் அறிவித்தது உண்மைதான். ஆனால் அதனைத் தாண்டி விசாரித்தபோது "வழக்கு நிலுவையில் உள்ளதால் தற்போது ஒன்றும் செய்யமுடியாது' என்று எம்.ஆர்.பி. தெறிவித்துள்ளது. இதேபோல ஒரு வழக்கு ஜம்மு காஷ்மீரிலும் நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில், "இரண்டு வகை படிப்பும் ஒருசேரவே இருப்பதால் இதனை அரசே முடிவுசெய்யலாம்' என தீர்ப்பு அளித் துள்ளது. இங்கும் அப்படி ஒரு தீர்ப்பு வந்தால் நிச்சயம் மருந்தாளு நர்களை தமிழக அரசு நியமனம் செய்யும்'' என்றார்.

மருத்துவத்துறையில் மருந்தாளுநர்களின் பணி மிக முக்கியப்பங்கு வகிக்கும் நிலையில்... அவர்களின் பணி நியமனத்தில் விளையாடுவது நோயாளிகளின் உடலுடன் நடத்தும் உயிர் விளையாட்டாக மாறிவிடும்.

-அ.அருண்பாண்டியன்

படம்: ஸ்டாலின்

nkn091220
இதையும் படியுங்கள்
Subscribe