ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல்நிலையம் சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் இயங்கிவருகிறது. இந்த சிப்காட் காவல்நிலையத்திலிருந்து 3 கி.மீ தூரத்தி லுள்ள பெல் நிறுவனத்தின் விருந்தினர்கள் குடியிருப்பில் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தங்கியிருக்கிறார். பிப்ரவரி 2-ஆம் தேதி நள்ளிரவு திடீரென சிப்காட் காவல்நிலையத் தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அது பார்வையாளர்கள் அமரும் பகுதியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. உள்ளிருந்து ஓடிவந்த காவலர்கள் தீயை அணைத்துள்ளனர்.

Advertisment

ss

அங்கிருந்து இருவர் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு செல்வதைப் பார்த்துள்ளனர். காவல்நிலையத்தின் வெளியே இருந்த சில கேமராக்கள் ஒர்க்காகவில்லை. வேறொரு கேமராவின் சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்த போது, ஒரு பைக்கில் இரண்டு இளைஞர்கள் வருவதும் அவர்கள் காவல்நிலைய சுற்றுச் சுவருக்கு வெளியே தங்களது பைக்கை விட்டுவிட்டு காவல்நிலையத்தை நோக்கி நடந்துவருவதும், கறுப்பு முகமுடி அணிந்து கொண்டு வருகைதந்த மர்ம நபர்கள் காவல்நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு திரும்பி ஓடுவதும் பதிவாகியுள்ளது.

இந்த முயற்சியில் சேதாரம் பெரிதாக ஏற்படவில்லை. இந்தத் தகவலை நள்ளிரவில் உயரதிகாரிகளுக்கு சொன்னதும் அதிர்ச்சியாகி விட்டனர். உடனே எஸ்.பி. விவேகானந்தா சுக்லா காவல்நிலையத்துக்கு வந்து ஆய்வுசெய்து விசா ரணை நடத்தினார். குற்றவாளி களைப் பிடிக்க ஏழு தனிப் படைகள் அமைக்கப்பட்டன. காவல்நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள், எதிரே மார்க்கெட் பகுதியில் ஒரு அரிசிக் கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசிவிட்டுச் சென்றது தெரிந்து, பழிவாங்கும் நோக்கம் என உறுதிசெய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

Advertisment

ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் வசிப்பவன் ரவுடி தமிழரசன். இவன்மீது ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங் களில் கொலை வழக்குகள் உட்பட 7 வழக்குகள் உள்ளன. சில தினங்களுக்கு முன்பு இந்திரா நகரில் வசிக்கும் திவாகர் வீட்டின்மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளான். அவர் என்ன காரணத்தாலோ புகார் தரவில்லை. ஆனால் இதுபற்றி ரவுடிகளைக் கண்காணிக்கும் ஓ.சி.ஐ.யூ. போலீஸார் மேலிடத்துக்கு நோட் போட்டதன் அடிப்படையில் உயரதிகாரிகள் சிப்காட் இன்ஸ்பெக்டர் சசிகுமாருக்கு உத்தரவிட, வழக்குப் பதிவுசெய்து ரவுடி தமிழரசனுக்கு நெருக்கமான இரண்டு இளைஞர்களை காவல்நிலையம் அழைத்துவந்து தமிழரசன் குறித்து விசாரணை நடத்தினார்கள்.

ss

அவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவுசெய்த வர்கள், ரிமாண்ட் செய்யாமல் பிப்ரவரி 2-ஆம் தேதி இரவு வீட்டுக்குப் போய்விட்டு மறுநாள் காலை வரவேண்டும் எனச்சொல்லி அனுப்பிவைத்துள்ளனர். அவர்கள் வீட்டுக்குச் சென்ற இரண்டு மணிநேர இடைவெளியில் நள்ளிரவு 12 மணியளவில் காவல்நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு காரணம் இவன் கும்பலாகத்தான் இருக்கும் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் ரவுடி தமிழரசனின் குடும்பத்தினர், உறவினர்கள் உட்பட அவனது நண்பர்கள் 10 பேரை நள்ளிரவே காவல்நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். இதில் தமிழரசனின் மகன் ஹரி கிடைக்கவில்லை. அவன் சிப்காட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்துகொண்டு, தன் தந்தை பெயரைச்சொல்லி குட்டி ரவுடியாக ராணிப்பேட்டை நகரில் வலம்வந்துள்ளான். அவன்மீது இரண்டு வழக்குகள் உள்ளன. இதனால் ஹரியை தேடத் துவங்கினர்.

சென்னையில் பதுங்கியிருப்பதாக தகவல்தெரிந்து ஹரி, அவனது நண்பர்கள் பரத், விஷால் ஆகியோரை இன்ஸ்பெக்டர் சசிகுமார் டீம் கைதுசெய்தது. இவர்களை ராணிப் பேட்டை கொண்டுவரும் வழியில் வாணிய சத்திரம் பகுதியில் சிறுநீர் வருவதாகச் சொல்லி வண்டியைவிட்டு கீழே இறங்கியவன், எஸ்.ஐ. முத்தீஸ்வரன், எஸ்.எஸ்.ஐ. கண்ணன் ஆகியோரை மறைத்துவைத்திருந்த கத்தியால் குத்தியதாகவும், இதில் முத்தீஸ்வரன் கைகளில் காயம்பட்டதாகவும், இதனால் அதிர்ச்சியான இன்ஸ்பெக்டர் சசிகுமார் பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கியால் ஹரியைச் சுட்டுள்ளார். முதல் ரவுண்டு மிஸ் பயர் ஆகிவிட்டதாகவும், இரண்டாவது ரவுண்ட் சுட்டதில் ஹரியின் வலது கால் முட்டியில் குண்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. உடனே வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்து சிகிச்சைக்காக சேர்த்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பெட்ரோல் குண்டுவீசியதாக பரத், விஷால் ஆகியோரை காவல்நிலையம் கொண்டுவந்து வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ரவுடி தமிழரசன், இளம் சிறார்களை வைத்து ராணிப்பேட்டை, வாலாஜா, சிப்காட் பகுதியில் இளைஞர்கள், தொழிலாளர்களிடம் கஞ்சா விற்பது, வியாபாரிகளிடம், கம்பெனி களிடம் மாமூல் வசூலிப்பது என இருந்துள் ளான். மாமூல் தராதவர்களின் கடைகள்மீது தாக்குதல் நடத்துவதற்கு, மிரட்டுவதற்கு சிறார்களைப் பயன்படுத்தியுள்ளான். அந்த இளைஞர்களை வழிநடத்த தன் மகன் ஹரியைப் பயன்படுத்தியுள்ளான் தமிழரசன். இதனால் குட்டி ரவுடியாக ஹரி வலம்வந்துள்ளான். தமிழரசனைப் பிடிக்க போலீஸார் தேடிய போது, “எங்கப்பாவையே கைது செய்ய முயற்சிக்கிறீங்களா?''’என காவல்நிலையத்தின் மீது வெடிகுண்டு வீசியதாக அவன் தெரிவித்த தாகக் கூறப்படுகிறது.

ரவுடி தமிழரசனைப் பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டிவருகின்றனர். அவன் சிக்கி, மேலிடம் உத்தரவு தந்தால், காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டுவீசியதற்கு ‘பதில்’ தரப்படும் என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.