டெல்டாவில் மீண்டும் பெட்ரோ கெமிக்கல் ஆலைகள்! போராட்டக் களத்தில் விவசாயிகள்!

dd

தொடர் மழையால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறார்கள் காவிரி டெல்டா விவசாயிகள். அவர்களை மேலும் நெருக்கடிக்குள் ளாக்கியிருக்கிறது தமிழக அரசின் சிறுகுறு நடுத்தர தொழில் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பின் அறிக்கை.

நாகை மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் அடங்கிய தொகுப்பை உருவாக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என அறிவித்து அதற்காக ரூ 50 லட்சம் நிதியையும் தமிழக அரசு ஒதுக்கியதால், விவசாயிகள் கொந்தளிப்படைந்து போராட்டத்திற்கு ஆயத்தமாகியுள்ளனர்.

delta

"டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க துடித்த பா.ஜ.க. அரசின் கோரப்பிடியிலிருந்து தங்களது மண் பாதுகாக்கப்பட்டுவிட்டது என்கிற மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்த எங்களின் தலையில் இடிவிழுந்ததுபோல அமைந்திருக்கிறது தமிழக அரசின் இந்த அறிவிப்பு'' என்கிறார்கள் விவசாய சங்கத்தினர்.

"காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகத்தின் சார்பில் பூமிக்கடியிலிருந்து அரைநூற்றாண்டு காலமாக எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கின்றனர். இதனால் குறுக்கும் நெடுக்குமாக நரம்பு மண்டலங் களைப்போல இருந்த ஆறுகள், வாய்க்கால்கள் நாசமாக்கப்பட்டு எரிவாயு கடத்திச்செல்லும் குழாய்களே செல்கின்றன. தினசரி ஏதாவது ஒரு விவசாயியின் வயலில் எரிவாயு குழாய் உடைந்து நிலத்தை நாசமாக்குவதே வாடிக்கையாக இருக்கிறது. இதற்கிடையில் எரிவாயுவோடு சேர்த்து மீத்தேன் மற்றும் ஷெல் எரிவாயு எடுக்கவும் மத்திய அரசு அனுமதி கொடுத்தது.

delta

ஏற்கனவே எண்ணெய்க் கிணறுகளால் நிலத்தடி நீர்வளமும், சுற்றுச்சூழலும், விவசாயமும் வெகுவாக பாதிக்கப்பட்டுவிட்டது, இதற்கு மேலும் அனுமதிக்கக்கூடாது என காவிரி ட

தொடர் மழையால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறார்கள் காவிரி டெல்டா விவசாயிகள். அவர்களை மேலும் நெருக்கடிக்குள் ளாக்கியிருக்கிறது தமிழக அரசின் சிறுகுறு நடுத்தர தொழில் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பின் அறிக்கை.

நாகை மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் அடங்கிய தொகுப்பை உருவாக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என அறிவித்து அதற்காக ரூ 50 லட்சம் நிதியையும் தமிழக அரசு ஒதுக்கியதால், விவசாயிகள் கொந்தளிப்படைந்து போராட்டத்திற்கு ஆயத்தமாகியுள்ளனர்.

delta

"டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க துடித்த பா.ஜ.க. அரசின் கோரப்பிடியிலிருந்து தங்களது மண் பாதுகாக்கப்பட்டுவிட்டது என்கிற மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்த எங்களின் தலையில் இடிவிழுந்ததுபோல அமைந்திருக்கிறது தமிழக அரசின் இந்த அறிவிப்பு'' என்கிறார்கள் விவசாய சங்கத்தினர்.

"காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகத்தின் சார்பில் பூமிக்கடியிலிருந்து அரைநூற்றாண்டு காலமாக எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கின்றனர். இதனால் குறுக்கும் நெடுக்குமாக நரம்பு மண்டலங் களைப்போல இருந்த ஆறுகள், வாய்க்கால்கள் நாசமாக்கப்பட்டு எரிவாயு கடத்திச்செல்லும் குழாய்களே செல்கின்றன. தினசரி ஏதாவது ஒரு விவசாயியின் வயலில் எரிவாயு குழாய் உடைந்து நிலத்தை நாசமாக்குவதே வாடிக்கையாக இருக்கிறது. இதற்கிடையில் எரிவாயுவோடு சேர்த்து மீத்தேன் மற்றும் ஷெல் எரிவாயு எடுக்கவும் மத்திய அரசு அனுமதி கொடுத்தது.

delta

ஏற்கனவே எண்ணெய்க் கிணறுகளால் நிலத்தடி நீர்வளமும், சுற்றுச்சூழலும், விவசாயமும் வெகுவாக பாதிக்கப்பட்டுவிட்டது, இதற்கு மேலும் அனுமதிக்கக்கூடாது என காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறி விக்கவேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையோடு விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும், தி.மு.க. உள் ளிட்ட அரசியல் கட்சிகளும் தொடர்ந்து போராடி னர். நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் ஆண்டுக்கணக்கில் போராட்டங் களை நடத்தி இன்றுவரை வழக்கிற்காக நீதிமன்றம் செல்லும் அவலம் இருக்கிறது. அந்த போராட்டங் களில் இன்றைய தமிழக முதல்வரும், தி.மு.க.வினரும் கலந்துகொண்டதோடு, பல இடங்களில் போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. அரசு, டெல்டா பகுதியை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியது. ஆட்சி மாறிவிட்டது…. இனி தங்கள் பகுதியில் புதிய எண்ணெய்க் கிணறுகளும், அது தொடர்பான தொழிற்சாலைகளும் வராது என தி.மு.க. அரசின் மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையிலிருந்த சூழலில், இந்த அறிவிப்பு எங்களது நம்பிக்கையை சீர்குலைத்துவிட்டது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கண்ணை இமை காப்பதுபோல விவசாயிகளுக்கு என்றும் பாது காப்பாக இருப்பேன் என்று உறுதியளித்தார். அந்த வார்த்தையைக் காப்பாற்ற அறிவிப்பை திரும்பப் பெறவேண்டும்'' என்கிறார்கள் கண்ணீருடன்.

இதுகுறித்து நாகை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவரும், நாகை நகரச் செய லாளருமான தங்க. கதிரவன் கூறுகையில், "நரிமணம் பகுதியிலுள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் லிமிடெட் சுத்திகரிப்பு ஆலையால் திருமரு கல் ஒன்றியத்தின் பெரும்பாலான பகுதிகள் விவசா யம் செய்யமுடியாமலும், குடிநீர் இல்லாத நிலைக் கும் போய்விட்டது. அந்த நிறுவனத்தை விரிவாக் கம் செய்வதற்காக ஏற்கனவே ரகசிய உத்தரவு பிறப் பிக்கப்பட்டு, விவசாயிகளின் கருத்துக்களையோ, அனுமதியோ பெறாமல் சுமார் 600 ஏக்கருக்கு மேலான நிலங்களைக் கையகப்படுத்தியுள்ளனர்.

delta

இந்த நிலையில் ஆலையைச் சுற்றிலும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்ய உத்தரவிட்டுள்ளனர். இதுவும் அமைந்தால் இந்த பகுதி நிச்சயமாக பெட்ரோலிய ரசாயன மண்டலமாகவே ஆகிவிடும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதன் பயன் விவசாயிகளுக்கு கிடைக்காமல் விவசாயம் முற்றிலுமாக அழிந்துவிடும். காவிரி டெல்டா பகுதியில் பெட்ரோகெமிக்கல் மண்டலம் உருவாக்கும் முயற்சியை தி.மு.க. அரசு கைவிடவேண்டும்'' என்கிறார்.

இதற்கிடையில் நரிமணம் பகுதியில் ஆய்வு செய்துவிட்டு போராட்டத்தை அறிவித்திருக்கும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியனோ, "காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மீத்தேன் திட்டத்திற்கு 2011-ஆம் ஆண்டு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி லிமிடெட் என்கிற தனியார் நிறு வனத்தோடு அன்று துணை முதல்வராக இருந்த இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இத்திட்டம் பேரழிவை ஏற்படுத்தும் என்பதால் இதனை எதிர்த்து 10 ஆண்டுகாலம் தொடர்ந்து விவசாயி களும், பொதுமக்களும் தங்களை முழுமையாக அர்ப்பணித்து போராடினோம், பல்வேறு இழப்பு களை சந்தித்தோம். ஆய்வுக்குத்தான் கையொப்பம் இட்டோம், பேரழிவு ஏற்படுத்தும் அந்த திட்டத்தை எதிர்க்கிறோம் என தி.மு.க.வினரும் எங்களோடு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பத்தாண்டு கால தொடர் போராட்டத்தால் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கை எரிவாயு எடுக்கிற பணிகளிலிருந்து ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களை வெளியேற்றிவிட்டு காவிரிப் படுகையை வேளாண் மண்டலமாக அறிவித்தது அ.தி.மு.க. அரசு.

இந்தச் சூழலில் திருமருகல் ஒன்றியத்தின் பெரும்பகுதியான கிராமங்களை உள்ளடக்கி பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த அறிவிப்பால் ஐம்பதாயிரம் குடும்பங்கள் வீடுகள், விளைநிலங்களை இழந்து அகதிகளாக வெளியேற நேரிடும். இதனை மனதில்கொண்டு தமிழக முதல்வர் அறிவிப்பை திரும்பப் பெறவேண்டும், இல்லையென்றால் வரும் நவம்பர் 16-ஆம் தேதி ஆட்சியரகத்தில் உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்குவோம்'' என்றார்.

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெய ராமன் கூறுகையில், "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பகுதியில் பெட்ரோ கெமிக்கல் தொழில் முயற்சிகளை மேற்கொள்வது என்பதே வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டத்துக்கு எதிரானது. அந்த சட்டத்தை செயலிழக்கச் செய்யக்கூடிய முயற்சியாகும். தமிழக அரசு வேளாண்மையைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டுமே யொழிய, குலைக்க முயற்சிக்கக்கூடாது. தமிழக அரசின் அறிவிப்பு மிகுந்த வேதனையளிக்கிறது.

நரிமணம், பணகுடியில் அமைந்துள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சி.பி.சி.எல்.) எனப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, ஆண்டுதோறும் ஒரு மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெயை சுத்திகரிப்பு செய்துவருகிறது. அதனாலேயே அப்பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளாகிவிட்டது. இந்த நிலையில் அதை விரிவாக்கம் செய்து ஆண்டுதோறும் 9 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் அளவுக்குத் திறனுயர்த்தும் பணிகளைத் தொடங்கி, அதற்காக 600 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலம் கையகப்படுத்தும் பணிகள் நடக்கிறது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் திறனை உயர்த்த 35,000 கோடியில் வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. 42 மாதங்களில் இந்தப் பணிகள் முடிவடையும் என அங்குள்ள அதிகாரிகளே கூறுகின்றனர்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலம் சட்டத்தின் முன்வரைவு சட்டமன்றத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டபோது பிரிவு 4 உட்பிரிவு 2 (க்ஷ) கீழ் கட்டமைப்புத் திட்டங்களால் துறைமுகம், குழாய்கள், சாலை, தொலைதொடர்பு, எரிசக்தி, குடிநீர் வழங்கல் மற்றும் இதர பயன்பாட்டுக்கான திட்டங்களை இச்சட்டம் கட்டுப்படுத்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல், காஸ் ஆகியவை வராது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று அன்று தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக அவையிலிருந்த இன்றைய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வியெழுப்பினார்.

மேலும், வேளாண் மண்டலத்தை பாதிக்கக்கூடிய பெட்ரோ கெமிக்கல் தொழிற் சாலைகள் அங்கு வருவதை எந்த வகையில் இந்த சட்டம் தடுக்கும் என்றும் கேள்வியெழுப்பினார். அந்த கேள்வி விவசாயிகளுக்கும், வேளாண்மை யைப் பாதுகாக்க விரும்பும் எங்களைப் போன்ற செயல்பாட்டாளர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அதனை நம்பியே வாக்களித்து தி.மு.க. வெற்றியும் பெற்றது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வது வேதனையாக இருக்கிறது'' என்கிறார்.

காவிரி டெல்டா விவசாயிகளைக் கோபத்துக் குள்ளாக்கியிருக்கும் இந்தத் திட்டம் குறித்து முதல்வரும், துறை அமைச்சரும் உரிய விளக்கமளித்து, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே டெல்டாவின் எதிர்பார்ப்பாக உள்ளது.

nkn161121
இதையும் படியுங்கள்
Subscribe