சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரிலிருந்து தெற்கே ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சிறுவாச்சூர். இங்கு பிரசித்திபெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலிலிருந்து மேற்கே மூன்று கிலோமீட்டர் தூரத்தில், பசுமை நிறைந்த கிழக்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில், காவல் தெய்வமாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெரியசாமி செங்கமல ஐயா, செல்லியம்மன், கன்னிமார்கள் ஆகிய சாமிகளும்... இவர்களுக்கான குதிரை, புலி, வேட்டை நாய் காவல்காரன் போன்ற சிலைகளும், பார்ப்பவரை மிரளவைக்கும் அளவில் அமைக்கப்பட்டிருந்தன.

vv

இந்த சிலைகள் சுடுமண்ணால் செய்யப்பட்டவை. காலப்போக்கில் இவை சிதிலமடைந்தன. இதையடுத்து, சிறுவாச்சூர் கிராம மக்களும் பக்தர்களும் இணைந்து, கடந்த 2015-ல், புதுச்சேரி வில்லியனூர் சுடுமண் சிற்பி முனுசாமி தலைமையிலான குழுவினரைக் கொண்டு, அவற்றைப் புதுப்பித்து, குடமுழுக்கு விழாவும் நடத்தப்பட்டது.

சிலை உடைப்பு குறித்து துயரத்தோடு பேசும் சிறுவாச்சூர் கிராம மக்கள்...

Advertisment

"பண்ருட்டி அருகேயுள்ள சேமக்கோட்டை அய்யனார் கோயில் வளாகத்தில், ஒரு சுடுமண் குதிரை சிலை சிதிலமடைந்த நிலையில் உள்ளது. அந்த சிலைதான் ஆசியாவிலேயே உயரமான சுடுமண் சிலையாகும். அதை முறியடித்து, அதைவிட உயரமான சுடுமண் சிலைகளாக பிரமிக்க வைக்கும் அளவிற்கு இந்த சிலைகள் நிறுவப் பட்டிருந்தன. அப்படிப்பட்ட இந்த சிலைகளை ஒரு வக்கிரக் கும்பல் அண்மையில் உடைத்தெறிந்துள்ளது'' என்கிறார்கள் சிறுவாச்சூர் கிராம மக்கள்.

இது எப்படி நடந்தது? என்று கோயில் பூசாரிகள் தரப்பில் கேட்டபோது...

"கடந்த 4-ஆம் தேதி மாலை பூஜைகளை முடித்துவிட்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டோம். ஆறாம் தேதி காலை, அமாவாசை தினத்தன்று பூஜை செய்வதற்காக அங்கே சென்று பார்த்தபோது, எங்களுக்குப் பெரும் அதிர்ச்சி. சாமி சிலைகளும் அதன் வாகனங்களும் உடைத் தெறியப்பட்டு மூலைக்கு ஒன்றாகச் சிதறிக்கிடந்த காட்சி பெரும் வேதனையை ஏற்படுத்தியது. உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தோம். இந்த நேரத்தில், ஊருக்கு அருகேயுள்ள பெரியாண்டவர் கோயில், முருகன் கோயில் ஆகியவற்றில் இருந்த கற்சிலைகளும் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது''’என்கிறார்கள் பதட்டமாய்.

Advertisment

vv

இந்த சூழலில், ஆறாம் தேதி முன்னிரவு நேரத்தில், திருவாச்சூர் சித்தர் கோயிலருகே மர்ம மனிதன் நடமாட்டம் இருந்துள்ளது. சந்தேக மடைந்த சித்தர் கோவில் நிர்வாகி தாடி ராஜா, பொதுமக்கள் உதவியுடன் அந்த மனிதனைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து தாடிராஜா நம்மிடம், "பிடிபட்ட நபர், போலீசார் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். சென்னையைச் சேர்ந்த தெலுங்கு பிராமணர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று அவர் கூறியுள்ளார். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த விஷயத்தில் காவல்துறையின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். சிலைகள் உடைக்கப்பட்ட மலைக்கோயிலின் பாதுகாப்புக்கென, காவலர்களை நியமனம் செய்துள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால் யாரும் அங்கு காவல் இருந்ததாகத் தெரியவில்லை. அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும். உடைக்கப்பட்ட சிலைகளை மீண்டும் புனரமைப்பு செய்ய அரசும், அறநிலையத்துறையும் விரைவாக நடவடிக்கையில் இறங்கவேண்டும்''’என்கிறார்.

பிடிபட்ட நபர் போலீஸ் விசாரணையின் போது, தனது பெயர் நடராஜன் என்கிற நாதன் என்றும், தெலுங்கு பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்றும், சிலைகளை பெயர்த்தெடுத்து விட்டு, அவற்றின் அடியிலிருக்கும் எந்திர தகடுகளை எடுத்ததாகவும், இந்த vvஎந்திரத் தகடுகள் அதிக சக்தி வாய்ந்தவை என்றும், அது நம் கையில் இருந்தால் எந்த காரி யத்திலும் வெற்றிபெற லாம் என்றும் கூறிய தாகச் சொல்கிறார்கள். அவரது மனநலம் குறித்து மருத்துவரீதியாக சோதித்துவிட்டு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத் துள்ளது போலீஸ்.

இதுகுறித்து அற நிலையத்துறை செயல் அலுவலர் அருண்பாண்டியனிடம் கேட்டபோது, “"இது வருத்தமான சம்பவம். சேதமான சிலை களைப் புனரமைப்பது சம்பந்தமாக உயரதிகாரி களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அரசு சிற்பி இங்கு பார்வையிட வர இருக்கிறார். அவர் பார்வையிட்ட பிறகு இதுகுறித்து அறிக்கை அனுப்பப்பட்டு புனரமைப்பது சம்பந்தமாக அரசு நடவடிக்கை எடுக்கும்''’என்கிறார் அக்கறையாக.

பெரம்பலூர் டி.எஸ்.பி. செந்தில்குமாரோ, "இது சம்பந்தமாக ஒருவரை கைது செய்துள்ளோம். அவரிடமிருந்து சாமி சிலைகளின் அடியில் வைக்கப்படும் காசு, தகடு போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவை ஆய்வுக்கு அனுப்பப் பட்டுள்ளன. இதில் வேறு யாராவது சம்பந்தப் பட்டிருக்கிறார்களா என்ற கோணத்திலும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்''’என்கிறார்.

சிறுவாச்சூர் கோயில் சிலைகள் உடைக்கப்பட்ட இரண்டு தினங்களுக்கு பிறகு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கஞ்சனூர் அய்யனார் கோயிலிலும், நரசிங்கனூர் அய்யனாரப்பன் கோவிலிலுள்ள அய்யனார் பூரணி பொற்கலை சிலைகள் உடைத்து சேதப்படுத்தப் பட்டுள்ளன.

ஆதாய நோக்கிலோ, வேறெந்தக் காரணத்தாலோ சிலைகளை உடைப்பதாக எண்ணி, மக்களின் மனதை புண்படுத்துபவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் சிறுவாச்சூர் மக்கள்.