பெருமாள் சிலை! லாபம் பார்க்கும் அரசு அதிகாரிகள்!

perumal

கேரளாவில் சபரிமலை ஐயப்பன், ஆந்திராவில் திருப்பதி, சென்னையில் ஆதிபராசக்தி என பிரபலமான கோவில்களை நோக்கி இந்தியா முழுவதில் இருந்தும் பக்தர்கள் படையெடுக்கின்றனர். இதில் கணிசமான வருமானத்தையும் அந்தந்த மாநில அரசுகள் ஈட்டுகின்றன. இதே வருமானத்தைக் கருத்தில் கொண்டு கர்நாடக மாநிலத்திலும் அப்படியொரு புகழ்பெற்ற கோவிலை நிறுவ முடிவுசெய்தார் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் சதானந்தா.

perumal

அதன்படி, பெங்களூருவில் ஈஜிபுரா பகுதியில் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பெருமாள் கோவிலில், ஒரே கல்லால் ஆன 108 மீட்டர் உயரம், 11 முகங்கள், 22 கைகளைக் கொண்டிருக்கும் விஸ்வரூப மகாவிஷ்ணு சிலையையும், ஏழு தலைகளைக் கொண்ட ஆதிசேஷ நாகசிலையையும் நிறுவ தீர்மானித்தார். ஆனால், அவ்வளவு பெரிய கல்லை எங்குதேடியும் கிடைக்கவில்லை. பின்னர் செயற்கைக்கோள் மூலம் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் ஒரு குன்றைக் கண்டுபிடித்து, 2014ஆம் ஆண்டிலேயே மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் அதை வெட்டியெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

perumal

ஒரு

ஒருவழியாக கல்லை வெட்டியெடுத்து, பாதியளவு சிலையாக செதுக்கி 170 மற்றும் 96 டயர்களைக் கொண்ட கார்கோ லாரிகள் மூலம் வந்தவாசி, வேலூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு செல்ல திட்டமிட்டனர். ஆனால், சிலையின் எடை தடையாக இருந்ததால் 390 டன் எடை 300-ஆகக் குறைக்கப்பட்டது. அதேசமயம், வந்தவாசியில் இருந்து பெங்களூரு வரை குறுகலான பாதைகள், மேம்பாலங்கள், பொதுமக்களின் வீடுகள், கடைகள் மற்றும் அரசு கட்டடங்களுக்கு கட்டாயம் சேதம் ஏற்படும். இதைக் கணக்கில்கொண்டே கல்லாக இல்லாமல், பாதி வடித்த சிலையாக எடுத்துச்சென்றால் மக்களின் பயபக்தியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற முடிவையும் எடுத்திருக்கின்றனர். ஒருபுறம் சேதங்களுக்கு இழப்பீடு கொடுத்தாலும், அதை சிலையில் மாட்டியிருக்கும் உண்டியல் பணம் மூலம் ஈடுசெய்கின்றனர். கர்நாடகத்திற்காக திட்டமிட்டுவிட்டு, வசூலை தமிழகத்தில் இருந்தே தொடங்கிவிட்டனர்.

perumal

பெங்களூரு வரையிலான 380 கி.மீ. இடைவெளியை, ஒவ்வொரு இரவும் பத்து கி.மீ. வீதம் இந்த லாரி கடக்கிறது. இடையிடையே ஏற்படும் தடைகளால் சிலை பெங்களூரு சென்று, முழுவடிவம் பெறவே இரண்டாண்டுகள் பிடிக்குமாம். அதுபோக, நாகத்திற்கான கல்லை வெட்டியெடுத்து அதையும் இதே பாணியில் எடுத்துச்செல்ல இருக்கிறார்களாம். மருத்துவர் சதானந்தா கர்நாடக பா.ஜ.க.வைச் சேர்ந்தவர். இதன்மூலம், இங்குள்ள இந்து மக்கள் கட்சி, இந்து மக்கள் முன்னணி ஆகியோரின் உதவியோடே சிலை நகர்த்தும் பணிகள் நடக்கின்றன.

இதற்கிடையில், சிலையால் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இடையூறு குறித்து நடவடிக்கை எடுக்காததால், சிலையைக் கொண்டுசெல்ல தடைவிதிக்கக்கோரி வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வுமுன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிலையைக் கொண்டுசெல்ல பல்வேறு நிபந்தனைகளை விதித்து, பிப்.04 வரை செல்லத்தக்க அரசாணை பிறப்பித்திருப்பதாக அரசுத்தரப்பு தெரிவித்தது. மனுவுக்கு ஆதரவாக ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அரசாணையில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கனிமவளத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையையும் நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

சிலையை எடுத்துச்செல்ல தடைவிதித்துள்ள நிலையில், ஊத்தங்கரை பாம்பாறு அணையின் மேம்பாலத்தில் செல்லமுடியாமல், ஆற்றில் மணலைக் கொட்டி ஜன.20ஆம் தேதி இரவு லாரி கடந்திருக்கிறது. இதையடுத்து வரும் ஊத்தங்கரை நான்குவழிச் சாலையில் சேலம் -சென்னை -பெங்களூர் -திருவண்ணாமலை சாலையில் இருக்கும் அண்ணாசிலை ரவுண்டானாவையும் தடையாக இருப்பதாகக் கூறி அனுமதியின்றி இடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர்.

இதுபற்றி ஊத்தங்கரை தி.மு.க. நகரச் செயலாளர் பாபு சிவகுமார் நம்மிடம், “""எங்களைத் தடுத்து நிறுத்துவதிலேயே காவல்துறை குறியாக இருக்கிறது. "சிலைக்கு பாதிப்பிருக்காது; சுற்றியிருக்கும் பகுதிகளைக் கட்டிக் கொடுத்துவிடுவோம்' என்கின்றனர். ஒட்டுமொத்த அதிகாரிகளும் அவர்களின் பக்கம்தான் இருக்கின்றனர்’என்றார். அண்ணா சிலை அகற்றப்படுவதை எதிர்த்து வி.சி.க. மா.செ. கனியமுதன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய கனியமுதன், “""ஒருவரின் தேவைக்காக நீதிமன்றத் தடையையும் மீறி ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலின்பேரில் அனைவரின் வாழ்வாதாரங்களையும், அரசு சொத்துகளையும் நொறுக்குகின்றனர். அதிகாரிகளுக்கு தேவையானது கைமாறி விட்டதால் கண்டுகொள்வதில்லை. சாதாரண எஸ்.எஸ்.ஐ. தேவன் என்பவருக்கே ரூ.5 லட்சம் கைமாறியிருக்கிறது என்றால் மற்றவர்களுக்கான தொகை எவ்வளவு இருக்கும்''’என ஆவேசம் காட்டினார்.

ஊத்தங்கரை சாலை ஏ.டி. அசோகன், ஜெ.இ.டி.இ. உத்தமன் என அனைவரும் இதற்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்கின்றனர். அப்படியென்றால் எதை வைத்து பாதுகாப்பு தருகிறீர்கள் என்று ஆய்வாளர் ராமமூர்த்தியிடம் கேட்டதற்கு, ""பாதுகாப்பு கொடுக்கச் சொன்னார்கள்; செய்கிறேன். பணம் வாங்கியதாக சொல்வது பொய்யான தகவல்'' என்று மறுத்தார்.

மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகரோ, ""என்னிடம் எந்த அனுமதியும் வாங்கவில்லை. ரவுண்டானா இடிப்பது பற்றியும் தெரியவில்லை. நீதிமன்ற தடையை மீறியிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றார்.

பெருமாளிடமே வசூல்செய்து வயிறு வளர்க்கும் அதிகாரிகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

-அ.அருண்பாண்டியன்

nkn300119
இதையும் படியுங்கள்
Subscribe