Skip to main content

ஆவின் நியமனத்தில் ஆள் மாறட்டம்! -அம்பலப்படுத்திய நக்கீரன்!

மிழக அரசின் ஆவின் நிறுவனத் தேர்வில் நடந்த முறைகேடுகளை "பணம் தந்தால் ஆவின் போஸ்டிங்! -ஆடியோ ஆதாரம்'’என்ற தலைப்பில் கடந்த 2018, ஜூன் –20-22 நக்கீரனில் முதலில் அம்பலப்படுத்தினோம். ஒட்டுமொத்த புகார்களையும் ஆதாரங்களையும் அப்போதே ஆவின் நிர்வாக இயக்குநர் காமராஜ் ஐ.ஏ.எஸ். கவனத்துக்கு கொண்டுசென்றபோது, "விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன்'’என்றார். ஆனால், எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால் ஆள்மாறாட்டம், போலிச்சான்றிதழ் உள்ளிட்ட ஊழல் முறைகேடுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன என்பதை மேலும் ஆதாரத்துடன் சொல்லி அதிர்ச்சியூட்டுகிறார்கள்.

aavin


காஞ்சிபுரம் -திருவள்ளூர் ஒன்றிய ஆவின் எஸ்.எஃப்.ஏ. (நங்ய்ண்ர்ழ் எஹஸ்ரீற்ர்ழ்ஹ் ஆள்ள்ண்ள்ற்ஹய்ற்) பணிக்கான எழுத்துத்தேர்வில் முறைகேடு நடந்திருக்கிறது. தேர்வு நடத்துவதற்கு முன்பே ஒரு போஸ்டிங்குக்கு 5 லட்சத்திலிருந்து 7 லட்சம்வரை பேரம் பேசி ஆட்களை தேர்வு செய்துவிட்டார்கள். சென்னை -அம்பத்தூரைச் சேர்ந்த பத்மஜா என்ற பெண்ணிடம் காஞ்சிபுரம் ஆவின் முன்னாள் சேர்மன் வேளஞ்சேரி சந்திரனின் எடுபுடி கணேஷ், எஸ்.எஃப்.ஏ. போஸ்டிங்கிற்காக மூன்றரை லட்சம் பணம் வாங்கியதற்கான ஆடியோ ஆதாரம். குறிப்பாக, சி.ஆர்.பி.எஃப். பள்ளியில் படித்து தமிழே தெரியாத செந்தில் என்ற தேர்வர் 85 கேள்விகளில் 75 கேள்விகளுக்கு தமிழில் விடையளிக்க வாய்ப்பே இல்லை. திருநாவுக்கரசு என்ற தேர்வருக்கு ஹால் சூப்பர்வைஸராக இருந்த டாக்டர் உமாசங்கரே (மேலாளர் திட்டம் மற்றும் விற்பனைப்பிரிவு –பொறுப்பு) விடைகளைச் சொல்லிக்கொடுத்திருக்கிறார் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டிருந்தோம். ஆனால், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழே தெரியாத செந்தில், சூப்பர்வைஸரின் உதவியுடன் தேர்வு எழுதிய திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை தேர்வு செய்திருக்கிறது ஆவின் நிர்வாகம்.

aavinஇதுகுறித்து, நம்மிடம் பேசும் ஆவின் பணியாளர்களோ, ""தமிழ்நாடு முழுக்க உள்ள 650 பேர் எழுதிய தேர்வில் எஸ்.எஃப்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 18 பேரில் பெரும்பாலானவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். குறிப்பாக, முன்னாள் சேர்மன் வேளஞ்சேரி சந்திரனின் ஊர்க்காரர்கள்; உறவுக்காரர்கள்தான். இதில் ஆள்மாறாட்டமும் நடந்துள்ளது. அதாவது, 19 பணியிடங்களில் 1 போஸ்டிங் எஸ்.சி. அருந்ததியினருக்கு ஒதுக்கப்படவேண்டும். திருவள்ளூர் மாவட்டம் (வரிசை எண்: 5008) எஸ்.சி. அருந்ததியின வகுப்பைச்சேர்ந்த ஜி. தீபாவும் எஸ்.எஃப்.ஏ. தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். ஆனால், லஞ்ச பேரத்தில் ஏற்பட்ட சிக்கலால் சென்னை ஜாஃபர்கான்பேட்டையைச் சேர்ந்த அதே இனிஷியலைக்கொண்ட (வரிசை எண்: 5412) தீபாவுக்கு அந்த இடத்தை நிரப்பி பணி ஆணை வழங்கிவிட்டார்கள். இது, விஜிலென்ஸ் விசாரணையிலும் தெரியவந்துள்ளது''’என்றவர்கள், முன்னாள் சேர்மன் சந்திரனின் தங்கை மகன் போலிச்சான்றிதழ்கள் கொடுத்து வேலைக்கு சேர்ந்ததையும் அவரது ஊழல் முறைகேடுகளையும் ஆதாரத்துடன் விவரிக்கிறார்கள்.

முன்னாள் சேர்மன் சந்திரனின் தங்கை மகன் கே.ஜே. பிரித்திவிராஜ் வேலூரிலுள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் படித்ததாக போலிச் சான்றிதழ் கொடுத்து 2015-ஆம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். அத்துடன் 40 சதவீதம் மாற்றுத்திறனாளி என்று திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் யோகேந்திராவிடம் போலியாக சான்றிதழ் பெற்று முன்னுரிமை அடிப்படையில் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இந்த முறைகேடு குறித்து, முன்னாள் சேர்மன் சந்திரனோடு நிர்வாக மேலாளர் செல்வராஜ், பொதுமேலாளராக இருந்த ஏ.ஆர். நடராஜனும் விசாரிக்கப்படவேண்டும்.

aavinசென்னை சி.ஐ.டி. காலனியில் ஆவின் ஒன்றியத்துக்கு சொந்தமான இடத்தை சட்டத்துக்கு புறம்பாக பயன்படுத்திக்கொண்டார் முன்னாள் சேர்மன். அதுமட்டுமல்ல, அங்கிருந்த விலையுயர்ந்த சேர், தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி, வாட்டர் ஃபில்டர், வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட பல லட்ச மதிப்புள்ள பொருட்களையும் எடுத்துச் சென்றிருக்கிறார் என்பதை ஆய்வுசெய்து பொதுமேலாளருக்கு கடந்த ஆகஸ்ட் 9-ந்தேதி பட்டியலிட்ட புகாராகவே கொடுத்திருக்கிறார் மேலாளர் எஸ்.ஆர். பெருமாள். வேலைக்கு ஆள் சேர்ப்பதிலிருந்து எல்லாவற்றிலும் லஞ்சம், முறைகேடு என ஈடுபட்டு திருத்தணியில் பல லட்சம் மதிப்புள்ள வீடு, மாந்தோப்பு, திருப்பூரில் பின்னலாடை கம்பெனி, பெட்ரோல் பங்க் என சொத்துக்களை வாங்கிக் குவித்துவரும் முன்னாள் சேர்மன் சந்திரன் மீண்டும் காஞ்சிபுரம் ஆவின் ஒன்றிய தேர்தலில் நிற்கப்போகிறார். ஆனால், இவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை''’என்கிறார்கள்.

இதுகுறித்து, முன்னாள் சேர்மன் வேளஞ்சேரி சந்திரனை தொடர்புகொண்டபோது, ""ஒரு ஃபங்ஷனில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்''’’என்றவர் லைனில் வரவில்லை.

போலிச்சான்றிதழ் குறித்து, தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மைய இயக்குநர் ஜோதி நிர்மலா ஐ.ஏ.எஸ்.ஸின் கவனத்துக்கு கொண்டுசென்றபோது, “""பிரித்திவிராஜ் கொடுத்தது போலிச்சான்றிதழ்தான். சம்பந்தப்பட்ட ஸ்ரீ வெங்டேஸ்வரா ஐ.டி.ஐ. (வேலூர்) மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் அதிரடியாக. ஆவின் முறைகேடுகள் குறித்து, காஞ்சிபுரம் ஒன்றியம் ஜி.எம். முருகாநிதி மற்றும் ஆவின் எம்.டி. காமராஜ் ஐ.ஏ.எஸ். ஆகியோர் கவனத்துக்கு கொண்டுசென்றபோது, ""விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்''’’என்றார்கள் உறுதியாக.

பணிக்கான தேர்வு… போஸ்டிங் போடுவதில் ஆரம்பித்து போலிச்சான்றிதழ்,… ஆள்மாறாட்டம் என விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கின்றன ஆவின் நிர்வாக ஊழல்கள்.

-மனோசௌந்தர்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்