திருநெல்வேலி டவுண் பகுதியிலிருப்பவர் தி.மு.க.வின் எஸ்.டி.நாதன். 1966-களி லிருந்தே தி.மு.க.வின் முழுநேரத் தொண்டனாகக் கட்சிப் பணிகளை மேற்கொண்டு தி.மு.க.வையே சுவாசமாகக் கொண்டவர்.
சுமார் 58 ஆண்டுகளாக தி.மு.க. என்னும் ஆலமர இயக்கத்தோடு பயணித்தவர், கட்சிக் கூட்டங் களுக்காகவே தன் சொத்துக்களை செலவழித்து, தற்போது 80 வயதில் முதுமையும், நோய்மையுமாக, இத்துப்போன வாடகை வீட்டில் காலம்தள்ளுகிறார் எஸ்.டி.நாதன். நெல்லை டவுணிலிருக்கும் அந்த வீட்டில் அவரைச் சந்தித்தோம். அறை முழுக்க தி.மு.க. தலைவர்களின் படங்கள். கட்சியோடு அவரது பயணம் பற்றிக் கேட்டோம்.
"நாங்குநேரிப் பக்கமுள்ள வலியநேரி கிராமத்தைச் சுற்றியுள்ள 13 கிராமங்களுக்கு நாலு தலை முறைகளுக்கு முன்னமே 13 கிராமங்களின் பண்ணை யாராக இருந்த சங்கர நாராயண பிள்ளையின் வாரிசுப் பரம்பரையில் வந்தவர்கள் எங்க குடும் பம். ஏராளமான நில புலங்கள் பண்ணைக்குச் சொந்தம். காலப்போக்குல தண்ணிப்பஞ்சமானப்ப, எங்க நி
திருநெல்வேலி டவுண் பகுதியிலிருப்பவர் தி.மு.க.வின் எஸ்.டி.நாதன். 1966-களி லிருந்தே தி.மு.க.வின் முழுநேரத் தொண்டனாகக் கட்சிப் பணிகளை மேற்கொண்டு தி.மு.க.வையே சுவாசமாகக் கொண்டவர்.
சுமார் 58 ஆண்டுகளாக தி.மு.க. என்னும் ஆலமர இயக்கத்தோடு பயணித்தவர், கட்சிக் கூட்டங் களுக்காகவே தன் சொத்துக்களை செலவழித்து, தற்போது 80 வயதில் முதுமையும், நோய்மையுமாக, இத்துப்போன வாடகை வீட்டில் காலம்தள்ளுகிறார் எஸ்.டி.நாதன். நெல்லை டவுணிலிருக்கும் அந்த வீட்டில் அவரைச் சந்தித்தோம். அறை முழுக்க தி.மு.க. தலைவர்களின் படங்கள். கட்சியோடு அவரது பயணம் பற்றிக் கேட்டோம்.
"நாங்குநேரிப் பக்கமுள்ள வலியநேரி கிராமத்தைச் சுற்றியுள்ள 13 கிராமங்களுக்கு நாலு தலை முறைகளுக்கு முன்னமே 13 கிராமங்களின் பண்ணை யாராக இருந்த சங்கர நாராயண பிள்ளையின் வாரிசுப் பரம்பரையில் வந்தவர்கள் எங்க குடும் பம். ஏராளமான நில புலங்கள் பண்ணைக்குச் சொந்தம். காலப்போக்குல தண்ணிப்பஞ்சமானப்ப, எங்க நிலங்களிலிருந்த அடப்பகாரவுக அதை அவுக வசமாக்கிட்டாக. மிச்சமிருந்த நிலத்தை வித்துட்டு, 1966ல குடும்பத்தோட திருநெல் வேலிக்கு இடம்பெயர்ந்து டவுண் பகுதிக்கு வந்திட் டோம்யா.
1966-லேயே தி.மு.க.வுக்கு வந்திட்டேன். அப்ப தூத்துக்குடி ஒருங் கிணைஞ்ச நெல்லை மாவட்ட செயலாளரா சங்கரநாராயயண வீரபாகு இருந்தாக. தி.மு.க.வுல முழு நேரத் தொண்டனா யிட்டேன். அப்பல்லாம் கட்சியோட பேச்சாளர வரவச்சு தெருக்கள்ல பொதுக்கூட்டம் போடு வோம். அதுக்கு நோட்டீஸ் அச்சடிச்சு வீடு வீடாக் குடுப்போம். அதுக்கெல் லாமே என்னோட செலவுதான். சில நேரங் கள்ல பெரிய கூட்டம்னா கட்சிக்கொடிய ஏந்திக்கிட்டு உண்டியல் குலுக்கி கட்சிக்காரவுக வசூல் பண்ணுவோம். கட்சியை இந்த நெல்லை மண்ல வளத்தோம்யா. எனக்கு கட்சிப் பொறுப்புலாம் கிடையாது. ஆனா ரொம்பத் தீவிரமா வேல பாப்போம்யா.
கட்சியோட முரசொலி பேப்பர் வந்ததும் தலைவர் கலைஞர் எழுதின செய்திய டீக் கடைல உக்காந்திட்டு கூடவுள்ள கட்சிக் காரவுக கிட்ட பெருமையா படிப்பேன். அப்ப மாவட்ட செயலாளர் நீலநாராயணன். அந்நேரம் தலைவர் அண்ணா முதன்முதலா ராஜ்ய சபா எம்.பி.யாகி டெல்லிக்கு போகயிருந்தப்ப, அண்ணாவ வழியனுப்ப சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு லாம் போனோம். கட்சியோட ஆர்ப்பாட்டம், போராட்டம்னா, கட்சிக்காரவுகளைலாம் திரட்டிக் கொண்டாந்திருவேம். அவுகளுக்கான செலவுகள நானே செஞ்சிடுவேன்.
1980ல இலங்கைப் பிரச்சினை பெரிசா யிருச்சி. தலைவர் கலைஞர் தலைமைல காஞ்சிபுரத்தில பெரிய போராட்டம். காஞ்சிபுரத்தில் நடந்த அந்தப் போராட்டத்தில நா, சிலரோட போயி கலந்துக் கிட்டேன். அந்தப் போராட்டத்துல தலைவரோட கலந்துக்கிட்ட நாங்கள்லாம் கைது செய்யப் பட்டோம். சென்னை சென்ட்ரல் ஜெயில்ல தலைவரோட நாங் கள்லாம் 15 நாளு ஜெயில்லயிருந் தோம்யா.
2011ல சமச்சீர் கல்விக்கு எதிராக தீர்ப்பு வந்து பரபரப்பாச்சு. அப்ப நெல்லைல எக்ஸ் எம்.எல்.ஏ. மாலைராஜா தலைமைல பெரிய போராட்டம். எங்களயெல்லாம் புடிச்சி ஜெயில்ல போட்டாக. மொழிப்போர் போராட்டத்தலாம் பெரிய அளவில் பண்ணோம்யா. அத மாதிரி மக்களுக்கான எந்த போராட்டத்தை கட்சி அறிவிச்சாலும் அத சிறப்பா, பெருசா நடத்துவோம்யா.
ஐயா பேராசியர் அன்பழகன் எம்மேல பாசமா அன்பாயிருப்பாக. நெல்லைக்கு வாறப்பல்லாம் நா போய்ப் பாத்துடுவேன். எந்தோள்ல கை போட்டு பேசுவாக. அப்ப பேராசிரியர் அமைச்சர். சர்க்யூட் ஹவுசை விட்டுக் கார்ல கௌம்பிட்டாக. நா அஞ்சு நிமிஷம் லேட்டு. எனக்காகக் காத்திருந்து என்னயப் பாத்துட்டுத் தான் கௌம்புனாக அப்படி ஒரு பாசம் அய்யாவுக்கு.
அப்பக்காலத்தில ரெண்டுநாள் இளைஞரணி மாநாடு. தலைவர் ஸ்டாலின் வந்திருந்தாக. ஸ்டாலினய்யாவ வரவேற்று ரெண்டு நாளும் பேப்பர்ல பெருசா விளம்பரம்லாம் குடுத்து சிறப்பு பண்ணேன். தாழையூத்து பங்களாவுல ஸ்டாலினய்யா தங்கியிருந்தப்ப போய் பாத்தோம். ரொம்ப சந்தோசப்பட்டாக.
1986ல கலைஞரய்யாவ கோபாலபுரத்தில போய்ப் பாத்தோம். அப்ப தலைவர்ட்ட, ஐயா, கட்சியில எனக்குப் பதவி குடுங்கய்யான்னு கேட்டப்ப, கட்சியில நீ, தீவிரமான ஆளாச் சேப்பா. நா இருக்குறப்ப உனக்கு எதுக்குய்யா பதவின்னு அன்போட சொன்னாக. வைகோ தி.மு.க.வ விட்டுப் போனப்ப, நாங்கல்லாம் நமக்குத் தலைவர் கலைஞர்தான்னு அவுக பக் கம் ஸ்டெடியா நின்னோம். 57 வருஷம் கட்சிப்பணி ஓடிட்டிருக்கு... கையில எதுவுமேயில்ல'' என்றவரின் தொண்டை அடைத்தது. கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்தவர், "கொஞ்சகாலமா உடல் நோவால சிரமம். 80 வயசு தாண்டுது. கண் பார்வை கெட்டுப்போச்சு. ஆபரேஷன் பண்ணனும். பேச்சும் கொளறுது. என்னோட நெலமயச் சொல்லி உதவின்னு கேட்கக் கூச்சமாயிருக்கு. எம் மனைவி மகமாயி ஆஸ்த்துமா நோயால சிரமப்படுறா. இப்பவரைக்கும் சொந்தவீடு கூட கெடையாது'' என்றார்.
நாதனின் ஒரே மகளான சங்கரகோமதி எம்.காம், படித்தவர். சங்கரகோமதி, சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் ரோட்டோரக் கடைபோட்டு பிழைப்பை ஓட்டுகிறாராம். வானளவு மரம் ஓங்கி உயர்ந்து நிற்பதற்காக மண்ணுக்குள் போராடுகிற சல்லி வேர்கள்தான் நாதன் போன்றோர். அந்த சல்லி வேர்கள் வாடவே கூடாது.
-ப.இராம்குமார்