ஒயின் குடிச்சா கலராகலாம்! மாணவிகளை போதையாக்கியவர் கைது!

stt

ரூர் -சேலம் பழைய சாலையில், எப்போதுமே பரபரப்பாக இருக்கும் சர்ச் கார்னர் பகுதியில், கடந்த 11ஆம் தேதி மாலை நேரத்தில் பள்ளிச்சீருடை அணிந்த மாணவிகள் இருவர் வாந்தி யெடுத்து அரைமயக்கத்தில் தள்ளாடியபடி இருந்திருக்கின்ற னர். இதனைக் கண்டு பதட்ட மான பயணிகள் சிலர் அருகில் சென்று பார்க்க, அம்மாணவிகள் மது போதையில் இருப்பதுகண்டு அதிர்ச்சியானார்கள். உடனடி யாக அவசர போலீஸ் எண் 100க்கு அழைத்து விபரத்தைக் கூறவே, வேனில் வந்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அந்

ரூர் -சேலம் பழைய சாலையில், எப்போதுமே பரபரப்பாக இருக்கும் சர்ச் கார்னர் பகுதியில், கடந்த 11ஆம் தேதி மாலை நேரத்தில் பள்ளிச்சீருடை அணிந்த மாணவிகள் இருவர் வாந்தி யெடுத்து அரைமயக்கத்தில் தள்ளாடியபடி இருந்திருக்கின்ற னர். இதனைக் கண்டு பதட்ட மான பயணிகள் சிலர் அருகில் சென்று பார்க்க, அம்மாணவிகள் மது போதையில் இருப்பதுகண்டு அதிர்ச்சியானார்கள். உடனடி யாக அவசர போலீஸ் எண் 100க்கு அழைத்து விபரத்தைக் கூறவே, வேனில் வந்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அந்த மாணவிகளை பாது காப்பாக அழைத்துச்சென்றனர்.

ss

மாணவிகளிடம் நடத்திய விசாரணையில், பசுபதிபாளை யத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் ஆசை வார்த்தை கூறி மாணவிகளை மது அருந்த வைத்தது தெரியவர, அவரை கைது செய்தனர். இதுகுறித்து கரூர் மாவட்ட காவல்துறை யினரிடம் விசாரித்ததில், "11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த நிலையில், சிறப்புத் தேர்வு எழுதுவதற்காக பசுபதிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு 3 மாணவிகள் வந்திருக்கின்றனர். அந்த மூவரில் ஒருவர் தினேஷை காதலித்து வந்திருக்கிறார். தனது காதலியைப் பார்க்க அங்கு வந்த தினேஷ், அவர்கள் அனைவரையும் தனது வீட்டிற்கு மதிய உணவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். வீட்டில் பெற்றோர் இல்லாத நிலையில், ‘"சரக்கு அடிச்சுக் கிட்டே சாப்பிட்டா நல்லா யிருக்கும். ரெட் ஒயின் போதையெல்லாம் இல்ல, அதைச் சாப்பிட்டா நல்லா கலரா, சிவப்பா மாறிடுவீங்க' என் றெல்லாம் ஆசை வார்த்தைகளைக் கூறி, ரெட் ஒயினோடு பீரைக் கலந்து கொடுத் திருக்கிறார்.

அதைக் குடித்த அந்த மாணவிகளுக்கு தலைச்சுற்றல் ஏற்படவே, உட னடியாக பசுபதி பாளையத்திலிருந்து பஸ் பிடித்து சர்ச் கார்னர் பகுதிக்கு வந்தபோதுதான் அரை மயக்கத்தில் காவல் துறையால் மீட்கப்பட்ட னர்''’என்றனர். போதை எந்த ரூபத்தில் இருந்தா லும் உடலுக்கு கேடு என் பதை இளைய சமுதாயத் தினர் உணர வேண்டும்.

________

நீட் பயத்தால் தொடரும் தற்கொலை!

ரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டியை அடுத்த கொள்ளு தின்னிப்பட்டியில் வசிக்கும் சேகரின் மகள் ப்ரீத்திஸ்ரீ. கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த அவருக்கு கால்நடை மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தும் அதில் சேராமல், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்காக இந்த ஆண்டு நீட் தேர்வெழுத வேங்கம்பாடியிலுள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து, திரும்பவும் நீட் தேர்வு எழுதினார். தேர்வு ரிசல்ட் வரவுள்ள நிலையில், 'இந்த ஆண்டும் குறைவான மார்க் எடுத்தால் டாக்டராக முடியாமல் போய் விடுமே!' என்று வேதனைப்பட்டுவந்த அவர், கடந்த 11ஆம் தேதி மாலை, பாட்டி வீட்டினுள் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

nkn170822
இதையும் படியுங்கள்
Subscribe