பெரியார் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார் என்கிற பரப்புரை பயணத்தில், ஒரு வார காலத்தில் 500 கூட்டங்களை நடத்தி, இறுதியாக மயிலாடுதுறையில் மாநாடாக நடத்தி, பாசிச கும்பல்களை பதற வைத்திருக்கின்றனர் திராவிடர் விடுதலைக் கழகத்தினர்.
மயிலாடுதுறை சின்னக்கடைவீதியில் நடந்த மாநாட்டில் கோவன் தலைமையிலான கலை நிகழ்ச்சிகளும், மந்திரம் இல்லை.. தந்திரம் இல்லை என்கிற அறிவியல் விளக்க நிகழ்ச்சிகளும், பெரியார் ஏன் எதிரிகளை பதறவைக்கிறார் என்பதை புரியவைப்பதாக அமைந்தது. மாநாட்டில் பூம்புகார் தி.மு.க. எம்.எல்.ஏ. நிவேதாமுருகன், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமார், வி.சி.க. மாவட்ட செயலாளர் மோகன்குமார் என பலரும், பெரியார் குறித்தும் இன்றைய திராவிட மாடல் அரசு குறித்தும் பேசினர்.
மாநாட்டில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் ஒன்றிய ஆட்சியின் திணிப்புகள், மறுப்புகளுக்கு எதிராகக் கருத்தியல் போராட்டம் நடத்திவருகிறது. நாடாளுமன்றத்தில
பெரியார் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார் என்கிற பரப்புரை பயணத்தில், ஒரு வார காலத்தில் 500 கூட்டங்களை நடத்தி, இறுதியாக மயிலாடுதுறையில் மாநாடாக நடத்தி, பாசிச கும்பல்களை பதற வைத்திருக்கின்றனர் திராவிடர் விடுதலைக் கழகத்தினர்.
மயிலாடுதுறை சின்னக்கடைவீதியில் நடந்த மாநாட்டில் கோவன் தலைமையிலான கலை நிகழ்ச்சிகளும், மந்திரம் இல்லை.. தந்திரம் இல்லை என்கிற அறிவியல் விளக்க நிகழ்ச்சிகளும், பெரியார் ஏன் எதிரிகளை பதறவைக்கிறார் என்பதை புரியவைப்பதாக அமைந்தது. மாநாட்டில் பூம்புகார் தி.மு.க. எம்.எல்.ஏ. நிவேதாமுருகன், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமார், வி.சி.க. மாவட்ட செயலாளர் மோகன்குமார் என பலரும், பெரியார் குறித்தும் இன்றைய திராவிட மாடல் அரசு குறித்தும் பேசினர்.
மாநாட்டில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் ஒன்றிய ஆட்சியின் திணிப்புகள், மறுப்புகளுக்கு எதிராகக் கருத்தியல் போராட்டம் நடத்திவருகிறது. நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வின் மெஜாரிட்டி எண்ணிக்கையைக் குறைத்து மைனாரிட்டி நிலைக்கு தள்ளியதால், நய வஞ்சகத்தோடு தமிழ்நாட்டு மக்களின் நிதி உரிமை களைப் பறிப்பதோடு, ஆளும் கட்சிக்கு கடுமையான அரசியல் நெருக்கடிகளை பா.ஜ.க. ஒன்றிய அரசு உருவாக்கிவரும் நிலையில், நம் முதல்வரின் மாநில உரிமைப் போராட்டங்களைப் பாராட்டி, வரவேற் கிறோமென்று தீர்மானங்களைக் கொண்டுவந்தனர்.
மாநாட்டில் பேசிய தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. குத்தாலம் கல்யாணம், "பெரியார் இறுதி மூச்சுவரை பேசிய பேச்சுக்களையெல்லாம் ஒரு டேப் ரெக்கார்டரில் போட்டுவிட்டால், இரண்டு வருடம் 5 மாதம் 11 நாட்கள் ஓடும் என்கிறார்கள். பெரியாரை ஒதுக்கிவிட்டு இனி டெல்லியிலும்கூட யாரும் அரசியல் நடத்த முடியாது'' என்றார்.
திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த குமரன், "சாதியின் பெயரால் உடம்பை வளர்க்கிற வன், மதத்தின் பெயரால் பிடுங்கித் திங்கிறவன், திரள்நிதித் திருடன், தமிழ் தேசியம் என்கிற பெய ரில் இந்த சமூகத்தை கூறுபோட நினைப்பவர்கள் தான், பெரியாரை எதிரியாகப் பார்க்கிறார்கள். தமிழ் தேசியம் என்றால் டெல்லி ஆதிக்கத்திற்கு எதிராக இருப்பதுதான். பெரியார்தான் முதலில் டெல்லி ஆதிக்கத்திற்கு எதிராக நின்றார். தமிழ்நாடு தமிழருக்கே என்றார். தனி தமிழ்நாடு வேண்டு மென்று சாகும்வரை உறுதியாகப் பேசினார். அவர் தமிழர் இல்லன்னா, வேறு யார் தமிழர்?
பாசிச மோடி அரசு, பல்வேறு இன்னல் களைக் கொடுத்து திராவிடமாடல் அரசை அப் புறப்படுத்தத் துடிக்கிறது. நம்முடைய தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின், நீ நிதியெல்லாம் தர வேண்டாம், உனக்கு அடிபணிய முடியாது எனத் துணிந்து பதிலடி கொடுத்துள்ளார். இதுதான் நமக்கான வாய்ப்பு, அவ ரது கரங்களை வலு வாக்குவோம், எதிரி களை இனி பதற்றத்திலேயே வைப்போம்'' என்றார்.
தமிழ் மண் தன்னுரிமை இயங் கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் பேசுகையில், "இந்த பரப்புரையையும், மாநாட்டையும் ஏதோ பெரியாரின் கொள்கையைப் பரப்புவதற்காக முன்னெடுக்கப்பட்டதாக நான் கருதவில்லை. ஒரு போர் வருகிறது என்றால் ஆயுதங்கள் தயார் செய்யப்படும், அரண்கள் பலப்படுத்தப்படும், அந்த வகையில்தான் ஆரிய பார்ப்பனியத்துக்கு எதிரான இறுதிப் போருக்கு இப்போது தமிழ்நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது என்று கருதுகிறேன். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நாம் அந்த போரை நடத்தித்தான் ஆகவேண்டும். நமக்கு வலிமையான அரண் இருக்கிறது. அதுதான் பெரியார் எனும் அரண். அந்த அரணைக் கண்டுதான் பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவார் கும்பல் பதறுகிறது. 2152 கோடி என்ன, நீங்க பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் நாங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார். அந்த முதல்வருக்குள்ளேயும் பெரியார் அரணாக இருக்கிறார்'' என்றார் அதிரடியாக.
இறுதியாகப் பேசிய கொளத்தூர் மணி, "தமிழர்களுக்கு விழிப்புணர்வூட்டி, எட்டாக்கனி யாக இருந்த கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை உருவாக்கியவர் பெரியார். எல்லாவற்றுக்கும் மேலாக சுயமரியாதை சிந்தனையை தமிழர்களுக்கு கடத்தியவர் தந்தை பெரியார். ஆனால் இன்றைக்கு பெரியாரைக் கொச்சைப்படுத்த, ஆரியத்தின் கைக்கூலிகளாக ஒரு கூட்டம் தமிழ் தேசியத்தின் பெயரால் கிளம்பியிருக்கிறது.
சாதி இழிவை தமிழர்கள் மீது திணித்த பார்ப்பனர்களை சமத்துவம் போதித்தவர்கள் என்று நா கூசாமல் பேசுகிறது அந்த கூட்டம். பெயருக்கு பின்னால் சாதிப் பட்டத்தை தமிழ்நாடு மட்டும் விட்டொழித்துள்ளது. அதற்கு காரணமான பெரியாரைப் பார்த்து சாதியவாதி என பழிக்கிறது. தமிழ்நாடு என்றொரு மாநிலத்தையே இல்லாமல் செய்யத் துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் சதித்திட்டங்களைப் பற்றி பேசமாட்டார்கள். பெரியாரைக் கடித்துக் குதறி அவர் மீது தமிழர்கள் கொண்டிருக்கிற பிம்பத்தை உடைத்துவிடலாம் என்று அவர்கள் கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. இனிமேல், பெரியார் யார், திராவிடம் என்றால் என்ன என்பதை வீதிக்கு வீதி நாம் கொண்டுசெல்ல வேண்டிய கடமைக்கு வந்திருக்கிறோம். அதை இனி துவங்குவோம்'' என்று பேசிமுடித்தார்.