ங்களது ஆதிக்கத் திற்கும், மதவாதத்திற்கும் எதிராக யார் வந்தாலும் அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி உயிர், உடைமைச் சேதத்தை ஏற்படுத்துவது வடமாநிலங்களிலுள்ள சங்கிகளின் அன்றாட செயல்களில் ஒன்று! அதுபோன்று திராவிட மண்ணான தமிழ்நாட்டிலும் கொலைவெறித் தாக்குதலை நடத்தி அன்றாட வாழ்க்கையைச் சிதைத்துள்ளனர் கோவை மாவட்டத்திலுள்ள இந்து முன்னணியினர்!

Advertisment

dd

காரமடை கன்னார்பாளை யம் நால்ரோடு பகுதியில் புதனன்று திறக்கப்படவிருந்த தந்தை பெரியார் உணவகத்தைத் திறக்கக்கூடாதென, உணவக உரிமையாளரின் சிமெண்ட் கடையை அடித்துநொறுக்கியதோடு, அங்கிருந்த ஊழியரின் மகன் அருணை கொலைவெறியோடு தாக்கிவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர் இந்து முன்னணியினர். தற்பொழுது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர் இத்தாக்குதலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர்.

"ஏற்கனவே சிமெண்ட் கடை நடத்திவந்த நிலையில் அருகிலிருந்த கடையையும் எடுத்து அதில் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் மதியம், இரவு உணவகத்தை திறக்க முடிவுசெய்து 15 நாட்களுக்கு முன்பே பெயர்ப் பலகையை மாட்டியிருந்தோம். புதன்கிழமை திறப்புவிழா என நாள் குறிக்கப்பட்டு அதற்கான முன்வேலைகள் நடந்துவந்தன. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மேல் இருக்கும். சிமெண்ட் கடையில் வேலைபார்க்கும் பெண் ஊழியர், ‘"அக்கா.! இங்க வந்து வீடியோ எடுத்து தகராறு செய்யுறாங்க. கேட்டால் இந்து முன்னணி அமைப்பு’ என்கிறார்கள்' என எனக்கு தகவல்கூறிய நிலையில் வெளியிலிருந்த நான் வேகமாக கடைக்குத் திரும்பி என்ன? ஏதுன்னு? விசாரிக்கையில் ‘"இந்த ஊர் இந்து முன்னணியின் கோட்டை. இங்கே பெரியார் பெயரில் உணவகம் வைக்கிறாயா? இது என்னடி தந்தை பெரியார் உணவகம்னு பெயர் வைச்சிருக்க! நீ என்ன பெரியார் பெண்டாட்டியா?'’ என கேள்வி கேட்டதோடு காதுகூசும் அளவிற்கு கெட்ட வார்த்தைகளைப் பேசினார்கள். இந்த வேளையில் அங்கிருந்த என்னுடைய மகன், ‘"என்னுடைய அம்மாவை எப்படி பேசலாம்?'’ எனக் கேட்க, அவன்மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தினர் அங்கிருந்த 15 நபர்கள். போதாக்குறைக்கு அங்கிருந்த டேபிள், கண்ணாடி என அத்தனை பொருட்களையும் உடைத்து அட்ராசிட்டி செய்து நகர்ந்தனர்'' என்றார் பெண் ஊழியரான நாகராணி.

dd

கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான அருண் அருகிலுள்ள மருத்துவமனையில் அட்மிட்டான நிலையில், தாக்குதலில் அவரது வலது கை சுண்டுவிரல் சிதைந் துள்ளதாகவும், 36 தையல்கள் போடப்பட்டதாகவும் அறிவித்தது மருத்துவமனை. தகவலறிந்த காவல்துறை, கடை யின் உரிமையாளர் பிரபாகரனிடம் புகார் வாங்கி அவசர அவசரமாக இந்து முன்னணி அமைப்பினைச் சார்ந்த ரவி பாரதி, சுனில், சரவணகுமார், விஜயகுமார் மற்றும் பிரபு உள் ளிட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைதுசெய்தது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளரான கு.ராமகிருஷ் ணன், "தந்தை பெரியார் எனும் பெயர் சங்கிகளை அலற விட்டுள்ளதை இதன் மூலம் அறியலாம். தந்தை பெரியார் உணவகம் எனும் பெயரில் உணவு மட்டும் அங்கு கொடுக்கவில்லை. பெரியார் உணர்வையும் கொடுக்கின்றார் கள் என்கின்ற எண்ணம் சங்கிகளுக்கு இருந்திருக்க வேண்டும். இது சங்கிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. வடநாட்டில் ஆடும் வன்முறை வெறியாட்டத்தை இங்கும் நிகழ்த்தியுள்ளனர் சங்கிகள். இது பெரியார் மண். அதுவும் திராவிட மாடல் ஆட்சி நடைபெறும் மாநிலம். இங்கு அவர்களது மதவாதம் எடுபடாது. இதனை முளையிலேயே கிள்ளி எறியவேண்டியது அரசின் கடமை'' என்றார் அவர்.

பெரியார் பெயரில் சமத்துவபுரம் கண்ட தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகளைக் களைவதே எதிர்கால நிம்மதிக்கு வழி வகுக்கும்.

படங்கள்: விவேக்