பெரியார் படம்! மிரட்டிய பா.ஜ.க.! சாதித்த சார்பதிவாளர்!

dd

ரோடு மாவட் டம் கோபிசெட்டி பாளையத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக பணிபுரிபவர் தமிழ்ச் செல்வி. திராவிடர் கழக மூத்த நிர்வாகியான கோபிசெட்டிபாளையம் சீனிவாசன் என்பவரின் மகள். தமிழ்செல்வியின் கணவர் வழக்கறிஞர் மா.கந்தசாமி. இவர் களின் திருமணம், கலைஞர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்ச் செல்வி தனது அலு வலகத்தில், தந்தை பெரியார், கலைஞர், முதல்வர் ஸ்டாலின் படங்களை மாட்டி வைத்துள்ளார்.

dd

சென்ற 14ம் தேதி காலை, கோபி பா.ஜ.க. தலைவர் அரவிந்த் பாலாஜி தலைமையில் சுமார

ரோடு மாவட் டம் கோபிசெட்டி பாளையத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக பணிபுரிபவர் தமிழ்ச் செல்வி. திராவிடர் கழக மூத்த நிர்வாகியான கோபிசெட்டிபாளையம் சீனிவாசன் என்பவரின் மகள். தமிழ்செல்வியின் கணவர் வழக்கறிஞர் மா.கந்தசாமி. இவர் களின் திருமணம், கலைஞர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்ச் செல்வி தனது அலு வலகத்தில், தந்தை பெரியார், கலைஞர், முதல்வர் ஸ்டாலின் படங்களை மாட்டி வைத்துள்ளார்.

dd

சென்ற 14ம் தேதி காலை, கோபி பா.ஜ.க. தலைவர் அரவிந்த் பாலாஜி தலைமையில் சுமார் 30 பேர் பத் திரப்பதிவு அலுவலகத் திற்குள் நுழைந்து, பதி வாளர் தமிழ்ச்செல்வி யிடம், "என்ன உங்க தலைக்கு மேலே ஈ.வெ.ரா. படம் வெச்சுருக்கீங்க? அதை எடுத்திட்டு இந்தாங்க பிரதமர் மோடி படத்தை மாட்டுங்க'' என அதிகார மிரட்டலுடன் மோடி படத்தை அவரிடம் காட்டி யுள்ளனர். "தந்தை பெரியார் படத்தை யார் சொன் னாலும் எடுக்க மாட்டேன். அவர் அறிவுலக ஆசான். நீங்கள் கொடுக்கிற மோடி படத்தை வைக்க எனது உயரதிகாரி தான் கூற வேண்டும். அரசு அலுவலகத்தில் அரசியல் செய்ய வராதீர்கள். பொதுமக்களுக்கு பணி செய்வதைத் தடுக்காதீர்கள்'' எனக் கூறியிருக்கிறார் தமிழ்செல்வி. இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத பா.ஜ.க. கும்பல் அங் கேயே முற்றுகையிட, தமிழ்ச்செல்வி காவல் துறைக்கு தகவல் கொடுக்க, போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வெளியேற்றினார்கள்.

பதிவாளரின் கணவர் வழக்கறிஞர் மா.கந்த சாமி, "பா.ஜ.க.வினரின் போராட்டம் கலெக்ட ருக்கு தெரிய வந்ததும், கலெக்டர், ஈரோடு மாவட்ட பத்திரப் பதிவு பதிவாளரிடம் பேசியிருக்கிறார். அந்த மாவட்ட பதிவாளர், கோபிசெட்டிபாளை யம் அலுவலகத்திற்கு நேரில் வந்து தமிழ் செல்வியிடம், பிரச் சனை வராமல், சுவரில் மாட்டியுள்ள பெரியார் படத்தை எடுத்து விட்டு அறிக்கை கொடுக்குமாறு கலெக் டர் சொன்னதாகக் கூறியிருக்கிறார். "பெரியார் படத்தை கலெக்டர் எடுக்கச் சொன்னதை நீங்கள் எழுத்துப்பூர்வமாகக் கொடுங்கள்' எனத் தமிழ்ச்செல்வி கேட்க, "நான் வேண்டுமானால் எழுதித் தருகிறேன்... பெரியார் படத்தை எடுத்து விடுங்கள்' என மாவட்ட பதிவாளர் மீண்டும் கூறியிருக்கிறார்.

தமிழ்ச்செல்வியோ, "உங்கள் அறிக்கை என்ன, கலெக்டரே அறிக்கை கொடுத்தாலும் பெரியார் படத்தை எடுக்கமாட்டேன். பகுத்தறிவையும், சுய மரியாதையையும் கற்றுத்தந்த பெரியாருக்காக, எனது வேலையே போனாலும் பெருமையாக நினைப்பேன்' எனக் கூறியிருக்கிறார். இந்த தகவல், திராவிடர் கழகத் தலைவருக்குச் சென்று, முதல் வரின் கவனத்துக்கும் கொண்டுசெல்லப்பட்டது. அதையடுத்து, முதல்வரின் செயலாளர்களில் ஒருவர், ஈரோடு மாவட்ட கலெக்டரின் செயல் பாட்டை தொலைபேசி மூலம் கண்டித்திருக்கிறார். பின்னர், அராஜகம் செய்த பா.ஜ.க.வினர் மீது மூன்று பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள்'' என்றார்.

nkn281222
இதையும் படியுங்கள்
Subscribe