பேரறிவாளனின் விடுதலையை பல அமைப்புகளும் கொண் டாடிவரும் சூழலில், இதே வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்து வரும் மற்ற 6 பேரையும் விடுதலை செய்வது குறித்து நீலகிரியில் இருந்தபடி காணொலிக் காட்சி வழியாக அரசின் உயரதிகாரி கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் கலந் தாலோசித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

ee

இந்த நிலையில், பேரறிவாளனின் விடுதலைக் கொண்டாட் டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆவேசமாக போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது தமிழக காங்கிரஸ். இது குறித்துப் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,”"சில சட்ட நுணுக்கங்களை காரணம் காட்டித்தான் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. அதேசமயம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் குற்றவாளிகள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் இல்லை என்பதையும் அழுத்தமாகச் சொல்கிறோம்''” என்கிறார்.

வாயில் வெள்ளைத்துணியை கட்டுக்கொண்டு தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் நடத்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு உத்தரவிட்டார் கே.எஸ்.அழகிரி. அதன்படி, சென்னை சத்தியமூர்த்திபவன் தொடங்கி மாவட்ட தலைநகரங்களில் போராட்டங்களை நடத்தி. சோனியா மற்றும் ராகுலின் அனுமதியுடனேயே இந்த போராட்டங்களை வலிமையாக்கி வருகிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள்.

இது குறித்து காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்.கிருஷ்ணமூர்த்தியிடம் பேசியபோது, "எங்கள் தலைவரை இந்த மண்ணில் இழந்திருக்கிறோம். அதை நேரடியாகப் பார்த்தவன் நான். விடுதலை செய்யப்பட்ட தினம் எங்களுக்கு கறுப்பு நாள். காங்கிரஸ்காரன் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். இந்த விடுதலையை ஆதரிக்கும் இயக்கங்களைப் பார்த்துக் கேட்கிறேன். உங்கள் குடும்பத்தில், இயக்கத்தில் ஒரு தலைவரை இழந்திருந்தால் இப்படி கொண்டாடுவீர்களா? வாழ்நாள் முழுவதும் அவர்களை சிறையில் இருக்க வைக்க தொடர்ந்து போராடுவோம்''’என்கிறார் மிக ஆவேசமாக.

Advertisment

ee

கூட்டணியில் உள்ள காங்கிரசின் போராட்டம் தீவிரமான சூழலில், சிறையில் இருக்கும் நளினி, சாந்தன், முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்வதற்கான சட்ட ரீதியிலான வழிகளை ஆராய்ந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

இது குறித்து தி.மு.க. எம்.பி.யும் சீனியர் வழக்கறிஞருமான வில்சனிடம் நாம் கேட்டபோது, ‘’"பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்கான முடிவைத்தான் தமிழக அரசு தனது அமைச்சரவையில் முடிவெடுத்திருந்தது. கவர்னரின் ஒப்புதலுக்கு அதனை அனுப்பி வைத்தது. அதன் மீது முடிவெடுக்க காலதாமதம் செய்து வருகிறார் கவர்னர்.

இதனால், தமிழக அமைச்சரவையின் முடிவின்படி தன்னை விடுதலை செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தை நாடினார் பேரறிவாளன். இந்த வழக்கின் அனைத்து கோணங்களையும் சட்டரீதியாக ஆராய்ந்து, அமைச்சரவையின் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர்; குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தவறு என்றெல்லாம் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது உச்சநீதிமன்றம். பேரறிவாளன் மட்டுமே நீதிமன்றத்தை நாடியதால் அவருக்கு விடுதலை கிடைத்திருக்கிறது.

Advertisment

dd

அதே சமயம், அமைச்சரவையின் முடிவு என்பது 7 பேர் விடுதலைதான். அதனால், ஒரே குற்றத்துக்காக தண்டிக்கப்பட்ட 7 பேரில் ஒருவருக்கு விடுதலை கிடைத்திருப்பதால் அந்த நிலை மற்ற 6 பேருக்கும் பொருந்தும். ஆக, இந்த விசயத்தில் கவர்னர்தான் மற்ற 6 பேர் விடுதலையை முடிவு செய்ய வேண்டும். 7 பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை பரிந்துரைத் திருப்பதால் அதனை கவர்னர் ஏற்க வேண்டியது கட்டாயம். அந்த வகையில், 7 பேர் விடுதலை தொடர்பான கோப்பில் கையெழுத்திடுவார் என கருதுகிறேன்” என்கிறார்.

"சட்டச்சூழல் இப்படியிருக்கும் நிலையில், ”இவர்களின் விடுதலைக்கு கவர்னர் ஒப்புதலளிக்க மறுத்தால் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வைத்து மற்ற 6 பேரையும் தமிழக அரசே விடுதலை செய்ய முடியும் அல்லது அந்த 6 பேரும் உச்சநீதிமன்றத்தை அணுகி விடுதலையைப் பெற முடியும்''’என்கிறார் வழக்கறிஞர் இளவரசு தர்மலிங்கம்.

சட்ட வாய்ப்புகளையும் கூட்டணிக் கட்சியின் மனநிலையையும் சமன்படுத்தும் வகையில் ஆலோசனைகளைத் தொடர்கிறார் முதல்வர்.

___________________

பொய்க் குற்றச்சாட்டு! துணைவேந்தர் விளக்கம்!

நக்கீரன் 2022 மே 21-24 இதழில், "ஊழல் புகாரில் துணைவேந்தர்' என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கௌரி மறுத்துள்ளார். சென்னை கோட்டூர் புரத்திலுள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசிக்கும் பங்களா, கடந்த நாலரை வருடங்களாகப் பராமரிப்பில்லாமல் இருந்ததால், மிகவும் மோசமாக இருந்ததாகவும், எனவே, பல்கலைக்கழக சிண்டிகேட் மற்றும் ஃபைனான்ஸ் கமிட்டியின் முறையான ஒப்புதல் பெறப்பட்ட பிறகே அது புதுப்பிக்கப்பட்டதென்றும் கூறியுள்ளார். இ.எம்.ஆர்.சி.யில் பல்கலைக்கழக மானியக்குழு கொடுக்கும் கைடுலைன்ஸ் படிதான் பர்ச்சேஸ் செய்யப்படுமென்றும் தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் சரியாக பணி செய்யாத சில பேராசிரியர்களின் தவறுகளைக் கண்டித்ததால், அவர்கள்தான் தனக்கெதிராகப் பொய்யான தகவல்களைப் பரப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

(-ஆர்.)