Advertisment

பெரம்பலூர் திகுதிகு! அதிருப்திகளை சமாளிப்பாரா அமைச்சர் மகன்?

ss

ddமிழகத்தின் கவனத்துக்குரிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பலூரில், கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் இருந்த ஐ.ஜே.கே. பாரிவேந்தர் களமிறங்கினார். அவர் 6 லட்சத்து 83 ஆயிரத்து 697 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சிவபதி 2 லட்சத்து 80ஆயிரத்து 179 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

Advertisment

இப்போது பாரிவேந்தரின் ஐ.ஜே.கே. கட்சி பா.ஜ.க. கூட்டணிக்குச் சென்றுவிட்டதால், தற்போது இங்கு தி.மு.க.வே களத்தில் இறங்குகிறது. அமைச்சர் கே.என்.நேரு வின் மகன் அருண் நேரு இங்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

Advertisment

அ.தி.மு.க.வில், கடந்தமுறை களமிறங்கிய அதே சந்திரமோகன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர்களுடன் சிட்டிங் எம்.பி.யான பாரிவேந்தரும் இங்கே பா.ஜ.க. சார்பில் களத்தைக் கலக்கத் தொடங்கிவிட்டார்.

பெரம்பலூர் தொகுதியைப் பொறுத்தவரை குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், பெரம்பலூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது. இந்தத் தொகுதியில் முத்தரையர் சமூக

ddமிழகத்தின் கவனத்துக்குரிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பலூரில், கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் இருந்த ஐ.ஜே.கே. பாரிவேந்தர் களமிறங்கினார். அவர் 6 லட்சத்து 83 ஆயிரத்து 697 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சிவபதி 2 லட்சத்து 80ஆயிரத்து 179 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

Advertisment

இப்போது பாரிவேந்தரின் ஐ.ஜே.கே. கட்சி பா.ஜ.க. கூட்டணிக்குச் சென்றுவிட்டதால், தற்போது இங்கு தி.மு.க.வே களத்தில் இறங்குகிறது. அமைச்சர் கே.என்.நேரு வின் மகன் அருண் நேரு இங்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

Advertisment

அ.தி.மு.க.வில், கடந்தமுறை களமிறங்கிய அதே சந்திரமோகன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர்களுடன் சிட்டிங் எம்.பி.யான பாரிவேந்தரும் இங்கே பா.ஜ.க. சார்பில் களத்தைக் கலக்கத் தொடங்கிவிட்டார்.

பெரம்பலூர் தொகுதியைப் பொறுத்தவரை குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், பெரம்பலூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது. இந்தத் தொகுதியில் முத்தரையர் சமூகத்தினரும் பட்டிய லின சமூகத்தினரும் சம நிலையில் பலமாக உள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் உடையார் சமூகத்தினர் உள்ளனர். இவர்களைப் போல் கள்ளர், ரெட்டியார், பிள்ளைமார், முக்குலத்தோர் என பல்வேறு சமூகத்தினரும் கலந்து உள்ளனர்.

dd

இப்போதைய நிலையில் பா.ஜ.க., மற்றும் அதிமுக வேட்பாளர்கள் சற்று தெம்பாகக் காணப்படுகிறார்கள். காரணம் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சந்திரமோகன், முத்தரையர் வாக்கு வங்கியைப் பிரதாமனாக நினைத் துச் செயல்படுகிறார். அதேபோல் பாரிவேந்தர் இங்கே வெற்றி பெற்றவர் என்பதால், தொகுதியின் நீக்குப்போக்குகளை அறிந்தவர். மேலும் தொகுதியில் உள்ள தி.மு.க.வின் அனைத்து நிர்வாகி களையும் அவர் அறிந்து வைத் திருக்கிறார். எனவே, அவர்களில் அதிருப்தியில் இருப்பவர்கள் யார், யார் என்று பட்டியல் எடுத்து, அவர்களை எல்லாம் வைட்டமின் ப ddமூலம் தன் பக்கம் வளைக்கும் வியூகத்தில் அவர் இருக்கிறார். அதோடு அவரது உடையார் சமூகத்தினரின் வாக்குகளும் இங்கே ஏறத்தாழ 2.5 லட்சம்வரை உள்ளதால், அவர் தெம்பாகவே காணப்படுகிறார். இதற்கிடையே நாம் தமிழர் கட்சி சார்பாக தேன்மொழி களத்தில் உள்ளார்.

தற்போது தி.மு.க.வின் நிலை குறித்து நாம் விசாரித்தபோது, "திருச்சியிலும், பெரம்பலூரிலும் தி.மு.க.விற்குள் இப்போது உள்குத்து வேலைகள் அதிகமாக நடக்கின்றன. திருச்சி மத்திய மா.செ.வான வைரமணிக்கும் அருண்நேருவிற்கும் ஏழாம் பொருத்தமாக இருந்துவரு கிறது. அண்மையில் அமைச்சரின் தம்பி தேர்தல் செலவிற்கு வைட்டமின் "ப'’வை வைர மணியிடம் கொடுத்துள்ளார். அதை வாங்க மறுத்த வைரமணி, ’"எப்படியும் என்னை மா.செ. பதவி யில் இருந்து எடுக்கப்போகிறீர்கள். அதனால், நான் கட்சியின் அடிமட்டத் தொண்டனாகவே இருந்து பணி யாற்றுவேன்'’என்று கூறியதாகத் தெரிகிறது.

இது ஒருபுறம் இருக்க லால்குடி எம்.எல்.ஏ.வோ, திருச்சி தி.மு.க. அரசியல் குறித்து முதல்வருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியவர். கட்சியில் எந்தவொரு முக்கியத்துவமும் தனக்குக் கொடுப்பதில்லை என்று அமைச்சர் நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மீதே பல குற்றச்சாட்டுகளை வைத்தவர். உடையார் சமூகத்தைச் சேர்ந்த இவரும் நேரு தரப்பு மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலும் அதிருப்தி காணப் படுகிறது. அதற்குக் காரணம், கடந்த மாதம் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒரு அறிவிப்பை வெளி யிட்டார். அதில் "பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், தனது உடல் நலக்குறைவு காரணமாக, தான் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவித்துக்கொண்டார். எனவே, பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளராக வீ.ஜெகதீசன் நியமிக்கப்படுகிறார்'’என்று அறிவித் திருந்தார்.

ஆனால் இந்த பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பொறுப்பை தனக்கு வாங்கித் தர வேண்டும் என்று மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன், அமைச்சர் நேருவிடம் கோரிக்கை வைத்திருந்தார். அவரை நம்பி காத்திருந்த எம்.எல்.ஏ.வுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. தனக்கு இந்த மாவட்ட செயலாளர் பதவி கிடைத்தால், அடுத்தமுறை குன்னத்தில் போட்டியிட்டு, புறநகர் பகுதியிலேயே தன்னை பலப்படுத்திக்கொள்ள நினைத்தார். ஆனால் ஜெகதீசனுக்கு இந்த மா.செ. பதவி வழங்கப்பட்டதால் அவரும் அதிருப்தியில் உள்ளாராம்.

இந்த நிலையில், அமைச்சரின் மகனான அருண் நேருவுடன் நெருக்கமாக இருப்பவர்கள், கட்சிக்காரர்கள் யாரையும் அவர் அருகில் அண்டவிடாமல் பார்த்துக் கொள்கிறார்களாம். எனவே, இவர்களிடமிருந்து விடுபட்டு, அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் அவர் இணைந்து செயல்பட்டால்தான், வாக்கு வங்கி சிதறாமல் தி.மு.க.விற்கு கிடைக்கும் என்கிறார்கள்.

dd

தொகுதிக்குள் பலவகையிலும் உள்குத்தும், அதிருப்திகளும் நிலவுவதால், பெரம்பலூரில் இருக்கும் பெரும்பாலான நிர்வாகிகள் தேர்தல் பணியாற்ற முன்வராமல் இருக்கிறார்களாம். திருச்சி நிர்வாகிகள் தான் தற்போது பெரம்பலூரில் டேரா போட்டு அருண் நேருவிற்காக வேலை பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

அண்ணன் எளிதாக வெற்றி பெற்றுவிடு வார்’என்று சிலர் சொல்லும் பொய்யை நம்பி ஏமாறாமல், களத்தில் இறங்கி அங்கங்கே என்ன பிரச்சனை என்பதை ஆராய்ந்து, அதை தீர்த்து வைத்தால்தான், அருண்நேரு வெற்றி பெற முடியும் எனத் தெரிகிறது.

கட்சியில் எங்கு பிரச்சனை நடந்தாலும் உடனே களத்தில் இறங்கி பஞ்சாயத்து செய்யும் அமைச்சர் நேரு, தன்னுடைய மகனுக்காக பெரம்பலூரில் களத்தில் இறங்கி நிலைமையை மேனேஜ் செய்வாரா? என்ற கேள்வி உடன்பிறப்புகள் மத்தியிலேயே இருக்கிறது.

nkn270324
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe