தேர்தல் தகிப்பில் இருக்கிறது தமிழகம். இதற்கு பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களும் விதிவிலக்கல்ல. பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், பெரம்பலூர் ஆகிய இரண்டு தொகுதிகள் உள்ளன. இவற்றில் நடக்கும் சீட் ரேஸ் எப்படி இருக்கிறது?.

குன்னம்

முன்பு வரகூர் சட்டமன்றத் தொகுதியாக இருந்து, பிறகு குன்னம் தொகுதி ஆக மாறியிருக்கிறது இந்தத் தொகுதி. பண பலமும் சாதி செல்வாக்கும் தொகுதியின் நிலவரத்தை தீர்மானிக்கிறது. குன்னத்தில் ஏறத்தாழ ஒரு லட்சம் வன்னியர் வாக்காளர்களும், 35 ஆயிரம் உடையார் வாக்குகளும், சுமார் 50,000 தலித் இன வாக்குகளும் உள்ளன. அடுத்து செட்டியார், முஸ்லிம்கள், யாதவர் போன்ற சிறுபான்மையின மக்களின் வாக்குகளும் கணிசமான அளவில் உள்ளன.

dd

Advertisment

2011-ல் தி.மு.க. சார்பில் சிவசங்கர் வெற்றி பெற்றார். கடந்த 2016 தேர்தலில் தி.மு.க. சார்பில் துரைராஜ், அ.தி.மு.க. சார்பில் ராமச்சந்திரன் இருவரும் போட்டி யிட்டனர். இருவருமே உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் அ.தி.மு.க. ராமச்சந்தி ரன் வெற்றி பெற்றுள் ளார். பா.ம.க. தனித்துப் போட்டியிட்டதால் வன்னியர் வாக்குகளை அது கவர்ந்தது.

இம்முறை தி.மு.க. சார்பில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த வழக்கறிஞர் துரைராஜ் இறந்துவிட்டார். இவரது மகனும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞ ராக 2ஜி வழக்கில் ஆ.ராசாவுக்கு துணையாக இருந்தவருமான குமணன் பெயர் அடிபடுகிறது. தி.மு.க மா.செ. குன்னம் ராஜேந்திரன் தற்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவராக உள்ளார். ஆ.ராசாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருப்பதால் அவர் மூலம் சீட்டு கிடைத்தால் போட்டியிடத் தயாராக இருக்கிறாராம்.

கட்சிப் பிரமுகரான ஞானமூர்த்தி தனக்குள்ள பெயர்-செல்வாக்கில் சீட்டுக்குக் கடும் முயற்சி செய்து வருகிறார். 2011-இல் இங்கு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற சிவசங்கர் 2016 அரியலூர் தொகுதியில் நிறுத்தப்பட்டு தோல்வியடைந்தார். எனவே அவர் மீண்டும் குன்னம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கட்சியில் பலரும் அழைப்புவிடுக் கின்றனர். கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பெருநற்கிள்ளியும் முயற்சியில் உள்ளார். மூவருமே வன்னிய இனத்தை சேர்ந்தவர்கள்.

Advertisment

மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர் சீட்டுக்கு மோதுகிறார். பெரம்பலூரில் ஊட்டி காபி பார் வைத்துள்ள செல்லப் பிள்ளையும் சீட்டுப் போட்டியில் உள்ளார். இவரது மனைவி பிரபா வேப்பூர் ஒன்றிய சேர்மனாக உள்ளதால் மக்கள் தொடர்பு இவருக்கு உள்ளது என்கி றார்கள் உடன் பிறப்புகள். தி.மு.க கூட்டணியில் ஐ.ஜே. கே இருப்பதால், அந்தக் கட்சியின் தலைவர் பச்ச முத்துவின் மகன் ரவியை வேட்பாள ராக நிறுத்து வதற்கான முயற்சி களும் நடக்கிறது.

அ.தி.மு.க. சார் பில் கட்சியின ருக்கும் மக்களுக்கும் தாராளம் காட்டுபவரான மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் மீண்டும் பரபரக்கிறார். அதோடு, முன்னாள் மா.செ. ரவிச்சந்திரனும் சீட்டுக்கு மோதுகிறார். அவரோடு இளைஞரணி அகரம் சிகூர் முத்தமிழ்ச் செல்வன், ஒ.செ. கர்ணன், எம்.ஜி.ஆர் மன்ற மருவத்தூர் ராஜாராம், வெள்ளைத்துரை குன்னம் குணசீலன் போன்றவர்களும் முட்டி மோதுகின்றனர். பா.ம.க சார்பில் நிற்பதற்கு ஆண்டிமடம் வைத்தியும் முன்னாள் மாவட்ட செயலாளர் உலகசாமி துரையும் முயற்சியில் உள்ளனர். இப்பகுதியில் ஜெகத்ரட்சகனின் உறவினர் பெரியாக்குறிச்சி சோழன் குமார் வாண்டையார், பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டதால் பி.ஜே.பி.யில் இணைந்துள்ளார். செல்வாக்குள்ள இவரை பா.ஜ.க. இங்கே நிறுத்த நினைக்கிறதாம். பெரம்பலூர் தே.மு.தி.க மாவட்ட செயலாளர் காமராஜ் இந்த முறையும் கட்சித் தலைமையிடம் சீட்டுக்கு முட்டி மோதுகிறார்.

பெரம்பலூர்

இந்த தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐ.ஜே.கே கட்சித் தலைவர் பச்சமுத்துவுக்கு சீட்டு கொடுக்கப்பட்டு, எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளார். அதே போல் சிதம்பரம் எம்.பி தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா வளவனுக்குக் கொடுக்கப்பட்டு அவர் நாடாளுமன்றம் சென்றுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் இந்த இரு பாராளுமன்ற தொகுதிகளில் கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர்கள் எம்.பி.யாக இருப்பதால் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வே களமிறங்க வேண்டும் என்கிற கருத்து கட்சியில் நிலவுகிறது.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியை சமூக சமத்துவ படைத் தலைவர் சிவகாமிக்கு தி.மு,க. ஒதுக்கியதால், அவர் அ.தி.மு.க.விடம் தோற்றுப் போனார். தொகுதியின் முன்னாள் எம்.பியான ஆ.ராசாவின் சகோதரரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து தி.மு.கவுக்கு வந்தவருமான கலிய பெருமாள், கட்சியின் முக்கிய பொறுப் பாளர்களைச் சந்தித்து சால்வை அணி வித்து, ஆதரவு கேட்டு வருகிறார். பிரச்சனை இல்லாத அமைதியான மனிதர் இவர் என்றாலும், ராசாவுக்கு அதில் விருப்பமில்லை என்கிறார்கள்.

இந்த நிலையில் ஏற்கனவே இங்கு போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களான டாக்டர் வல்லபன், நகரச் செயலாளர் பிரபாகரன் ஆகியோரும் சீட்டைப் பெறும் எத்தனத்தில் இருக்கிறார்கள். அதேபோல் அரசு நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குநர் தங்க.கண்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செந்தில்நாதன், எக்ஸ் எம்எல்ஏ துரைசாமி. மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சன்.சம்பத், வேப்பந்தட்டை பகுதி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வனிதா சுப்ரமணியன் ஆகியோரும் முட்டி மோதுகிறார்கள். எம்.பி.யாக உள்ள ஆ.ராசா, இந்தத் தேர்தலில் இங்கே நின்று, ராசா சட்டமன்றத்தில் துணையாக இருப்பார் என்ற டாக் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இருக்கிறது.

அ.தி.மு.க.வில் 2011-இல் சசி உறவினர் கண்ணதாசன் மூலம் சீட்டு வாங்கி வெற்றி பெற்ற தமிழ்ச்செல்வன், இம்முறையும் களமிறங்கத் துடிக்கிறார். ஆனால் தொகுதி மக்களுக்காகப் பெரிதாக இவர் எதையும் கொண்டு வரவில்லை என்ற புகார் இருக்கிறது. கட்சியிலும் மா.செ. ராமச்சந்திரனுடன் உரசலில் இருக்கிறார். இந்த நிலை யில் முன்னாள் எம்.எல்.ஏ.வான வழக்கறிஞர் பூவை செழியன், துணை சபாநாயகராக இருந்த அருணாச் சலம், எக்ஸ் எம்பி சந்திரகாசி ஆகி யோரும் மல்லுக் கட்ட, முன்னாள் நகரமன்ற தலைவர் ரமேஷோ, மகளுக்காக வரிந்து கட்டுகிறார்.

dd

ரியலூர் மாவட்டத் தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இரண்டு தொகுதிகள் உள்ளன. இவற்றின் நிலவரத்தையும் இங்கே பார்க்கலாம்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தேர்தல் ரேஸால் களைகட்டியிருக்கிறது. தி.மு.க.வைப் பொறுத்தவரை, கடந்த முறை போட்டியிட்டு குறைந்த வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்த கட்சியின் மா.செ. சிவசங்கர், இந்தமுறை வென்றே தீரவேண்டும் என்று கட்சிப் பணியிலும் மக்கள் பணியிலும் தீவிரம் காட்டித் தொகுதியை வலம் வந்துகொண்டிருக்கிறார். மக்கள் செல்வாக்கு மிக்கவர் என்பதால் இவருக்கே சீட் என்கிற நம்பிக்கை இவரது ஆதரவாளர்கள் மத்தியில் நிலவுகிறது. நாங்களும் போட்டியிடத் தயார் என்று இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, திருமானூர் ஒ.செ. தனபால், எக்ஸ் எம்.எல்.ஏ ஆறுமுகம் மகன் கதிரவன் போன்றோரும் ரூட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வில் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் அரசுக் கொறடாவு மான தாமரை ராஜேந்திரன் மீண்டும் நானே என்று தெம்போடு வலம் வருகிறார். ஆனால் மண்டல செயலாளரும் முன்னாள் மந்திரியுமான வைத்தி லிங்கம் தாமரை மீது அதிருப்தி யில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே தாமரைக்கு வைத்திலிங்கம் ஆப்பு வைப்பார் என்ற பேச்சு அடிபடுகிறது இந்தக் கண் ணோட்டத்தில் எக்ஸ் எம்.எல். ஏ.வும் எக்ஸ் மாவட்ட செயலாளருமான இளவழகன், சுந்தரேசபுரம் கட்சிப் பொறுப் பாளர் டாக்டர் பழனிவேல், அரியலூர் நகர மன்ற முன்னாள் தலைவர் கண்ணன் ஆகியோர் மல்லுக் கட்டுகின்றனர்.

மாவட்டத் தலைநகரம் அமைந்துள்ள அரியலூர் தொகுதியை பிடிப்பதற்கு இரு கட்சிகளிலும் சீட்டுப் போட்டி அதிகரித்து வருகிறது. அ.தி.மு.க கூட்டணியில் இடம் இருக்கும் என்ற நம்பிக்கையில் தே.மு.தி.க மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல் கட்சித் தலைமை மூலம் முயற்சியில் இறங்கியுள்ளார்

ஜெயங்கொண்டம்

தொகுதி தி.மு.க சார்பில் மக்கள் தொண்டன் என்று பெயரெடுத்த மறைந்த எம்.எல்.ஏ. கா. சொ.கணேனின் மகனும் தா.பழூர் ஒன்றிய செயலாளருமான கண்ணன் தொகுதி மேல் கண் வைத்தபடி தீவிர களப்பணியில் உள்ளார். நாங்களும் கடும் முயற்சியில் உள்ளோம் என்று ஜெயங்கொண்டம் ஒ.செ. தனசேகர், ஸ்டாலினின் கல்லூரி தோழர் சுபா சந்திர சேகர், மறைந்த தலைமைக்கழகப் பேச்சாளர் வெற்றிகொண்டான் மகன் கருணாநிதி, பாரம்பரிய தி.மு.க. குடும்பத்தவரான ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் வீர.சிவா (எ) சிவகுருநாதன் ஆகியோர் வரிசைகட்டி நிற்கிறார்கள்.

அ.தி.மு.க.வில் இந்தத் தொகுதியில் சீட்டு கேட்பவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. காரணம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், மக்கள் எதிர்பார்ப்பை தொகுதியில் நிறைவேற்றவில்லை. எனவே புதிய வேட்பாளரை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க.வினரே வரிந்து கட்டுகிறார்கள். அந்த வரிசையில் ஒன்றிய செயலாளர்கள் மருதமுத்து, ராமச்சந்திரன், தங்க பிச்சமுத்து, கல்யாணசுந்தரம் இவர்களோடு ஆண்டிமடம் ரீடு செல்வம் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் செல்வராசு ஆகியோரும் சீட்டுப் போட்டியில் உள்ளனர்.

dd

இந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளான பா.ம.க.வும் பி.ஜே.பி.யும் வரிந்து கட்டி நிற்கின்றன. பா.ம.கவில் அன்புமணி ராமதாஸ் அவர் இல்லையேல் ஜெயங்கொண்டம் ஒன்றிய சேர்மன் காடுவெட்டி ரவிச்சந்திரன், துணைப் பொதுச் செயலாளர் திருமாவளவன், ஆண்டிமடம் வைத்தி ஆகியோரில் ஒருவர் களமிறங்கலாம் என்கிறது அவர்கள் தரப்பு. அதே நேரத்தில் பி.ஜே.பி.யிலோ மாவட்ட தலைவராக உள்ள ஐயப்பனுக்கு கட்சித் தலைமை நம்பிக்கை அளித்திருப்பதாகவும் டாக் அடிபடுகிறது.

தி.மு.க.கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் சார்பில், மாவட்ட தலைவராக உள்ளவரும், கடந்த முறை போட்டியிட்டு தோல்வி யடைந்தவருமான மேலணிக்குழி ராஜேந்திரன், தீவிரமாக முட்டிமோதுகிறார். சலசலக்கும் முந்திரி காடுகள் நிறைந்த ஜெயங்கொண்டம் தொகுதியில், சீட்டுக்கு போதும் கட்சியினரும் சலசலத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்தமுறை பெரம்பலூர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்த முறையாவது வெற்றிமகுடத்திற்காக அறிவாலயத் தரப்பினர் வேகம்காட்டி வருகின்றனர்.

பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் 4 தொகுதிகளிலும் புழுதிபறக்க நடக்கிறது சீட் ரேஸ்.