தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில், மகளிரணியில் மாநில சமூக வலைத்தளப் பொறுப்பாளராக இருக்கும் டாக்டர் யாழினி அவர்களை நக்கீரன் நேர்காணலுக்காக சந்தித்தோம். நடப்பு அரசியல் குறித்தும் நா.த. சீமான் குறித்தும் யாழினியின் பொறிபறக்கும் நேர்காணல் இதோ...…
ஆரம்பத்தில் பெரியார் வழியைப் பின்பற்றி, பெண் சுதந்திரம், பட்டியலின மக்கள் விடுதலை, மூடநம்பிக்கையை ஒழித்தவர் என்று பேசிவந்த சீமானின் பேச்சு, தற்போது பெரியாருக்கு எதிராய் திரும்பக் காரணம்?
ஈழ விடுதலைப் போராட்டம் முற்றிலுமாக அழித் தொழிக்கப்பட்ட பின் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய எழுச்சி தானாகத் தோன்றியது. இந்த எழுச்சியை முனை மழுங்கச் செய்யவும், இந்த எழுச்சியின் எதிர்ப்பை மடைமாற்றம் செய்யவும், அதன் பயனாகப் பாசிச சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு ஏற்ற களமாக தமிழ் நாட்டை மாற்றியமைக்கவும் ஆரிய அடியாளாகக் காரிய மாற்ற சீமான் வல்லாதிக்க சக்திகளால் களமிறக்கப்பட்டார். கூலிப்படையாய் இந்த வேலையைச் செய்யவந்த சீமானுக்கு ஒரு அடையாளமும், தமிழ் மக்களின் அங்கீகாரமும் தேவைப் படுகின்றது. ஏனென்றால் அவருக்கு அங்கீகாரம் கிடைத்தால் தான் அவரது பேச்சுக்கள் தமிழ் மக்களைச் சென்றடைந்து தேவையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். அதற்காக அவர் பெரியாரை, பெரியாரின் கொள்கைகளை மேடை தோறும் முழங்கினார். அவரது நோக்கத்தை அறியாமலே பெரியாரிய அமைப்புகளும் மேடை அமைத்துத் தந்தன.
சிங்கள வல்லாதிக்கத்திற்கும், அவர்களுக்கு துணையாகநின்ற மற்ற ஆதிக்க சக்திகளுக்கும் எதிராக எழுந்த தமிழ்த் தேசிய எழுச்சி என்பது கலைஞர் எதிர்ப்பாக மடைமாற்றம் செய்யப்பட்டது. தமிழீழத்தில் தமிழர்கள் அடைந்த இன்னல் களுக்கும் அவர்களின் விடுதலைப் போராட் டத் தோல்விக்கும் கலைஞரே காரணம் என்று ஒரு பொய்க்
தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில், மகளிரணியில் மாநில சமூக வலைத்தளப் பொறுப்பாளராக இருக்கும் டாக்டர் யாழினி அவர்களை நக்கீரன் நேர்காணலுக்காக சந்தித்தோம். நடப்பு அரசியல் குறித்தும் நா.த. சீமான் குறித்தும் யாழினியின் பொறிபறக்கும் நேர்காணல் இதோ...…
ஆரம்பத்தில் பெரியார் வழியைப் பின்பற்றி, பெண் சுதந்திரம், பட்டியலின மக்கள் விடுதலை, மூடநம்பிக்கையை ஒழித்தவர் என்று பேசிவந்த சீமானின் பேச்சு, தற்போது பெரியாருக்கு எதிராய் திரும்பக் காரணம்?
ஈழ விடுதலைப் போராட்டம் முற்றிலுமாக அழித் தொழிக்கப்பட்ட பின் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய எழுச்சி தானாகத் தோன்றியது. இந்த எழுச்சியை முனை மழுங்கச் செய்யவும், இந்த எழுச்சியின் எதிர்ப்பை மடைமாற்றம் செய்யவும், அதன் பயனாகப் பாசிச சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு ஏற்ற களமாக தமிழ் நாட்டை மாற்றியமைக்கவும் ஆரிய அடியாளாகக் காரிய மாற்ற சீமான் வல்லாதிக்க சக்திகளால் களமிறக்கப்பட்டார். கூலிப்படையாய் இந்த வேலையைச் செய்யவந்த சீமானுக்கு ஒரு அடையாளமும், தமிழ் மக்களின் அங்கீகாரமும் தேவைப் படுகின்றது. ஏனென்றால் அவருக்கு அங்கீகாரம் கிடைத்தால் தான் அவரது பேச்சுக்கள் தமிழ் மக்களைச் சென்றடைந்து தேவையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். அதற்காக அவர் பெரியாரை, பெரியாரின் கொள்கைகளை மேடை தோறும் முழங்கினார். அவரது நோக்கத்தை அறியாமலே பெரியாரிய அமைப்புகளும் மேடை அமைத்துத் தந்தன.
சிங்கள வல்லாதிக்கத்திற்கும், அவர்களுக்கு துணையாகநின்ற மற்ற ஆதிக்க சக்திகளுக்கும் எதிராக எழுந்த தமிழ்த் தேசிய எழுச்சி என்பது கலைஞர் எதிர்ப்பாக மடைமாற்றம் செய்யப்பட்டது. தமிழீழத்தில் தமிழர்கள் அடைந்த இன்னல் களுக்கும் அவர்களின் விடுதலைப் போராட் டத் தோல்விக்கும் கலைஞரே காரணம் என்று ஒரு பொய்க் கதை கட்டவிழ்த்து விடப்பட்டது. அதுவே பின்னர் தி.மு.க. எதிர்ப்பாக வளர்த்தெடுக்கப்பட்டு, பின்னர் திராவிடத் தத்துவத்திற்கான எதிர்ப்பாக விஸ்வரூபமெடுக்கின்றது. இன்று திராவிடத் தத்துவத்தை நமக் குத் தந்த தந்தை பெரியாரைக் குறி வைத்து இவர்கள் களமாடுகின்றார்கள்.
இரண்டாவதாக, தமிழ்நாடு என்பது என்றைக்கும் ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆதரவுக் களமாக விளங்கிவந்துள்ளது. இதையும் தகர்க்க இந்த வல்லாதிக்க சக்திகள் திட்டமிட்டன. எந்த நிலையிலும் ஈழத் தமிழர் களோ, போராளி அமைப்புகளோ தமிழ்நாட்டின் அரசியலிலே என்றைக்கும் ஒருசார்பு நிலையை எடுத்ததில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு தங்களுக் குத் தேவை என்பதால் அவர்கள் தமிழ் நாட்டு அரசியலிலிருந்து சற்று இடைவெளி விட்டு விலகியே இருந்தார்கள்.
சீமானின் குள்ளநரித்தனத்தால் ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டு அரசியலிலே நுழைக்கப்படு கின்றார்கள். கலைஞரையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தமிழ்த் தேசியத்தின் எதிரியாகக் கட்டமைத்து ஈழத்தமிழர்களும் சமூக வலைத்தளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவுசெய்தார்கள். இந்த நிலையிலே கலைஞரின் தொண்டினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் திட்டங்களால் பயன்பெற்ற தமிழ்நாட்டு மக்கள், தங்களின் புதிய எதிரியாக அவதாரம் எடுத்துள்ள ஈழத் தமிழர்களின் ஒரு பிரிவினருக்கு எதிராகச் சமூக வலைத்தளத்தில் களமாட வந்தார்கள். அவர்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு இவர்கள் பதிலளித்து பதிவுகளை பதிவேற்றம் செய்தனர். அந்தவகையிலே ஈழத்துத் தமிழர்களையும், தமிழ்நாட்டுத் தமிழர்களையும் எதிரிகளாகக் கட்டமைக் கும் ஒரு சதித்திட்டம் வெற்றிகரமாக இங்கே அரங்கேறியது.
தமிழர்களின் நெஞ்சங்களில் தமிழர்களின் வீரத்தின் சாட்சியாக உயர்மாடத்தில் குடியிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகர னின் பிம்பம் சிதைவிற்கு உள்ளாகின்றது. சீமான், பிரபாகரனை கலைஞ ருக்கு எதிராக கட்டமைத்த காரணத்தால் தமிழ் மக்களின் விமர்சனங் களுக்கு அப்பாற்பட்டிருந்த பிரபாகரனும் விமர்சனத்திற்கு உள்ளாகின் றார். தமிழீழப் போராட்டத்திற்குத் தங்களின் ஏகமனதான ஆதரவை நல்கியிருந்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகள் இதன்மூலம் சிதைக்கப் பட்டு, ஈழத் தமிழர்களின் ஆதரவுத் தளம் தமிழ்நாடு என்ற நிலை மாற்றியமைக்கப்பட்டது. இந்த வகையிலே சீமான் தனது எஜமானர் களின் ஏவலைச் செயலாக்கித் தனது முதல் நோக்கத்திலே முழு வெற்றி பெற்றார் என்றுதான் சொல்லவேண்டும். இரண்டாவதாக இந்த பாசிச சக்திகள் தமிழ்நாட்டிலே காலூன்றுவதற்குத் தடையாக உள்ள திரா விடத் தத்துவத்தையும் "தந்தை பெரியாரையும்' எதிரிகளாக அடை யாளம் காண்கின்றார்கள். அவர்களின் திட்டத்திற்குத் தடையாக உள்ள இந்த இரண்டு எதிரிகளையும் ஒழிப்பதற்காகத்தான் முதலில் கலைஞர் எதிர்ப்பையும், பின்பு தி.மு.க. எதிர்ப்பையும், பின்னர் திராவிடத் தத்துவ எதிர்ப்பையும், இறுதியாகத் தந்தை பெரியார் என்னும் தமிழர்களின் மீட்பரின் எதிர்ப்பையும் ஆரிய அடிவருடி சீமான் கையிலெடுத்துக் களமாடினார். இதுதான் உண்மை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்திலும், பெரியார் மீது எங்களின் விமர்சனத்தை, அழுத்தமாக முன்வைப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் களஞ்சியம் பேசியுள்ளாரே.?
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரில்லை பெரியார். எனது கருத்துக்களை விமர்சனம் செய்யுங்கள், ஏற்புடையதென்றால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையென்றால் விட்டுத் தள்ளுங்கள் என்று சொன்னவர்தான் பெரியார். எனவே அழுத்தமாகவோ, அழுத்தமின்றியோ இவர் கள் பெரியாரின் கருத்துக்களை விமர்சனம் செய் வதை வரவேற்கிறேன். ஆனால் பெரியார் கூறாத கருத்துக்களைப் பெரியாரின் கருத்துக்களாகக் கட்ட மைத்துப் பெரியாரை ஒழுக்கங்கெட்டவராக வடி வமைத்து இழிவுசெய்வதைத்தான் எதிர்க்கிறேன். ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் பெரியாரின் புகழைச் சிதைப்பவர்களுக்குத் தக்க பாடம் புகட்டு வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
2023 இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி, 10,827 வாக்குகளைப் பெற்றது. முன்பைவிட இந்தத் இடைதேர்தல் களத்தில், ஒரு வாக்கு அதிகம் பெற் றாலே, பெரியார் தோற்றுப் போய் விட்டார், திராவிடம் செத்துவிட்டது என்று அர்த்தம். என களஞ்சியம் பேசியுள்ளாரே?
வாக்கரசியலிலிருந்து விலகியிருந் தவர் பெரியார். வாக்குகளின் எண்ணிக் கையால் பெரியாரின் தொண்டை அளப்பதென்பது அடிமுட்டாள்த்தனம். வடிவேலுவின் காமெடியில் வரும் சிறுவனாக நமக்குக் கோபமூட்டி நமது கிட்னியைக் களவாட முயற்சிக்கிறார்கள். இது களஞ்சியத்தின் நயவஞ்சகம்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் திராவிடம் மற்றும் பெரியாருக்கு எதிரான பிரச்சாரம், இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. அதை எப்படி கையாளும்?
திராவிடம், பெரியாரியல் எனும் கோட்பாட்டின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டதுதான் தி.மு.க. எனும் கோட்டை. எனவே தி.மு.க. இதைத் தனியாகக் கையாளத்தேவையில்லை. ஈரோடு கிழக்குத் தொகுதியின் வாக்காளர்களே திறம்படக் கையாளுவார்கள். இந்தப் பொய்யர்களின் முகமூடியைக் கிழித்துத் தொங்கவிடுவார்கள்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், பிரபாகரனுடன் உள்ள போட்டோ சர்ச்சையை பற்றி உங்கள் கருத்து.?
மானம் உள்ள ஆயிரம் பேருடன் போரிட லாம். ஆனால் மானமில்லாத ஒருவனுடன் போரிடு வது வீண் என்று பெரியார் சொல்லுவார். மான மில்லாதவர்கள் தங்களின் வயிற்றுக்காக எந்த இழி வையும் சுவைத்து உண்டு செரிப்பார்கள். போட் டோ சர்ச்சை என்று சொல்வது தவறு. போட்டோ மோசடி என்று தான் சொல்லவேண்டும்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்து அற நிலையத்துறையே இருக்காது என்ற அக்கட்சி யின் மாநிலத் தலைவர் பேசியுள்ளாரே?
உண்மைதான். ஆர். எஸ். எஸ். அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலம் இது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், இந்து அறநிலையத்துறை இந்து மனுநீதித்துறையாக மாறும் என்றுதான் தி.மு.க.வும் சொல்லிவருகின்றது.
அ.தி.மு.க.வின் இடைத்தேர்தல் புறக் கணிப்பைப் பற்றிய தங்கள் கருத்து?
தேர்தல் களம் பற்றிய கணிப்பு தங்க ளுக்கு எதிராக உள்ளதால் அ.தி.மு.க. வினர் தேர்தல் புறக்கணிப்பு செய்கின் றனர். மக்களால் புறக்கணிக்கப் பட்டவர்கள் தேர்தலைப் புறக்கணிப்பது ஒன்றும் வியப்பில்லை.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றிய உங்கள் பார்வை?
அவர் சொல்வதை அவரே கேட்க மாட்டார். அவர் சொல்வதை மக்கள் கேட்கவா போகின்றார்கள்?
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், கவர்னருடன் நடந்த சந்திப்பின் பின்னணி பற்றி?
குற்றவாளியிடமே சென்று குற்றத் தைப் பற்றி யாரும் புகார் செய்யமாட்டார் கள். அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வா கத் தலைவராக இருந்து செயல்பட வேண் டிய துணைவேந்தரை நியமிக்கத் தடையாக இருப்பவர்தான் தமிழக ஆளுநர். ஆளுநர் செய்த குற்றத்தால்தான் இதுபோன்ற குற்றங்கள் அங்கே அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், தி.மு.க.வினர் நாடகமாடுவதில் கைதேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளாரே?
எத்தனை காலம்தான் ஏமாறுவார் தமிழ் நாட்டினர் என்றுதான் எனக்கும் பாடத் தோன்று கிறது. நடிகர்களின் கவர்ச்சிக்கு மயங்கித் தமிழர்கள் நலிவடைந்த கதை முடிவடைந்ததாகவே நான் கருதுகிறேன். தற்போது விஜய் காட்டிக்கொண்டி ருக்கும் படம் தமிழ்நாட்டில் ஓடாது.
-சந்திப்பு : அரவிந்த்