Advertisment

எம்.எல்.ஏ.வால் வீடுகளை இழந்த மக்கள்! -பதட்டத்தில் கும்மிடிப்பூண்டி!

ss

கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலையை ஓட்டி யுள்ள இரு பக்கங்களிலும் வெட்டுக்காலனி கிராம மக்கள் வசித்து வந்தனர். இந்த மக்களுக்கு திடீரென பிப்ரவரி 3ஆம் தேதி அன்று, நெடுஞ்சாலைத் துறையிலிருந்து ஒரு அதிர்ச்சியான உத்தரவு வந்தது. அந்த உத்தரவில், சாலை விரிவாக்கப் பணிகளைச் செய்யவேண்டி இருப்பதால், நீங்கள் குடியிருக்கும் வீடுகளை உடனடியாகக் காலிசெய்ய வேண்டும் என்று இருந்தது.

Advertisment

mlahouse

இதைப்பார்த்த அம்மக்கள், "திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நாங்கள் குடியிருக்கும் வீடுகளை எப்படி நீங்கள் அகற்ற முடியும்?'' என நெடுஞ்சாலைத்துறை அதிகாரியான ஆண்டியப்பனிடம் ஆவேசமாகக் கேட்டனர் அதற்கு அந்த ஆண்டியப் பன்,’"சாலை விரிவுப் பணிக்காக நிலத்தை எடுக்க எங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு''” என்றதோடு, வீடுகளைக் காலி செய்ய உங்களுக்கு இரண்டு நாள் கால அவகாசம் கொடுக்கிறேன். அதற்குள் எல்லோரும் இந்த இடத்தைக் காலி செய்துவிட்டு எங்கேயாவது போய்விடுங்கள். இல்லையென்றால் உங்களையும் சேர்த்து இங்கிருந்து தூக்கியெறியத் தயங்கமாட்டோம்''’என அதிகார தோரணையில் மிரட்டினார்.

Advertisment

இதனால், அப்பகுதி மக்கள் அடுத்த நாளே மாவட்ட ஆட்சியரிடம் சென்று, "சாலைப் பணிக்காக நிலத்தை எடுப்ப

கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலையை ஓட்டி யுள்ள இரு பக்கங்களிலும் வெட்டுக்காலனி கிராம மக்கள் வசித்து வந்தனர். இந்த மக்களுக்கு திடீரென பிப்ரவரி 3ஆம் தேதி அன்று, நெடுஞ்சாலைத் துறையிலிருந்து ஒரு அதிர்ச்சியான உத்தரவு வந்தது. அந்த உத்தரவில், சாலை விரிவாக்கப் பணிகளைச் செய்யவேண்டி இருப்பதால், நீங்கள் குடியிருக்கும் வீடுகளை உடனடியாகக் காலிசெய்ய வேண்டும் என்று இருந்தது.

Advertisment

mlahouse

இதைப்பார்த்த அம்மக்கள், "திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நாங்கள் குடியிருக்கும் வீடுகளை எப்படி நீங்கள் அகற்ற முடியும்?'' என நெடுஞ்சாலைத்துறை அதிகாரியான ஆண்டியப்பனிடம் ஆவேசமாகக் கேட்டனர் அதற்கு அந்த ஆண்டியப் பன்,’"சாலை விரிவுப் பணிக்காக நிலத்தை எடுக்க எங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு''” என்றதோடு, வீடுகளைக் காலி செய்ய உங்களுக்கு இரண்டு நாள் கால அவகாசம் கொடுக்கிறேன். அதற்குள் எல்லோரும் இந்த இடத்தைக் காலி செய்துவிட்டு எங்கேயாவது போய்விடுங்கள். இல்லையென்றால் உங்களையும் சேர்த்து இங்கிருந்து தூக்கியெறியத் தயங்கமாட்டோம்''’என அதிகார தோரணையில் மிரட்டினார்.

Advertisment

இதனால், அப்பகுதி மக்கள் அடுத்த நாளே மாவட்ட ஆட்சியரிடம் சென்று, "சாலைப் பணிக்காக நிலத்தை எடுப்பதாக இருந்தால், எங்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்துவிட்டு எடுங்கள்'’என கோரிக்கை வைத்தனர்.

dd

மாவட்ட ஆட்சியரோ, "உங்களுக்கு மாற்று இடம் கொடுக்கும்வரை அதிகாரிகளால் உங்களுக்கு எந்தத் தொல் லையும் இருக்காது''’என உத்தரவாதம் கொடுத்து அனுப்பி வைத்திருக் கிறார். அதோடு அப் பகுதி டி.ஆர்.ஓ மூலமாக அந்த பகுதியில் எத்தனை வீடுகள் இருக்கின்றன என்ற கணக்குகளையும் எடுத்து, அவர்களுக்கு மாற்று இடத்திற்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் டி.ஆர்.ஓ வீடுகளை கணக்கெடுத்துவிட்டு 42 வீடுகள் இருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு ரிப்போர்ட் அனுப்பினார்.

இந்த சூழ்நிலையில் நெடுஞ்சாலை டெண்டர் எடுத்துள்ள தி..மு.க. எம்.எல்.ஏ.வான கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜன், தேர்தல் ddநெருங்குவதால் அதற்குள் இந்த வேலைகளை முடித்தால்தான் டெண்டருக்கான பணத்தைப் பெறமுடியும் என்ற நினைப்பில், தீவிரமாக செயல்படத் தொடங்கினார். அவர் டெண்டர் பணிகளைத் துரிதமாக்கியதால், அப்பகுதி மக்களின் வீடுகள் தடதடவென இடிக்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் போராட்டக் களத்தில் இறங்கினர்.

நிலைமையை விசாரித்த வட்டாட்சியர் பிரீத்தி, "இவர்களுக்கு உடனடியாக ஒதுக்க இடம் இல்லை'' என்றார். அப்பகுதியில் இடம் அதிக விலைக்குப் போவதால் வாங்கியும் கொடுக்கமுடியாத சூழல் என்றார்கள் அதிகாரி கள். எனவே, எம்.எல்.ஏ, வட்டாட்சியர், நெடுஞ் சாலத்துறையினர் ஆகியோர் ஒருங்கிணைந்து ஒரு திட்டத்தை தீட்டினர். அதாவது முதற் கட்டமாக வீடிழந்த அந்த 42 பேரில் 12 பேருக்கு மட்டுமே வீடு கொடுக்க முடிவெடுத்தனர். அந்த வீடுகளும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்துகிறவர்களுக்கு என்று சொன்னார்கள்.

இதன்மூலம் அந்த மக்களுக்குள்ளேயே சிக்கலையும் பிரச்சினைகளையும் உண்டாக்கி னர். இதை ஏற்காத அம்மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.

இதைத்தொடர்ந்து, இடம் தருவதாக சொன்ன அதிகாரிகள் ஒரு இடத்தைக் காட்டி, அங்கே வீடுகட்டிக் கொள்ளுங்கள் என்றனர். அவர்கள் கைகாட்டிய இடத்தில் குடிசை போட்டுக் கொள்ள அம்மக்கள் சென்ற போது, சிலர் வந்து ‘"எங்க இடத்தில் எப்படி குடிசை போடலாம்?''’என்று வரிந்துகட்ட, அடிதடிவரை அங்கே அரங்கேறி யுள்ளது.

dd

இதன்பிறகுதான் அந்த இடம், 1998-ல் ஆதி திராவிடர் நலத்துறையின் மூலமாக 172 பேருக்கு வழங்கப்பட்டது என்று தெரியவந்திருக்கிறது. அதில் 51 முஸ்லீம்களின் இடங்களும் அடக்கமாம்.

அப்படி முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை, போராடிய மக்களில் 12 பேருக்கு அதிகாரிகள் ஒதுக்கியதால், இரு சமூகத்தின ருக்கும் இடையே பிரச்சனை உண்டானது.

இதெல்லாம் எம்.எல்.ஏ.வின் டெண்டரை முடிப்பதற்காக அதிகாரிகள் செய்த கபடச் செயல் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.

அப்பகுதியில் வீடுகள் இருப்பதைக் கூடக் கவனிக்காமலும் ஆய்வு செய்யாமலும், அவசர அவசரமாக ஆர்டர் போட்டு, போராடியவர் களுக்கு இடம் என்று கொடுத்ததால் பிரச் சினை முற்றியுள்ளது. இதனால் திக்கு திசை தெரியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் தவித்து வருகிறார்கள். அதிலும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியும் வீடு இல்லாமல் தவித்து வருகிறார்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சரளா "இங்கே 11 பேர் கைக்குழந்தையோடு ஒரே வாடகை வீட்டில் இருந்து தவிக்கிறோம். இப்படி எம்.எல்.ஏ. எங்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட் டாரே?''’என்று கண்ணீர் வடித்தார்.

அப்பகுதி மக்களோடு நெருக்கமான தொடர்பில் இருக்கும் திரைப்பட இயக்குநரான கோபி நயினார் கூறுகையில்,’"அரசு அதிகாரிகள், இந்த மக்களைத் திட்ட மிட்டே சொந்த மண்ணிலேயே அகதிகளாக ஆக்கியிருக் கிறார்கள். அரசியல் அதிகாரம் படைத்தவர்கள், அரசு அதிகாரிகளைத் தங்கள் கையில் போட்டுக்கொண்டு, ஆடு கிறார்கள். அவர்களுக்கு இந்த மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. சாதியப் பார்வையோடு தரக்குறைவாகப் பேசியதோடு, அரசு ஏற்கனவே யாருக்கோ கொடுத்த இடத்தையே மீண்டும் இந்த மக்களுக்கு முறைகேடாகக் கொடுத்து, இரு சமூகத்தினருக்கும் இடையில் கலவரத்தை தூண்ட முயன்ற வட்டாட்சியர் பிரீத்தி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆண்டியப்பன், டெண்டர் எடுத்த எம்.எல்.ஏ. ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். வீடுகளை இழந்த 42 பேருக்கும் உடனடியாக வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும்''” என்றார் அழுத்தமாக.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் நாம் கேட்டபோது, "அங்கே சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடிபட்ட வீடுகள் யாருடையது என்று விசாரித்து, யாருக்கு வீடு இல்லை என கணக் கெடுத்து, 12 பேருக்கு மட்டும் இடம் வழங்கப்பட்டி ருக்கிறது.. ஏற்கனவே வழங்கப்பட்ட இடம்தான் அது என்றாலும் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்ததால்தான் அந்த இடத்தை அரசு திரும்பப் பெற்று, மீண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈ- பட்டாவுடன் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் வீடற்ற மக்களுக்கும் வீடுகள் தர நடவடிக்கை எடுத்து வருகிறோம்''’ என்றார் கூலாக.

பொறுப்பற்ற அதிகாரிகளை நம்பிய அம்மக்கள் நடுத்தெருவில் வீடிழந்து பரிதவித்து வருகிறார்கள்.

-அருண்பாண்டியன், அரவிந்த்

nkn200424
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe