என்றைக்கு ஸ்டெர்லைட் ஆலை இயங்கத் தொடங்கியதோ, அன்றிலிருந்தே ஆலையைச் சுற்றியுள்ள அத்தனை ஊர்களையும் ஆஸ்துமாவும், தோல் நோய்களும், கருச்சிதைவும், புற்று நோய்களும் தாக்கத் தொடங்கிவிட்டன.
""நோய்களை உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு'' என்ற அபாயக்குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
""எங்கள் ஆலையால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லவே இல்லை'' என்று பதிலுக்கு எதிர்க்குரல் எழுப்பிக்கொண்டேயிருக்கிறது ஸ்டெர்லைட் நிர்வாகம்.
""இந்தப் பதினாறு வருஷத்தில் எங்க ஊரில் மட்டும் 28 பேர் ஸ்டெர்லைட் உருவாக்கிய புற்றுநோயால் செத்தார்களே'' கொந்தளிக்கிறார்கள் அத்திரமரப்பட்டி மக்கள்.
விசாரணையில் இறங்கினோம்...
""சிப்காட்டிலுள்ள தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட்டால் பாதிக்கப்பட்டிருப்பது அதனை சுற்றியுள்ள தெற்கு வீரபாண்டியபுரம், அ.குமாரரெட்டியார்புரம், காயலூரனி, மீளவிட்டான், பண்டாரம்பட்டி, அத்திமரப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தூத்துக்குடி மாநகரமும், மாநகரத்தை சுற்றியுள்ள கிராமங்களுமே பாதிக்கப்பட்டுள்ளன.
ஒரு நாளைக்கு 1.200 டன் எடையும், வருடத்திற்கு 4.38,000 டன் எடை அளவிலான தாமிரத்தையும் தயாரிக்கின்றது ஸ்டெர
என்றைக்கு ஸ்டெர்லைட் ஆலை இயங்கத் தொடங்கியதோ, அன்றிலிருந்தே ஆலையைச் சுற்றியுள்ள அத்தனை ஊர்களையும் ஆஸ்துமாவும், தோல் நோய்களும், கருச்சிதைவும், புற்று நோய்களும் தாக்கத் தொடங்கிவிட்டன.
""நோய்களை உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு'' என்ற அபாயக்குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
""எங்கள் ஆலையால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லவே இல்லை'' என்று பதிலுக்கு எதிர்க்குரல் எழுப்பிக்கொண்டேயிருக்கிறது ஸ்டெர்லைட் நிர்வாகம்.
""இந்தப் பதினாறு வருஷத்தில் எங்க ஊரில் மட்டும் 28 பேர் ஸ்டெர்லைட் உருவாக்கிய புற்றுநோயால் செத்தார்களே'' கொந்தளிக்கிறார்கள் அத்திரமரப்பட்டி மக்கள்.
விசாரணையில் இறங்கினோம்...
""சிப்காட்டிலுள்ள தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட்டால் பாதிக்கப்பட்டிருப்பது அதனை சுற்றியுள்ள தெற்கு வீரபாண்டியபுரம், அ.குமாரரெட்டியார்புரம், காயலூரனி, மீளவிட்டான், பண்டாரம்பட்டி, அத்திமரப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தூத்துக்குடி மாநகரமும், மாநகரத்தை சுற்றியுள்ள கிராமங்களுமே பாதிக்கப்பட்டுள்ளன.
ஒரு நாளைக்கு 1.200 டன் எடையும், வருடத்திற்கு 4.38,000 டன் எடை அளவிலான தாமிரத்தையும் தயாரிக்கின்றது ஸ்டெர்லைட். மிக முக்கியமான மூலப்பொருட்களான காப்பர் மற்றும் ராக்பாஸ்பேட் மண்ணுடன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது சல்பர் டை ஆக்சைடுடன், ஆர்சின் போன்ற வாயுக்களும் வெளியாகின்றன. அதாவது 1 டன் தாமிரம் உற்பத்திச்செய்யப்படும் பொழுது 2 கிலோ சல்பர் டை ஆக்சைடும், காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் கலந்த ""ஸ்லாக்"" எனப்படும் கறுப்பு நிற திடக்கழிவுகள் மூன்று டன்னும் கிடைக்கின்றன. இதனை முறையாக சுத்தகரித்து அகற்ற அவர்கள் எந்த முயற்சியும் எடுத்ததில்லை. ஆலையின் பின்புறம் வழியாக சிறிது, சிறிதாக சுத்தகரிக்காமலேயே அப்புறப்படுத்துகிறார். எப்பொழுதாவது வரும் மழையின்போது மொத்தமாக அதனை திறந்து விடுவதும் உண்டு. இது மண்ணில் இறங்கும் பொழுது தான் அத்தனை நோய்களும் ஆரம்பம். இதோ அதற்கான படங்கள்."" என படத்தினை நம்மிடம் கொடுத்தார் அதே ஸ்டெர்லைட்டில் பணியாற்றும் நண்பர் ஒருவர்.
700 நிரந்தர ஊழியர்களையும், 2500க்கும் மேற்பட்டோர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வைத்திருக்கும் ஸ்டெர்லைட் ஆலையில் வாசலிலுள்ள செக்யூரிட்டிகளை கடந்தால் முதலிலேயே நம்மை வரவேற்பது நிர்வாக கட்டிடம். அதன்பின் ஹெச்.எஸ்.சி எனப்படும் உடல் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான கட்டிடம். இங்கு தான் மாஸ்க், ஹெல்மெட் உள்ளிட்ட சாதனங்களைக் கொடுப்பார்களாம். வெளியாட்கள் யாரும் உள் நுழையக் கூடாது என்ற பலத்த பாதுகாப்பு அடுக்கினைத் தாண்டி அதற்கு அடுத்தும் தாண்டினால் ""டாப்பிங்க் ப்ளோர்"" பகுதியில் இருக்கிறது தாமிர உருக்காலை. கேதோடு, அயனோடு உள்ளிட்ட முறைகளைத் தாண்டினால் தாமிரம் உருக்கும் ஸ்மெல்டர் பகுதி அது.! அதே இடத்தில் ""ஜி"" டாங்க் எனப்படும் மூலப்பொருட்களுடன் ஆசிட்டினை கலக்க செய்யும் பகுதி. அது போல், இடது புறத்தில் உருக்காலை முறையின் போது அவ்விடத்தை குளிர்விக்க செய்ய பிளாண்டை நோக்கி தண்ணீர் பீச்சும் பகுதியும் அங்குண்டு.
இதையெல்லாம் கடந்து சென்றால் "பிஏபி' எனும் இடத்தில் திட திரவக்கழிவுகள். குட்டை, குட்டையாய் தேங்கிய கழிவுகள் ஆலையின் பின்புறம் உள்ள வாய்க்கால் வழியோடி மக்களின் விவசாய நிலத்தை இன்றளவும் பாழ்படுத்துவதுண்டு. அந்த ஏரியாவில் யாருக்கும் அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. கறுப்பு நிற திடக்கழிவான "ஸ்லாக்' அதே பின்புறத்தில் குவிக்கப்பட்டுள்ளது..அதன் பின் தான் தற்பொழுது எல்&டி.யால் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் 4L TPA எனப்படும் இரண்டாவது ஆலை''.
""ஸ்டெர்லைட்டால் யாருக்கும் புற்று நோய் கிடையாது என ஊர் முழுக்க பச்சையாகப் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறது ஆலை நிர்வாகம். ஆனால், எங்க அத்திமரப்பட்டில் கடந்த 16 வருஷத்துல ரகுபதி, துரைப்பாண்டியன், ராஜபாண்டியன், செல்வபாப்பா, சங்கரலிங்கம், ஜெபராஜ், சின்ன கோட்டமுத்து, செந்தூர்பாண்டி, முத்துச்செல்வி, பொன் செல்வி, சசிகலா, பொன்னையா, பத்திரபாண்டி, வேல்மயில் நாடார், பட்டரைச்செல்வி, காசியம்மாள், பெரியசாமி, தங்கராஜ், கணேசன், பத்திரகாளி, பாண்டி, விழுக்கன் (என்ற) மாடன் கருப்பன், உமா மகேஸ்லரி, திருமணி, சக்திவேல், சொக்கன், ராமர் என 28 பேர் இறந்திருக்காங்க. அத்தனைபேரும் மார்பக புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களில் இறந்திருக்காங்க. இதில் எங்கம்மாவும் ஒருவர். இப்பக் கூட புற்றுநோயால் பாதிக்கப்பட்டவ லலிதா, சந்திரா, பேரின்பம், பாலம்மாள், சுமதி மற்றும் சண்முகத்தாய் என ஆறு பேர் இருக்காங்க. இதில் லலிதாவும், சந்திராவும் மூன்று வருடமாக சிகிச்சை எடுத்துட்டு வார்றாங்க. இந்த பாதிப்புகளுக்குக் காரணம் ஸ்டெர்லைட்டின் நச்சுப்புகையும், கழிவுகளுமே."" என்றார் காந்திய சேவா மன்ற நிறுவனரும், தூத்துக்குடி ஒன்றிய முன்னாள் கவுன்சிலருமான ராஜேந்திர பூபதி.
சிகிச்சை பெற்றுவரும் ஆறு நபர்களில் பாலம்மாளிற்கு சமீபத்தில் தொண்டைப்புற்று இருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
"" மக்களுக்குப் பெரும் பாதிப்பைக் கொடுத்த ஸ்டெர்லைட் அரசாங்கத்தையும் ஏமாற்றியிருக்கு.! 30 ஆயிரம் சதுர அடியில் தான் 1996ம் ஆண்டு ஆலையை துவங்கியிருக்கு ஸ்டெர்லைட் நிறுவனம். இப்ப ஏறக்குறைய 2 லட்சம் சதுர அடியில் பிளாண்டை வைத்துள்ளது. ஆனால் உள்ளூர் திட்ட மதிப்பீட்டுக்குழுமத்திலும், சென்னையிலுள்ள மாநில திட்ட குழுமத்திலும் இதற்கான ஆவணங்கள் 2015ம் ஆண்டு வரை இல்லை. இது அத்தனையும் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் எடுத்து வைத்துள்ளேன். அனுமதியில்லாமலேயே ஏறக்குறைய 22 வருடங்களாக அரசை ஏமாற்றியுள்ளது ஸ்டெர்லைட்."" என்றார் சமூக ஆர்வலரான சுரேஷ்.
ஒட்டுமொத்த குற்றச்சாட்டுக்கள் குறித்து அவர் கருத்தறிய ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பி.ஆர்.ஓ.வினைத் (8220054114) தொடர்புகொண்டோம். அனைத்தையும் உள் வாங்கி கொண்ட அவர், அரை மணி நேரத்தில் உங்களை அழைத்துப் பதில் கூறுகின்றோம் என்றார். பலமுறை மறுபடி மறுபடி தொடர்புகொண்டோம். நமது எண்ணைக் கண்டதுமே லைனை துண்டிக்கிறார்கள்.