சுற்றுவட்டார கிராமங்களின் மருத்துவத் தேவையைப் பூர்த்திசெய்யும் சுத்தமல்லி கிராமத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கை. அதனால் ரூ.2 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கியது சுகாதாரத்துறை. ஆனால், அதற்கான போதிய இடமில்லை.
இந்தத் தகவலையறிந்த நாகை முன்னாள் எம்.பி.யும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயன், ஆரம்ப சுகாதார நிலையத்திற்
சுற்றுவட்டார கிராமங்களின் மருத்துவத் தேவையைப் பூர்த்திசெய்யும் சுத்தமல்லி கிராமத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கை. அதனால் ரூ.2 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கியது சுகாதாரத்துறை. ஆனால், அதற்கான போதிய இடமில்லை.
இந்தத் தகவலையறிந்த நாகை முன்னாள் எம்.பி.யும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயன், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எதிரே தங்கள் குடும்பத்துக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க முன்வந்தார்.
முத்துப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த பத்திரப்பதிவின் போது, சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஸ்டேலின் மைக்கேலிடம், ஏ.கே.எஸ்.விஜயன் நிலத்திற்கான பத்திரத்தை ஒப்படைத்தார். அப்போது ஏ.கே.எஸ்.விஜயனின் தாயார் சுப்பம்மாள், சகோதரிகள் கல்பனா, யமுனா, சகோதரர் கார்மேகம் மற்றும் சில தி.மு.க. உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
ஏ.கே.எஸ்.விஜயனின் தந்தை ஏ.கே.சுப்பையா கம்யூனிஸ்ட் கட்சியின் சீனியர். சைக்கிளில் கிராமம் கிராமமாக சென்று கட்சியை வளர்த்தவர். தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக போராடியவர். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மணலி கந்தசாமியுடன் இணைந்து, விவசாயத் தொழிலாளர்களுக்கான நில உரிமைக்காக தொடர்ந்து குரலெழுப்பியவர். கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய விவசாய தொழிலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அப்போதைய முதல்வர் கலைஞர், ‘குடியிருப்போருக்கு நிலம் சொந்தம்’ என அறிவித்தார். “"ரத்தம் சிந்தி உருவாக்க வேண்டிய புரட்சியை பேனா மைத்துளியால் சாதித்தவர்'’என்று கலைஞரின் இந்தச் செயலை வியந்து பாராட்டினார் ஏ.கே. சுப்பையா. "நிலம் அனைவருக்குமானது' என்ற தனது தந்தையின் எண்ணத்தை ஏ.கே.எஸ்.விஜயன் நிறைவேற்றி இருக்கிறார்.
இதுபற்றி ஏ.கே.எஸ்.விஜயனிடம் கேட்டபோது, “""1973-ல் எம்.எல்.ஏ.வாக தேர்வான எனது தந்தை ஏ.கே.சுப்பையா, இங்கு கிரா மிய மருந்தகத்தைக் கொண்டுவந்தார். அதில் மருத்துவர் இல்லாதபோது, எனது அக்கா கணவர் டாக்டர் சம்பத்குமார் 2 ஆண்டுகள் சம்பளமின்றி சேவையாற்றினார். அப்படி படிப்படியாக வளர்ந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த எங்கள் பூர்வீக சொத்தைக் கொடுத்திருக்கிறோம். மக்கள் பலனடைய முடிந்ததைச் செய்யவேண்டும் என்ற கலைஞரின் வாக்கை நிறைவேற்றியிருக் கிறோம்''’ என்றார் மகிழ்ச்சியுடன்.
எதிர்க்கட்சியைச் சார்ந்தவர் வழங்கிய நிலத்தில், கட்சி பாகுபாடின்றி தொடரட்டும் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவ சேவை என்கிறார்கள் பொதுமக்கள்.
-இரா.பகத்சிங்