Advertisment

பென்ஷன்! டென்ஷன் ! 35,000 கோடி லாபம்! ஸ்டாலினிடம் மூடிமறைக்கும் உயரதிகாரிகள்!

ss

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் தி.மு.க. அரசுக்கு ஏக நெருக்கடியைத் தந்துகொண்டிருக்கின்றன. நிதி நெருக்கடி கடுமையாக இருப்பதால் அவர்களின் கோரிக் கையை நிறைவேற்றுவதில் கையைப் பிசைகிறது தி.மு.க. அரசு. ஆனால், எங்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் தி.மு.க. அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் என புள்ளி விபரங்களோடு விவரிக்கிறார்கள் அரசு ஊழியர்கள்.

Advertisment

stt

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கரிசனம் கொண்டவர் மறைந்த முதல்வர் கலைஞர். அவர் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறை வேற்றி அவர்களை தி.மு.க.வின் ஆதரவாளர்களாக மாற்றி வைத் திருந்தார். அவர்களும் தி.மு.க. அனுதாபிகளாகவே இருந்து வந்தனர். தேர்தல் நேரத்தில் இது தி.மு.க.வுக்கு கைகொடுத்து வந்தது. இதனாலேயே, அ.தி.மு.க. ஆட்சியில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டவர் ஜெயலலிதா.

Advertisment

இப்படிப்பட்ட சூழலில்தான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் நலன் கருதி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என 2021 தேர்தல் அறிக்கையில் உறுதி கொடுத்திருந்தது தி.மு.க. ஆனால், ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் முடிவுறும் நிலையிலும் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிரான முடிவை எடுக்க திட்டமிட்டு வருகின்றன. இதனையறிந்து, பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களை அழைத்துப் பேசினார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. பேச்சுவார்த்தையில், அரசின் சூழல்களை விவரித்தார். அதனை ஜாக்டோ-ஜியோ அமைப்பு மட்டும் ஏற்க, மற்ற சங்கங்கள் முரண்பட்டன.

இதற்கிடையே, தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரிய

இதற்கிடையே, தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங் களின் கூட்டமைப்பினர், பங்களிப்பு ஓய்வூதியத் (புதிய ஓய்வூதியம்) திட்டத்தை ரத்து செய்யவேண் டும், சரண் விடுப்பு சலுகைகளை வழங்கவேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடி வருகின்றனர்.

ss

இதனையறிந்து அந்த கூட்டமைப்பின் முக்கியத் தலைவர்களை அழைத்துப் பேசினார் முதல்வர் ஸ்டாலின். அந்த சந்திப்பில், ” அரசின் நிதி நெருக்கடி எந்தளவுக்கு இருக்கிறது என்பது என்னை விட உங்களுக்கு நல்லாத் தெரியும். திமுக அரசைவிட உங்களுக்கு யார் நல்லது செய்திட முடியும்? பொறுத்திருங்கள். சரி செய்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார். ஆனால், முதல்வரின் பதிலில் கூட்டமைப்பினருக்கு திருப்தி இல்லை. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோ சித்து வருகிறார்கள். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் (பென்சன்) திட்டத்தை (சி.பி.எஸ்.) ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நீண்டகாலமாகப் போராடி வருகிற சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம், தமிழ்நாடு முழுக்க வேலை நிறுத்தப் போராட் டத்தை முன்னெடுத்துள்ளது.

இதுகுறித்து, சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கெல்ஸிடம் நாம் பேசியபோது, "பங்களிப்பு ஓய்வூதியம் எனும் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வதற்கும் அரசின் நிதி நெருக்கடிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. புதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தினால் அரசுக்கு தற்போதைய சூழலில் 35,000 கோடி லாபம் கிடைக்கும்.

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தினால் தி.மு.க. அரசுக்கு லாபமே தவிர ஒரு பைசாகூட செல வினமோ கூடுதல் செலவினமோ எதுவும் கிடையாது. புதிய திட்டத் தில் தான் அரசுக்கு கூடுதல் செலவு என்பதை அழுத்தமாகச் சொல்லி வரு கிறோம். ஆனால், அரசின் உயரதி காரிகள் காது கொடுத்துக்கூட இதனைக் கேட்பதில்லை. அரசுக்கு லாபம் என நாங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறதா என ஒருமுறை எங்களிடம் அரசு அதிகாரிகள் பேசிப் பார்க்கலாமே. ஆனால், பேசுவதே இல்லை. அதுமட்டுமல்ல; முதல்வருக்கு உண்மை தெரிந்து விடாமலும் மூடி மறைக்கிறார்கள். அதாவது, பழைய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்களிடமிருந்து குறிப் பிட்ட சதவீதத் தொகையை மாதந்தோறும் அவர் களின் சம்பளத்தில் அரசு பிடித்தம் செய்து கொள்ளும். அரசின் பங்களிப்பு என்று ஒரு பைசா கூட செலுத்தாது. அரசு ஊழியர் ஓய்வுபெற்று விட்டால் அவர்களின் சர்வீசைப் பொறுத்து குறிப்பிட்ட தொகையை பென்சனாக வழங்கும்.

ஆனால், புதிய பென்சன் திட்டமான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அப்படி இல்லை. இந்த திட்டத்தில் பென்சன் கிடையாது, அதற்கு மாறாக, 10 சதவீதத் தொகையை அரசு ஊழியரின் சம்பளத்தில் பிடித்திக் கொள்கிற அரசு, அதே 10 சதவீதத் தொகையை அரசின் பங்களிப்பாக செலுத்த வேண்டும். அரசு ஊழியர் ஓய்வுபெறும் நாளில் செட்டில்மெண்ட் எனும் பெயரில் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். இதுதான் இரண்டு திட்டத்துக்குமான சுருக்கம்.

பழைய பென்சன் திட்டத்தில் அரசுக்கு ஒரு பைசாகூட செலவில்லை என்கிற நிலையில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமான புதிய திட்டத் தில், அரசு ஊழியரிடம் பிடிக்கும் குறிப்பிட்ட சதவீதத் தொகைக்கு சமமான அதே சதவீதத் தொகையை அரசும் செலுத்த வேண்டும் என்பது அரசுக்கு நிதிச்சுமைதானே?

சராசரியாக ஒரு அரசு ஊழியர் 20 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள் வரை பணி யில் இருப்பார். அத்தனை ஆண்டுகாலமும் மாதந்தோறும் 10 சதவீதத் தொகையை தனது பங்களிப்பாக அந்த ஊழியரின் கணக்கில் அரசு செலுத்தியாக வேண்டும். இதுமட்டுமல்ல, இந்த திட்டத்தில் அரசு ஊழியருக்கு 7.1 சதவீத வட்டியும் கொடுக்க வேண் டும். அந்த வகையில், இதையெல்லாம் கூட்டிக்கழித்து பார்த்தோமேயானால், இந்தத் திட்டத்தில் சமீபகால புள்ளிவிபரங்களின்படி, 70,000 கோடி ரூபாய் தமிழக அரசிடம் இருக்கிறது. இந்த 70,000 கோடியில் அரசும், அரசு ஊழியர் களும் சரிபாதியான தொகைக்கு உரிமையானவர் கள். எங்களின் கோரிக்கைப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தால் , இந்த 70,000 கோடியில் அரசின் பங்களிப்பாக செலுத்தியுள்ள 35,000 கோடியை அரசு உடனடியாக திரும்ப எடுத்துக் கொள்ளலாம். ஏன்னா, பழைய பென்சன் திட்டத்தில்தான் அரசின் பங்களிப்பு தேவையில்லை. அதனால், அரசு செலுத்திய தொகையைத் திரும்ப அரசே எடுத்துக்கொள்ள முடியும்.

இன்றைய நிதி நெருக்கடியில் 35 ஆயிரம் கோடி என்பது மிகப்பெரிய தொகை. அந்த தொகை அரசுக்கு கிடைத்தால் எவ்வளவோ நல்ல திட்டங்களை மக்களுக்கு செய்யலாம். இது தவிர, 7.1 சதவீத வட்டித் தொகையும் தரத்தேவையில்லை. இதன்மூலம் மாதம் சுமார் 600 கோடி என வருடத்துக்கு 7,200 கோடி அரசுக்கு மிச்சமாகும். இவ்வளவு லாபம் இருக்கும் போது, இதை ஏன் அரசு புரிந்துகொள்ள மறுக்கிறது என்பது தான் எங்களுக்கு புரியவில்லை'' ” என்று ஆதங்கத்தோடு விவரிக்கிறார் ஏங்கெல்ஸ்.

மகளிர் உரிமைத் தொகைக்காக மாதம் தோறும் சுமார் 1000 கோடி என வருடத்துக்கு 12,000 கோடி தேவை என்கிற நிதிச்சுமையை சமாளிக்க முடியாமல் தடுமாறும் தி.மு.க. அரசுக்கு, இந்த 7,200 கோடி ரூபாய் பெரிய அளவில் சுமையைக் குறைக்கும். மேலும், புதிய பங்களிப்புத் திட்டம் என்பது மத்திய அரசு கொண்டு வந்த திட் டம் என்பதால் மத்திய அரசு எடுக்கும் முடிவு களுக்கு மாநில அரசு கட்டுப்பட்டாக வேண்டும்.

இந்த நிலையில், அரசின் சார்பில் பங்களிப்பு செய்யும் 10 சதவீத தொகையை 14 சதவீதமாக கடந்த ஆண்டு முதல் மாற்றியமைத்திருக்கிறது மத்திய அரசு. இந்த திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்துப் போட்டிருப்பதால், அரசு ஊழியரிடம் 10 சதவீதம் பிடித்தம் செய்யும் நிலையில், தி.மு.க. அரசோ 14 சதவீத தொகையை செலுத்த வேண்டும். ஆக, அரசு ஊழியரைவிட அதிக தொகையை அரசாங்கம் போட்டாக வேண்டிய நிலை. இதுவும் தி.மு.க. அரசுக்கு கூடுதல் சுமை. பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் கொண்டுவந்துவிட்டால் இந்த கூடுதல் சுமையும் அரசுக்கு இருக்காது.

புதிய திட்டத்தில் இணைந்தால் நிதி நெருக்கடி, நிதிச்சுமைகள் எதிர்காலத்தில் ஏற்படும் என்பதை உணர்ந்ததினால்தான் அந்தத் திட்டத்தில் கையெழுத்துப் போடாமல் புறக்கணித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அதேசமயம், இந்த ஆபத்தை உணராமல் திட்டத்தை ஏற்றுக்கொண்ட ராஜஸ்தான், சட்டீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில அரசுகள் ஆபத்தை ஆராய்ந்து தற்போது இந்தத் திட்டத்திலிருந்து விலகிவிட்டன.

அதேபோல, புதிய திட்டத்தில் முதன்முதலாக கையெழுத்துப்போட்டவர் ஜெயலலிதா. இதன் ஆபத்தை தாமதமாக உணர்ந்த ஜெயலலிதா, 2016 தேர்தலின் போது, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்துவேன். அதற்கு முன் னோட்டமாக அதனை ஆராய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் ஒரு குழுவை அமைக்கிறேன் எனச் சொல்லி குழுவை அமைத்தார்.

2016-ல் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார். ஆனால், அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி, மத்திய மோடி அரசுக்கு அடிமையாகிக் கிடந்ததால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவில்லை.

இப்படிப்பட்ட சூழலில்தான், அரசு ஊழியர் களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அர சிடம் அதிக உரிமையோடு எதிர்பார்க்கிறார்கள். ஆனால், முதல்வரை சுற்றியுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி களோ, புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்தால் அரசுக்கு 35,000 கோடி லாபம் கிடைக்கும் என்பதை முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லாமல் மூடி மறைத்து வருகிறார்கள்.

ஏனெனில், இது ஒன்றிய அரசின் திட்டம் என்பதால், முதல்வரை சுற்றியுள்ள அதிகாரிகள் பலர் ஒன்றிய அரசின் கைப்பாவையாக ரகசிய மாக இயங்கி வருவதுதான். இதனை முதல்வர் ஸ்டாலின் கவனத்தில் கொள்ளவேண்டும்.

nkn280224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe