ன்னார்குடி நகராட்சியில் ஊரடங்கு சமயத்தில் கடைகளுக்கு அபராதம் விதிக்கப் பட்டதில் லட்சக்கணக்கில் ஊழல் செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"பாதாளச் சாக்கடை வேண்டும், புதிய பேருந்து நிலையம் வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்," என பல வருடங்களாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தாலும் இதுவரை ஆண்ட கட்சிகள் அதில் கவனம் செலுத்தவில்லை. இதனை சாதகமாக்கிக்கொண்ட நகராட்சி அதிகாரிகள் இஷ்டம்போல ஊழலில் உழலுகின்றனர்.

mm

"யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை சரிக்கட்டிக்கொண்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பல அதிகாரிகள் தற்போது தி.மு.க.வினரின் ஆதரவோடு மீண்டும் கோலோச்சுகின்றனர். உதாரணமாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆர்.ஐ இருக்கக்கூடாது, ஆனால் பத்து ஆண்டுகளாக இரண்டு ஆர்.ஐ இங்கே இருக்கின்றனர். அதேபோல கிளரிக்கல் போஸ்டில் இரண்டு பேர், பில் கலெக்டர் மூன்று பேர் என பத்துக்கும் அதிகமானோர் இங்கு பல வருடங்களாக இருக்குறாங்க. எந்த ஆணையர் வந்தாலும் இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுவார்கள், அல்லது வரவைத்துவிடுவார்கள்.

ஆணையர்கள் கொடுத்த வசூல் வேட்டைக்கான சுதந்திரம்தான் கொரோனா காலத்தில் கடைகளுக்கு அபராதம் விதிக்கிறோம் என்கிற பெயரில் பல லட்சம் வசூல் வேட்டை நடத்தினர். அவர்கள் மீது ஆதாரத்தோடு சிலர் புகார் கொடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டா லும், உள்ளூர் தி.மு.க. பிரமுகரின் பிரஷரால் மீண்டும் பணியில் சேர்ந்துவிட்டனர்." என்கிறார் நகராட்சி விபரம் தெரிந்த ஊழியர் ஒருவர்.

வர்த்தக சங்க வட்டாரத்தில் விசாரித் தோம். "கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் சுகாதாரத்துறையில் இருப்பவர் களும், அந்த துறையில் உள்ள ஒப்பந்த தொழி லாளர்களும், விதிமுறைகளை மீறியதாக பல கடைகளுக்கு அபராதம் விதித்தனர். இருப தாயிரத்திற்கு அபராதம் விதித்தால் இரண்டா யிரம் மட்டுமே நகராட்சிக்கு கணக்கு காட்டப் பட்டது. கடைகாரர்களிடம் கொடுக்கும் ரசீதில் இருபதாயிரம் என்றும் எழுதிக் கொடுப்பார்கள் ஆனால், நகராட்சி ரசீதில் அடிக்கட்டையில் இரண்டாயிரம் என்றுதான் இருக்கும். இப்படி பல லட்சம் கொள்ளை நடந்துள்ளது.

ஒப்பந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தால் நிய மிக்கப்பட்டவர்கள். சுகாதார தொழிலாளர்களும், ஒப்பந்த தொழிலாளர்களும் சேர்ந்து செய்த ஊழலில் ஒப்பந்த தொழிலாளர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்தனர். அவர்களும் மீண்டும் வேலைக்கு வந்துவிட்டனர்," என்கிறார்கள் ஆதங்கமாக.

நகராட்சி ஆணையரிடம் கேட்டோம், "விசாரிக்கப்பட்டுவருகிறது, தவறு நடந்திருந்தால் நடவடிக்கை இருக்கும்" என துண்டித்தார்.