Advertisment

எகிறிய சாராய சாவு ! குற்றவாளிகளை தப்ப விடுகிறதா சி.பி.சி.ஐ.டி?

hoch death

hoch death

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 63 பேராக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் ஆயிரம் சாராய வியாபாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 40 சதவிகிதம் பேர், பட்டை சாராயம் என்கிற காய்ச்சல் சாராயத்தை விற்பனை செய்பவர்களாகவும், மீதியுள்ள 60 சதவிகிதம் பேர், கலக்கல் சாராயம் என்கிற மெத்தனால் சாராயத்தை விற்பவர்களாகவும் இருக்கிறார்கள். கல்வராயன் மலை, ஜவ்வாது மலை, ஏற்காடு மலை, அரவட்லா, சாத்கார் மலையில் காய்ச்சப்படும் சாராயம் வெகுபிரபலம். இந்த சாராயம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா வரை செல்கிறது. அப்படிப்பட்ட காய்ச்சல் சாராயங்கள் குறைந்து, கலக்கல் சாராயத்துக்கு மாறியது ஏன் என விசாரணை நடத்தினோம்.

Advertisment

சாராயம் காய்ச்சும் தொழிலிலிருந்து திருந்தி வாழும் ஒருவரிடம் பேசியபோது, "காய்ச்சல் சாராயம் உருவாக 15 நாள் வரை தேவைப்படும். முதலில் சாராயம் காய்ச்ச உருகிய வெல்லம், கருவேலம்பட்டை, நமச்சாரம், பேட்டரி கரித்தூள், பலவித அழுகிய பழங்களை பெரிய ட்ரம்கள் மற்றும் பெரிய மண்பானைகளில் போட்டு அதற்குள் காற்று புகாதவாறு மூடி மண்ணுக்குள் புதைத்து வைத்துவிடுவோம். 8 முதல் 11 நாள் வரை ஊறல் மண்ணுக்குள் இருக்கும். அதன்பின் வெளியே எடுத்தால் அது பொங்கி நுரை தள்ளிக்கொண்டு இருக்கும். அந்த வாசனை சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் பரவும். அடுப்பு மூட்டி மூன்று பானைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைத்து, மூன்றாவதாக மேலே உள்ள பானையில் ஊறலை ஊற்றி காய்ச்சுவ

hoch death

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 63 பேராக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் ஆயிரம் சாராய வியாபாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 40 சதவிகிதம் பேர், பட்டை சாராயம் என்கிற காய்ச்சல் சாராயத்தை விற்பனை செய்பவர்களாகவும், மீதியுள்ள 60 சதவிகிதம் பேர், கலக்கல் சாராயம் என்கிற மெத்தனால் சாராயத்தை விற்பவர்களாகவும் இருக்கிறார்கள். கல்வராயன் மலை, ஜவ்வாது மலை, ஏற்காடு மலை, அரவட்லா, சாத்கார் மலையில் காய்ச்சப்படும் சாராயம் வெகுபிரபலம். இந்த சாராயம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா வரை செல்கிறது. அப்படிப்பட்ட காய்ச்சல் சாராயங்கள் குறைந்து, கலக்கல் சாராயத்துக்கு மாறியது ஏன் என விசாரணை நடத்தினோம்.

Advertisment

சாராயம் காய்ச்சும் தொழிலிலிருந்து திருந்தி வாழும் ஒருவரிடம் பேசியபோது, "காய்ச்சல் சாராயம் உருவாக 15 நாள் வரை தேவைப்படும். முதலில் சாராயம் காய்ச்ச உருகிய வெல்லம், கருவேலம்பட்டை, நமச்சாரம், பேட்டரி கரித்தூள், பலவித அழுகிய பழங்களை பெரிய ட்ரம்கள் மற்றும் பெரிய மண்பானைகளில் போட்டு அதற்குள் காற்று புகாதவாறு மூடி மண்ணுக்குள் புதைத்து வைத்துவிடுவோம். 8 முதல் 11 நாள் வரை ஊறல் மண்ணுக்குள் இருக்கும். அதன்பின் வெளியே எடுத்தால் அது பொங்கி நுரை தள்ளிக்கொண்டு இருக்கும். அந்த வாசனை சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் பரவும். அடுப்பு மூட்டி மூன்று பானைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைத்து, மூன்றாவதாக மேலே உள்ள பானையில் ஊறலை ஊற்றி காய்ச்சுவோம். அந்த வெப்பத்தில் மூன்றாவது பானையில் இருந்து ஊறல் உருகி இரண்டாவது பானைக்கு வரும், அதிலிருந்து முதல் பானைக்குள் இறங்கும். அதனை பைப் வைத்து பாத்திரத்தில் பிடித்து ஆற வைத்து, லாரி டியூப், கேன்களில் ஊத்தி வியாபாரிகளுக்கு அனுப்புவோம். சாராயம் காய்ச்சுவது நச்சுப்பிடித்த வேலை. ஊறல் போட்டு, காய்ச்சி, விற்பனைக்கு அனுப்ப குறைந்தது 5 பேர் தேவைப்படும். செலவு அதிகம், லாபம் குறைவு.

Advertisment

பாஸ்ட்ஃபுட் மாதிரி உடனடியாக சாராயம் வேண்டும், லாபம் அதிகம் வேண்டுமென்பதால் உருவானதே மெத்தனால் சாராயம். பெட்ரோலியத்திலிருந்து எடுக்கப்படும் மெத்தனாலில் 100 எம்.எல். அளவில் 10 லிட்டர் தண்ணீர், பழச்சாறுகளின் பவுடர் அல்லது கரும்புச் சாறு கலந்தால் சாராயம் ரெடி. இதற்கு அதிகபட்சம் அரைமணி நேரமாகும். வேலைக்கு ஆள் வரவில்லை என்கிற கவலையேயில்லை. செலவு குறைவு, லாபம் அதிகம். இதிலுள்ள ஒரே பிரச்சனை, மெத்தனாலில் கலவை கொஞ்சம் பிசகினாலும் சாராயம் விஷமாகிவிடும், குடித்தவர்களின் உயிரை சில மணி நேரத்தில் பறித்துவிடும். காய்ச்சல் சாராயம் ஸ்லோ பாய்சன் மாதிரி பல ஆண்டுகளுக்கு பின்பே வேலையை காட்டும். காய்ச்சல் சாராயத்தில் போதை அதிகமாக இருக்கும். கூடுதலாக போதை வேண்டுமென்பதற்காக ஊமத்தங்காயை அரைத்து சாறெடுத்து காய்ச்சிய சாராயத்தில் கொஞ்சமாகக் கலப்பார்கள். அந்த சாராயத்தை அதிகபட்சம் 10 மணி நேரத்துக்குள் விற்பனை செய்துவிடவேண்டும், அதற்குமேல் போனால் விஷமாகிவிடும்.

இந்த விஷச்சாராய பலிகளுக்கு காரணமானவர்களில் முக்கியமானவர், 19 வயதான மாதேஷ் என்கிறது சி.பி.சி.ஐ.டி. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பாண்டிச்சேரி மடுகரையில் பாட்டி வீட்டில் வசிக்கும் மாதேஷ், மயிலத்திலுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துவருகிறார். அவர்தான் கடந்த இரண்டு வருடமாக மெத்தனால் சாராயத்தொழிலில் டான். இவர் பண்ருட்டியில் பேக்கரி ஹோட்டல் நடத்தும் சக்திவேலின் ஜி.எஸ்.டி நம்பர் மூலமாக மெத்தனாலை இறக்கி, பாண்டிச்சேரி மடுகரையில் வைத்து விற்பனை செய்துள்ளார். இரண்டாண்டுகளில் பல கோடிக்கு சொத்து, 50 லட்சத்தில் பெட்ரோல் பங்க் லீஸýக்கு எடுத்துள்ளார். 5 கோடிக்கு திருவண்ணாமலையில் நிலம் வாங்க அட்வான்ஸ் தந்துள்ளார் என்கிறது சி.பி.சி.ஐ.டி.

இதில்தான் சந்தேகத்தை எழுப்புகின்றனர் விவரமறிந்தவர்கள். 19 வயதாகும் மாதேஷ் இரண்டு வருடமாக மெத்தனால் சாராயத்தொழிலை செய்கிறான் என்றால், அவன் 16 வயதில் இந்த தொழிலுக்கு வந்திருக்க வேண்டும். சாராயத் தொழில் என்பது, லட்சங்கள், கோடிகளில் வருமானம் கொட்டுவது. இந்த தொழிலை செய்யவேண்டுமென்றால் காவல்துறை, அரசியல்வாதிகள், ஆளுங்கட்சி சப்போர்ட் வேண்டும். அதைவிட முக்கியமாக, இந்தத் தொழிலில் கொட்டைபோட்ட டான்களின் ஆதரவு வேண்டும். இதில் ஏதாவது ஒன்று இல்லையென்றாலும் தொழில் செய்ய முடியாது. அப்படியிருக்க, 16 வயதில் ஒரு சிறுவன் எப்படி இத்தொழிலில் இறங்கினான்? அப்படியே இறங்கியிருந்தாலும் எப்படி போட்டியாளர்களை சமாளித்தான் எனக் கேள்வி எழுப்புகின்றனர். அந்த இளைஞனின் பின்னணியில் பெரிய தலை இருக்க வேண்டும். அவர்களை தப்பவைக்க இப்படி செய்கிறதோ எனச் சந்தேகத்தை எழுப்புகின்றனர்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சாவில் போலீஸ் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆர். அதிருப்தியை உருவாக்கியுள்ளது. விஷச்சாராயம் குடித்து இறந்த சேகரின் மகன் தினகரன் தந்த புகாரின் பேரிலேயே கண்ணுக்குட்டி, அவரது மனைவி மற்றும் தம்பியை கைது செய்துள்ளார் கள்ளக்குறிச்சி நகர காவல்நிலைய ஆய்வாளர் ஆனந்தன். அந்த எப்.ஐ.ஆரில், "கடந்த சில நாட்களாக எங்க ஊர் சுடுகாட்டில் வைத்து கண்ணுகுட்டி சாராயம் விற்பனை செய்தார். அதனை என் தந்தை வாங்கிக் குடித்தார்' எனக் குறிப்பிட்டுள்ளனர். சாராயம் விற்பனை செய்தது ஊருக்கு மத்தியிலுள்ள தெருவிலிருக்கும் அவரது வீட்டில். கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் வைத்து விற்பனை செய்துவருவதை அந்த பகுதி மக்கள் அனைவருமே கூறுகின்றனர். அப்படியிருந்தும், இவ்வளவு பெரிய விபத்து நடந்த பிறகும், கண்ணுக்குட்டியை காப்பாற்றும் விதமாக எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர் என்கின்றனர் சட்டம் அறிந்தவர்கள்.

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி சந்தேக மரணத்தில் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென ஆயிரக்கணக்கானவர்கள் கூடி பள்ளியை அடித்து நொறுக்கி, தீ வைத்து எரித்தார்கள். அந்த விவகாரம் அரசுக்கு அவப்பெயரை உருவாக்கித் தந்தது. அதன்பின் இந்த மாவட்டத்தை உன்னிப்பாகக் கவனித்திருக்க வேண்டிய காவல்துறை தலைமை, எஸ்.பி. தனிப்பிரிவு, ஐ.எஸ். போன்றவை அதை செய்யாததால், அடுத்த பெரிய சம்பவமாக விஷச்சாராயச் சாவு நடந்து, இந்தியா முழுக்க பேசுபொருளாகியுள்ளது.

விஷச்சாராயத்தால் முதலில் இறந்தவர் விடியற்காலை 6 மணிக்கு. இது காவல்துறைக்கு தெரியவந்தது 9 மணிக்குத் தான். ஒவ்வொரு அரசு மருத்துவனையிலும் அந்தப் பகுதி காவல்நிலைய காவலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் டூட்டியில் இருப்பார்கள். அப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் ஒரு காவலர் இருந்திருப்பார். அதேபோல், எஸ்.பி. தனிப்பிரிவு, ஐ.எஸ். பிரிவினர் தங்கள் லிமிட்டில் நடக்கும் சின்னச்சின்ன விஷயத்தையும் தகவல் பெற்று நோட் போடுவார்கள். சாராயச்சாவு என முதல் மரணம் குறித்த தகவல் தெரிந்ததும் இந்த பிரிவுகளில் உள்ள யாராவது ஒருவர் உடனே உயரதிகாரிகளுக்கு ரிப்போர்ட் செய்து நடவடிக்கை எடுத்திருந்தால் அடுத்தடுத்து விஷச்சாராயம் குடிப்பதைத் தடுத்து, அடுத்தடுத்த மரணங்களை தடுத்திருக்கலாம். போலீஸ் அப்படி செய்யாததற்கு காரணம், பெரும்பாலான காவல் நிலையங்கள் இரவு 12 மணிக்குமேல் செயல்படுவதில்லை. ரோந்து போலீசாரும் இரவு 1 மணிக்கு மேல் அலர்ட்டாக இருப்பதில்லை. எனவே தகவல் தெரியவில்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர்.

அமைச்சர்களும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களும் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் குறித்து கண்டுகொள்வதேயில்லை. முதலமைச்சர் அனைத்துத் துறைகளின் செயல்பாடு குறித்தும் தீவிரமாகக் கண்காணிக்காவிட்டால் அடுத்தடுத்த சிக்கலில் சிக்கி ஆட்சிக்கு கெட்டபெயர் ஏற்படக்கூடும்'' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

nkn290624
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe