Advertisment

பழனி-கொடைக்கானல் சுற்றுலா பயணிகளை குறிவைக்கும் கும்பல்!- உஷார் ரிப்போர்ட்

palani kodai

புண்ணியஸ்தலமான பழனியும், சுற்றுலாத்தலமான கொடைக்கானலும் கொண்ட மாவட்டம்தான் திண்டுக்கல் மாவட்டம். அதனாலேயே தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பழனி முருகனை தரிசித்துவிட்டுச் செல்கிறார்கள். அதுபோல் கோடை இளவரசியையும் போய் ரசித்துவிட்டு வருகிறார்கள்.

Advertisment

palani kodai

இப்படி வரக்கூடிய பொதுமக்கள் பழனியில் குடும்பத்துடனும், தனியாகவும் வந்து, அங்குள்ள தங்கும் விடுதிகளில் தங்கி சாமி தரிசனம் செய்து விட்டுச் செல்வதும் உண்டு. அதுபோல் கொடைக்கான-லும் குடும்பத்துடனும், தனியாகவும் ரூம் போட்டு இயற்கையை ரசித்துவிட்டு வருகிறார்கள்.

இப்படிப்பட்ட இடங்களுக்கு தனிமையில் வரும் இளைஞர்களை மடக்கி, பெண்களை வைத்து பணம் பறித்து வருகிறது ஒரு கும்பல். கடந்த வாரம் பழனி முருகனை தரிசிக்க வந்த ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரை பழனி அடிவாரத்தில் ஒரு பெண் மடக்கி, உல்லாசமாக இருக்கலா

புண்ணியஸ்தலமான பழனியும், சுற்றுலாத்தலமான கொடைக்கானலும் கொண்ட மாவட்டம்தான் திண்டுக்கல் மாவட்டம். அதனாலேயே தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பழனி முருகனை தரிசித்துவிட்டுச் செல்கிறார்கள். அதுபோல் கோடை இளவரசியையும் போய் ரசித்துவிட்டு வருகிறார்கள்.

Advertisment

palani kodai

இப்படி வரக்கூடிய பொதுமக்கள் பழனியில் குடும்பத்துடனும், தனியாகவும் வந்து, அங்குள்ள தங்கும் விடுதிகளில் தங்கி சாமி தரிசனம் செய்து விட்டுச் செல்வதும் உண்டு. அதுபோல் கொடைக்கான-லும் குடும்பத்துடனும், தனியாகவும் ரூம் போட்டு இயற்கையை ரசித்துவிட்டு வருகிறார்கள்.

இப்படிப்பட்ட இடங்களுக்கு தனிமையில் வரும் இளைஞர்களை மடக்கி, பெண்களை வைத்து பணம் பறித்து வருகிறது ஒரு கும்பல். கடந்த வாரம் பழனி முருகனை தரிசிக்க வந்த ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரை பழனி அடிவாரத்தில் ஒரு பெண் மடக்கி, உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்று, அவரிடமிருந்த பணத்தையும், செல்லையும் பிடுங்கிக்கொண்டு அனுப்பிவிட்டனர். இதனால் ஏமாந்துபோன ரமேஷ், பழனி நகர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, டி.எஸ்.பி. தனஞ்செயன், இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் காக்கிகள் அதிரடியாகக் களமிறங்கி, மூன்று ஆண்களுடன், இரண்டு பெண்களையும் கைது செய்தனர்.

Advertisment

பழனி மற்றும் கொடைக்கான-ல் உள்ள சில லாட்ஜ்களில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுடன், சில ஆண்களும் கூட்டு சேர்ந்து ரூம் போட்டு தனியாக வரும் ஆண்களைக் குறிவைத்து, "உல்லாசத்திற்கு வருகிறாயா?' என்று சபலத்தைத் தூண்டி, அந்த லாட்ஜ்க்கு அழைத்துச் செல்லும் பெண்கள், அங்கே போனவுடன் இருவரும் ஒன்றாக இருப்பதுபோல் அந்த பெண்களுடன் வந்த ஆண்கள் போட்டோ, வீடியோவை செல் மூலம் மறைந்திருந்து எடுத்து, அந்த ஆண்களிடம் காட்டி மிரட்டி, அவர்களிடமிருக்கும் பணத்தையும், செயின், பிரேஸ்லெட், செல்போனையும் பறிக்க முயற்சிப்பார்கள். அதற்கு அந்த ஆண்கள் மறுத்தால், இந்த ஆபாச வீடியோவை வாட்சப், பேஸ்புக்கில் போட்டு அசிங்கப்படுத்துவோம் என மிரட்டியதும், அவமானத்துக்கு பயந்து பணம், செயின் என அனைத்தையும் கொடுத்துவிட்டு ஓடி விடுவார்கள்.

sp  pradeeep

அதுபோலதான் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பழனிக்கு வந்த ரமேஷ் இந்த கும்ப-டம் சிக்கி பணத்தையும், செல்போனையும் பறிகொடுத்திருக்கிறார்;. அதைத் தொடர்ந்து, மறுநாளில் அவரது செல் மூலம் அவரது மாமாவுக்கு போன்செய்து பணம் கேட்டு மிரட்டியிருக்கிறது அந்த கும்பல். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவருடைய மாமன், சம்பவம் குறித்து ரமேஷிடம் கேட்டுவிட்டு உடனே போலீஸ் ஸ்டேசனில் புகாரளித்தனர். அதைத் தொடர்ந்துதான் நகரில் உள்ள லாட்ஜ்களில் அதிரடி சோதனை நடத்தியதின் பேரில், திண்டுக்கல் மற்றும் நத்தத்தை சேர்ந்த குணசேகரன், பாலமுருகன், லோகநாதன் உட்பட மூன்று ஆண்களையும், காமாட்சி, பவித்ரா ஆகிய இரண்டு பெண்களையும் போலீஸ் கைது செய்தது. அவர்களிடம் விசாரித்தபோது, ரமேஷிடம் பணத்தையும், செல்போனையும் பறித்ததை ஒப்புக்கொண்டனர். அதோடு, கொடைக்கான-ல் இதுபோல் ரூம் போட்டு சுற்றுலாவிற்கு வந்த இரண்டு இளைஞர்களைத் தங்கள் வலையில் சிக்க வைத்து அவர்ளிடமிருந்த பணத்தையும், செல்போனையும் மிரட்டி வாங்கியதுடன், அவர்கள் வைத்திருந்த விலையுயர்ந்த கார்களையும் இவர்களே கடத்திக்கொண்டு வந்ததும் தெரியவர, ஐந்து பேர் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஜெயி-ல் கம்பியெண்ணி வருகிறார்கள். இதுபோல் சில கும்பல் கொடைக்கானல், பழனி, திண்டுக்கல்-ல் உள்ள சில லாட்ஜ்களில் ரூம் போட்டுக்கொண்டு பெண்களை வைத்து இளைஞர்களிடம் தொடர்ந்து பணம் பறித்து வருகிறார்கள் என்றனர் பழனி நகரிலுள்ள சில காக்கிகள்.

இது சம்பந்தமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப்பிடம் கேட்டபோது, ""பெண்களை வைத்து பணம் பறித்துவரும் ஒரு கும்பலை கைது செய்திருக்கிறோம். கொடைக்கானல்லயும் ஒருவரை கைது செய்திருக்கிறோம். அதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தனிப்படை அமைத்து தங்கும் விடுதிகளில் ஆய்வுசெய்ய உத்தரவிட்டிருக்கிறேன். மேலும், விடுதிகளில் தங்கக்கூடியவர்களுக்கு ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே தங்கும் விடுதி கொடுக்க வேண்டும், ஆதார் கார்டு இல்லையென்றால் ரூம்கள் கொடுக்கக்கூடாது, அதை மீறிக் கொடுத்தால் அவர்கள் லைசென்ஸ் கேன்சல் செய்யப்படும் எனக் கூறியிருக்கிறோம். அதோடு, தனியாக வரும் பெண்களுக்கும் ரூம் கொடுக்கக்கூடாது. விடுதி உரிமையாளர்கள் மற்றும் மேனேஜர்கள், தங்கள் விடுதிக்கு வருபவர்களைக் கண்காணிக்க வேண்டும். அதன்மூலம் இப்படிப்பட்ட தவறுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்'' என்றார் உறுதியாக!

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe