கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி அருகேயிருக்கும் கொட் டம்பட்டி கிராமத்தில் செப்டம்பர் 2-ஆம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்பட்டது. தொண்டை மண்டலப் பகுதி தென்னை விவசாயிகளுடன் இணைந்து தென்னை ஆராய்ச்சியாளரான கென்னடி ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, மாவட்ட தோட்டக் கலை இணை இயக்குநர் இந்திரா, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் "தென்னைகளின் அரசன் அரசம்பட்டி' என்ற நூலை நக்கீரன் ஆசிரியர் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். விழாவுடன் இணைந்து தென்னை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சியும் நடைபெற்றது.
தென்னை ஆராய்ச்சி யாளரும் விழாவை ஒருங்கிணைத்த பிரமுகர்களில் ஒருவருமான கென்னடியிடம், இந்த விழாவின் நோக்கம் குறித்து கேட்ட
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி அருகேயிருக்கும் கொட் டம்பட்டி கிராமத்தில் செப்டம்பர் 2-ஆம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்பட்டது. தொண்டை மண்டலப் பகுதி தென்னை விவசாயிகளுடன் இணைந்து தென்னை ஆராய்ச்சியாளரான கென்னடி ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, மாவட்ட தோட்டக் கலை இணை இயக்குநர் இந்திரா, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் "தென்னைகளின் அரசன் அரசம்பட்டி' என்ற நூலை நக்கீரன் ஆசிரியர் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். விழாவுடன் இணைந்து தென்னை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சியும் நடைபெற்றது.
தென்னை ஆராய்ச்சி யாளரும் விழாவை ஒருங்கிணைத்த பிரமுகர்களில் ஒருவருமான கென்னடியிடம், இந்த விழாவின் நோக்கம் குறித்து கேட்டோம். “"தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் தேங்காய் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் ஒன்றாகும். தேங்காய் வெறுமனே உணவாக மட்டும் அமையாமல் சருமப் பாதுகாப்பு, முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி, அழற்சிக்கு எதிரான பண்பு, வயிற்றுப் புண்ணை நீக்குதல் உள்ளிட்ட பல மருத்துவப் பண்புகளையும் கொண்டுள்ளது.
கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவில் 11 மாநிலங்களுக்கும், தமிழகத்தில் இருக்கும் அனைத்து அரசு விதைப் பண்ணைகளுக்கும் தொண்டை மண்டலத்திலிருந்துதான் தென்னை விதை சென்றுகொண்டிருக்கிறது. இன்றிருக்கும் 15 கோடி தென்னைமரங்களில் 80% கிட்டத்தட்ட 9 கோடிக்கும் அதிகமான தென்னை மரங்கள் இந்த அரசம்பட்டி தென்னை மரங்கள்தான்.
2005-ல் பொள்ளாச்சி, ஆழியார் தென்னை ஆராய்ச்சி மையம் ஏ.எல்.ஆர்1 என அரசம்பட்டி தென்னை விதைகளுக்கு பெயர்மாற்றம் செய்து விற்பனை செய்தார்கள். இதன் சிறப்பு என்னவெனில், எந்த சூழலுக்கும் தாக்குப்பிடிக்கும். வறட்சியைத் தாங்கும். வறட்சியிலும் வருடத்துக்கு 153 காய் சராசரியாகக் காய்க்கும். எந்த வகையான மண் வளத்துக்கும் ஈடுகொடுத்துப் பலன் தரும். எந்தப் பகுதியில் பயிரிட்டாலும் அந்தப் பகுதி மண்ணுக்கேற்ப பலன் தரும்.
2023, பிப்ரவரி 15-ல் அரசம்பட்டி சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைத்தேன். இத்தனை சிறப்புகள் கொண்ட அரசம்பட்டி தென்னை ரகத்தை இப்படி பெயர்மாற்றம் செய்து எங்கள் பகுதியின் தென்னை ரகத்தை இருட்டடிப்பு செய்கிறார்கள் என்று முறையிட்டோம். அதே வருடம் வேளாண் பட்ஜெட்ல அந்த தென்னை ரகத்துக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்வதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழகத்தில் 5 லட்சம் ஹெக்டேரில் தென்னை பயிரிடப்படுகிறது. 2.5 லட்சம் ஹெக்டேர் கொங்கு மண்டலத்திலும், 2 லட்சம் ஹெக்டேர் தொண்டை மண்டலத்திலும், 1 லட்சம் ஹெக்டேர் சோழ மண்டலத்திலும் பயிரிடப் படுகிறது.
கடந்த 25 ஆண்டுகளாக தென்னைக்கான எந்த ஒரு நிதியுதவியும் கொங்கு மண்டலத்தை நோக்கித்தான் போய்க்கிட்டிருக்கு. தென்னைக்கான ஆணிவேரா இருக்கும் தென்னை விதையை உற்பத்தி பண்ணிக்கொடுப்பது இப்பகுதி விவசாயிகள். அவர்களுக்கு எந்த அரசு நிதியும் வரவில்லை.
இந்த நிகழ்ச்சி மூலமா எங்கள் பகுதி தென்னை விவசாயிகள் என்ன கோரிக்கை வைக்கிறாங்கன்னா, இந்தச் சுற்றுவட்டாரத்தில் ஒரு தென்னை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தி மையம் அமைக்கவேண்டும். அதனால் 25,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தப் பகுதி விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். தொண்டை மண்டலம் பக்கம் அரசு கவனம் திரும்பவேண்டும் என்பதற்காகவே இந்த விழா.
ஒரு மாதத்துக்கு முன்பு பொள்ளாச்சி தேங்காய் கிளஸ்டர் உருவாக்குவதற்காக மத்திய அரசு 250 கோடி ரூபாய் கொடுத்தது. அதுபோல அரசம்பட்டி தேங்காய் கிளஸ்டர் அமைப்பதற்காக மத்திய- மாநில அரசுகள் உதவிசெய்தால் 10 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். 25,000 பேருக்கு வேலை கிடைக்கும். தேங்காய் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி உலக அளவில் செல்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
இது எங்களின் கோரிக்கை. மாநிலத்தின் அதிக தேங்காய் விளையும் இரு பெரும் பகுதிகளில் ஒன்று இப்பகுதி. எங்கள் பக்கமும் மத்திய அரசின் கனிவான பார்வை திரும்பவேண்டும்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டம் போன்றவை பின்தங்கிய மாவட்டங் களாகும். இந்தப் பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட தேங்காய் விதையால்தான் பல பகுதிகளில் தென்னந்தோப்புகள் உருவாக்கப்பட்டி ருக்கின்றன. எங்களது கோரிக்கை நிறைவேற்றப் பட்டால், இங்கிருந்து ஆயிரக்கணக்கான பேர் பெங்களூர், ஆந்திராவுக்கு வேலை தேடிச்செல்வது குறையும்''’என்கிறார்.
தொண்டை மண்டல தென்னை விவசாயி களின் குரல், ஒன்றிய அரசின் காதில் விழுமா?
-கீரன்